பிறந்த மாதத்த சொல்லுங்க.. உங்க 'பர்சனாலிட்டி' பத்தி நாங்க சொல்றோம்!

 பிறந்த மாதத்த சொல்லுங்க.. உங்க 'பர்சனாலிட்டி' பத்தி நாங்க சொல்றோம்!

ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு டேஸ்ட் இருக்குற மாதிரி ஒவ்வொரு மனிதர்களுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கும். ஒரே நேரத்துல ஒட்டிப்பிறந்த ரெட்டைக்குழந்தைகளா இருந்தா கூட அவங்களோட விருப்பம் ஒரே மாதிரி இருக்காது. ஒரே காலேஜ்ல படிச்சு ஒண்ணா வேலை கெடைச்சு ஒரே நேரத்துல வேலைல ஜாயின் பண்ணி இருப்பாங்க. ஆனா அவங்களோட பர்சனாலிட்டி(Personality) வேறவேற மாதிரி இருக்கும். எதுக்கு இப்புடி சுத்தி வளைச்சு மொக்க போடுறன்னு கேட்குறீங்களா? அப்போ ஸ்ட்ரெயிட்டா விஷயத்துக்கு வர்றேன். 


பிறந்த மாதத்த சொல்லுங்க.. உங்க 'பர்சனாலிட்டி' பத்தி நாங்க சொல்றோம்!


வருஷம் 365 நாள் இருந்தாலும் மாதத்த(Month) பொறுத்தவரைக்கும் அது 12 தான். அதனால நீங்க எந்த மாதத்துல (Month) இந்த பூமிக்கு வந்தீங்கன்னு சொல்லுங்க, அந்த மாதத்த வச்சு உங்களோட கேரக்டர், பர்சனாலிட்டி (Personality) விஷயங்கள் பத்தி நாங்க சொல்றோம். ஜனவரி தொடங்கி டிசம்பர் வரைக்கும் 12 மாசங்களுக்கான(Month) பர்சனாலிட்டி(Personality) டீடெயில்ஸ் இங்க இருக்கு. நீங்க பிறந்த மாதத்த(Month) மனசுல நெனைச்சிக்கிட்டு இத படிச்சு உங்க கேரக்டர் இதுமாதிரி இருக்கா? இதுல சொன்ன விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகுதான்னு செக் பண்ணிக்கோங்க.


ஜனவரி-தலைமைப்பண்புநீங்கள் தலைவராக இருப்பதற்கென்றே பிறந்தவர்கள். அற்புதமான தகவல் தொடர்பு திறனை கொண்டிருப்பீர்கள். நீங்கள் நேர்மையானவராகவும்,
விசுவாசம் உடையவராகவும் இருப்பதோடு மிகவும் கவர்ச்சியாகவும் திகழ்வீர்கள். கடின உழைப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்கள் காதலில் விழுந்தால், நீங்கள் மிகவும் ரொமான்டிக்கான நபராக இருப்பீர்கள். பரிசுப்பொருட்கள், முத்தங்கள் என ஏதாவது ஒரு வழியில் உங்கள் காதலை உங்களவருக்கு உணர்த்திக் கொண்டே இருப்பீர்கள்.


பிப்ரவரி-சுதந்திரப்பறவைபிப்ரவரி மாதத்த பொறுத்தவரைக்கும் இந்த மாதத்துல பொறந்தவங்க ஒரு சுதந்திரப்பறவை. பார்ட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து அதனை என்ஜாய் செய்வீர்கள். விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வரும்போது, உங்களிடம் அதற்கான ஸ்மார்ட் ஐடியாக்கள் எப்போதும் இருக்கும். அதை வைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். மிகப்பெரிய கனவுகளை கண்டு, அதனை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். நீங்கள் காதலில் விழுந்தால் உங்களவருக்கு சிறந்த அன்பை அளிப்பீர்களா? என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் நிச்சயமாக சொல்வீர்கள் 'ஆமாம்' என்று.

மார்ச்-கலர்புல்வெளியில் இருந்து பார்க்க நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் நீங்கள் மிகவும் மென்மையானவராக இருப்பீர்கள். புதிய நபர்களை சந்தித்தாலும், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களை சந்திக்க நேர்ந்தாலும் உங்களது வழியில் நீங்கள் அவர்களை எண்டெர்டெயின் செய்வதோடு, அக்கறையாக கவனித்துக்கொள்ளவும் செய்வீர்கள். நீங்கள் உயிரோட்டமுள்ள ஒரு கலர்புல்லான நபர். உங்களது ஆட்டிடியூட் மற்றும் நேசத்தை யாருக்காகவும் நீங்கள் மாற்றிக்கொள்ள மாட்டீர்கள்.


ஏப்ரல்-சாகச விரும்பிஉங்களுக்கு பயணங்கள் தான் எல்லாமே. வேலைக்காக சென்றாலும் சரி, சாதாரணமாக சென்றாலும் சரி பயணங்களை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.நீங்கள் ஏதாவது ஒரு இடத்தில் தங்கினால் உங்கள் ஆன்மா தேக்கநிலை அடைந்தது போல காணப்படும். உங்களுக்கு அட்வென்ச்சர், திரில் பயணங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதுபோன்ற தருணங்களில் உங்கள் ரத்தத்தில் பாயும் அட்ரினலினை நீங்கள் உணரக்கூடும். நீங்கள் பயணம் செல்லும் இடங்கள் உங்களை நீங்களே அடையாளம் கண்டிட உதவும். உங்கள் ஆன்மாவிற்கு மிகப்பெரிய தீனி எது என்றால், நீங்கள் செல்லக்கூடிய பயணங்கள் தான்.


மே-எதார்த்தவாதிசொந்த வாழ்க்கையில் நீங்கள் மிகவும் பிராக்டிகலான நபராக இருப்பீர்கள். ஆடம்பரமான எதுவும் உங்களை வசீகரிக்காது. சிறிய விஷயங்களிலும்
நீங்கள் அழகைக் கண்டுணர்வீர்கள். உதாரணமாக ஜன்னலுக்கு வெளியே தெரியும் சூரிய உதயம் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக அமையக்கூடும்.இதுபோன்ற விஷயங்கள் உங்களை அமைதிப்படுத்தவும், நினைவுகளில் நீங்கள் மூழ்கிவிடாமல் காக்கவும் உதவும். இதுதவிர உங்கள் நண்பர்கள் வட்டம் எப்போதும் மிகச்சிறிய ஒன்றாகவே இருக்கும். ஏனெனில் குவாண்டிட்டியை விட குவாலிட்டியே முக்கியம் என்பதை நன்குணர்ந்தவர் நீங்கள்.


ஜூன்-புத்திசாலிஜூன் மாதத்தில் பிறந்த நீங்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடிய ஒரு புத்திசாலியான நபர். உங்களைப் பார்க்கும் நபர்கள் நீங்கள் ஒரு மாஸ்டர்
என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் அனைவருடனும் எளிதில் பழகக்கூடிய ஒரு பிராக்டிகலான நபர் என்பது அவர்களுக்குதெரியாது.
நீங்கள் மிகவும் அரிதாக மட்டுமே உங்கள் சொந்த விஷயத்தை இதயத்திற்கு எடுத்துச்செல்வீர்கள். நீங்கள் அனைவரையும் எளிதில் மன்னிக்கக் கூடிய
நபர். இதனால் உங்களுக்கு இன்னொரு பெயர் மன்னிப்பு என்றே கூறலாம்.ஜூலை-நேர்மைநேர்மையே உங்களது சிறந்த கொள்கையாகும். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்பீர்கள். உங்களை நேசிப்பவர்களுக்கு நீங்கள் மிகவும் விசுவாசமான நபராக இருப்பீர்கள். நீங்கள் பேசும் அழகிற்கும் உங்கள் குரலிற்கும் எளிதில் அனைவரும் மயங்கி விடுவார்கள். உங்கள் செல்வாக்கும்,சொல்வாக்கும் பலரையும் உங்களை முன்னுதாரணமாகக் கொள்ள உதவும்.நீங்கள் செல்லும் வழியில் பிரச்சினைகள் இருந்தாலும், எதிர்காலம் உங்களுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும் என்பதை என்றும் நினைவில் கொள்ளுங்கள்.


ஆகஸ்ட்-சுறுசுறுப்புஆகஸ்ட் மாதத்தில் பிறந்த நீங்கள் மிகவும் சுறுசுறுப்பான நபராக இருப்பீர்கள். அதேநேரம் நடப்பு சூழ்நிலைகள் குறித்த விழிப்புணர்வையும்
கொண்டிருப்பீர்கள். நீங்கள் அவ்வளவு எளிதில் யாரையும் நம்ப மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது மன்னித்தாலும் கூட, அதுகுறித்த நினைவு உங்களுக்கு
ஒரு கசப்பான மாத்திரையை விழுங்கியது போல தான் இருக்கும். உங்களை ஒரு பைட்டர் என்றே கூறலாம் அதேநேரம் நீங்கள் அன்பானவராகவும்
இருப்பீர்கள். எனினும் உங்களை யாராவது சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதை அறிந்தால் அவ்வளவு தான்,அவர்களை உதறித்தள்ள ஒருகணமும் யோசிக்க மாட்டீர்கள்.


செப்டம்பர்-உணர்ச்சிவசம்நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு நபர். உங்களை மதிக்காத நபர்களிடம் நீங்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ள மாட்டீர்கள். புதிய
நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் மிகவும் செலக்டிவாகவே நடந்து கொள்வீர்கள். எல்லோரும் ஆச்சரியப்படும் படியான விஷயங்களை
உங்களால் செய்ய முடியாது. ஆனால் உங்களை நம்பும் நபர்களுக்கு உங்களால் முடிந்தவற்றை செய்வீர்கள்.


அக்டோபர்-தேவதைகள்நீங்கள் ஒரு அறையில் நடந்து சென்றால் அங்கிருக்கும் அனைவரும் கட்டாயம் உங்களைத் திரும்பிப் பார்ப்பார்கள். இதுதான் மற்றவர்களை ஈர்க்கிறது என குறிப்பிட்டு எதையும் சொல்ல முடியாவிட்டாலும் கூட, உங்களின் ஆற்றல் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அது மிகவும் தூய்மையான ஒன்றாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். உங்களுடன் வேலை செய்ய அனைவரும் விரும்புவார்கள்.ஏனெனில் நீங்கள் சிறந்த யோசனைகளைக் கொண்டவராகத் திகழ்வீர்கள்.


நவம்பர்-ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்நீங்கள் உண்மையிலேயே கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று கூறலாம். தோற்றம், திறமை என பலவகையில் வாழ்க்கை உங்களை ஆசீர்வதித்துள்ளது. நட்சத்திரங்களை எட்டுவது கூட உங்களுக்கு சுலபமான டாஸ்க் ஆகவே இருக்கும். நீங்கள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தாலும் கூட, பிறரிடம் மிகவும் தாழ்மையுடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள்.


டிசம்பர்-சுதந்திரம்நீங்கள் நம்பிக்கை, சுதந்திரம் போன்ற ஆயுதங்களை வைத்திருப்பதால் எவராலும் உங்களைக் குழப்பவாதியாக மாற்ற முடியாது. உங்களுக்கு என்ன வேண்டும்? அது எப்போது வேண்டும்? என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நீங்களே முதலாளி என்பதால் மற்றவர்கள் பிறரைப்பற்றி என்ன கூறுகிறார்கள்? அல்லது அவர்களைப் பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள்? என்பது குறித்தெல்லாம் பிறரிடம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டீர்கள்.


 பிறந்த மாதத்த சொல்லுங்க.. உங்க 'பர்சனாலிட்டி' பத்தி நாங்க சொல்றோம்!இங்க படிச்சு தெரிஞ்சிக்கிட்டீங்களா? அப்படியே கையோடு உங்க பிரண்ட்ஸ்க்கும் இந்த ஆர்ட்டிகிள ஷேர் பண்ணிவிடுங்க. ஏன்னா ஷேரிங் எப்பவுமே நல்லது!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.