ஆறு வருடக் காதலுக்குப் பின்பு கடந்த வருடம் நவம்பர் 14ம் தேதி தீபிகா மற்றும் ரன்வீர் இருவரின் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. அங்கு நெருக்கமான உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்ததால் வரவேரப்பு விழா 21ம் தேதி பெங்களுருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
ஊர்க்கண்ணு உறவுக்கு கண்ணு எல்லாம் பட மிக சந்தோஷமாக ஆரம்பித்தது தீபிகா ரன்வீரின் திருமண வாழ்க்கை. திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தேனிலவை முடித்துக் கொண்ட தம்பதிகள் மீண்டும் அவரவர் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். (DeepVeer).
தீபிகாவைக் கொண்டாடும் ரன்வீர்
எப்போதும் தீபிகாவைப் புகழ்ந்து தள்ளும் ரன்வீர் திருமணத்திற்குப் பின் தனது மனைவி பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.
எங்கள் கல்யாணத்திற்குப் பின்னும் எதுவும் இன்னும் மாறவில்லை. அப்படியே இருக்கிறோம். நான் வாழ்வில் செய்த மிக நல்ல விஷயம் தீபிகாவைத் திருமணம் செய்தது. திருமணத்திற்கு பின் எங்கள் வாழ்வில் எல்லா முடிவுகளையும் தீபிகாவே எடுப்பார். அதில் அவர் கில்லாடி.
என் வாழ்க்கைத் துணை மிக அழகானவர். அவர் தூங்கும் போதும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார். அவர் என்ன செய்தாலும் அவ்வளவும் அழகு என்று தனது காதல் மனைவி பற்றி சிலாகிக்கிறார் ரன்வீர்.
என் கால் மிஸ்ட் கால் ஆச்சு ! அவ்ளோதான் சொல்லிட்டேன் !
வழக்கமான காதல் மனைவி போலவே தீபிகாவும் திருமணத்திற்குப் பின் எனக்கு மூன்று விஷயங்களுக்கு தடை விதித்திருக்கிறார். தாமதாக வீட்டுக்கு வரக் கூடாது , உணவு உண்ணாமல் வெளியே செல்லக் கூடாது, மற்றும் தனது தொலைபேசி அழைப்புகள் மிஸ்ட் கால்கள் ஆகக் கூடாது என்னும் முக்கியமான மூன்று விஷயங்களை தீபிகா தனக்கு கட்டளையாக விதித்திருக்கிறார் என்று ரன்வீர் கூறியிருக்கிறார்.
இது தன்னை சந்தோஷப்படுத்துவதாகவும் தன் மீதான தீபிகாவின் அக்கறை தனக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும் நிச்சயமாக தீபிகாவின் கட்டளைகளைத் தான் நிறைவேற்றுவேன் என்றும் ரன்வீர் கூறியிருக்கிறார்.
பொறுப்பு துறப்பு
தனது திருமண வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக செல்வதாகவும் நடிப்போ வீட்டை நிர்வாகம் செய்வதோ எதுவாக இருந்தாலும் தீபிகா அதனைத் திறம்பட நிர்வாகிக்கிறார் எனும் ரன்வீர் தன் வாழ்க்கை மிக அழகாக இருக்க தீபிகாதான் காரணம் என்று மெய் சிலிர்க்கிறார். ஆகவே ரன்வீரின் நிர்வாகப் பொறுப்பு தீபிகாவுடையது என்பது நமக்குப் புரிகிறது.
ஆனாலும் தீபிகா தீபிகாவாகவே இருப்பதுதான் தனக்கு இன்னும் பிடித்திருப்பதாக காதலனும் கணவருமான ரன்வீர் கூறியிருக்கிறார்.
எது எப்படியோ சாமான்ய மக்களோ உயர்தட்டு மக்களோ திருமணத்திற்குப் பின் பெண்கள் சட்டம் இயற்றுவதும் ஆண்கள் அதனை நிறைவேற்றித் தருவதும் சூரிய சந்திரர் இருக்கும் வரை மாறாத விஷயம் போல.
—-
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.