இந்த ஒன்பது மாதமாக உங்களின் உடல் எடை சிறிது சிறிதாக அதிகரித்திருக்கும். உங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர இந்த எடை அதிகரிப்பு அவசியம் தேவை. சராசரி பிஎம்ஐ கொண்ட ஒரு பெண்ணிற்கு 11.5ல் இருந்து 12கிலோ வரை உடல் எடை அதிகரிப்பு நிகழக் கூடும். இந்த உடல் எடை குழந்தையின் வளர்ச்சி, மார்பக திசுக்கள், நஞ்சுக்கொடி, அமினோ அமில திரவம், கருப்பை மற்றும் கொழுப்பு சேரும் பகுதிகள் ஆகியவை மூலம் ஏற்படுகிறது.
ஆகவே ஒரு உயிரை நீங்கள் தாங்கி அதனை இவ்வுலகத்திற்கு கொண்டு வர எவ்வளவு பொறுமையாகக் காத்திருந்தீர்களோ அதே அளவு பொறுமையை உங்கள் எடை குறைப்பதிலும் காட்ட வேண்டும். வேக வேகமாகக் குறைக்கக் கூடாது. இதனால் ஆரோக்கியக் கேடுகள் நிகழும். குழந்தையையும் அது பாதிக்கலாம்.
எடைக்குறைப்பு நேரத்தில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
டயட் செய்வதை தவிர்க்கவும்
ஏற்கனவே குறிப்பிட்டபடி எடைகுறைப்பிற்காக டயட் செய்யக் கூடாது. தாய்ப்பால் ஊட்டும் சமயங்களில் அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஆபத்தாக முடியும் வாய்ப்பிருக்கிறது.
உடற்பயிற்சிகள் செய்யும் வழக்கத்தை தொடர வேண்டும்
மருத்துவர் சென்குப்தாவின் கூற்றுப்படி பிரசவம் முடிந்த ஒரு பெண் அதற்கு ஆறு வார காலத்திற்குப் பின் உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். உற்சாகமான நடைப்பயிற்சி உங்களின் ஆரம்ப உடற்பயிற்சியாக இருக்க வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் உணவு சரிவிகித ஊட்டச்சத்துக்கள் சமமானதாக இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் கொழுப்புகள் கரையும்.
உங்கள் குழந்தை திட உணவை உட்கொள்ள ஆரம்பித்த பின்னர் சிறிது சிறிதாக நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை குறைத்து உடற்பயிற்சிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒன்றே ஒன்றை நீங்கள் மனதில் வைத்துக் கொள்வது அவசியம். உங்களை நீங்களே வருத்திக் கொண்டு எதையும் செய்யாதீர்கள். ஒரு பூங்காவில் உங்கள் குழந்தையை தள்ளும் வண்டியில் வைத்து நீங்கள் நடப்பீர்கள் என்றால் அந்த நடை கூட ஒருவித உடற்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதுவே போதுமானது.
உணவைத் தவிர்க்கக் கூடாது
பிறந்த குழந்தையை கவனித்துக் கொண்டு தன்னையும் கவனித்துக் கொள்வது என்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை. ஆகவே தாய்ப்பால் சமயங்களில் நீங்கள் உங்கள் உணவை தவிர்க்கக் கூடாது. வழக்கமான மூன்று நேர உணவை விட சிறிது சிறிதாக ஆறு வேலை உணவு சாப்பிடுவதும் இடைவேளைகளில் ஆரோக்கியமான பழங்கள் போன்றவைகளை சாப்பிடுவதும் உங்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்யும்.
ஆரோக்கியமான காலை உணவு
காலை நேர உணவு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதனை ஆரோக்கியமான உணவாக சரிவிகித சமமான உணவாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் அதிகமாகும்.
சாப்பிடுவதற்கு நேரம் ஒதுக்கி சாப்பிட வேண்டும்
சில சமயம் குழந்தை இருப்பதால் சாப்பிடும் நேரத்தில் அதற்கு ஏதாவது தேவை இருக்கக் கூடும். அந்த மாதிரி நேரங்களில் குழந்தையை கவனிக்க இன்னொருவர் இருப்பின் அவரிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு நீங்கள் நிதானமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும்.
எதை சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்
நொறுக்குத் தீனி போன்று எதையாவது சாப்பிடும் பட்சத்தில் அதுபற்றிய கவனத்தோடு இருங்கள். பச்சை குடை மிளகாய், ஆரஞ்சு , ஆப்பிள், வாழைப்பழம், நிலக்கடலை, முட்டை போன்றவை உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும். எப்போதும் நார்ச்சத்து அதிகமான உணவையே சாப்பிடுங்கள். பொறித்த உணவை மறுத்து விடுங்கள். இரும்பு சத்து, கால்சியம் மற்றும் புரத சத்து அதிகம் இருக்கும் உணவை சாப்பிடுங்கள்.
திரவ உணவு சாப்பிடுங்கள்
தாய்ப்பால் கொடுக்கும் ஒரு பெண்ணிற்கு நீர் சத்து சீக்கிரம் குறைந்து போகும். ஆகவே அதனை சரி செய்ய அடிக்கடி பழ ரசம் பால் போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். குறைந்தது நாளொன்றிற்கு 10-12 டம்ளர் நீர் அருந்துங்கள். இது தாய்ப்பால் சுரக்க உதவும். உங்கள் அருகிலேயே ஒரு தண்ணீர் குடுவையில் நீரை வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களை அடிக்கடி நீர் குடிக்க வைக்கும் உத்தியாக இருக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோடா வகை பானங்களை குடிக்கக் கூடாது.
சர்க்கரையை தவிருங்கள்
எடைக்குறைப்பில் உங்கள் கவனம் இருக்கும் என்றால் நீங்கள் சர்க்கரையை தவிர்ப்பதும் செயற்கை சர்க்கரையை தவிர்ப்பதும் நல்லது. உங்கள் சர்க்கரை உட்கொள்ளலை கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள்.
பொறுமையாக அன்றாட வேலைகளைக் கவனியுங்கள்
உங்கள் உடல் எடை அதிகரிப்பை மேற்கொள்ள அதிக காலம் பிடித்தது போலவே உடல் எடை குறைப்பிற்கு சற்று காலம் எடுத்துக் கொள்ள நேரிடும். அப்போது அந்த காலங்களை நீங்கள் பொறுமையோடு கையாளுவது அவசியமாகும். ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப உடல் எடைக்குறைப்பு நடக்கும். உங்கள் கர்ப்ப காலத்தில் (pregnancy time) உங்கள் நடவடிக்கைகள் மற்றும் கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரித்த விதத்தை பொறுத்து உங்கள் எடைக்குறைப்பு நடக்கும். ஆகவே பொறுமையாக இருப்பது நல்லது. முக்கிய விஷயம் பிரசவத்தால் இழந்த உங்கள் சக்தியை மீட்டெடுக்க வேண்டும். பொறுமையாக உங்கள் உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள்
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!