ஆர்யா, விஷாலைத் தொடர்ந்து 'சிம்பு' வீட்டிலும் கெட்டிமேளச் சத்தம்?

ஆர்யா, விஷாலைத் தொடர்ந்து 'சிம்பு' வீட்டிலும் கெட்டிமேளச் சத்தம்?

ஒருபுறம் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி அமைக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில்
நிலவிவருகிறது. மறுபுறம் மக்களால் அதிகம் கொண்டாடக்கூடிய சினிமாக்களிலும், முன்னணி ஹீரோக்களான சூர்யா(Suriya), சிவகார்த்திகேயன் ஆகியோர் புதிய கூட்டணிகள் அமைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளனர். அதுகுறித்த முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.


விஸ்வாசம் சிவா-சூர்யா(Suriya)செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா(Suriya) நடித்திருக்கும் என்ஜிகே ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் சூர்யா(Suriya) நடித்து வருகிறார். இந்தநிலையில் விஸ்வாசம் இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா(Suriya) நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்துக்கு முன் இறுதிச்சுற்று சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். சிறுத்தை சிவா படத்துக்குப்பின் ஹரி, கவுதம் மேனன் இயக்கங்களில் சூர்யா(Suriya) நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்வழியாக சிறுத்தை சிவா-அஜீத் இருவரின் நீண்டகால கூட்டணி தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஏனெனில் அஜீத்தின் 60-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


ரஜினி-விஜய்-சிவகார்த்திகேயன்நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தயாரிப்பில் குதித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் சர்கார் படத்தையும், இந்த ஆண்டு
ரஜினி நடிப்பில் பேட்ட படத்தையும் தயாரித்து வெளியிட்டது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பதாக சன் பிக்சர்ஸ்
அறிவித்துள்ளது. சிவாவின் 16-வது படமாக உருவாகும் இதனை 'மெரினா'வின் வழியாக சிவகார்த்திகேயனை திரையில் அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் இயக்குகிறார்.


சிம்பு வீட்டில் கெட்டிமேளம்அண்ணன் இருக்கும்போது தம்பி திருமணம் செய்துகொள்வது தான் கோலிவுட்டில் பேஷன் போல. இதற்கு முன் ஆர்யாவின் தம்பி சத்யா, தனது
அண்ணன் ஆர்யாவுக்கு முன்பே குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது அதே பாணியில் சிம்புவுக்கு முன் குறளரசன்
திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியானது
குறிப்பிடத்தக்கது.


குட்டி தலசமூக வலைதளங்களில் அஜீத்(Ajith) குறித்து ஏதாவது ட்ரெண்ட் செய்யாமல் அஜீத்(Ajith) ரசிகர்கள் ஒருநாளும் இருக்க மாட்டார்கள். ட்ரெண்ட்
செய்வதற்காகவே அஜீத்(Ajith) குறித்த புதிய விஷயங்களை தேடிக்கண்டுபிடிப்பார்கள். அந்தவகையில் குட்டி தல என ரசிகர்களால் கொண்டாடப்படும் 'ஆத்விக்' பிறந்தநாள் அன்று அணிந்திருந்த 'பைலட்' காஸ்ட்யூம்கள் வெளியாக சமூக வலைதளங்களில் திருவிழா போல அதனைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


விஜய்அஜீத் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தால் விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? அவர்களுக்கு ஏற்றாற்போல விஜய் காரில் தன்னைப் பின்தொடர்ந்த
ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் வீடியோ வெளியானது.அதேபோல 4-வது மாடியில் நின்று ரசிகர்களுக்கு கை காட்டியதையும் அவரது ரசிகர்கள் சமூக
வலைதளங்களில் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


கார்த்தி-லோகேஷ் கனகராஜ்மாநகரம் படத்தின் வழியாக ரசிகர்களைக் கவர்ந்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை இயக்குகிறார். கைதி என பெயரிட்டு இப்படத்தின்
பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டது. டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பில், திரில்லர் படமாக உருவாகும் கைதி கார்த்தியின் 18-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.


சாஹோபாகுபலி நாயகன் பிரபாஸ் இயக்கத்தில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் சாஹோ திரைப்படம் இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக ஷரத்தா கபூர் நடிக்க, அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், ஆகியோர் முக்கிய
வேடங்களில் நடிக்கின்றனர்.பாகுபலி படங்களின் உலகளாவிய வெற்றிக்குப்பின் பிரபாஸ் நடித்திருக்கும் படமென்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.


ஆர்யா-சாயிஷாகடந்த காதலர் தினத்தன்று தங்கள் காதலை முறைப்படி உலகத்துக்கு அறிவித்த ஆர்யா-சாயிஷா வருகின்ற மார்ச் 10-ம் தேதி ஹைதராபாத்தில்
நடைபெறுகிறது. இதன் வழியாக தனது நீண்டகால பேச்சுலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து குடும்ப வாழ்க்கைக்குள் ஆர்யா நுழைகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.