சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்

சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்

சவுந்தர்யா ரஜினிகாந்த் பல பொறுப்புகளை ஒரே சமயத்தில் சுமக்கும் ஒரு அற்புத பெண். தயாரிப்பு, இயக்கம், VFX என சினிமாவிலும், மகள், அம்மா, மனைவி என்கிற பொறுப்பை வீட்டிலும் சுமக்கிறார்.


அதிலும் முதல் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த சௌந்தர்யாவிற்கு உலகமே அவரது மகன் வேத் கிருஷ்ணா தான். எப்போதும் அவரை இடுப்பில் சுமந்தபடி இருக்கும் அவரது புகைப்படங்கள் தாய்மையின் பெருமையை மீண்டும் மீண்டும் பேசியது.அதன் பின்னர் விசாகனை இந்த வருடம் காதலர் தினத்தில் பெரியோர் ஆசிர்வாதத்துடன் மணம் முடித்தார். இவரது இந்த திருமணம் இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்தது என்றால் மிகையில்லை.


த்ரிஷாவுக்கு திருமணம் - முதலிடத்தில் விஜய் தேவரகொண்டா


இரண்டாம் திருமணம் என்பதால் எளிமையாக செய்யாமல் இந்த திருமணத்தையும் பிரம்மாண்டமான முறையில் நடத்தி முடித்தனர் ரஜினி லதா தம்பதியினர். அந்த திருமணத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகள் பார்ப்பவர் நெஞ்சை நெகிழ வைத்தன.தனது மகளின் திருமணத்தில் கண்கலங்கிய தாய் லதா, மற்றும் அக்கா ஐஸ்வர்யா ஆகியோர் அங்குள்ளோரை ஈர்த்தனர். சௌந்தர்யா நல்வாழ்வு பற்றிய கவலை அவர்கள் இருவருக்குமே இருந்தது என்பது வெளிப்படையாக தெரிந்தது. ரஜினிகாந்தோ வழக்கமான இறுக்கத்துடன் இருந்தாலும் மகளின் கையை விடாமல் பிடித்து கொண்டிருந்தது அவர்கள் பிணைப்பின் பலத்தை காட்டியது.


ஐஸ்வர்யாவை விடவும் சௌந்தர்யா ( Soundarya ) அப்பா மீது அதிக ஓட்டுதல் வைத்திருந்தார். இது இரண்டாவது மகள்களின் இயல்பு.விசாகன் மற்றும் சவுந்தர்யா இருவரும்மகனது சம்மதம் பெற்ற பின்புதான் திருமண ஏற்பாடுகள்
செய்யப்பட்டதாக கூறினர். மேலும் சௌந்தர்யாவின் வாழ்தலை அர்த்தப்படுத்திய வேத் மீது விசாகனுக்கும் சம அளவு பிரியம் இருப்பதாகவும் அதனால் தான் ஆசிர்வதிக்கப்பட்ட பெண் எனவும் சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்து வந்தார்.


அவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்க்கையில் அது உண்மைதான் என்று புரிய வருகிறது. சமீபத்தில் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் அவரது திருமணத்தில் தாலி கட்டும் நேரத்தில் விசாகன் திடீரென அதனை நிறுத்த சொல்லி விட்டாராம். காரணம் தாலி கட்டும் இடத்தை விட்டு வேத் எங்கோ சென்று விட்டாராம்.முகூர்த்த நேரம் பற்றி கவலையில்லை வேத் வந்தபின்னர் தான் சௌந்தர்யா கழுத்தில் தாலி கட்டுவேன் என்று உறுதியாக கூறி விட்டாராம் விசாகன். வேத் அங்கு வந்த பின்னர்தான் விசாகன் தாலி கட்டியிருக்கிறார்.


அது மட்டுமல்லாமல் திருமண கோலத்தில் மணமக்களுக்கு நடுவே வேத் அமர்ந்திருந்தது பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. அந்த புகைப்படமும் வைரல் ஆனது.உன்னை எனக்கு புரிகிறது ப்ரியங்கா ..நிக் பற்றி மனம் திறந்த ப்ரியங்கா !


இது தவிர தேனிலவுக்கு சென்ற இடத்திலும் வேத் என்ன செய்து கொண்டிருப்பானோ என்கிற வழக்கமான அம்மா கவலையோடு அவர் அந்த தேனிலவை கொண்டாடியதை அவரது டிவீட்கள் உதவி செய்கின்றன.வேதுடன் அன்யோன்யமாக இருக்கும் விசாகன் படத்தை சௌந்தர்யா பகிர்ந்தார். இரண்டாவது திருமணம் இவ்வளவு அதிகமாக பேசப்பட்டது இவர்கள் திருமணத்தில் தான் இருக்க முடியும்.


எத்தனையோ பெண்களுக்கு திருமணம் என்பது வெறும் கனவாகவே போகிறது. இன்னும் பலருக்கு இரண்டாவது திருமணம் நடந்தாலும் குழந்தைகள் பாட்டி வீட்டில் வளரும் அவலம் நடந்திருக்கிறது.இன்னமும் இந்த உலகம் இரண்டாவது திருமணம் என்பதை சரியான பார்வையில் பார்ப்பதில்லை. நிறைய பெண்களுக்கு வாழ்க்கை துணையுடனான வாழ்வே போராட்டமாகி கொண்டிருக்கிறது.


இப்படிப்பட்ட பெண்கள் மத்தியில் உண்மையிலேயே சௌந்தர்யா ஆசிர்வதிக்கபட்ட பெண்தான். விசாகன் வேத் உடன் அவர் வாழ்க்கை சௌக்கியமாக இருக்கட்டும்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.