பார்லர்களில் எப்போது சென்றாலும் யாரவது ஒருவர் இந்த கோல்டன் பேஷியலை செய்து கொண்டிருப்பார்கள். நமது டல்லான முகத்திற்கு தகதகக்கும் ஒளியை கொடுப்பது இந்த வகை கோல்டன் பேஷியல்தான். (Golden facial)
முகம் தங்கம் போல மின்னும். ஆனால் இதற்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டி வரும்.அதற்கு பதிலாக வீட்டில் இருந்தே கோல்டன் பேஷியல் செய்த தோற்றத்தை நாம் பெற முடியும்.
வெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் – அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் !
செலவேயில்லாமல் இதனை செய்ய உங்களுக்கு தேவையான பொருள்கள்
கோதுமை மாவு, முல்தானி மெட்டி, ஆரஞ்சு பழம், ஆலோவீரா ஜெல், பஞ்சு அல்லது பருத்தி துணி மற்றும் நீர்.
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் முல்தானி மெட்டி பயன்படுத்துங்கள். வறண்ட சருமம் கொண்டவர்கள் கோதுமையை பயன்படுத்தலாம்.
உங்கள் இளமையை தக்க வைக்கும் சில ஆயில் மசாஜ்கள்
கோல்டன் பேஷியல் செய்ய முதலில்
ஆரஞ்சை எடுத்து அதனை எலுமிச்சம் பழம் நறுக்குவது போல இரண்டாக நறுக்கி கொள்ளுங்கள்.
கற்றாழையில் உள்ள ஜெல் பகுதியை தனியாக எடுத்து வையுங்கள்
அதன் பின்னர் வெந்நீரில் காட்டன் துணியை அல்லது பஞ்சை நனைத்து முகம் முழுவதும் ஒற்றி எடுங்கள். இப்படி செய்வதால் நமது முகத்தில் நாம் செய்ய போகும் இந்த கோல்டன் பேஷியல் பேக் நன்கு இறங்கி நீண்ட காலம் முகத்தை பொலிவோடு இருக்க வைக்கும்.
கோடையிலும் டாலடிக்கும் முகம் வேண்டுமா ! சில அழகு குறிப்புகள்!
அதன் பின்னர் அறுத்து வைத்துள்ள ஆரஞ்சு பழத்தை முல்தானி மெட்டி அல்லது கோதுமை மாவில் முக்கி எடுங்கள்.. அல்லது அதன் மீது தூவுங்கள். இதன் பின் இதனை ஆரஞ்சு பழத்தின் பாதியை அப்படியே முகத்தில் வைத்து மெல்ல தேயுங்கள். முகம் முழுவதும் நன்கு தடவ வேண்டும். ஆரஞ்சு சாறும் மாவும் ஒன்றிணைந்து முகத்தில் இறங்க வேண்டும். அதன்பின்னர் 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடுங்கள்.
இறுதியாக கற்றாழை ஜெல் அரை ஸ்பூன் எடுத்து அதனோடு ஆரஞ்சு சாற்றை 10 முதல் 15 சொட்டுக்கள் சேர்க்கவும். இதனை நன்றாக ஸ்பூனால் கிளறி கலந்து கொண்டு அதன்பின்னர் முகத்தில் தடவி மஸாஜ் செய்யுங்கள். 10 நிமிட மசாஜிற்கு பின்னர் முகத்தை கழுவி துணியால் ஒற்றி எடுங்கள்.
மினுமினுக்கும் தேகம் வேண்டுமா ? கேரள பெண்களின் அழகு ரகசியங்கள் உங்களுக்காக !
கோல்டன் பேஷியல் மாஸ்க் செய்ய தேவையான பொருள்கள்
இயற்கை மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்
கிரீக் யோகர்ட் – 1/2 கப்
தேன் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சில சொட்டுக்கள்
தேங்காய் எண்ணெய் – சில சொட்டுக்கள்
யோகர்டை தனியாக முட்டையை அடிப்பது போல அடித்து கலக்கவும். மஞ்சளை துருவி பொடியாக்கி இந்த யோகர்ட் உடன் சேர்க்கவும். உடன் தேன் சேர்த்து சில நொடிகள் கலக்கவும். அதன் பின்னர் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக ப்ளென்ட் செய்யவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நன்றாக காய்ந்ததும் உரித்து எடுக்கவும். மிகவும் பளபளப்பான முகம் உங்கள் வசம்!
வாரம் ஒருமுறை மட்டும் இதனை செய்து வந்தால் எப்படிப்பட்ட முகமும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறி தங்க நிறத்தில் தகதகக்கும்!
உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.