முகத்தில் இருக்கும் மருக்களை முற்றிலுமாக நீக்க சிறந்த முறைகள் | POPxo
Home
முகத்தில் இருக்கும் மருக்களை முற்றிலுமாக நீக்க சிறந்த முறைகள்

முகத்தில் இருக்கும் மருக்களை முற்றிலுமாக நீக்க சிறந்த முறைகள்

நமது உடலில் மருக்கள்(warts) வருவது சாதாரணம் என்றாலும் சிலருக்கு முகத்திலும் கழுத்திலும் மரு வருவதால் அது அழகு சார்ந்த பிரச்சனையாக மாறுகிறது. இது போன்ற மருக்கள் பிரச்சனையாக நீங்க நமது நாட்டு வைத்ததில் பல வழி வகைகள் உள்ளன. அந்த வகையில் மருக்கள் நீங்க சித்த மருத்துவம் கூறும் சில எளிய குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

மருக்கள் நீங்க குறிப்பு 1 : எலுமிச்சை சாறை கொண்டு மருக்களை எளிதில் நீங்க செய்யலாம். மருக்கள் உள்ள இடத்தில் எலுமிச்சை சாறை தடவி 20 நிமிடங்கள் எலுமிச்சை நன்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு வெண்ணீர் கொண்டு மருவுள்ள இடத்தை கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர மருக்கள்(warts) நீங்கும்.


மருக்கள் நீங்க குறிப்பு 2 : இஞ்சியின் மேல் தோலை சீவிவிட்டு, அதை மரு உள்ள இடங்களில் நன்றாக தேய்க்க வேண்டும். சற்று வலி எடுத்தாலும் தொடர்ந்து வேண்டும். வேண்டும். இப்படி செய்து வந்தால் ஒரு வாரத்தில் மருக்கள் அனைத்தும் மறைந்து போகும்.


மருக்கள் நீங்க குறிப்பு 3 : பூண்டை அரைத்து அதை மரு உள்ள இடங்களில் தடவி அரைமணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு அதை வெந்நீரில் வழிவி விட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது இப்படி செய்தால் சில நாட்களில் மருக்கள்(warts) நீங்கும்.மருக்கள் நீங்க குறிப்பு 4 : சுண்ணாம்பை குழைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி வெற்றிலையை கொண்டு மருவாய் தேய்த்தால் மரு நீங்கும்.


மருக்கள் நீங்க குறிப்பு 5 : சீரகத்தை பனிரெண்டு மணி நேரம் உப்பில் ஊறவைத்து பிறகு அதை மைய அரைத்து மரு இருக்கும் இடத்தில் தடவி அரைமணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு வெந்நீர் கொண்டு கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் மருக்கள் நீங்கும்.

மருக்கள் நீங்க குறிப்பு 6 : வாழைப்பழ தோலை கொண்டு மருக்கள் உள்ள இடங்களில் நன்கு தேய்த்து வர மருக்கள்(warts) மறையும்.


மருக்கள் நீங்க குறிப்பு 7 : வாழை தண்டின் சாறை மருக்கள் மீது தடவி வர மருக்கள் நீங்கும். இதனை ஒரே நாளில் பல முறை கூட செய்யலாம்.


அன்னாசி
இது மருக்களைப் போக்க உதவும் மற்றொரு வழியாகும். அதற்கு அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை பரு உள்ள இடத்தில் தேய்த்து 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.


வெங்காய சாறு
வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள்(warts) மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். வேண்டுமானால் இந்த கலவையை இரவில் படுக்கும் போது தடவி, இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.


ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.


டீ ட்ரீ ஆயில்
இந்த முறைக்கு முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும். இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.


கற்றாழை ஜெல்
கற்றாழையில் உள்ள நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். அத்தகைய நன்மைகளில் ஒன்று தான் மருக்களைப் போக்குவது. அதற்கு கற்றாழை ஜெல்லை மரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வேண்டும்.


இவற்றை அனைத்தையும் மரு இடத்தில் தேய்த்து வர மரு இருந்த இடமே இல்லாத அளவிற்கு முற்றிலுமாக மறைந்து விடும்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

வெளியிடப்பட்டது ஜனவரி 22, 2019
Like button
விருப்பம்
Save Button சேமித்து வை
Share Button
பகிர்
மேலும் படிக்க
Trending Products

உங்கள் செய்திகள்