மும்பையில் களைகட்டிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே வரவேற்பு!

மும்பையில்  களைகட்டிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே வரவேற்பு!

 பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே திருமணம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் அவர்களது நெருக்கமான குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எவரும் பங்குபெற அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதன் காரணமாக  இவர்களது முதலாவது திருமண வரவேற்பு பெங்களுருவில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் இதர குடும்ப நண்பர்கள் மற்றும் இருவரது நண்பர்கள் கலந்து  கொண்டனர்.


இதே நாளில் தான் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது அமெரிக்க காதலர் நிக் இருவருக்கும் ஜோத்புரில் திருமணம் நடைபெற்றது. ஆனாலும் பெரும்பாலான பாலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் வந்து தம்பதிகளை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


ranveer-and-deepika-mumbai-reception-fb
நேற்றைய நிகழ்வின் போது ரன்வீர் சிங் எப்பவும் போல தனது மனைவியை  புகழ்ந்து தள்ளினார். இதே போல பெங்களுருவில் நடைபெற்ற வரவேற்பின் போதும் அவர் தீபிகா படுகோனேவை புகழ்ந்து பேசினார். அன்பிற்கும் உண்டோ அடைந்தகுந்தாழ் ??இந்நிலையில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்காக இன்று மும்பையில் ஒரு வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கு  மணமக்களை வாழ்த்தினர்.  தொடர்ச்சியான படப்பிடிப்பின் காரணமாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் மும்பையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.விழாவில் பங்கு பெற்ற முக்கிய விருந்தினர்கள் விவரம் பின்வருமாறு- 


ஹிந்தி திரையுலகின் அணைத்து முக்கிய பிரபலங்களும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.


ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஹிந்தி நடிகர் அர்பாஸ் கான் மற்றும் அவரது கேர்ள் பிரண்ட் ஜியோர்ஜியா அன்றியொனி ,ரிதேஷ் தேஷ்முக்,பிரபல இயக்குனர் கரண் ஜோகர் மற்றும் அனன்யா  பாண்டே ,ரன்வீர் சிங்கின் அடுத்த பட இயக்குனர் ரோஹித் ஷெட்டி,க்ரிடி சோனான் , அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். அவருடன் ஜெயா பச்சன்,ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்வேதா பச்சன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். போனி கபூர் அவரது மகள்களுடன் விழாவில் பங்கேற்றார். இந்திய அணியின்  நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் மகனுடன் பங்கு பெற்றார்.தீபிகா படுகோனே பிறந்தது டென்மார்க்கில். வளர்ந்தது பெங்களுருவில். இவர் பிறந்த வருடம் 1986. இவரது தந்தை பிரகாஷ் படுகோனே ஒரு சிறந்த பாட்மிண்டன் வீரர் ஆவார். இவர் சிறு வயதில் தேசிய அளவில் பாட்மிண்டன் போட்டிகளில் விளையாடியவர். பின்னர் மாடலிங் மோகத்தால் விளையாட்டுத்துறையில் இருந்து விலகி முழுவதுமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். இவர் 2006 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன் பின்னர் ஹிந்தியில் முதல் முதலாக ஓம் ஷாந்தி ஓம் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயரையும் வாங்கினார். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். இவரை 2018 ஆம் ஆண்டில் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் டைம் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது இவரது சிறப்பாகும்.ரன்வீர் சிங் பாவனனி என்பது ரன்பிர் சிங்கின் முழுப்பெயர் ஆகும். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்.இவர் 2010 ஆம் ஆண்டு தனது முதலாவது இந்தி திரைப்படத்தில் நடித்தார். இவர் போர்ப்ஸ் இந்தியாவின் 100 சிறந்த பிரபலங்களின் வரிசையில் 2012 ஆம் ஆண்டு முதல் இடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.இவர் 2012ஆம் ஆண்டு தீபிகாவை பார்த்த மாத்திரத்தில் காதல் வலையில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.


deepika-and-ranveer-wedding-at-grand-hyaat


தீபிகா படுகோனே மற்றும் ரன்பீர் சிங் ஆகிய இருவருமே ஹிந்தி திரையுலகில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்,நடிகையர்களில் ஒருவர். மேலும் இவர்கள் பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரது சொத்து மதிப்பு 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 147 கோடி ஆகும். இது பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஜோடியை விட குறைவேயாகும். அவர்களது சொத்து மதிப்பு 357 கோடி ஆகும்.


 


  படங்களின் ஆதாரங்கள் - இன்ஸ்டாகிராம்