'ஆலியாவை அப்படி வளர்க்கவில்லை' - அம்மா சோனி; 'லவ் யூ ரன்பீர்' மகள் ஆலியா !

'ஆலியாவை அப்படி வளர்க்கவில்லை' - அம்மா சோனி; 'லவ் யூ ரன்பீர்' மகள் ஆலியா !

ஆலியா பட் பாலிவுட்டின் இளம் நாயகி . இளம் நாயகி எனும் பெயருக்கு ஏற்ப இன்னமும் மழலை குறும்புகளுடன் தென்படும் ஆலியா பற்றிதான் அவரது அம்மா சோனி ரஸ்தான் சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார்.


பாலிவுட்டே எதிர்பார்க்கும் கலங்க் எனும் பிரம்மாண்ட பீரியட் படத்தில் நடித்திருக்கும் ஆலியாவிற்கு ட்விட்டரில் மட்டுமே 18 மில்லியன் பாலோயர்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.பாலிவுட்டின் வெற்றிகரமான நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஆலியா பட்டைப் பற்றி பெருமைப்பட ஒரு அம்மாவாக நடிகை சோனிக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.


அப்பா 60 படங்களுக்கும் மேல் இயக்கிய பிரபல இயக்குனர் மகேஷ் பட் , அம்மா பிரபல நடிகை சோனி என பிறக்கும் போதே நாடிகளில் நடிப்பை கொண்டவர் ஆலியா. ஆனாலும் அவரது வளர்ப்பு சாதாரண நடுத்தர குடும்பத்து பெண்ணை போலத்தான் இருந்தது என்கிறார் அவரது அம்மா.


நம்ம தீபிகா படுகோனா இது? அதிர்ச்சியில் பாலிவுட் !தான் ஒரு ஸ்டார் என்பதை ஆலியா உணராத அளவிற்கு ஒரு சாதாரண நடுத்தர குடும்ப பழக்க வழக்கங்களையே அம்மா சோனி ஆலியாவிற்கு கற்று கொடுத்திருக்கிறார். மாற்றி வளர்த்தி இருந்தால் அது வேறு விதமாக போயிருக்கலாம் என்று கூறும் சோனி மற்ற குழந்தைகளை போலவே வெகு சாதாரண வாழ்க்கையை ஆலியாவிற்கு தான் பழக்கியதாக கூறி உள்ளார்.
 

 

 


View this post on Instagram


 

 

Mine truly ⭐️


A post shared by Alia 🌸 (@aliaabhatt) on


சோனி தனது மகள் பற்றி வேறு சமயங்களில் பல விஷயங்கள் கூறி இருக்கிறார். அவரது காதலர் ரன்பீர் பற்றி குறிப்பிடும்போதும் ரன்பீர் ஒரு நல்ல ஆண் என்ற அவர் மேலும் ஆலியாவின் காதல் விஷயங்கள் அவரது தனிப்பட்ட சுதந்திரம் அதனைப் பொது வெளியில் பேசுவதற்கு தாயாகவே இருந்தாலும் தனக்கு உரிமை இல்லை என்று கூறி இருக்கிறார்.


மேலும் ஆலியாவிற்கு ஆதரவாக எப்போதும் நான் இருப்பேன் , ஒரு அம்மாவாக அவளது சந்தோஷம்தான் எனது சந்தோஷமும் என்று கூறியிருக்கிறார்.ரன்பீர் விஷயத்தில் எப்போதாவதுதான் வாயை திறக்கும் ஆலியா சமீபத்தில் நடித்த ராஸி திரைப்படம் வெற்றி பெற்று அதில் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை வாங்குகையில் இப்படி கூறியிருக்கிறார்.


மேக்நா (இயக்குனர்) ராஸி என்பது என்னை பொறுத்தவரை முழுக்க முழுக்க உங்கள் உழைப்பு, உங்கள் ரத்தம் உங்கள் வியர்வை என்று தன்னடக்கமாக கூறி இருக்கிறார். மேலும் விக்கியை பற்றி கூறுகையில் நீங்கள் இல்லாமல் இந்த படம் முழுமை அடைந்திருக்காது என்றார். கரண் ஜோகரை தனது வழிகாட்டி , அப்பா , மற்றும் நாகரிக போலீஸ் என்று கூறியிருக்கிறார். இறுதியாக இன்று இரவு முழுமையும் காதலுக்கானது எனக்கான சிறந்த மனிதர்... ஐ லவ் யூ ரன்பீர் என்று அந்த வெற்றி பேச்சை முடித்திருக்கிறார்.இவரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கலங்க் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாகிறது. இதில் இருந்து சில காட்சிகள் உங்களுக்காக..

Subscribe to POPxoTV

பிகினி.. பியர்.. பைக்.. கோடையைக் குளிர வைத்த ப்ரியங்கா சோப்ரா !
---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo