இந்த நிமிடம் நீ என்னோடு இல்லையே.. இந்தப் பருவநிலை அற்புதமாக இருக்கிறது ஆனால் நீ என்னோடு இல்லை என்பதால் அது சாதாரணமாக எனக்கு தோன்றுகிறது.. உன்னை நான் மிஸ் செய்கிறேன்.. இந்த நிமிடம் உன் தோள் சாய விரும்புகிறேன்.. ஆனால் நீ என் அருகே இல்லை என்பது போன்ற பல ஏக்கங்கள் நிறைந்த தொலை தூர காதல் உறவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பெரும்பாலான காதலர்கள் மட்டுமல்லாமல் திருமணம் ஆன கணவனும் மனைவியும் கூட வேலை நிமித்தமாக பிரிந்து இருக்கின்றனர். கணவன் வெளிநாட்டில் வாழ மனைவி இங்கே அவருக்காக காத்திருக்கலாம். அல்லது மனைவி வேறொரு நாட்டில் பணியாற்ற கணவன் இன்னொரு நாட்டில் வாழ வேண்டி வரலாம். இவை எல்லாமே ஏக்கங்கள் நிறைந்த தொலை தூர காதல் உறவில் அடங்கும்.
இரு கரம் கோர்த்து எழுதும் ஒரு அரும்பெரும் காவியம் .. திருமண நாள்.. சில சுவாரஸ்ய குறிப்புகள்
தொலைதூர காதலின் சில முக்கிய நன்மைகள்
தொலைதூர உறவை சிக்கல் இன்றி எப்படி கொண்டு செல்லலாம்.
தொலைதூர உறவு பற்றிய பொதுவான கேள்விகள்
உங்கள் மீதான சுய நம்பிக்கையை நீங்கள் சரிபார்த்து கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த தொலைதூர காதல் இருக்கிறது. உங்கள் சுய ஒழுக்கம் மற்றும் உங்கள் துணை மீதான உங்கள் நம்பிக்கையின் அளவுகோல் பற்றி இதில் மிக தெளிவாக முடிவு செய்ய முடியும்.
தொலைதூர நேசங்கள் பெரும்பாலும் தனிமனித நேர மேலாண்மையை காப்பாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அருகருகே இருப்பதால் அடிக்கடி சந்திக்க தோன்றும். வேலையின் மேல் கவனம் இருக்காது. அடுத்த சந்திப்புக்காக மனம் கற்பனைகளில் லயிக்கும். இதனால் உங்கள் பயனுள்ள நேரங்கள் எல்லாம் பயனற்றதாக போய்விடும்.நேசம் என்பது கொஞ்சம் தூரத்தில் இருந்தாலும் ப்ரியத்தில் குறைவிருக்காது. அதனால் அவரை பார்க்கவில்லை என்றாலும் உங்கள் நினைவு அவருக்கு இருக்க வேண்டும் என்பதற்காக உங்கள் கிரியேட்டிவிட்டி பயன்படுத்தி பரிசுகள் அனுப்புவார்கள். சுவாரஸ்யமான ஒரு காதல் என்றால் அது தொலைதூர காதல் எனப்படும் long distance relationship தான். (Long Distance Relationship)
எந்த ஒரு உறவையும் விட தொலைவில் இருக்கும் காதல் உறவு என்பது நிச்சயம் பலவிதமான உணர்வு ஊசல்களுக்கு நம்மை பழக்கப்படுத்தும். நேசித்தவரின் மீதான நம்பிக்கை கேள்விக்குறியாகும். ஒரு கடிதம் தாமதம் ஆனாலும் உயிர் போகும் பயம் வரும். வந்த கடிதத்தை நெஞ்சோடு அணைக்கையில் காதலன் அணைப்பில் இருக்கும் சுகம் வரும். காண முடியாத ஏக்கத்தில் கண்ணீர் பெருகும். காண போகிற சந்தோஷத்தால் ரத்த நாளங்கள் வெடிக்கும்.. இப்படி பல்வேறு விதமான உணர்வு கலவைகள் இந்த காதலில்தான் சாத்தியம்.
Also Read About காதல் புனைப்பெயர்கள்
உங்கள் உள்ளுணர்வு பற்றிய புரிதல் உங்களுக்கு அதிகரிக்கும். அதனை நம்ப தொடங்குவீர்கள். மனம் புலம்புவது என்பதையும் உள்ளுணர்வு என்பதையும் பலர் ஒன்றாக நினைத்து கொள்கின்றனர். ஆனால் உண்மையில் உள்ளுணர்வு என்பது நமக்கு அறிவுரை சொல்லுமே தவிர ஆத்திரமோ புலம்பல்களோ இருக்காது. இது சரியான பாதை என்பதை அழுத்தம் திருத்தமாக உள்ளுணர்வு உங்களுக்கு முடிவெடுத்து சொல்லும். உங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் இந்த வித்யாசங்கள் எளிதில் விளங்கும்.
கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. இது மட்டும் போதுமா குழந்தை வளர்க்க.. ?
தொலைதூர உறவுகளில் (Distance Relationship) மிகவும் சிரமப்படுத்துவது இருவரும் சேர்ந்து ஒன்றாக நேரம் செலவிட முடியாதது தான். வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இருவருக்கு இடையே இது பொதுவாக நடக்கும் அதிருப்தி தான். அங்குள்ள காலம் மற்ற நாடுகளில் பொருந்தாத போது இருவரும் ஸ்கைப்பில் சந்திப்பது கூட சிரமமாக இருக்கலாம். மாலை நேரம் காதல் உணர்வோடு நாம் இருப்போம் ஆனால் அவர்களுக்கோ அது அதிகாலை நேர சுகமான தூக்க நேரமாக இருக்கலாம். இதனால் அதிருப்திகள் இருக்கும்.
ஒருவர் வாழும் வாழ்வில் இன்றியமையாத பல விஷயங்கள் நடக்கலாம்.தனது துணையுடைய அரவணைப்பு தேவைப்படாத இதயம் என்று ஒன்று இல்லவே இல்லை. உங்கள் துணையோடான அணைப்பில் உறங்கும் இரவுகளை நீங்கள் தவற விட வேண்டும். நீங்கள் சோர்ந்த பொழுதுகளில் சாய்ந்து கொள்ள தோள்கள், பற்றி கொள்ள விரல்கள், புதைந்து கொள்ள துணையின் மடி ஆகியவை உங்களுக்கு இல்லாமல் போகலாம். இந்த நேரங்களை நீங்கள் தவற விட்டாலும் மீண்டும் சந்திக்கும்போது இதைப்பற்றி ஒவ்வொன்றாக பேச பேச நீங்கள் தவற விட்டதை எல்லாம் திரும்ப பெறுவீர்கள்.
உங்கள் ஈர்ப்பைக் கேட்க கேள்விகளைப் படியுங்கள்
உங்களுக்கு என்னதான் உங்கள் உறவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தாலும் உங்களுக்கிடையேயான தூரங்கள் சில சமயம் அவநம்பிக்கையை உங்களுக்கு பரிசாக கொடுக்கும். உடனிருப்பவர்கள் கூறலாம். அல்லது நேரில் கண்ணோடு கண் பேச முடியாத சந்தர்ப்பங்கள் உங்களை வாட்டலாம். தவறு செய்து நழுவுவதில் ஒரு பாலினம் சிறந்த மரபணுக்களை கொண்டிருப்பது உண்மைதான். அதனால் கூட உங்கள் நம்பிக்கை லேசாக மாறலாம். ஆனாலும் முடிவற்ற ஒரு காதல் உங்கள் வேதனைகளை சரி செய்யும். தூரங்களை நம்புவதை விட உங்கள் துணையை நம்புங்கள்.
உறவுகள் எப்படி ஏற்பட்டாலும் சரி தொலை தூரமோ வெகு அருகிலோ எப்படி இருந்தாலும் பொறுமை மட்டுமே உங்கள் காதலை காப்பாற்றி தரும் அற்புத குணமாகும். அருகில் இருந்த வண்ணமே உங்கள் பொறுமையை சோதிக்கும் காதல் உறவுகள் இருக்கின்றன.என்றாலும் அது உடனடியாக தீர்க்கப்படும். தொலைதூர காதல்களில் உடனடியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது. நேரில் சந்தித்து பேசும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் சந்திப்புகள் நிகழ வருடங்கள் ஆகலாம்.. ஆனாலும் உங்கள் பொறுமை உங்கள் காதலுக்கு பெருமைதான் தரும் என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்கள் சார்பு தன்மை மற்றும் சுதந்திர மனோபாவம் இரண்டுக்கும் இடையே மிக சரியான சமநிலையை நீங்கள் பராமரிக்க வேண்டும். உங்கள் துணையின் உறவு உங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நீங்கள் அவருக்கு உணர்த்தலாம் ஆனால் அதே சமயம் அவர் இல்லாமல் நீங்கள் இருக்க முடியாது என்கிற clingy விஷயங்களை தவிருங்கள். இல்லாவிட்டால் நீங்கள் உங்கள் துணையை கட்டாயப்படுத்துவது போல இருக்கலாம்.
மிக சரியான தரமான நேரம் என்பது எல்லா உறவுகளுக்கும் தேவையானது. ஒருவருக்கு ஒருவர் நேரம் செலவழிக்காமல் எந்த உறவும் நிலையாக இருக்காது. ஒரு உறவை துண்டிக்க வேண்டும் என்று விரும்பும் சிலர் அந்த உறவோடு செலவழிக்கும் நேரத்தை தான் முதலில் துண்டிப்பார்கள். இது எதுவும் புரியாத இன்னொரு துணையோ ஏன் ஏன் என்று கேட்க ஆரம்பிக்க நீ என்னை கேள்வி கேட்கிறாய் சந்தேகப்படுகிறாய் என்கிற வழக்கமான சில டெம்ப்லேட் காரணங்களை கூறி விட்டு அந்த உறவு அப்பீட் ஆகி விடும். ஆகவே சரியான நேரம் உங்களுக்குள் செலவழிக்க வேண்டும். அவர்கள் பேசுவதை நீங்கள் காது மட்டுமல்ல மனம் அர்ப்பணித்து கேட்க வேண்டும்.
அடக்கி வைக்கப்பட்ட நாள்பட்ட கோபங்கள் ஆத்திரங்கள் உங்கள் உடலுக்கு மட்டுமல்ல உங்கள் காதலுக்கும் நல்லதல்ல. ஒரு விஷயம் சரியாக இல்லை என்றால் அதை பற்றி அவரோடு பேசுங்கள். உங்கள் மீது பழி விழலாம் என்றாலும் மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுவது உங்கள் காதல் வாழ்க்கைக்கு நல்லது. நாள்பட்ட உணர்வுகள் ஒரு சமயத்தில் விஷமாக மாறலாம். பேசி விடுங்கள். அவர் சரியாவதும் ஆகாததும் அவர் உங்களை எவ்வளவு மதிக்கிறார் என்பதை உங்களுக்கு உணர்த்தும். இதனை உணர்ந்து செயல்படுங்கள்.
காதல் என்பதில் புரிதல் என்கிற ஒரு விஷயம் இருக்கிறது. பாலின வேறுபாடுகள் காரணமாக உங்கள் புரிதல்கள் சற்று மாறலாம். ஆனாலும் துணை என்ன விரும்புகிறார் எதற்காக தயங்குகிறார் போன்றவற்றை அறிய உங்களுக்கான அந்தரங்க நிமிடங்களை ஒதுக்குங்கள். தினமும் அரை மணி நேரம் இதற்காக செலவிடுங்க. அவருடன் மனம் விட்டு தொலைபேசியில் அல்லது ஸ்கைப்பில் பேசுங்கள். அல்லது வாரத்தில் ஒரு முழு நாளை அவரோடு செலவிடுங்கள்.
மிஸ்ஸிங் உணர்வை இந்த தொலைதூர உறவில் தவிர்க்கவே முடியாது. ஆனாலும் சகித்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிகள் முயற்சிகள் போன்றவற்றை நீங்கள் எடுங்கள். எப்போது நீங்கள் உங்கள் துணையாய் ஸ்கைப் போன்ற வீடியோ தொலைபேசிகளில் சந்திக்கிறீர்களோ காதலோடான ஒரு புன்னகையை அவருக்கு பரிசாக்குங்கள். உங்கள் தைரியம் மற்றும் சகிப்பு தன்மை அவருக்கும் தொற்றி கொள்ளும்.
சில சமயங்களில் இது போன்ற தொலைதூர உறவில் உடன் நேசிப்பவர் உங்களுக்கு துரோகங்கள் இழைக்க நேரிடலாம். முறையற்ற தொடர்புகள் இருக்கலாம். உடனே எல்லாம் முடிந்து போய் விட்டதாக தளர்ந்து விடாதீர்கள். பெரும்பாலான தம்பதிகள் காதலர்கள் இதில் இருந்து மீண்டு வந்திருக்கின்றனர். துரோகத்திற்கான வேர்களை கண்டறிந்து அதனை சரி செய்வதன் மூலம் எல்லாம் சரியாகும். சில சமயம் வேர் என்பது உங்கள் துணை பல உறவுகளில் விருப்பம் கொண்டவர் என்பது போன்ற உண்மைகளை உங்களுக்கு உணர்த்தலாம். அந்த சமயங்களில் நீங்கள் யோசித்து முடிவெடுங்கள்.
எல்லா உறவிலும் இது ஒரு முக்கியமான கட்டம். ஒருவருக்காக மற்றவர் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது மட்டுமே இந்த உலகில் உறவு என்னும் பயணத்தை தடை செய்யாமல் காப்பாற்றுகிறது. இது உங்களுக்கு தெரியும் என்றால் பாதி சிக்கல்கள் மறைந்தது.
அன்றில் பறவைகள் ஒன்றாகும் போது.. லிவிங் டு கெதர் - தேவைகளும் தீர்வுகளும் !
கண்டிப்பாக ஒருவர் மீதான நம்பிக்கை அதிகமாக இருக்கும்பட்சத்தில் எல்லாம் சாத்தியம்தான். உண்மையான உறவு என்பதை அடிக்கடி ஏற்படுத்தி கொள்ளும் ஸ்பரிசங்கள் முடிவு செய்வதில்லை. வார்த்தையற்ற மௌனங்கள் கூட சில சமயம் முடிவு செய்கின்றன.
எல்லா உறவிலும் அப்படி நடப்பதில்லை. கொஞ்சம் யதார்த்தம் தாண்டி நான் சொன்னாலும் இதுதான் உண்மை.. நமது வினை பயன்களை நாம் அடைந்தே தீர வேண்டும். நாம் செய்த கர்மா எல்லாம் திரும்ப நம்மிடம் ஏதோ ஒரு வகையில் வந்துதான் தீரும். ஒருவேளை இந்த உறவுகள் தோல்வி அடையும் பட்சத்தில் நமது கர்மாக்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது கவனம் குறையாமல் இருப்பதும் அவசியம்.
காதலில் இருக்கும் இருவருக்கும் பிரிந்திருக்கும் போது ஒரு கணம் ஒரு யுகமாக மாறலாம். அப்படிப்பட்ட பிரிவு துயரில் உள்ளவர்கள் சந்திக்க நினைக்கும் போது அந்த தருணங்கள் அற்புதமானவையாக இருக்கும். நெஞ்சு முழுக்க ததும்பும் காதலும் கண்கள் முழுக்க பொங்கும் நீர்த்துளியுமாக உங்கள் காதலை மீண்டும் சந்திக்கும் அந்த நொடி அற்புதங்கள் இந்த தொலைதூர காதலில்தான் சாத்தியமானவை.
கொஞ்சம் கஷ்டமான கேள்விதான். இந்த வகையான தொலைதூர காதல் உறவில் நமது கட்டுப்பாடுகள் மிக முக்கியமானவை. உடனடியாக முத்தமிட முடியாது வெறும் லேப்டாப் ஸ்க்ரீனில் தெரியும் உங்கள் துணையின் பிம்பத்திற்கு மட்டுமே முத்தங்களை ஒற்ற முடியும். இது போன்ற பல சங்கடங்கள் இதில் இருக்கும். ஒருவர் உணர்வை தூண்டாமல் இருப்பது நல்லது. அல்லது முடிந்த வரை துணையுடன் செக்ஸ்டிங் செய்யலாம். அல்லது அதையும் தாண்டிய ஆன்லைன் காமங்களை அரங்கேற்றலாம் என்றாலும் உங்கள் ஆன்லைன் பாதுகாப்புகளை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நம்பகத்தன்மைதான். உங்கள் துணை உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறார் அதனாலேயே அதனை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு இருக்கிறார்கள். நேரில் பார்த்த சாட்சியங்கள் இல்லை என்பதனால் எத்தனையோ துரோகங்கள் இன்று நியாயங்களாக மாறி போயிருக்கின்றன. அவரவர் மனசாட்சி ஒரு CCTV போன்றது. அதனை கவனிக்க கடவுள் இருக்கிறார். ஆகவே தனிமையில் தவறிழைக்க பல சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் தனது துணை மீது தீராக்காதல் கொண்டவர்கள் அதனை பயன்படுத்த மாட்டார்கள். இதுதான் மிக பெரிய சவால்.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்
---
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.