வீட்ல 'தனியா' இருக்கும்போது 'இந்த' மாதிரி எல்லாம் செஞ்சு இருக்கீங்களா?

வீட்ல 'தனியா' இருக்கும்போது 'இந்த' மாதிரி எல்லாம் செஞ்சு இருக்கீங்களா?

வாழ்க்கை ஓடுற ஓட்டத்துல இன்னைக்கு யாரும் வீட்டுல தனியா(Alone) இருக்குற மாதிரி சூழ்நிலை அமையறது இல்ல. ஆனா படிப்பு,வேலைன்னு வெளில வரும்போது ஹாஸ்டல் இல்ல வீட்ல(Home) தங்குற மாதிரியான சூழ்நிலை ஏற்படும். அப்படி தங்கி இருக்கும்போது நாம மட்டும் தனியா(Alone) இருக்குற மாதிரியான சூழ்நிலை சிலநேரம் அமையும்.அந்தமாதிரி நேரங்கள்ல என்னடா வாழ்க்கை இது? இப்படி தனியா(Alone) இருக்கோமேனு வெறுப்பா இருக்கும். இன்னும் ஒருசிலவங்க ஊருக்கு போன பிரண்டு எப்ப வருவா/ன்னு வீட்டு வாசல்ல வெறிச்சுப் பாத்துகிட்டு இருப்பாங்க. நீங்களும் உங்க பிரண்ட்ஸ்ஸும் ஒண்ணா வேலை பார்த்தாலும் கூட உங்களோட வேலைநேரம் வேற மாதிரி இருக்கும். அவங்களோட வேலைநேரம் வேறமாதிரி இருக்கும்.


உங்க பிரண்ட்ஸ் ஊருக்கு போறப்ப எல்லாம் நீங்களும் ஊருக்குப் போக முடியாது. அதேநேரம் நீங்க தனியா இருக்கீங்கன்னு அவங்களாலயும் லீவ விட்டுட்டு உங்ககூட இருக்க முடியாது. வாழ்க்கைல தனியா(Alone) இருக்குற மாதிரியான சூழ்நிலை எல்லாருக்கும் வரும். அந்தமாதிரி நேரங்களில் அத எப்படி ஹேண்டில் பண்ணி வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றது? அந்த மாதிரி நேரங்கள்ல நீங்க என்ன செய்யலாம்? எதெல்லாம் செஞ்சா உங்களுக்கும் இன்ட்ரஸ்டிங்கா பொழுதுபோகும்னு இங்கே பார்க்கலாம்.


சாப்பாடு(Food)எப்பவுமே நாலஞ்சு பேரு ஒண்ணா தங்கி இருக்கும்போது மெஜாரிட்டி என்ன சொல்றாங்களோ அத செஞ்சுட்டு போய்டலாம். ஆனா ஒரு வீட்ல ரெண்டு பேரு மட்டும்தான் தங்கி இருக்கீங்கனா, ரெண்டு பேருக்கும் என்ன சரியா வருதோ அதமட்டும் தான் நீங்க செய்ற மாதிரி இருக்கும். உங்களுக்கு நான்வெஜ் சாப்பிட புடிச்சா உங்க பிரண்டுக்கு வெஜ் சாப்பிட புடிக்கலாம். உங்களுக்கு டீ பிடிக்கும்னா, அவங்களுக்கு காபி புடிக்கலாம். இதனால பெரும்பாலான நேரங்கள்ல உங்களுக்கு புடிக்காததையும் நீங்க சாப்பிடுற மாதிரி இருக்கலாம். இதுவே நீங்க தனியா இருக்கும்போது உங்களுக்குப் புடிச்சத சமைச்சி சாப்பிடலாம். சமைக்க புடிக்கலேன்னா வெளில ஏதாவது வாங்கி சாப்பிட்டுக்கலாம்.


டான்ஸ்மனித மனம் ஒரு குரங்குன்னு சொல்வாங்க அதுவும் நாம தனியா இருக்கும்போதுதான் அது ரொம்பவே துள்ளிக்குதிக்குமாம். அதனால வீட்ல(Home) தனியா இருக்கும்போது உங்க மனசு என்ன சொல்லுதோ அத கேட்கலாம். உங்களுக்கு டான்ஸ் ஆட புடிச்சா டான்ஸ் ஆடலாம், பாட்டுபாட புடிச்சா டிவில ஓடுற ஏதாவது ஒரு பாட்ட நீங்களும் சேர்ந்து பாடலாம்.(இதெல்லாம் செய்யும்போது அக்கம் பக்கம் இருக்குறவங்களுக்கு டிஸ்டர்ப் இல்லாம கதவ சாத்திட்டு பண்ணுங்க)


சினிமா/டிவிவீட்ல(Home) நீங்க தனியா இருக்கும்போது,உங்களுக்கு புடிச்ச படம் டிவில ஓடினா நல்ல சத்தமா வால்யூம் வச்சு கேட்கலாம். உங்களுக்கு புடிச்ச பாட்டு டிவில ஓடினா டான்ஸ் ஆடிக்கிட்டே டிவி பாக்கலாம். வடிவேலு காமெடி புடிக்கும்ணா ஒருநாள் புல்லா வடிவேலு பாணியில பாய் போட்டு மல்லாக்க படுத்துகிட்டே காமெடி சேனலா வச்சு பாக்கலாம்.ரிமோட் முழுக்க,முழுக்க உங்க கண்ட்ரோல்ல இருக்கும். இத மாத்து அந்த சேனல் வை, இந்த சீரியல் பாக்கணும்னு யாரும் உங்ககூட உட்கார்ந்து உங்கள டார்ச்சர் பண்ண மாட்டாங்க. உங்க டிவிக்கு நீங்க தான் ஆல் இன் ஆல் அழகுராஜா.


ஏன் இப்படி பண்ற?குளிச்சிட்டு துணிய பாத்ரூம்ல போட்டுட்டு வந்தா, வீட்ல குப்பை போட்டா, லைட் வழக்கமா எரியற நேரத்த விட கொஞ்சம் கூடுதலா எரிஞ்சா உங்க ரூம்மேட்/பிரண்டு உங்கள கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க. அதுவே நீங்க கொஞ்சம் சோம்பேறியா இருந்தா, அட்வைஸ் பண்றேங்கிற பேர்ல உங்கள அப்பப்போ சாகடிக்கவும் செய்வாங்க. ஆனா இந்த டைம்ல உங்கள யாரும் அதட்டவோ, கேள்வி கேட்கவோ முடியாது. நீங்களே ராஜா நீங்களே மந்திரின்னு ஜாலியா இருக்கலாம்.உணரும் தருணம்எப்பவும் கலகலப்பா இருக்குறது நல்லா தான் இருக்கும். ஆனா இந்த மாதிரி தனியா இருக்குற நேரங்கள் தான் உங்களுக்கே உங்களுக்கான நேரம்.இது எல்லாருக்குமே கெடைச்சிடாது. அதனால உங்களோட ரசனையை மீட்டெடுக்கவும், உங்கள நீங்களே உணர்ந்து கொள்ளவும் இந்த மாதிரி நேரங்கள பயன்படுத்திக்கோங்க. இது உங்க மனசுக்கும், உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சிய கொடுக்கும். அதே நேரம் வீட்ல(Home) தனியா(Alone) தான இருக்கோம்னு உங்க பாய் பிரண்ட்/ கேர்ள் பிரண்ட கூட்டிட்டு வந்து அக்கம் பக்கத்துல உங்களோட பேர் எதையும் கெடுத்துக்காதீங்க. என்னதான் மாடர்ன்னு சொல்லிக்கிட்டாலும் இந்த மாதிரி விஷயங்கள இங்க பெரும்பாலானவங்க விரும்புறது இல்ல.


என்ன புல்லா படிச்சிட்டீங்களா? இனிமே வீட்ல(Home) தனியா இருக்கும்போது கண்ணக்கசக்காம இந்தமாதிரி விஷயங்கள செஞ்சு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க. அதோட வீட்ல நீங்க தனியா இருக்கும்போது என்னவெல்லாம் செய்வீங்கன்னு கமெண்ட்ல மறக்காம சொல்லுங்க பாஸ்!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.