Acne

உங்கள் முக அழகினை பலமடங்காக்கும் முட்டை ஓடு.. ஒரே வாரத்தில் வித்தியாசத்தை காணுங்கள் !

Deepa Lakshmi  |  May 14, 2019
உங்கள் முக அழகினை பலமடங்காக்கும் முட்டை ஓடு.. ஒரே வாரத்தில் வித்தியாசத்தை காணுங்கள் !

டல்லான முகம், சூரிய வெப்பத்தால் கருப்பான முகம், சமசீரற்ற நிறம் கொண்ட முகம் இந்த சிக்கல்கள் உங்களுக்கு இருக்கிறது என்றால் இந்த முட்டை ஓடு குறிப்புகளை பின்பற்றினால் ஒரே வாரத்தில் பிரகாசமான முகம் உங்கள் வசம் ஆகும்.

முட்டை ஓட்டில் ( Egg shells) என்ன இருக்கிறது என்று நீங்கள் தூக்கி எறியாமல் அந்த ஓடுகளை பத்திரப்படுத்துங்கள். அதில் மெல்லிய ஜெல் போன்ற பொருள் ஒட்டி கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த பொருள்தான் உங்கள் அழகை பலமடங்காக்க பயன்படுகிறது.

முதலில் எடுத்து வைத்த முட்டை ஓடுகளை நன்கு மிக்சியில் பொடியாக்கி ஒரு டப்பாவில் சேமியுங்கள். இதுதான் முக்கியமான குறிப்பு. பின்னர் இந்த முட்டை ஓட்டு பொடியை பயன்படுத்தி நாம் என்ன விதமான முறைகளால் அழகை பராமரிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.

முகத்தை பொலிவாக்க பார்லர் எதுக்கு? இருக்கவே இருக்கு வீட்டு முறை அழகுக் குறிப்பு!

முட்டை ஓட்டு பொடியை முட்டையின் வெள்ளை கருவோடு ஒன்றாக அடித்து கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையை நீங்கள் முகத்தில் தடவ வேண்டும். உலர்ந்த பின்னர் கழுவி விடுங்கள். உடனடியாகவே உங்கள் முகம் பிரகாசம் ஆகியிருப்பதை நீங்கள் உணர முடியும். வாரம் இருமுறை நீங்கள் செய்தால் நன்மை தரும்.

சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்வதில் முட்டையின் ஓடு முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டை ஓட்டு பொடியுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து பசைபோல செய்து அதனை முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவி விடுங்கள். இப்படி செய்வதால் வெயிலால் கறுத்து களையிழந்து முகம் ஜொலிக்கும்.

உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சில முக அழகு சீரம் மற்றும் க்ரீம்கள்

2 டீஸ்பூன் முட்டை ஓட்டு பொடியுடன் தேன் , கடலை மாவு போட்டு கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். பின்னர் கழுவி விடுங்கள். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.

4 ஸ்பூன் முட்டை ஓடு பொடியுடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி இருக்கும் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கும் முன் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் கண்களின் கீழ் பகுதி வறட்சி அடையாமல் நீண்ட நேரம் புத்துணர்வோடு இருக்கும்

வெளியானது தீபிகாவின் அழகு ரகசியங்கள் – அவரின் பாலிஷான தேகத்திற்கு இந்த மசாஜ் தான் காரணமாம் !

வெயிலால் ஏற்படும் சரும எரிச்சல்களை இந்த முட்டை ஓட்டு பொடி எளிதில் குளுமையாக்குகிறது. ஆப்பிள் சீடர் வினிகர் உடன் முட்டை ஓட்டு பொடியை கலக்க வேண்டும். 10 நிமிடம் அப்படியே ஊற விட்டு அதன் பின்னர் எரிச்சல் கொண்ட இடங்களில் இதனை தடவ வேண்டும். இப்படி செய்தால் எரிச்சல்கள் இல்லாமல் சருமம் நிவாரணம் அடையும்.

மிருதுவான கண்ணாடி பளபளப்பு முகம் எல்லோருக்கும் வேண்டும் என்பது பொதுவான ஆசை. அதற்கு முட்டை ஓட்டு பொடியுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட மற்றவரின் முகம் பார்க்கும் கண்ணாடியாக நம் முகம் மாறி போகும்.

மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!

புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்

—                           

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                  

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Acne