முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு! (Homemade Beauty Tips In Tamil)

முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு! (Homemade Beauty Tips In Tamil)

 நமது முகம் நமது தோற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருக்கின்றதா? இல்லைதானே! நம்மை அழகானவராகவும் அற்புதமானவராகும் காட்டிக் கொள்ள உதவும் முகம் எனும் பகுதியை நாம் சரியாகக் கையாள்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.


சரியாக கவனிக்காமல் தேவையான spf உள்ள லோஷனை உபயோகிக்காமல் வெயிலில் அலைந்து முகம் கறுத்து களையிழந்து போன பின்னர்தான் எனக்கு நான் என் முகத்தை என்ன செய்து வைத்திருக்கிறேன் என்பது புரியத் தொடங்கியது. ஒரு அற்புதமான பொக்கிஷத்தை என் அலட்சியத்தால் நான் அலங்கோலபடுத்தி விட்டேன்.


பார்லர் செல்லும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் பேசியல் என்கிற பெயரில் பல ஆயிரம் ரூபாய்களை நான் இழந்திருக்கிறேன். முகம் மாறவே இல்லை, வொய்ட்டனிங் டைட்டனிங் என ஒவ்வொரு முறையும் என் முகத்தை வித்யாசமான பேசியலுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு நான் காத்திருந்தும் பலன் கிடைக்கவில்லை. பேசியல் செய்த இரண்டு நாட்கள் முதல் நான்கு நாட்கள் வரை நான் நன்றாகவே தெரிவேன். அதன்பின் மீண்டும் களையிழந்து முகத்திற்கு மாறிவிடுவேன்.


அதன்பின் நான் உடனடியாக என் ஹோம் பேஷியல் திட்டத்தை செயல்படுத்தினேன். ஏற்கனவே எனது பள்ளி நாட்களில் நான் செய்து கொண்டிருந்தவைதான். கால மாற்றத்தால் மறந்து போனதை நினைவுக்கு கொண்டுவந்தேன்.விரைவாகவே எனது முகம் தனது பழைய பொலிவை பெற ஆரம்பித்தது.ஆகவே அதனையே உங்களுடன் பகிர நினைக்கிறேன்.


எப்படி முகத்திற்கு தேவையான சத்துக்களை கொடுப்பது


CTM என்றால் என்ன


இயற்கையான க்ளென்சர் தயாரிக்கும் முறை


இயற்கையான டோனர் தயாரிக்கும் முறை


இயற்கையான மாய்ச்சுரைசர் தயாரிக்கும் முறை


பேஸ் பேக்குகள் மற்றும் பேஷியல்கள்


வீட்டில் பேஸ் பேக் தயாரிக்கும் முறை


வீட்டிலேயே பேஷியல் செய்யும் முறை


மற்ற பாகங்களை விட முகம் ஏன் முக்கியம் (Your Face Is More Important Than Other Parts)


முகத்திற்கு மட்டும் அப்படி ஏன் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். நமது உடலில் பல்வேறு பாகங்கள் பெரும்பாலும் உடைகளால் மூடப்பட்டு நச்சு புகை மற்றும் தூசுகளில் இருந்து காக்கப்படுகிறது. ஆனால் நமது முகத்தை நாம் எப்போதும் வெளியே காட்டவே விரும்புகிறோம். விதம் விதமான நிறங்களில் லிப்ஸ்டிக் ஐ ஷேடோ என நம்மை நாம் வண்ணமயமாக்கி நம்மைப் பார்ப்பவர்களுக்கும் அந்த வண்ணத்தை பிரதிபலிக்கவே விரும்புகிறோம்.


ஆகவேதான் எப்போதும் வெளிப்படையாக இருக்கும் முகம் காற்று மாசு, அல்ட்ரா வயலெட் கதிர்கள், பனி. என ஒவ்வொரு பருவத்திலும் பாதிப்படைகிறது. நம் முகத்தில் மெலனின் சுரப்பிகள் வெகு சீக்கிரமே தங்கள் வேலையை நிறுத்திக் கொள்வதால் கண்டிப்பாக நாம் வெளியில் இருந்து முகத்திற்கு ஊட்ட சத்து கொடுக்க வேண்டியது அவசியம்.


முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு அகற்றுவது என்பதையும் படியுங்கள்எப்படி முகத்திற்கு தேவையான சத்துக்களை கொடுப்பது (Simple Beauty Tips In Tamil)


முகம் மட்டுமல்ல நமது சருமம் முழுவதும் அழகாக பொலிவாக இருக்க வேண்டியதுஅவசியம். இயற்கையில் வீட்டில் நம் சமையல் அறையில் உள்ள பொருள்கள் மற்றும் சில பழங்கள் மற்றும் காய்களை வைத்து நம்மால் நம் சருமத்தை மிக எளிதாகப் பாதுகாக்க முடியும்.


அதுமட்டும் அல்லாமல்


தேவையான நேரத்தில் ஓய்வெடுப்பது (Proper Sleep)


நாம் எவ்வளவு உழைக்கிறோமோ அந்த அளவிற்கு ஓய்வும் தேவை. அதனால்தான் அந்த காலங்களில் சூரிய உதயத்திற்கு முன் எழுவார்கள் அஸ்தமனத்திற்கு பின்னர் உடனே உறங்க சென்று விடுவார்கள். ஆகவே அவர்களுக்கு நீண்ட ஓய்வு கிடைத்தது. ஆரோக்கியமாக இருந்தார்கள்.


ஒளிரும் சருமத்திற்கான உதவிக்குறிப்புகள்


சரியான இடைவெளியில் உண்பது (Meal Timing and Frequency)


முறையாக சாப்பிடுவது என்பது மிக முக்கியம். மிக சரியான இடைவெளிகளில்  சத்தான உணவை எடுத்துக் கொள்வது முக பொலிவை மேம்படுத்தும்.


அதிகமாக தண்ணீர் குடிப்பது (Drink Enough Water)


ஒரு நாளைக்கு குறைந்தது 3 அல்லது நான்கு லிட்டர் தண்ணீராவது நாம் குடிக்க வேண்டும். 8 லிட்டர் தண்ணீர் குடித்தால் இன்னமும் நல்லது. உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருந்தால் நச்சுக்கள் இல்லாமல் முகம் பொலிவாகும்.


பழச்சாறுகள் எடுத்துக் கொள்வது (Fruit Juice Intake)


தண்ணீர் குடிப்பது மட்டும் அல்லாமல் வைட்டமின்கள் அடங்கிய பழச்சாறுகளை எடுத்துக் கொண்டால் முகத்தில் பளபளப்பு கூடும். ஆரஞ்சு பழ சாறுகள் சருமத்திற்கு நல்லது


மன அழுத்தமற்ற வாழ்வை வாழ யோகா செய்வது (Yoga For Stress Free Life)


கவலைகள் தான் பெரும்பாலும் நம் அழகை கெடுத்து விடுகிறது. நடந்ததை நடக்கபோவதையோ நினைத்து இந்த நிமிடங்களை இழக்கிறோம். இதில் சமநிலை பெற யோகா த்யானம் உதவும். அது உங்கள் முகத்திற்கு ஒரு தேஜஸை கொடுக்கும்.


 - போன்ற வழிமுறைகளையும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.


முகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது CTM எனும் முறைதான். அதாவது க்ளென்சர், டோனர், மாய்ச்சுரைசர். அதனைப் பற்றி கீழே பார்க்கலாம்.


beauty %282%29


CTM என்றால் என்ன (CTM Routine)


முகத்தைப் பராமரிப்பது என்று வந்து விட்டாலே நிச்சயம் இந்த மூன்று வார்த்தைகளை நாம் மறக்க கூடாது "CTM" C  = க்ளென்சிங்; T = டோனிங் ; M - மாய்ச்சுரைசிங் . இந்த மூன்றையும் நாம் நம் முகத்திற்கு செய்ய வேண்டும். தினமும். ஒரு நாள் கூட மறக்க கூடாது. முடிந்தால் காலை மற்றும் இரவு இரண்டு முறையும் இந்த CTM நாம் செய்ய வேண்டியது அவசியம்.


க்ளென்சிங் (Cleansing)


இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் சுத்தமாகின்றது.


டோனர் (Toning)


கிளென்சிங்கிற்கு பின்னரும் சில சமயம் இருக்கும் அழுக்குகளை ஐ லைனர் மார்க்குகளை இது நீக்கும். மேலும் சருமத் துளைகளை மூடும். முகத்தின் Ph பேலன்சை காக்கும். பருக்களைத் தடுக்கும்.


மாய்ச்சுரைசிங் (Moisturizing)


சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள மாய்ச்சுரைசிங் அவசியமாகிறது. மேலும் சுத்தம் செய்வதால் சருமம் உலரும் போது அதனை வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. சருமத்தின் வெளிப்புற செல்களின் கெரோட்டினை மேம்படுத்துகிறது.மேலும் சூர்ய கதிர்களிடம் இருந்து நம்மைக் காக்கிறது.


இயற்கையான க்ளென்சர் தயாரிக்கும் முறை (Homemade Cleanser Recipe)


க்ளென்சிங் கிரீம்கள் கடையில் வாங்குவதை விட நாம் அவ்வப்போது சொந்தமாக இயற்கையாக தயாரித்து பயன்படுத்துவது நன்மையை அதிகரிக்கும்.


Also Read: ముఖ జుట్టును సహజంగా తొలగించడానికి చిట్కాలు (Tips To remove Facial Hair Naturally)


செய்முறை 1 : Milk + Lemon Juice


இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு. இவை இரண்டையும் நீங்கள் நன்றாகக் கலக்க வேண்டும். அதன்பின்னர் பஞ்சில் நனைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இரன்டு நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.செய்முறை 2 : Coconut Water


க்ளென்சிங் செய்வதற்கு இன்னொரு இயற்கை முறை இது யாருக்கும் அதிகமாக தெரிந்திருக்காது முறை. தினமும் நீங்கள் சமையலுக்கு உடைக்கும் தேங்காயின் நீரை பயன்படுத்தி நம் முகத்தை பஞ்சினால் துடைக்கலாம். இரண்டுமே அற்புதமான இயற்கை க்ளென்சர்கள்தான்.இயற்கையான டோனர் தயாரிக்கும் முறை (Homemade Toner Recipe)


டோனர் என்பது ஏதோ மாயாஜால வித்தை கொண்ட ஒரு பொருளாக ஆரம்பத்தில் இருந்தாலும் அதனையும் நாம் வீட்டில் இருந்தே தயாரிப்பதால் மூலம் பல்வேறு கெமிக்கல்களை நாம் தவிர்க்க முடியும்.


செய்முறை 


 • க்ரீன் டீ

 • தேன்

 • எலுமிச்சை நீர்

 • பன்னீர்


முதலில் க்ரீன் டீ பேகில் உள்ள டீ தூளை எடுத்து நீரில் போடவும். ஒரு டம்ளர் நீர் கால் டம்ளராக சுருங்கும்வரை நீங்கள் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு ஆறியபின் இரண்டு மூன்று சொட்டுக்கள் எலுமிச்சை சாறு மற்றும் அதே அளவு ஆலிவ் ஆயில் அல்லது வைட்டமின் ஈ ஆயில் சேர்க்கவும். அதன் பின்னர் கால் ஸ்பூன் அளவிற்கு தேன் சேர்க்கவும். இறுதியாக கால் டம்ளர் பன்னீர் சேர்க்க வேண்டும்.


இந்தக் கலவையை நன்கு கலந்து ஒரு ஸ்பிரேயரில் ஊற்றவும். அல்லது பாட்டிலில் சேகரித்து பிரிட்ஜில் வைக்கவும். ஒருமாதம் வரை பயன்படுத்தலாம். தினமும் முகம் கழுவிய உடன் இதனை உங்கள் முகத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். சில நாட்களில் உங்கள் முகம் பொலிவாக மின்னும்.இயற்கையான மாய்ச்சுரைசர் தயாரிக்கும் முறை (How To Make Natural Moisturizer At Home)


இந்த வகையான வீட்டில் தயாரிக்கும் மாய்ச்சுரைசர்களால் உங்கள் சருமம் பட்டு போல மின்னும். கெமிக்கல் இல்லாத தயாரிப்பு என்பதால் உங்கள் சருமம் பிஞ்சுக் குழந்தை சருமம் போலத் தூய்மையாக மின்னும்.


செய்முறை


 • கொஞ்சம் பால் ( கால் கப்)

 • கொஞ்சம் ரோஜா இதழ்கள் (பன்னீர் ரோஸ் )

 • கொஞ்சம் ஆலிவ் ஆயில் (3 சொட்டுக்கள்)

 • கொஞ்சம் ஆலோ வீரா ஜெல் (1 ஸ்பூன்)


பாலையும் ரோஜா இதழ்களையும் ஒன்றாக சுடவைக்கவும். சூடாக இருக்கும் போதே ரோஜாக்களை மசித்து விடவும். அதன் பின்னர் ஆலிவ் ஆயில் மற்றும் ஆலோ வீரா ஜெல் சேர்த்து நன்கு கலக்கவும். பேஸ்ட் பதம் வந்தபிறகு முகத்தில் தடவுங்கள். இரவு நேரங்களில் பயன்படுத்துங்கள்.பேஸ் பேக்குகள் மற்றும் பேஷியல்கள் (Homemade Face Packs For Dark Spots Removal)


முகத்தை பொலிவாகவும் மிருதுவாகவும் கரும்புள்ளிகள் இல்லாமலும் நிறம் மாறாமலும் பார்த்துக் கொள்ள சில இயற்கை முறை பேஸ் பேக்குகள் மற்றும் பேஷியல்கள்.


செய்முறை 1 : Potato + Cucumber + Lemon Juice


கரும்புள்ளிகளை நீக்க வீட்டில் கிடைக்கும் சமையல் பொருட்களில் இருந்தே தீர்வு கிடைக்கும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் வெள்ளரி சாறு மற்றும் எலுமிச்சை சாறு மூன்றையும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொண்டு முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவவும்.


வெள்ளரிக்காயை நீங்கள் பல உணவு வகை சமைப்பதற்கு பயன் படுத்தலாம்


செய்முறை 2 : Milk Face Pack


ஜாதிக்காயை லேசாக உரசி அந்த பொடியை கொஞ்சம் பாலுடன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வரவும்.


இளமையான தோற்றத்திற்கு : தெரியுமா? இந்த தினசரி பழக்கங்கள் உங்களை வயதானவர் போல் காண்பிக்கலாம் !


வீட்டில் பேஸ் பேக் தயாரிக்கும் முறை (Homemade Face Pack Tips)


முகத்தை மேலும் பாதுகாப்பதற்கு பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன. பல்வேறு விதமான ஹோம் மேட் பேஷியல்கள் இருந்தாலும் இப்போது நான் தரப் போவது ஒரு சிறந்த பேக். உங்களுக்கு டைட்டனிங் , ஒயிட்டனிங், க்ளோயிங் மூன்றும் கிடைக்கும்.


தேவையானவை 


 • கோதுமை மாவு 1 ஸ்பூன்

 • அரிசி மாவு 1 ஸ்பூன்

 • பால் 5 ஸ்பூன்

 • தேன்  1 ஸ்பூன்

 • எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

 • மாதுளம்பழ சாறு 1 ஸ்பூன்


மேலே குறிப்பிட்ட பொருட்களை நீங்கள் ஒன்றாக பேஸ்ட் போலக் கலக்க வேண்டும். அதன்பின்னர் நீங்கள் சுத்தம் செய்த முகத்தின் தடவி அரை மணி நேரம் காய விடவும். மேலும் அந்த சமயத்தில் நீங்கள் ரிலாக்ஸ் ஆக இருப்பது அவசியம். கோதுமை உங்கள் சருமத்தை இறுக்கமாக்கும். அரிசி உங்கள் சருமத்தை வயதாவதால் இருந்து காப்பதோடு நிறத்தை கொடுக்கும். தேனும் பாலும் ஈரப்பதத்தை தக்க வைக்கும். மாதுளம் பழமும் எலுமிச்சையும் கறுத்த களையிழந்து சருமத்தை சரி செய்து பொலிவாக்கும்.வீட்டிலேயே பேஷியல் செய்யும் முறை (Homemade Beauty Tips In Tamil)


ஸ்க்ரப் (Homemade Scrub)


பாசிப்பயிறு பொடி மற்றும் கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் கலந்து கொள்ளவும். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் பால் சேர்த்துக் கொள்ளவும். மூன்றையும் பேஸ்ட் போல செய்து முகத்தில் தேய்க்கவும். பாசிப்பயறு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். கஸ்தூரி மஞ்சள் சிறந்த கிருமி நாசினி. முகத்தை இந்த பேஸ்ட் மூலம் 3 நிமிடம் மசாஜ் செய்யவும்.


கிரீம் (Homemade Cream)


தயிர் உடன் மாதுளம் பழ சாறு மற்றும் தேன் சேர்க்கவும். இந்தக் கலவையை நன்கு கலந்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 5 நிமிடங்கள் இப்படி செய்ய வேண்டும். வட்ட வடிவங்களில் மசாஜ் இருந்தால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். முகம் தொய்வடையாது. 


பேக் 


ஒரு பாதி வாழைப்பழம் அல்லது வேகவைத்த உருளைக்கிழங்கை நீங்கள் இதற்குப் பயன்படுத்துங்கள். நன்கு மசித்த வாழைப்பழம் / உருளைக்கிழங்கை ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். புத்துணர்வோடு உங்கள் முகம் பொலிவாக இருப்பதை ரசியுங்கள்.இறுதிக் குறிப்பு (Conclusion)


என்னதான் நாம் நம் முகத்தை இவ்வளவு வேலைகள் செய்து பொலிவாக வைத்தாலும் வெளியில் வெயிலில் செல்லும்போது நீங்கள் சன்ஸ்க்ரீன் உபயோகிக்காவிட்டால் மீண்டும் முகம் களையிழக்கும்.அழகாய் நம்மை வைத்துக் கொள்வது என்பதுதான் இவ்வளவு நேரம் நான் சொன்னது. இதனை நீங்கள் பராமரிக்க வேண்டியது அவசியம். மாதம் ஒருமுறை ஹோம் மேட் பேஷியல் என்று வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் எப்போதும் நீங்கள்தான் ஜொலிக்கும் பேரழகி !


பெண்கள் சருமத்தை பராமரிக்க மற்றும் அழகு படுத்துவதற்கான எளிய குறிப்புகள்


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.