ரிலாக்ஸா ஆபிஸ்(Office) போய்ட்டு ஜாலியா வீட்டுக்கு வந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு.காலை,மதியம்,நைட்னு மூணு நேரம் சாப்பிடுற மாதிரி மூணு நேரமும் ஆபிஸ்ல இருக்குற மாதிரி நம்ம நெலம மாறிப்போச்சு. ஒருபக்கம் வேலையில்லாத் திண்டாட்டம், இன்னொரு பக்கம் படிச்ச படிப்புக்கு ஏத்த மாதிரி வேலை கெடைக்க மாட்டுது. இதனால கெடைச்ச வேலையை தக்க வச்சுக்க நாம நெறைய ஹார்டுவொர்க் பண்ற மாதிரி இருக்கு. காலைல எந்திரிச்சு ஆபிஸ்(Office) கெளம்பி போறதே ஒரு யுத்தம் தான், அதுலயும் நாம போற பஸ் மட்டும் தான் லேட்டா வரும். நம்ம போறப்ப தான் சிக்னல் போடுவாங்க.
குறிப்பா சென்னை மாதிரி பெருநகரங்கள்ல வேலை செய்றவங்க காலைல டிராபிக்ல மாட்டிக்காம வேலைக்கு போயிட்டா, அதுவும் கரெக்ட் டைமுக்கு ஆபிஸ்(Office) போயிட்டா ஆஸ்கர் அவார்டே நமக்கு கெடைச்ச மாதிரி இருக்கும். ஆனா ஆபிஸ் போயும் பிரச்சினை வந்தா என்ன பண்றது? ஒருநாளைக்கு கொறைஞ்சது பத்து மணி நேரத்துக்கு மேல நாம செலவு பண்ற இடம் ஆபிஸ் தான். அதுவும் மாசக்கடைசி, ஆடிட்டிங் மாதிரி டைம்ல இன்னும் அதிகப்படியாவே வேலை இருக்கும். நம்ம குடும்பத்துக்கு அப்புறம் நாம அதிகம் நேரம் செலவு பண்ற ஆபிஸ்ல ஸ்ட்ரெஸ்ஸோட (Stress) உட்கார்ந்து நாளெல்லாம் வேலை செஞ்சா நல்லாவா இருக்கும். அதுக்கு தான் இங்க உங்களுக்காக சிலபல டிப்ஸ் குடுத்து இருக்கும், இத படிச்சு ஆபிஸ்லயும் ‘எங்கள் ஆபீஸில் எல்லா நாளும் கார்த்திகைனு’ ஆடிப்பாடி சந்தோஷமா இருங்க மக்களே!
Also Read: உங்களுக்கு உதவ, இங்கே சில குறிப்புகள் – பதற்றத்தை கையாளுவது எப்படி(Effective Tips)
நேர மேலாண்மை
எப்போவாவது ஆபீஸ்க்கு லேட்டா வந்தா பரவால்ல எப்பவுமே லேட்டா வந்தா? அப்படின்னு உங்க மேனேஜர் உங்களைப் பார்த்து கேட்கற மாதிரி வச்சுக்காதீங்க. நீங்க சரியான டைமுக்கு ஆபிஸ்(Office) போனா உங்களுக்கு அந்த நாள் நல்ல நாளா இருக்கும். அதைவிட்டு அடிச்சுப்புடிச்சு வேர்வையில குளிச்சு ஆபிஸ்(Office) போறப்போ லேட்டா ஆபிஸ் வந்துட்டோம் அப்படின்ற டென்ஷன் நாள் முழுக்கு இருந்துட்டே இருக்கும். இது உங்களோட வேலையிலயும் பிரதிபலிச்சு உங்களுக்கு ஸ்ட்ரெஸ்(Stress) உண்டாக்கக்கூடும். இது மட்டுமில்லாம உங்களுக்கு எல்லா தகுதியும் இருந்தாலும் நாளைக்கு ப்ரோமோஷன் டைம்ல எப்பவுமே லேட்டா வர்றாரு. அவருக்கு ப்ரோமோஷன் வேறயானு? உங்க மேலதிகாரிங்க சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க.
அதிக நேரம் ஆபத்து
உங்க வேலைய நீங்க குறிப்பிட டைமுக்குள்ள முடிக்காம நாள் முழுக்க செஞ்சுட்டே இருந்தா, அதுவே உங்களுக்கு ஒரு ஸ்ட்ரெஸ்ஸா (Stress) மாறிடும். எல்லாரும் போய்ட்டாங்க நாம மட்டும் ஆபிஸ்ல இருக்கோம்னு தோணும். நீங்க ஆபிஸ் விட்டு லேட்டா கெளம்புனாலும் மறுநாள் நீங்க டைமுக்கு ஆபிஸ் வரணும். அதனால உங்க வேலைய அந்தநாள் முடியறதுக்கு முன்னால செஞ்சு முடிச்சிடுங்க. இது எப்பவுமே உங்களுக்கு ரொம்ப நல்லது. அதோட நாளைக்கு ப்ரோமோஷன் டைம்லயும் இந்த நேர மேலாண்மை உங்களுக்கு உதவக்கூடும்.
வெட்டிப்பேச்சு
நீங்க புதுசா ஒரு ஆபிஸ் போறப்ப எல்லார்கிட்டயும் நெருங்கிப் பழகாம மேலோட்டமா இருக்குறது உங்களுக்கு நல்லது.அதேபோல யார நம்பியும் உங்க பெர்சனல் விஷயங்கள ஷேர் பண்ணிக்க வேண்டாம். உங்களுக்கு யாரையாவது புடிக்கல இல்ல கருத்து வேறுபாடு இருக்குன்னா அத யார்கிட்டையும் சொல்லிட்டு இருக்காதீங்க. ஒருவேள இவங்க நம்மள பத்தியும் இப்படி தான் சொல்லுவாங்களோன்னு அவங்களுக்குத் தோணும். இன்னொன்னு நாளைக்கு இவங்க அந்த குறிப்பிட்ட நபர்கிட்ட சொல்லிட்டாங்கனா அதுவும் உங்களுக்கு கெட்ட பெயரைத்தான் உண்டாக்கும். அதோட இல்லாம இதெல்லாம் உங்க ஹெச்.ஆர் காதுல விழுந்து வச்சா ஒரு மீட்டிங் வச்சு உங்களுக்கு ஒரு பெரிய அட்வைஸ் பண்ணிட்டு தான் மறுவேலை பாப்பாங்க.
ரூல்ஸ்&ரெகுலேஷன்ஸ்
இது ரொம்ப ரொம்ப முக்கியம். நீங்க போற ஆபிஸ்ல உள்ள ரூல்ஸ்&ரெகுலேஷன்ஸ் கட்டாயம் தெரிஞ்சுக்கங்க. உங்களுக்கு சம்பளம் விஷயமா எதுவும் டவுட் இருந்தா அத மறக்காம உங்க ஹெச்.ஆர் கிட்டயோ அல்லது உங்க மேலதிகாரி கிட்டயோ கேட்டு தெரிஞ்சுக்கங்க. என்ன தேதில சம்பளம் வரும், எத்தனை நாள் லீவ் எடுக்கலாம், வேலை நேரங்கள்ல பெர்மிஷன் உண்டா? லீவ் வேணும்னா யார அப்ரோச் பண்ணனும்?மெயில் பண்ணனுமா? இல்ல நேர்ல சொல்லனுமா? எத்தன நாள் வரைக்கும் லீவ் போடலாம்? இதெல்லாம் கட்டாயம் கேட்டுக்கங்க. குறிப்பா நோட்டீஸ் பீரியட் எத்தன மாசம்?னு கேட்டுக்கங்க. இதெல்லாமே தெளிவா கேட்டு வச்சுக்கிட்டா நாளைக்கு நீங்க இன்னொரு கம்பெனி மாறும்போது கட்டாயம் உதவும்.
அதிக அக்கறை
உங்களோட வேலைய முடிச்சிட்டா உங்க வேலை சம்பந்தமா வேற ஏதாவது செய்ங்க. யாராவது தெரியாத விஷயங்கள கேட்டா சொல்லிக்கொடுங்க. ஆனா மத்தவங்க வேலைய நீங்களே செஞ்சு குடுக்காதீங்க. ஏன்னா அவங்களுக்கு அத கத்துக்கணும்கிற எண்ணம் அப்புறம் வராம போய்டும். ‘மீன் பிடித்துக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது மேல்’.அதேபோல யாருக்கும் ரொம்ப ஹெல்ப் பண்ணாதீங்க. ஏன்னா அவங்கள கொஞ்சநாளா தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அதோட எப்போ ஹெல்ப் கேட்டாலும் இவங்க செய்வாங்கனு ஒரு எண்ணம் அவங்களுக்கு வந்துரும். ஒருவேளை நீங்க பெருசா ஏதாவது உதவி செஞ்சிட்டு நாளைக்கு அவங்க சொல்லாம,கொள்ளாம வேற ஆபிஸ் போயிட்டா?
கேம்ஸ்
தொடர்ந்து வேலை செஞ்சு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா (Stress) இருந்தா ஸ்மைலி பந்து வச்சு கொஞ்ச நேரம் அழுத்தி வெளையாடுங்க. ஸ்மைலி பஞ்சுப் பந்து மன அமைதிக்காக மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பது. உங்களுக்கு ஆபிஸ்ல மனஅழுத்தம் ஏற்படும்போதோ அல்லது கோபம் அதிகரிக்கும் போதோ இந்தப் பந்தை அழுத்திக் கொண்டே இருங்கள். உங்கள் மனது ரிலாக்ஸாகும். இதேபோல கியூப்ஸ் பஸில் ( cubes puzzle ) விளையாடலாம்.இதில் உள்ள வண்ணங்களை சரியாக சேர்ப்பதுதான் இந்த பஸில். உங்களுக்கு மன அமைதி தேவைப்படும் வேலையில் இந்த கியூப்ஸை எடுத்து அதன் நிறங்களை ஒன்று சேருங்கள். உங்கள் மன ஓட்டம் அமைதி நிலைக்கு வரும்.அலுவலக நேரத்தில் கவனத்தை சிதறடிக்க பல பிரச்னைகள் வந்து சேரும். ஆனால் அந்தப் பிரச்னையிலேயே மூழ்கி இருந்தால் வேலையில் ஈடுபாடாக இருக்க முடியாது. அதனால் உடனே அந்த பிரச்னையை மறந்து மன அமைதியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஐந்து நிமிடம் ஒதுக்கி இந்த விளையாட்டுகளை விளையாடிப் பாருங்கள்.
ஆபிஸ்ல என்னென்ன செய்யணும்? என்னென்ன செய்யக்கூடாது? எல்லாம் கரெக்டா படிச்சி தெரிஞ்சுகிட்டீங்களா? அப்புறம் என்ன சமத்தா ஆபிஸ் போய் வேலையில அடுத்தடுத்து முன்னேற ‘டிரை’ பண்ணுங்க!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.