இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அஜித்.. நிஜ வாழ்வில் எப்படி.. ?

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அஜித்.. நிஜ வாழ்வில் எப்படி.. ?

கோலிவுட்டில் யாருடைய உதவியும் இல்லாமால் தனது திறமையால் மட்டுமே முன்னுக்கு வந்த நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவரது எளிமை காரணமாகவே அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.


தல என்று அவருக்கு செல்ல பெயரும் உண்டு. இன்று அவர் பிறந்த நாள் என்பதால் அவரின் ரசிகர்கள் இதனை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றார்.


நிஜ வாழ்வில் அஜித் எப்படிபட்டவர் என்பதை தெரிந்து கொள்வோம். நல்ல விஷயங்களை யார் செய்தாலும் அதனை பின்பற்றுவது தவறே இல்லை எனும்போது அஜித்தின் பொழுதுபோக்கு விஷயங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் தொடரலாம்.


ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !


ajith %281%29


நடிகர்கள் மற்றும் நடிகைகள் என்றாலே கொண்டாட்டம் பார்ட்டி கேளிக்கைகள் மூலம் நிறைந்திருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் அஜித் பொறுத்தவரைக்கும் இவைகளில் இருந்து வேறுபட்டவர். மிக ஒழுக்கமான வாழ்க்கையை நேசிப்பவர்.


அதிகாலை ஐந்து மணிக்கு எழும் பழக்கம் கொண்டவர் அஜித். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அஜித் நேரமே எழுந்து தனது மனைவிக்கு காலை உணவு தயாரித்து கொடுத்து அசத்துவாராம். மகள் அனோஷ்காவை பள்ளியில் விடுவதும் அஜித் தானாம்.


என் குழந்தையே.. நீ சுமக்கும் இந்த குழந்தைக்கு நன்றி ! திருமணமின்றி தாய்மை அடைந்த காதலி பற்றி நடிகர் அர்ஜுனின் நெகிழ்வான பதிவு !அஜித்தை பொறுத்தவரை தனக்கு பிடித்த வேலைகளை தொடர்ந்து செய்வதுதான் அவர் எடுக்கும் ஓய்வாக நினைப்பாராம். அவருக்கு பிடித்த வேலைகளை (hobbies) மேற்கொள்வாராம். உடனே நாம் அவருக்கு பிடித்த பைக் ஓட்டுதல், கார் ஓட்டுதல், விமானத்தில் பறத்தல் என்றெல்லாம் யோசித்தால் நம்மை தலையில் தட்டி தன்னுடைய பொழுதுபோக்கு அது அல்ல என்கிறார் தல.


வீட்டில் செய்ய வேண்டிய பிளம்பிங் வேலைகள் எலெக்ட்ரிக்கல் வேலைகளை தானே இறங்கி செய்வாராம் அஜித். பெயின்டிங் வேலைகளையும் தன் கையால் செய்வதுதான் அவருக்கு பிடிக்குமாம். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அஜித் தனது ஓய்வு நேரங்களை குடும்பத்தோடு கழிப்பாராம்.


கத்ரீனாவிற்காக கால் கடுக்க காத்திருந்த விஜய்.. காலம் கடந்து நெகிழும் நடிகை..ஒவ்வொரு திரைப்பட படப்பிடிப்பு முடிந்த உடன் மனைவி குழந்தைகளோடு வெளிநாட்டிற்கு பறப்பது அஜித்தின் வழக்கம். தனது வாழ்க்கையை தன்னை பின் தொடரும் ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக காட்டி வாழும் அஜித்தின் நிஜ வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் பிடித்திருக்கும் என நம்புகிறோம்.


அலுவலக வேலை, சம்பளம் தருதல் மட்டுமே தனது கடமை என்று நினைக்கும் ஆண்கள் இதன் மூலம் அறிந்து கொள்வது என்னவென்றால் எந்த குடும்பத்திற்காக நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கிறீர்களோ அவர்களோடு நேரம் செலவிடுவது உங்களுக்கு முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த விஷயங்களில் அஜித்தை பின்பற்றுங்கள். நல்லவைகளை பார்த்து நாமும் அது போல செய்வது எப்போதும் தவறேயில்லை.இன்று தனது 48வது பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் அஜித் குமாருக்கு POPxo தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்       


ரசிகர்கள் தாறுமாறாக கொண்டாடும் NGK ட்ரைய்லர் !         


---                          


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo