ஜெஸ்ஸி.. ஜானு..மற்றும் த்ரிஷா... ஹாப்பி பர்த் டே !

ஜெஸ்ஸி.. ஜானு..மற்றும் த்ரிஷா...  ஹாப்பி பர்த் டே !

இன்று ஒட்டு மொத்த தமிழ் இதயங்களை தனது மென்மையான நடிப்பால் கவர்ந்த த்ரிஷாவின் (Trisha) பிறந்த நாள். இன்று அவருடைய பிறந்த நாளை ஒட்டி அவருக்கு வித்யாசமான பரிசை தர இருக்கிறது.


தமிழ் சினிமாவில் ஆரம்பமாக அறிமுகமாகியது மட்டுமே சில பிரேமில் ஆனால் அதன் பின்னர் அவர் கதாநாயகியாக மட்டுமே நடித்தார் என்பது த்ரிஷாவின் ஸ்பெஷல். ஜோடி திரைப்படத்தில் தனது கேமியோ ரோலை பதிவு செய்ததுதான் த்ரிஷாவின் முதல் தமிழ் சினிமா என்ட்ரி.


ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !

Subscribe to POPxoTV

ஆனால் அதே த்ரிஷா இந்த வருட ஆரம்பத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தில் மீண்டும் சிம்ரனுடன் இணைந்திருப்பார். பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்தின் இளமைகாலங்களில் த்ரிஷா அவரின் மனைவியாக வருவார்.ரஜினியின் முதுமையில் சிம்ரன் அவரது காதலியாக வருவார்.


ஜோடி மற்றும் பேட்ட இந்த இரு படங்களிற்கான வித்யாசங்கள்தான் த்ரிஷாவின் 20 வருட சினிமா வாழ்க்கை இருந்திருக்கிறது.


ரஜினி அஜித் விஜய் தனுஷ் முதல் திரிஷா நயன்தாரா ரெஜினா சௌந்தர்யா வரை ஓட்டு போட்ட பிரபலங்கள் மற்றும் புகைப்படங்கள்அதற்கு முன்னரே ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் மனு எனும் மகனின் அம்மாவாக அழகாக வருவார் த்ரிஷா. இந்த விளம்பரம்தான் அவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்று தந்ததாக கூறப்படுகிறது.


அதன் பின்னர் நடித்த படம் மௌனம் பேசியதே. அமீரின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் த்ரிஷா தனது புன்னகை மற்றும் மென்மையால் அனைத்து மக்களுக்கும் பிடித்தவராகி போனார். அப்போது ஜோதிகாவுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும் த்ரிஷா தனக்கென தனி இடத்தை பிடித்து கொண்டார்.


அதன் பின்னர் இந்த நிமிடம் வரைக்கும் த்ரிஷா கதாநாயகி ஆகவே அந்த இடத்தை தக்க வைத்து கொண்டார். கிட்டத்தட்ட 20 வருட சினிமா பயணத்தில் ஒரு பெண் தொடர்ந்து நாயகியாக நடிப்பது மிகுந்த போராட்டங்களை அடக்கியது. எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத த்ரிஷாவின் பிடிவாதம் அவருக்கு இந்த இடத்தை கொடுத்து இருக்கிறது.


சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்பெரும்பாலான படங்களில் வழக்கமான கதாநாயகி வேடம் என்றாலும் த்ரிஷாவின் மென்மை எல்லா திரைப்படங்களிலும் வெளிப்பட்ட படியேதான் இருக்கிறது. கில்லியில் அப்பாவி தனலக்ஷ்மி ஆக அவரை மொத்த தமிழகமும் நேசிக்க தொடங்கியது. அதன் பின்னர் நடித்த சில படங்கள் தோல்வி கண்டாலும் ராதா மோகனின் அபியும் நானும் அவரை மீண்டும் விட்ட இடத்தை தொடர செய்தது. அப்பா மகளுக்கு இடையேயான அற்புத நேரங்களை த்ரிஷா தனது பங்கிற்கு சிறப்பாக தந்திருப்பார்.


அதற்கப்புறம் கிடைத்ததுதான் விண்ணை தாண்டி வருவாயா. அதன்பின்னர் தமிழகமே ஜெஸ்ஸி என த்ரிஷாவை அழைத்து வந்தது. கடந்த வருடம் வெளியான 96 திரைப்படம் வரை ஜெஸ்ஸியாக இருந்தவர் 96 படத்திற்கு பின்னர் ஜானு வாகி போனது த்ரிஷாவையே ஆச்சரியப்படுத்திய சுவாரஸ்யம்.


இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அஜித்.. நிஜ வாழ்வில் எப்படி.. ?இதற்கிடையில் கொடி திரைப்படத்தில் ஆன்டி ஹீரோயின் ஆக நடித்து அவார்டுகளை தக்க வைத்து கொள்ள அவரால் முடிந்திருந்தது. த்ரிஷா இதுவரை எத்தனை திரைப்படங்களில் நடித்திருப்பார் என்று உங்களுக்கு ஐடியா இருக்கிறதா !


நம்பினாலும் நம்பாவிட்டாலும் விக்கிப்பீடியா கணக்கு படி திரிஷா தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் என அத்தனை மொழிகளையும் சேர்த்து 100 படங்களை தொட்டு விட்டார். தமிழில் மட்டும் 60 படங்களில் நடித்திருக்கிறார்.


ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்அதில் 100வது படமான பரமபத விளையாட்டு குழு த்ரிஷாவிற்கு பிறந்த நாள் பரிசாக அந்த படத்தின் ட்ரைலரை இன்று வெளியிடுகிறது. அதனை வெளியிடுபவர் 96 நாயகன் ராம் ஆன விஜய் சேதுபதி என்பது கூடுதல் தகவல்.


மேலோட்டமாக பார்த்தால் த்ரிஷா எதுவும் சாதிக்காதது போல இருந்தாலும் சத்தமே இல்லாமல் தனது 100வது படம் வரை வந்து விட்டார் என்பது ஆச்சர்யம்தான் இல்லையா. அவரை போலவே அவரது சாதனைகளும் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன.


வெற்றி தோல்வி விமர்சனம் பாராட்டு என எது கிடைத்தாலும் எப்போதும் அமைதியாக எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் த்ரிஷாவிற்கு POPxo வின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


ராணாவிடம் கெத்து காட்டிய சாய்பல்லவி.. படப்பிடிப்பில் மயங்கி விழுந்த த்ரிஷா?புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.