குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

குளிர்காலம் இதோ நம்மை நெருங்கிவிட்டது. மழை மற்றும் குளிர் காலங்களில் முடியை பராமரிப்பது பெரும் பிரச்சனை. இந்தக் காலக்கட்டத்தில்தான் தலை முடி மற்றும் உடல் சருமம் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகும். 

அத்துடன் நமது கூந்தல் உதிரும், பொலிவின்றியும் பளபளப்பு குறைந்தும் காணப்படுமே என்ற கவலையும் நம்மை ஆழ்த்த தொடங்கிவிடும்.  வெயில் காலத்தில் உடல் நன்றாக வியர்க்கும். கோடையில் நிறைய தண்ணீர் குடிப்பதால் வியர்வை வழியாகவும், சிறுநீர் மூலமாகவும் நச்சுக்கள் வெளியேறிவிடும். 

pixabay

ஆனால் குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால், அதிகம் வியர்க்காது. இதனால் நச்சுக்கள் உடலில் தங்கி தலைமுடியின் வேர் பகுதி பாதிக்கப்படும். இதுதான் தலைமுடி உதிர்வு அதிகமாக இருக்கிறது.

மேலும் படிக்க - சரும அழகிற்கு கமலாப்பழம் தோல் - வீட்டில் எளிய முறையில் பேஸ் பாக் செய்யலாம்!

குளிர்காலத்தில் சருமத்தை போலவே ஸ்கேல்ப்பும் வறண்டுவிடும். இதனால் கூந்தல் சொரசொரப்பாக எளிதில் உடையும் தன்மையை பெற்றுவிடும். வறண்ட கூந்தலில் (hair) பொடுகு தொல்லையும் அதிகரித்து முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

 

தயிர் 

குளிர்காலத்தில் பொடுகு பிரச்சினை தவிர்க்க முடியாத ஒன்றாகும். வெந்தயத்தை நீரில் நன்கு ஊறவைத்து மறுநாள் அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை தலைமுடியின் மயிர்கால்கள் வரை நன்கு வருடி அரைமணிநேரம் கழித்து குளித்து வர வேண்டும். நாளடைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும். தலையில் அரிப்பு போன்ற பிரச்சினையும் ஏற்படாது.

வெந்தயம் 

முடி உதிர்வுக்கான தீர்வுக்கு வெந்தயம் சிறந்த நிவாரண தரும். முதல் நாள் இரவு வெந்தயத்தை நீரில் நன்கு ஊறவைத்து விட்டு மறுநாள் காலையில் அதனை பசைபோல் அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் எலுமிச்சைப்பழ சாற்றை சேர்த்து இந்த கலவையை தலையில் நன்கு அழுத்தி தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கூந்தலை கழுவி வந்தால் கூந்தல் மென்மையாக காட்சியளிக்கும்.

pixabay

பாதாம் எண்ணெய்

குளிர்கால வறட்சியை நீக்க பாதாம் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது.  தலைக்கு குளிக்கும் முன்னர் பாதாம் எண்ணெய்யை மிதமாக சூடு செய்து தலையில் வேர்களில் படும்படி தேய்க்க வேண்டும்.அதனை தொடர்ந்து தலையில் தேய்த்து வந்தால் முடியின் வறட்சி நீங்குவதோடு முடியும் மிருதுவாக மாறும்.

விளக்கெண்ணெய்

மழை மற்றும் குளிர்காலங்களில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலையில் விளக்கெண்ணெய்த் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்துக் குளிப்பது நல்லது. தினமும் இரவு படுக்கும் முன் மரத்தினால் ஆன ஒரு பெரிய பல் சீப்பினால் பத்து நிமிடம் நன்றாக மண்டையில் பதியும்படி முடியை வாரிவிட வேண்டும். இதனால் தலையில் ரத்த ஓட்டம் சீராகி தலைமுடி உதிர்வது குறைவும். 

மேலும் படிக்க - அனைத்து விதமான சருமத்திற்கும் க்ரீன் டீ ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

தேங்காய்ப்பால்

வறட்சியைப் போக்க தேங்காய்ப்பால், விளக்கெண்ணெயை சம அளவில் கலந்து அதனுடன் ஐந்த முதல் 10 சொட்டு டீட்ரீ எண்ணெயையும் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு நன்றாக தடவித் ஒரு மணி நேரம் ஊற வைத்து ஷாம்பு போட்டு முடியை (hair) நன்றாக அலச வேண்டும்.

pixabay

கண்டிஷனர் 

ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் டீப் கண்டிஷனரை கூந்தலுக்குப் பயன்படுத்தவும். ஐந்து நிமிடம் தலையில் ஊறவிட்டு பின் அலசவும். இதனால் முடிக்கு பளபளப்பான பொலிவு கிடைக்கும். கூந்தல் ஈரமாக இருக்கும் போது உலர்கருவிகள் மற்றும் பிரஷ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். அது கூந்தலில் பிளவுகளை ஏற்படுத்தும்.

ஆலிவ் எண்ணெய்

ரெகுலராக தலை முடிக்கு நல்ல தரமான பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது முடிக்கு தேவையான வைட்டமின் மற்றும் ஃபேட்டி ஆசிட்களை தந்திடும். ஜோஜோபா போன்ற எண்ணெய்கள் தலைமுடியில் சுரந்து ஈரப்பதத்தை கொடுக்கும் சீபம் போன்றதாகும். இதனை ஸ்கேல்ப் எளிதில் உறிஞ்சிக் கொள்ளும்.

முட்டை

கூந்தல் எப்போதும் ஈர தன்மையுடன் மிளிர முட்டையையும் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். அதன் வெள்ளைக்கருவை தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். முட்டையின் வெள்ளை கருவுடன், ஆலிவ் ஆயில் கலந்து அப்ளை செய்து குளித்து வர கூந்தல் உதிர்வு கட்டுப்படுத்தப்படும்.

pixabay

விளக்கெண்ணெய் 

விளக்கெண்ணெயையும் வாரம் ஒருமுறையாவது தலைக்கு தேய்த்து வர வேண்டும். அதில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. அவை பொலிவிழந்து காணப்படும் தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கும். வறண்டு காணப்படும் கூந்தலை சீர்படுத்த உதவுகிறது. 

கவனிக்க வேண்டியவைகள் 

  • குளிர்காலத்தில் தலைமுடிக்கு அடிக்கடி ஷாம்பூ போடுவதை குறைக்கவும். சோடியம் லாவ்ரெல் அல்லது சோடியம் மைரெத் சல்ஃபேட் கொண்ட ஷாம்பூக்களை குறிப்பாக தவிர்ப்பது நல்லது. பாரபின் அல்லது டைகள் அல்லாத ஷாம்பூக்கள் கூந்தலுக்கு இயற்கையான மினுமினுப்பை சேர்க்கும்.
  • குளிரில் இருந்து கூந்தலை பாதுகாக்க மெல்லிய ஸ்கார்ஃபை பயன்படுத்தலாம். ஆனால் அது ஸ்கேல்ப்பின் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அளவும் இறுக்கமாக இருக்க கூடாது. 
  • ஸ்கால்ப் மற்றும் கூந்தலை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களது உடலுக்கு நீர் தேவைப்படுவதை போல உங்களது கூந்தலுக்கு அவசியம். உங்களது கூந்தலை (hair) ஆரோக்கியமாக வைக்க அதிகளவு நீர் அருந்த வேண்டும்.
pixabay

  • குளிர்காலத்தில் ஸ்டைலிங்க் கருவிகளான டிரையர்கள் மற்றும் கர்லர்கள் ஆகியவற்றை பயன்படுத்தினால் கூந்தல் மற்றும் ஸ்கேல்ப் வறண்டு விடும். எனவே முடியை இயற்கையாகவே உலர விடுங்கள்.
  • வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். குளிர்காலம் என்பதற்காக உங்களது கூந்தலை சுடு நீரில் அலசக் கூடாது. வெதுவெதுப்பான நீர் தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும்.
  • ஈரக் கூந்தலுடன் வெளியில் செல்லாதீர்கள். வீட்டில் உள்ள பொருட்களான அவகாடோ, தயிர், மற்றும் முட்டையின் வெள்ளை கரு கூந்தலுக்கு தேவையான கூடுதல் ஈரப்பதத்தை தரக்கூடிய பொருட்களாகும்.
  • புரதம், இரும்பு,  ஜிங்க் சத்து, விட்டமின் சி நிறைந்த கீரைகள், நட்ஸ் மற்றும் சிட்ரஸ் பழங்கள் நிறைந்த உணவுகளை நன்கு உண்ண வேண்டும்.

மேலும் படிக்க - சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!