என்னதான் நவநாகரிக உலகத்தில் வாழ்ந்தாலும் காதல்(Relationship) உணர்வு இன்னும் மனிதர்களிடத்தில் மங்காமல் தான் இருக்கிறது. முன்பு ஜாதி, மாதம், மொழி பார்த்த பெற்றோர்கள் கூட தங்களது நிலையில் இருந்து இறங்கிவந்து தங்கள் மகன்/மகள் மகிழ்ச்சிக்காக தங்களது போலி கவுரவங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, அவர்கள் மகிழ்ச்சிக்காக காதல்(Relationship) திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கி விட்டனர். ஒருபுறம் பெற்றோர் இறங்கி வந்து திருமணம் செய்து வைத்தாலும் கூட கூட, காதல் திருமணம் செய்து விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.
இன்னும் பலர் வீட்டில் தங்களுடைய காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாலும் கூட ஈகோ, கருத்து வேறுபாடுகள் காரணமாக, காதலை பிரேக்கப்பில் முடித்துக் கொள்கின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்தால் சிலவேளைகளில் விஷயம் உப்புசப்பில்லாத ஒன்றாகத் தான் இருக்கும். சில நேரங்களில் இதனைத் தீர்த்து வைக்க வேண்டிய இடத்தில் இருக்கும் பெற்றோர்களே பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கி இருவரையும் நிரந்தரமாகப் பிரித்து வைத்து விடுகின்றனர்.
Also Read About இணைந்து வாழ்தல்
காதலிச்சா சண்டை போடக்கூடாதா? அவங்க சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் போடணுமா? என கேட்கிறீர்களா? விஷயம் அதுவல்ல. நீங்கள் காதலில் விழுந்திருந்தால், காதலராக இருந்தால் உங்களுக்கு உதவி செய்வதற்குத் தான் இவ்வளவு பெரிய விளக்கமும். உங்கள் காதலன்/காதலி கடைசிவரை உங்கள் கரம்கோர்த்து வருவதற்கான ‘டிப்ஸ்’ இங்கே உள்ளது. இதனைப்படித்து உங்கள் காதல்(Relationship) வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திட எங்களது வாழ்த்துக்கள்!
நம்பிக்கை வையுங்கள்
நீங்கள்(You) காதலிப்பவராக இருந்தால் உங்கள் காதல்(Relationship) மீதும் உங்களது துணைமீதும் நம்பிக்கை வைப்பது அவசியம். இந்த நம்பிக்கை குறித்து அவரிடம் தெரிவியுங்கள், உங்களை முழுமையாக நம்புகிறேன் என இன்னோரன்ன வார்த்தைகளால் அவரிடம் சொல்லுங்கள். உங்கள்(You) நம்பிக்கை அவருக்கு தெரியும் பட்சத்தில் நம்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறரே என உங்கள்(You) நம்பிக்கையைக் காப்பாற்ற அவரும் முயற்சி செய்வார்.
தொலைதூர காதலின் சில முக்கிய நன்மைகள்
நேரம் செலவழியுங்கள்
எல்லோருக்கும் வீட்டுவேலை,ஆபிஸ் வேலை இருக்கும் தான். ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கும். அதற்காக பிஸி என சொல்லிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்க்காமல், பேசாமல் நீண்டகாலம் இருந்து விடாதீர்கள். இருவரும் சேர்ந்து அடிக்கடி நேரம் செலவளியுங்கள். வார நாட்களில் எங்காவது வெளியில் செல்லலாம், இல்லையெனில் ஒரு சிம்பிள் டின்னர், படம் பார்க்க தியேட்டருக்கு செல்வது என எதையாவது முயற்சி செய்யுங்கள். கண்ணில் பாராதது கருத்தை விட்டு மறைந்து விடும் என ஒரு பழமொழி உண்டு. அதாவது நீண்ட நாட்கள் கண்ணில் படாமல் இருந்த ஒரு விஷயம் நமது சிந்தனையிலும் இருக்காது என்பதுதான் இதற்கான அர்த்தம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
Also Read About பிரபல புனைப்பெயர்கள்
சிறிய விஷயங்களை
சின்னச்சின்ன விஷயங்களை இருவரும் சேர்ந்து கொண்டாடுங்கள். வேலையில் ப்ரோமோஷன், புதிய கார் இதைத்தான் கொண்டாட வேண்டும் என கட்டாயம் எதுவுமில்லை. புதிதாக வாங்கிய நாய்க்குட்டி, புதிய ஆடைகள், உங்களை அதிகம் சிரிக்க வைத்த ஒரு நிகழ்வு என அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கொண்டாடுவதற்கு காரணங்கள் இருக்க வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை.
விதிமுறைகள்
காதல்(Relationship) என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என, யாராவது உங்களுக்கு அட்வைஸ் செய்திருந்தாலோ அல்லது உங்கள் மனதில் அப்படி ஏதாவது இருந்தாலோ அவற்றை உடனடியாகத் தூக்கித் தூர எறிந்து விடுங்கள். உங்கள் மனதை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் திறந்த புத்தகமாக வைத்துக் கொண்டால் தான் உங்கள் காதலை நீங்கள் மனதார நேசிக்க முடியும். மனதார நேசிக்கும்போது எந்தவொரு விஷயமும் உங்களை சங்கடப்படுத்தாது.
உங்கள் ஈர்ப்பைக் கேட்க ஆழமான கேள்விகளையும் படிக்கவும்
மறப்போம் மன்னிப்போம்
மறப்போம் மன்னிப்போம் என்பது காதலுக்கும் பொருந்தும் தான். காழ்ப்புணர்ச்சி மற்றும் அடிக்கடி விவாதங்கள் செய்வது ஆகியவை ஒரு உறவை கசக்க செய்துவிடும். உங்கள்(You) காதலர் எதாவது தவறு செய்திருந்தால் அவற்றை மறந்து அவரை மன்னித்து விடுங்கள். இது உங்கள் காதல்(Relationship) உறவை காப்பாற்றக் கூடும். உங்களால் முடிந்தவரை அன்பை பரப்புங்கள், சண்டையை அல்ல.
மனதாரப் பாராட்டுங்கள்
உங்களது துணையின் சாதனைகள், முயற்சிகளை மனதாரப் பாராட்டுங்கள். பெரிய விஷயங்களுக்குத் தான் பாராட்ட வேண்டும் என்பதில்லை. சிறிய விஷயங்களையும் பாராட்டி, அவரைத் தட்டிக் கொடுக்கலாம். இது அவருக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதுடன், உங்கள்(You) மீதான அன்பையும் அதிகப்படுத்தும்.
மனந்திறந்து பேசுங்கள்
உங்கள் துணையிடம் மனந்திறந்து பேசுங்கள். நீங்கள்(You) சொல்ல நினைக்கும் விஷயங்களை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். உங்களது ஆழ்ந்த இருண்ட பக்கங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்து கொள்ள தயக்கம் வேண்டாம். அதேபோல உங்கள் துணை உங்களிடம் ஏதாவது சொல்ல வந்தால் முழுதாக அதனைக் கேளுங்கள். இது உங்கள்(You) காதலை மேலும் வளர்ப்பதற்கும், உங்கள் இருவருக்கும் இடையிலான காதல், பாசத்தினை அதிகரித்திடவும் உதவும்.
முழுசா படிச்சு முடிச்சிட்டீங்களா? உங்களோட காதல்(Relationship) இன்னும் ஸ்ட்ராங் ஆக இத மட்டும் பாலோ பண்ணுங்க, மகிழ்ச்சியோட வாழுங்க!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.