நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பதற்றம் (பதட்டம் (anxiety)) ஏற்படும். முக்கியமாக இன்றிருக்கும் விரைவாக செல்லும் வாழ்க்கை முறையில் அனைவருமே பதற்றத்துடனே பயணிக்கிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதாவது ஒன்றை துரத்திக் கொண்டு வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இதனால் நாம் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி என்று அனைத்தையும் துளைத்து விட்டு பதற்றத்துடன் எப்படி நம் குறிக்கோளை அடையப் போகிறோம், எப்படி போட்டியில் வெற்றி பெறப் போகிறோம், எப்படி தேவையான பணம் ஈட்டப் போகிறோம் என்று எதோ ஒன்றை துரத்தி கொண்டு போகிறோம்.
இத்தகைய வாழ்க்கை முறை நிச்சயம் அனைவரையும் உண்மையான புன்னகையை இழக்க செய்யும். குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளும், எதையோ ஒன்றை துளைத்து விட்டது போல பதற்றத்தில் வாழ்கிறார்கள். இத்தகைய பதற்றத்துடன் வாழும் போது நாம் மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் பாதிக்கப் படுகிறோம். இது நம் ஆயுளையும் பாதிக்கிறது. எனவே நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் பதற்றத்தில் இருந்து எப்படி விடுபட்டு நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது என்று தெரிந்து கொள்வது முக்கியம்.
அதிக பதற்றத்தால் ஏற்படும் உடல் உபாதைகள்
பதற்றத்தை கையாளுவது எப்படி? சில குறிப்புகள்
பதற்றத்தை எப்படி கையாளுவது என்று பார்ப்பதற்கு முன் அதன் அறிகுறிகள் (symptoms) என்ன, மற்றும் பதற்றம்(tension) ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம். நீங்கள் பதற்றத்தோடு இருக்குறீர்களா என்பதை தெரிந்து கொள்ள இங்கே சில அறிகுறிகள்:
மேலே கூறப் பட்டுள்ள அறிகுறிகள் பொதுவாக பதற்றத்தோடு இருக்கும் ஒருவருக்கு இயல்பாக ஏற்படக் கூடியவை. ஆணோ, பெண்ணோ இத்தகைய அறிகுறிகள் ஒருவர் பதற்ற நிலையில் மனம் சரியாக சிந்திக்க முடியாமலும் அதிக கோபம் அல்லது கவலையோடு இருப்பதை குறிக்கும்.
ஒருவர் பதற்றத்தோடு இருக்கும் போது அது அவரது மனதை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக அவரது உடல் நலத்தையும் பாதிக்கிறது. இதனால் அவர் மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகிறார். பதற்றத்தால் ஏற்படும் சில உடல் உபாதைகள் கீழ் வருமாறு;
இந்த உபாதைகளால் நீங்கள் உங்களது வழக்கமான வாழ்க்கையை வாழ முடியாமல் போகலாம். இதனால் உங்கள் குடும்பம், உத்தியோகம் மற்றும் சமூக வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
அநேகமானவர்கள் அதிக உணர்ச்சிவசப் படும் போது அல்லது அதிக மன அழுத்தத்தோடு இருக்கும் போது பதற்ற நிலையில் இருக்கிறார்கள். சில தருணங்களில் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை மீறி சில விடயங்களை செய்து விடுவதும் உண்டு. இதனால் சில சமூக பிரச்சனைகளையும் அவர்கள் எதிர் கொள்ள நேரிடுகிறது. ஒரு சிலரால் தங்களது நிலையை அறிந்து பதற்றத்தை கட்டுப் படுத்தி அமைதியாக செயல் பட முடிந்தாலும் அநேகமானவர்களால் அவ்வாறு இருக்க முடியாமல் போகலாம். எனினும், உங்கள் பதற்றத்திற்கு நீங்கள் உடனடியாக தீர்வு காணாமல் போனால் அது பெரிய நட்டத்தையும், பாதிப்பையும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தி விடக் கூடும்.
உங்கள் பதற்றத்தை கையாளுவதற்கு முன் அதை பற்றி சில விடயங்களை புரிந்து கொள்வது முக்கியம். இதனால் பல தருணங்களில் நீங்கள் பதற்றம் ஏற்படாமல் தவிர்த்து விடலாம். ஒரு வேளை அப்படியே உங்களுக்கு பதற்றம் (tension) அதிகரித்தாலும் அதனை எளிதாக குறைக்க அல்லது கட்டுப் படுத்த முயற்சி செய்வீர்கள்.
பதற்றத்தின் அறிகுறிகள் (symptoms) ஒருவருக்கொருவர் வேறுபாடும். மேலும் அந்த அறிகுறியின் தாக்கமும் அதிகமாகவோ, குறைவாகவோ அவர்களது தனி நபர் நிலைக்கேற்ப வேறுபாடும். பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு பதற்றம் அதிகமாக ஏற்படக் கூடும். ஒரு ஆய்வின் கூற்றுப் படி உலகில் 19% மக்கள்த் தொகை பதற்றத்தால் அவதி படுகிறது. 31% பெரியவர்கள் பதற்றத்தால் அவர்களது தினசரி வாழ்க்கையில் அவதிப் படுகிறார்கள். மேலும் 13 முதல் 18 வயது உள்ள குழந்தைகளும் இந்த பதற்றத்தால் 3௦% வரை பாதிக்கப் படுகிறார்கள். இதில் குறிப்பிட தக்க விடயம் என்னவென்றால் 40% வரை பதற்றம்(tension) உள்ளவர்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்த தொகுப்பில் பதற்றத்தை பற்றி நீங்கள் சில விடயங்களை தெரிந்து கொண்டாலும் அதை எப்படி கையாளுவது என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். இதனால் நீங்கள் மருத்துவரையோ அல்லது மன நல ஆலோசகரையோ அணுகும் தேவையை முடிந்த வரை தவிர்க்கலாம்.
நேர்மறை எண்ணங்கள். உங்கள் எண்ணங்களுக்கு அதிக சக்தி உள்ளது. நீங்கள் எவ்வளவு நேர்மறை எண்ணங்களை கொண்டு செயல் படுகிறீர்களோ அவ்வளவு எளிதாக பதற்றம் வராமல் தவிர்க்கலாம். மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டாலும் அதனை எளிதாக சமாளிக்கலாம். அதனால் முடிந்த வரை நேர்மறை எண்ணங்களோடு நீங்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். இது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குவதோடு பதற்றத்தையும் குறைக்க அல்லது தவிர்க்க உதவும் .
உங்கள் தினசரி வேலைகளை வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். தினமும் உங்களது வேலைகளை கால அட்டவணை போட்டு வழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் திட்டமிட்ட படி உங்கள் வேலையை செய்து முடிக்கும் போது பதற்றம் (tension)ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் நீங்கள் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் உங்களது அன்றைய பணிகளை தொடரலாம்.
இங்கே கொடுக்கப் பட்டுள்ள குறிப்புகள் மட்டுமல்லாமல் நீங்கள் மேலும் பல விடயங்களில் உங்களை ஈடு படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சற்று காலார தோட்டத்தில் அல்லது கடலோரத்தில் நடந்து செல்லலாம். நல்ல காற்று உங்கள் மீது படும் போதும், நீங்கள் அதை சுவாசிக்கும் போதும் உங்கள் எண்ணங்களிலும், உடலிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
மேலும் நீங்கள் உங்கள் கற்பனையை ஊக்குவிக்கும் வகையில் படம் வரைவது, வண்ணம் தீட்டுவது, கதை அல்லது கட்டுரைகள் எழுதுவது என்று உங்களை ஈடு படுத்திக் கொள்ளலாம். மேலும் சுவாரசியமான புத்தகங்களை படிக்க முயற்சி செய்யலாம். இது மட்டும் அல்லாது சுவாரசியமான மற்றும் நகைசுவை திரைப் படங்களையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இது உங்கள் மன நிலையை மாற்றுவதோடு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியையும் தரும்.
இவை எதையுமே நீங்கள் செய்ய விரும்பவில்லை என்றால், அமைதியாக அமர்ந்திருக்கலாம். சில மணி நேரம் எதையும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கும் போது உங்கள் மனம் தானாகவே தன்னைத் தானே நிலை படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இதனால் நீங்கள் சில நிமிடங்களில் அமைதியாகி மனதில் ஒரு புத்துணர்ச்சியை பெறுவீர்கள்.
உங்கள் பதற்றம் உங்கள் கட்டுப்பாட்டை மீறி இருந்தால், நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி தக்க ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. இதனால் நீங்கள் சரியான தீர்வை பெறலாம். மேலும் அவரது ஆலோசனை உங்கள் வாழ்க்கையில் அல்லது உத்தியோகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி கையாளுவது அல்லது எப்படி சரியான தீர்வு காண்பது என்றும் வழி காட்டும்.
பட ஆதாரம் - pexels, shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.