இன்னமும் 'சிங்கிளா' இருக்கோம்னு வருத்தப்படுறீங்களா?.. இதப்படிங்க மொதல்ல!

இன்னமும் 'சிங்கிளா' இருக்கோம்னு வருத்தப்படுறீங்களா?.. இதப்படிங்க மொதல்ல!

எல்லோருக்கும் ஆள் இருக்கு. எல்லாரும் ஆளோட சேர்ந்து போட்டோ எடுத்து பேஸ்புக், இன்ஸ்டால போடுறாங்க. கமிட்டட்னு வாட்ஸ் ஆப்ல
ஸ்டேட்டஸ் வைக்குறாங்க. நமக்கு மட்டும் எதுவும் செட் ஆக மாட்டுதுன்னு புலம்புற ஆளா நீங்க? அப்போ இது உங்களுக்குத்தான். இத முழுசா
படிச்சுப் பார்த்து சிங்கிளா(Single) இருக்குறது எவ்ளோ கெத்து. சிங்கிளா(Single) இருக்குறதால எவ்ளோ நன்மை இருக்குன்னு புரிஞ்சுக்கங்க.இது காதலிக்கிறவங்கள வெறுப்பேத்துறதுக்கோ இல்ல காதல்னாலே(Love) சுயநலம் தான் அப்படின்னு சொல்றதுக்கோ இல்ல. பிராக்டிகலா
காதலிக்கறவங்களோட வாழ்க்கை எப்படி இருக்குன்னு, என்னென்ன விஷயங்கள் எல்லாம் அவங்கள டிஸ்டர்ப் பண்ணுதுன்னு நேர்ல பார்த்து உணர்ந்து எழுதுனது. நீங்க காதலிக்கறவங்களா இருந்து இந்தமாதிரி விஷயங்கள் உங்க வாழ்க்கைல இருந்தா மாத்திக்கங்க. ஒருவேள சிங்கிளா(Single) இருந்தா கல்யாணம்(Marriage) ஆகற வரைக்கும் உங்க வாழ்க்கைய ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.


எப்படியும் எல்லா சிங்கிள்ஸ்க்கும் ஒருநாள் கண்டிப்பா கல்யாணம்(Marriage) ஆகும். கல்யாணம்(Marriage) ஆவதற்கு முன் உள்ள இந்த இடைப்பட்ட மட்டுமே காலத்தில் தங்களை தாங்களே தனிமையில் உணரும் வாய்ப்பு சிங்கிள்ஸ்க்கு கிடைக்கும். திருமணத்துக்குப்(Marriage) பின்னர் அவர்களே ஆசைப்பட்டாலும் இந்த வாய்ப்பும் வயதும் மீண்டும் கிடைக்காது என்பதை சிங்கிள்ஸ் அனைவரும் 'பசுமரத்தாணி' போல நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்.


உங்களுக்குப் புடிச்ச டிரெஸ்நீங்க சிங்கிளா இருந்தா உங்களுக்குப் புடிச்ச மாதிரி சட்டை போடலாம். அது கட்டம் போட்டதோ, கோடு போட்டதோ இல்ல ஜிங்குச்சா கலரோ
உங்களுக்குப் புடிச்ச மாதிரி சட்டையோ,டீஷர்ட்டோ போட்டுட்டு சுத்தலாம். இதுவே பொண்ணுங்களா இருந்தா உங்களுக்குப் புடிச்ச மாதிரி ஜீன்-டாப்,
டீஷர்ட், சுடி, சல்வார்னு உங்களுக்கு என்ன புடிக்குமோ அத போட்டுட்டு சுத்தலாம்.கமிட்டட்டா இருந்தா அவங்க ஆளுக்கு என்ன புடிக்குமோ
அப்படித்தான் டிரஸ் பண்ணியாகணும். இல்லன்னு மட்டும் எந்த கமிட்டட்டும் இங்க வந்து சொல்லாதீங்க. ஒருசிலவங்க வேணா மத்தவங்க
சுதந்திரத்துல தலையிடாம இருக்கலாம். ஆனா முக்காவாசி பேரு நீ ஏன் இப்படி டிரஸ் போடுற? இந்த கலர் எனக்கு புடிக்கல, சுடிக்கு துப்பட்டா
போடுன்னு காதலன்/காதலிய டார்ச்சர் பண்றவங்க தான்.


ஜிம்/டயட்அது என்னன்னு தெரில இந்த காதல் வந்தவுடனே ஜிம்முக்கு போறதும், டயட் பாலோ பண்றதும் டக்குன்னு ஸ்டார்ட் ஆகிடும். என் ஆளு
சொல்லிட்டான் நான் கண்டிப்பா இளைச்சே ஆகணும்னு ஒரு பக்கம் பொண்ணுங்களும், இன்னொரு பக்கம் இப்பவே லைட்டா தொப்பை வந்துருச்சுனு என் ஆளு கண்டிப்பா ஜிம் போக சொல்றாடான்னு பசங்களும் ஆரம்பிச்சிடுறாங்க. எனக்கு ஒரு சந்தேகம் என்னன்னா அந்த பொண்ணு/பையன் அப்படி இருக்குறானு தெரிஞ்சு தானே காதல் சொன்னீங்க. அப்புறம் என்ன புதுசா ஜிம்,டயட் எல்லாம். ஆனா இந்த கஷ்டம் எல்லாம் சிங்கிள்ஸ்க்கு இல்ல பிரியாணியோ/தயிர்சாதமோ நமக்கு என்ன புடிக்குதோ நம்ம இஷ்டத்துக்கு சாப்பிடலாம்.


தீராத விளக்கங்கள்ரெண்டு பேருமே ஆளுக்கொரு எடத்துல வேலை பாக்கும்போது ஆபிஸ் டைம்ல இருந்து வேலை வரைக்கும் ஆளாளுக்கு வேறுபடும். சப்போஸ் நீங்க ஆபிஸ்ல முக்கிய வேலையா இருந்து உங்க ஆளோட போன அட்டெண்ட் பண்ணலைனா, அதுக்கு நீங்க அவங்களுக்கு விளக்கம் சொல்றதுக்குள்ள செவ்வாய் கெரகத்துக்கே நாலு தடவ போய்ட்டு வந்துரலாம். அந்த அளவுக்கு அந்த விளக்கம் இருக்கும். எல்லாத்தையும் கேட்டுட்டு அப்படின்னா நான் உனக்கு முக்கியம் இல்லையானு? கடைசியா ஒரு கேள்வி வரும் பாருங்க? ஜென்மத்துக்கும் இனிமே லவ் பண்ணக்கூடாதுடா சாமின்னு தோணும். அதுவே சிங்கிளா இருந்தா, நீங்க யாருக்கும் வெளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு ஜாலியா இருக்கலாம்.


வீக் எண்ட்ஸ்நீங்க காதல்ல இருந்தா கண்டிப்பா வீக் எண்ட்ஸ் உங்க ஆளோட தான் செலவு பண்ணியாகணும் அப்படிங்கறது எழுதப்படாத விதி. படமோ, பீச்சோ,
பார்க்கோ, சினிமாவோ அவங்களோட தான் நீங்க போய் ஆகணும். ஒருவேள நீங்க உங்க பிரெண்ட்ஸோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு
நெனச்சீங்க. நெனச்சுறாதீங்க, அது உங்களுக்கும் நல்லது உங்க காதலுக்கும் நல்லது. இதுவே நீங்க சிங்கிளா இருந்தா பிரண்ட்ஸோடவோ இல்ல உங்க
ஆபிஸ்மேட்ஸோடவோ எங்காவது குரூப்பா போய் ஜாலியா சுத்திட்டு வரலாம். குரூப் செட் ஆகாதுன்னா ஒரு லாங்டிரைவ் போய் வரலாம். இல்ல
உங்களுக்கு புடிச்ச ஏதாவது ஒரு இடத்துக்கு போய்ட்டு வரலாம்.


செலவு டபுள்நீங்க சம்பாதிக்கிற பணத்த உங்க ஆளுக்கும் சேர்த்து செலவு பண்ற மாதிரி இருக்கும். உங்களோட சம்பள டீடெயில்ஸ் எல்லாம் ஆல்ரெடி அவங்ககிட்ட
சொல்லிருப்பீங்க. அதனால எதையும் மறைக்க முடியாது. சப்போஸ் உங்க ஆளு இப்போ பாத்துட்டு இருக்குற வேலையை விட்டுட்டு வேற வேலை
தேடினா, அவங்க வேலை தேடுற வரைக்கும் அவங்களுக்கும் சேர்த்து செலவு பண்ற மாதிரி இருக்கும். இதனால பணத்தை ரொம்ப சிக்கனமா
எண்ணியெண்ணி செலவு பண்ணவேண்டி இருக்கும். இதுவே நீங்க சிங்கிளா இருந்தா உங்களுக்காக மட்டுமே செலவு செய்துகொண்டு, உங்களுக்குப்
பிடித்ததை வாங்கி சந்தோஷமாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.


என்ன முழுசா ஒருவார்த்தை விடாம படிச்சிட்டீங்களா? வழக்கம்போல சிங்கிள் தான் கெத்துனு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க ஜி!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.