எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

சிலருக்கு சருமத்தில் எண்ணெய் பசையானது (oily skin) அதிகம் இருக்கும். இவ்வாறு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையானது இருந்தால் நிறைய சருமப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சருமத்தில் எண்ணெய் பசை இருப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால், வறட்சி இருக்காது. ஆனால் அதுவே அதிகமானால், நிறைய கெடுதல்களை சந்திக்க நேரிடும். எனவே சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவது என்பது மிகவும் முக்கியம். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் எதனால் ஏற்படுகிறது என்றும், அதனை இயற்கை முறையில் எப்படி சரி செய்வது என்பது குறித்தும் இங்கு காணலாம்.

Table of Contents

  pixabay

  எண்ணெய் பசை சருமத்தின் அறிகுறிகள் (Symptoms Of Oily Skin)

  நமது சருமமானது எண்ணெய் பசை கொண்டதாக உள்ளதை சில அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். சருமத்தின் தன்மை என்ன என்பது குறித்து நமக்கு தெரிந்தால் மட்டுமே அதற்கு ஏற்ற வழிமுறைகளை பின்பற்றி நாம் சருமத்தை பாதுகாக்க முடியும். எண்ணெய் பசை இருந்தால் சருமம் எப்போதும் சோர்வாகவே இருக்கும். மேலும் பல்வேறு அறிகுறிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க - பாத வெடிப்புகள் நீங்க சிம்பிள் டிப்ஸ் : அழகான கால்களுடன் நடைபோட தயாராகுங்கள்!

  பளபளப்பான தோற்றம்

  எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்களது முகத்தைப் பார்த்தால் முகம் மின்னுவது போன்று தோன்றும். ஏனெனில் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் ஆனது அத்தகைய தோற்றத்தை ஏற்படுத்த வல்லது. அதைக்கப்படியான எண்ணெய் முகத்தில் இருப்பதால் பளபளப்பாக தோன்றினாலும் சருமத்திற்கு சோர்வான தோற்றத்தை தரும். மேலும் மேக்அப் போட்ட சில மணி நேரத்திலேயே அழிந்து விடும்.

  பெரிய சரும துளைகள்

  முகத்தில் (oily skin) உள்ள சருமத்தில் நிறைய நுண் துளைகள் உள்ளன. இவற்றை சரியாக கவனிக்காவிட்டால் பரு, கோடுகள் போன்ற பாதிப்புக்கு சருமம் உள்ளாகும். முகத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தற்காக்கிறது. ஆனால் எண்ணெய் பசையானது அதிகமாக சுரக்க ஆரம்பிக்கும் போது சருமத்தின் துளைகள் பெரிதாகிறது. அதிலும் கோடைக்காலம் வந்தால் சருமத்தில் அதிகளவு எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டு முகத்தில் எண்ணெய் வழிந்தோடும்.

  தோல் கடினமாக இருக்கும்

  அனைவரது சருமமும் பொதுவாக மென்மையாக தான் இருக்கும். குறிப்பாக கண்ணை சுற்றி இருக்கும் பகுதிகள் மென்மையாக இருக்கும். ஆனால் அவர்களின் சரும வகையை பொறுத்து தோலின் தன்மை மாறுபடும். எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு தோல் கடினமாக மாறும். ஏனெனில் தொடந்து எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக இருப்பதால் கடினமான நிலைக்கு வருகிறது. சருமத்தை அடிக்கடி கழுவி அதே நேரத்தில் சரியான ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள வேண்டும்.

  pixabay

  பருக்கள்

  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சரும அமைப்பு இருக்கும். ஆனால் எண்ணெய் பசை உள்ள சருமம் தான் பராமரிப்பதற்கு மிகவும் கடினமானது. ஏனென்றால் இந்த சருமத்திற்கு மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது அதிகப்படியான பருக்கள் ஏற்படுவது மற்றும் சரும வறட்சி ஏற்படுவதும் தான். எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால் முகத்தில் பருக்கள் தோன்றும். அதிகப்பப்படியான பருக்கள் முகத்தில் அழகை கெடுக்கும் வகையில் இருக்கும்.

  மேலும் படிக்க - மகத்துவம் நிறைந்த தேனின் ஆரோக்கிய மற்றும் அழகு பலன்கள்!

  கரும்புள்ளிகள்

  எண்ணெய் பசை சருமம் இருபர்களுக்கு அதிகமான கரும்புள்ளிகள் காணப்படும். எண்ணெய் சருமத்துடன் வியர்வை வழிந்தோட வெளியில் சுற்றும் போது அங்குள்ள மாசுக்கள், புகை, தூசிக்கள் போன்றவை உங்களது முகத்தில் பட்டு அவை முகப்பருக்களாக உருமாறுகின்றன. இந்த பருக்கள் சரியானாலும் அந்த இடத்தில் கரும்புள்ளிகள் உருவாகும். மேலும் இந்த முகப்பருக்கள் முகத்தில் குழிகளாகும் மாறி உங்களது அழகுகான முகத்தை சீரழிப்பதாக உள்ளது.

  pixabay

  தோல் அமைப்பில் மாற்றம்

  எண்ணெய் பசை சருமம் உடையவர்களுக்கு தோல் அமைப்பில் மாற்றம் ஏற்படும். மென்மையான சருமம் இருப்பினும் எண்ணெய் பசை சருமத்தில் அதிகமானால் சருமத்தில் மாற்றம் உண்டாகும். இத்தகைய சருமம் உடையவர்களுக்கு பெரிய துளைகள் இருப்பதால் எண்ணெய் சுரப்பானது மேலும் அதிகமாகும். இதனால் சருமம் மேடு பள்ளிகளாக காணப்படும். எண்ணெய் பசையை கட்டுக்குள் வைத்தால் மட்டுமே சருமத்தின் தன்மை காக்கப்படும்.

  எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் (Causes Of Oily Skin)

  நாம் அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக்கங்களே எண்ணெய் சருமத்திற்கு காரணமாகிறது. மரபணு மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்கள் எண்ணெய் சுரப்பியை ஊக்குவிக்கிறது. காரணங்களை நாம் தெரிந்து கொண்டாலே அவற்றில் இருந்து நாம் விடுபடலாம்.

  வரண்ட சருமத்தை பளபளப்பாக்கும் பாதாம் எண்ணெய் மற்றும் பேஷ் பேக்குகள்

  மரபணு

  நாம் அனைவரின் சரும வகைகளும் மரபணுவை சார்ந்தே இருக்கும். அது பிறப்பில் இருந்து உண்டானது என்பதும் உண்மை தான். ஆனால் சுரப்பிகளின் மாற்றம், பருவநிலை மாற்றம் அல்லது வாழ்வியல் மாற்றங்கள் பல விதங்களில் உங்கள் சருமத்தை பாதித்து எண்ணெய் பசை சருமமாக மாறுகிறது. அன்றாட உணவு முறைகளை சரியான முறையில் கடைபிடித்தாலே எண்ணெய் பசை சருமத்தில் இருந்து நிவாரணம் பெறலாம்.

  விரிவாக்கப்பட்ட துளைகள்

  நமது சருமத்தில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். அது சருமத்தின் உள்ளே செல்லும் அழுக்குகளை வெளியேற்றும் பணியினை செய்யும். சுற்றுப்புறச் சூழலாலும், அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதாலும் , எண்ணெய் சுரப்பு அதிகமாகி, அழுக்குகளை வெளியேற்ற வேண்டிய எண்ணையே அழுக்குகளை உண்டாக்கும். மேலும் சருமத்தின் துளைகள் அதிகமாவதால் எண்ணெய் பசை சருமம் ஏற்படுகிறது.

  pixabay

  தவறான தோல் பராமரிப்புகளை பயன்படுத்துதல்

  தவறான தோல் பராமரிப்புகளை பயன்படுத்துவதால் சருமம் எண்ணெய் பசையாக மாறுகிறது. சிலர் தங்களது சருமம் எத்தகையது என்பது தெரியாமல் தவறான தோல் பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் சருமம் தனது இயல்பு நிலையை இழந்து எண்ணெய் பசை கொண்டதாக மாறுகிறது. எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சிலர் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி மேக்கப்பை ரிமூவ் செய்வார்கள். ஆனால் எண்ணெய் இல்லாத மேக்கப் ரிமூவர் பயன்படுத்துவது தான் மிகச்சிறந்த வழி.

  மாய்ஸ்சரைசரை தவிர்ப்பது

  முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் உபயோகிக்கும் மாய்ஸ்சுரைசரை தான் கவனிக்க வேண்டும். எண்ணெய் பசை சருமத்தினர் மாய்ஸ்சரைசர் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பார்கள். முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பதே மிக சிறந்த முறையாகும். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

  மன அழுத்தம்

  மன அழுத்தத்தின் காரணாமாகவும் சருமத்தின் தன்மை மாறுபடும். அதிகமான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர்களுக்கு எண்ணெய் சருமம் வர வாய்ப்புள்ளது. மனதை எவ்வித குழப்பங்களும் இன்றி மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி அழகிற்கும் முக்கியம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மன அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க சருமத்தின் எண்ணெய் சுரப்பும் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை.

  pixabay

  போதுமான தண்ணீர் குடிக்காததால்

  சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர்ச்சத்து மிகவும் இன்றியமையாதது. சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் முகம் பொலிவோடு இருக்கும். அதற்கு தினமும் போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, சருமத்தின் வெளிப்பகுதி வறட்சியடையாமல் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். நமது உடலுக்கு தேவையான தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் சருமத்தில் எண்ணெய் பசையானது அதிகரிக்கும்.

  எண்ணெய் சருமத்தை நிர்வகிக்க குறிப்புகள் (Tips To Manage Oily Skin)

  நாம் நினைத்தால் எண்ணெய் பசை சருமத்தை கட்டுக்குள் வைக்க முடியும். கீழ்காணும் முறைகளை பின்பற்றி நாம் எண்ணெய் பசையை கட்டுக்குள் வைத்து சருமத்தை அழகாக காக்கலாம்.

  முகம் கழுவுதல்

  ஒரு நாளைக்கு இரண்டு முறை எண்ணெய் சருமத்திற்கு பொருத்தமான ஃபேஸ் வாஷ் மூலம் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். காலையிலும், இரவு உறங்குவதற்கு முன்னரும் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும். எண்ணெய் இல்லாத சோப்பு மற்றும் பேஸ் வாஸ் ஆகியவற்றை பயன்படுத்தி முகத்தை தவறாமல் கழுவ வேண்டும். இதனால் அதிகமான எண்ணெய் சுரப்பு கட்டுக்குள் வைக்கப்படும்.

  எண்ணெய் இல்லாத உணவு

  எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தங்களது அழகை பராமரிக்க உண்ணும் உணவுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். எண்ணெய் பசை சருமத்தினர் கண்டதை உட்கொண்டால் அவர்கள் மேலும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் அவஸ்தைப்படக்கூடும். எண்ணெய்யில் பொறித்த உணவுகளை தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அதிகமான தண்ணீர் அருந்த வேண்டும். 

  pixabay

  சரும தளர்வு

  சருமத்தின் மேல் அடுக்கில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம். இதனை  அகற்றுவதன் மூலம் எண்ணெய் சருமம் பெரிதும் பயனடைகிறது. இறந்த செல்கள் அடைபட்ட துளைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் எண்ணெய் சருமத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை அரிசி மாவு, கற்றாழை சாறு, எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ் ஸ்க்ரப்பாக பயன்படுத்த வேண்டும். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும் வைக்கும். 

  டோனரை பயன்படுத்தவும்

  ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் டோனர் உபயோகப்படுத்துவால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாது சருமத்தில் இருக்கும் வெடிப்புகளைப் போக்கி சரும அழகை மேம்படுத்தும். டோனர் பயன்படுத்துவதால் சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள் வெள்ளரிக்காய் டோனர் பயன்படுத்தலாம். 

  ஒர்க் அவுட்

  நீங்கள் எண்ணெய் சருமம் உடையவராயின் உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் நச்சுக்களை வெளியேற்ற வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதால் அதிகமான வியர்வை வெளியேறுகிறது. அதிகமான எண்ணெய் சுரக்கப்படும் போது உடற்பயிற்சி செய்வதால் எண்ணெய் பசையானது வியர்வை வெளியாக வெளியேறுகிறது.

  pixabay

  வாராந்திர பேஸ் பேக்

  ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு 2 ஸ்பூன், தேன் 1/2 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். இந்த பேக்கை வாரம் ஒரு முறை போட்டு வர முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளை திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது.

  எண்ணெய் சருமத்திற்கான வீட்டு பொருட்கள் (Home Remedies For Oily Skin)

  நாம் அன்றாட பயன்படுத்தும் வீட்டு பொருட்களை பயன்படுத்தியே எண்ணெய் சருமத்தை சரி செய்யலாம். இதற்காக காஸ்மெடிக் பொருட்களையோ, விலை உயர்ந்த கிரீம்களையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எந்த பொருட்களை பயன்படுத்தி சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுக்குள் வைக்கலாம் என்பதை இங்கு பாப்போம்.

  பாதாம் எண்ணெய்

  பாதாம் எண்ணெய் சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதற்கு 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து சருமத்தில் தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு பருக்கள் குறையும். 

  pixabay

  பப்பாளி

  பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். பப்பாளி பழத்தை நன்கு குழைத்து, அதனுடன் முல்தானி மெட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக குழைத்து முகத்தில் பூசி வேண்டும். பின்னர் காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு நாட்கள் செய்து வர சருமத்தின் எண்ணெய் சுரப்பு கட்டுக்குள் வைக்கப்படும்.

  தேன்

  தேனில் உள்ள மருத்துவ பண்புகள் மிகச்சிறந்த அழகு சாதனப் பொருள். அதிலும் ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து முகத்தில் நேரடியாக தடவி 2 மணிநேரம் ஊற வைத்து பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம். தேன் சருமத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்படும்.

  எலுமிச்சை

  எலுமிச்சையில் ஆன்டி-செப்டிக் மற்றும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இத்தகைய எலுமிச்சை சாற்றினை 1 டீஸ்பூன் எடுத்து, 1 டீஸ்பூன் நீருடன் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தடவி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

  pixabay

  கற்றாழை

  கற்றாழையின் ஜெல்லை சருமத்தில் தடவினால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு அதிகமான எண்ணெய் பசையையும் போய்விடும். கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தால் முகம் அழகாகவும், பிரச்சனைகளின்றியும் சுத்தமாக இருக்கும். கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி முகத்தில் தடவலாம். 

  தக்காளி

  எண்ணெய் பசை சருமத்தினருக்கு தக்காளி மிகச்சிறப்பான பொருள். இதில் உள்ள பண்புகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்கி, சருமத்தை பளிச்சென்று மாற்றும். ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி அதில் வெள்ளை சர்க்கரையை வைத்து முகத்தில் நேரடியாக தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

  வெள்ளரி

  வெள்ளரிக்காயில் கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமாக உள்ளது. இது எண்ணெய் பசை சருமத்தினருக்கு நல்லது. குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காயை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்குவதோடு சரும அழகும் கூடும். வெள்ளரிக்காய் சாற்றில் எலுமிச்சை சாற்றினை கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரால் கழுவலாம்.

  pixabay

  முல்தானி மிட்டி

  முல்தானி மிட்டியை குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி ஊற வைத்து நீரில் கழுவினால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை போக்கலாம். ஒரு பௌலில் 4 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பிரகாசமடையும்.

  யோகர்ட்

  முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்க 1/2 கப் தயிருடன், 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் தேன்,  1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகம், கழுத்தில் தடவி நன்கு காய வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும்.

  முட்டை வெள்ளை

  முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை வாரம் மூன்று நாட்கள் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையை கட்டுப்படுத்தலாம்.

   

  FAQ’s

  எந்த ஹார்மோன் எண்ணெய் சருமத்திற்கு காரணமாகிறது? (What hormone causes oily skin?)

  ஹார்மோன்கள் மாற்றத்தால் எண்ணெய் சருமம் தோன்றுகிறது. ஆண்ட்ரோஜன்கள் எண்ணெய் உற்பத்திக்கு பெரும்பாலும் காரணமான ஹார்மோன்களாக உள்ளன. சில நேரங்களில் ஆண்ட்ரோஜன்கள் அளவு அதிகமாகவும், குறைவாகவும் மாறுகிறது. இது சருமத்தில் எண்ணெய் பசை உருவாக்கத்தை தூண்டுகிறது. இது பெரும்பாலும் பருவமடையும் போது, மாதவிடாய்க்கு சற்று முன்பு, கர்ப்ப காலத்தில் மற்றும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் நிகழ்கிறது.

  எதனால் மூக்கு பகுதியில் அதிகமான எண்ணெய் சுரக்கிறது? (Why is my nose suddenly so oily?)

  உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் செபம் என்ற சுரப்பிகள்  இயற்கையாகவே எண்ணெயை உருவாக்குகின்றன. இந்த சுரப்பிகள் செபாஸியஸ் சுரப்பிகள் என்றழைக்கப்படுகிறது. இவை மூக்கு பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. உங்கள் சருமம் எண்ணெய் பசையாகும் போது அங்குள்ள துளைகள் விரிவடைகிறது. விரிவாக்கப்பட்ட மூக்கு துளைகளும் மரபணுவை சார்ந்து மாறுபடும். இதனால் மூக்கு பகுதியில் அதிகமான எண்ணெய் சுரக்கிறது. 

  pixabay

  எண்ணெய் பசையால் வரும் முகப்பரு எந்த வயதில் சரி ஆகும்? (what age does acne normally go away?)

  முகப்பரு பொதுவாக 10 முதல் 13 வயதிற்குட்பட்ட பருவத்தில் தொடங்குகிறது மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மோசமாக இருக்கும். டீனேஜ் முகப்பரு பொதுவாக ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். பொதுவாக 20 வயதின் முற்பகுதியில் பருக்கள் நீங்கவும். இது இரு பாலினருக்கும் ஏற்படுகிறது. இருப்பினும் எண்ணெய் சருமம் உடையவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

  சரும துளைகளை நிரந்தமாக சரி செய்வது எப்படி? (How can I permanently tighten my pores?)

  ஐஸ் கட்டியை பயன்படுத்தி சரும துளைகளை சரி செய்யலாம். ஐஸ் கட்டியை எடுத்து துளைகள் உள்ள இடத்தில் 10 முதல் 15 விநாடிகள்  தேய்க்க வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சருமத்தை இறுக்கி, துளைகளை மூடி சரி செய்யப்படும். ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் சிறிது தண்ணீரில் இருந்து ஒரு பேஸ்ட் தயாரித்து பயன்படுத்தலாம். அல்லது முட்டை வெள்ளை கருவை எடுத்து முகத்தில் பேக் போட்டு பின்னர் கழுவலாம். 

  எந்த உணவுகள் எண்ணெய் சுரப்பை அதிகரிக்கிறது? (What foods cause oily skin?)

  பால் பொருட்கள் எண்ணெய் பசையை அதிகரிக்கும். எண்ணெய்யில் தயாரித்த உணவுகளை தவிர்த்தாலே சருமம் பாதுகாக்கப்படும். மேலும் சாப்பாட்டில் உப்பு அதிகமானாலும் எண்ணெய் பசை சருமம் உண்டாகும். ஆல்கஹால் மற்றும் அதிகமான இனிப்பு சுவை கொண்ட உணவுகளும் சருமத்தை பாதிக்கும் என்பதால் கவனம் தேவை. 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.