'யோசிக்கவே வேணாம் நிக்க வெச்சு சுடுங்க'.. பொள்ளாச்சி விவகாரத்தில் பிரபலங்கள் ஆவேசம்!

'யோசிக்கவே வேணாம் நிக்க வெச்சு சுடுங்க'.. பொள்ளாச்சி விவகாரத்தில் பிரபலங்கள் ஆவேசம்!

இயற்கை அழகிற்கும், எழிலுக்கும் பெயர் போன பொள்ளாச்சியில்(Pollachi) இருந்து இப்படியொரு பயங்கரத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாநிலம், அதிக வரி கட்டும், பெண்கள் முன்னேற்றத்திற்கு பெயர்போன மாநிலம் என பல்வேறு பெருமைகள் தமிழகத்திற்கு உண்டு. மாநிலத்தின் முதல்வர் தொடங்கி பல்வேறு பதவிகளிலும் பெண்கள் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தமிழகத்தில் தான் இப்படியொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலும் பொள்ளாச்சி (Pollachi) அமைந்துள்ளது. இயற்கை எழில் மிகுந்த பகுதி என்பதால் சுற்றிப்பார்க்க ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்வார்கள். வார்த்தைக்கு வார்த்தை வாங்க, போங்க என மரியாதையாக பேசுவது, சிறுவாணி தண்ணீர் ஆகியவை கொங்கு மண்ணுக்கே உரித்தானது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கொங்கு பகுதியில் இருந்து 200-க்கும் அதிகமான பெண்களை,இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்னும் செய்தி தற்போது இந்தியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்கள் உடன் நட்பாகப் பழகி காதலில் விழவைத்து, பின்னர் அந்த பெண்ணை தனியாக கூட்டிச்சென்று
பாலியல் பலாத்காரம் செய்வது, அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு பெண்களை மீண்டும், மீண்டும் மிரட்டுவது போன்ற செயல்களில்
இளைஞர்கள் சிலர் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பெண்களிடம் பணம், நகைகள் போன்றவற்றையும் மிரட்டிப் பறித்துள்ளனர். சமீபத்தில்
பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, புற்றீசல் போல இதுகுறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி
வருகின்றன.


7 ஆண்டுகள்சுமார் 7 ஆண்டுகாலமாக இந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள்  நடைபெற்று வருவதாகவும், கல்லூரி மாணவிகள் தொடங்கி குடும்பப் பெண்கள் வரை சுமார் 200-க்கும் அதிகமான பெண்கள் இதில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வெளியாகும் தகவல்களைப் பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய சபரிராஜன் (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.


சிபிசிஐடிஇந்நிலையில், பொள்ளாச்சி(Pollachi) பாலியல் வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசாரிடம் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த பாலியல் பலாத்காரம் வழக்கில் வெளிப்படைத்தன்மை தேவையென பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சமூக வலைதளங்கள்கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #PollachiSexualAbuse, #JudicialProbeForPollachiRapes மற்றும் #ArrestPollachiRapists போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. பொதுமக்கள், மாணவர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் இந்த ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்தினைப் பதிவிட்டு வருகின்றனர். அதிலிருந்து ஒருசில கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.


சித்தார்த் 


பொள்ளாச்சி(Pollachi) பாலியல் சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். சமூக வலைதளங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகள் ஒரு போதும் தப்பித்து விடக்கூடாது என ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.கதிர்


இதுபோன்ற மனிதநேயமற்றவர்களுக்கு தண்டனை(Punishment) மிகக்கடுமையாக வழங்க வேண்டும். அந்தத் தண்டனை (Punishment)  இதுபோன்ற குற்றச்செயல்கள் மீண்டும் நடக்காத அளவுக்கு இருக்க வேண்டும்.ஜி.வி.பிரகாஷ்குமார் 


ஹிப்ஹாப் ஆதி

 
ஜெயம் ரவி 


என்னுடைய நிலைப்பாடு படத்திலும், நிஜத்திலும் எப்போதும் ஒரேமாதிரி தான் இருக்கும். பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரங்களுக்குத் தண்டனை(Punishment) கடுமையாக இருக்க வேண்டும்.வரலட்சுமி சரத்குமார் 

பொள்ளாச்சி கொடூரன்களுக்கு மரண தண்டனை (Punishment) வழங்க வேண்டும்.விஜயலட்சுமி 
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.