பெண்களுக்கு கூந்தல் கூடுதல் அழகை சேர்க்க கூடியது. எல்லா பெண்களுக்கும் அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்பதே ஆசையாக உள்ளது. அதற்கு ஆப்பிள் சிடார் வினிகர் பெரிதும் பயன்படுகிறது. ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த வினிகர் தற்போது பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது.
இதில் எவ்வித கெமிக்கல் விளைவுகளும் இல்லாததால் கூந்தல் உதிர்வு பிரச்னை ஏற்படாது. ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தி கூந்தல் பிரச்சனைகளை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
கூந்தல் உதிர்வு பிரச்னைக்கு : கூந்தல் உதிர்வு பிரச்னை அதிகமாக இருந்தால் தலையில் ஒவ்வொரு பகுதியாக வகுடு எடுத்து அங்கே தண்ணீரில் நனைத்த ஆப்பிள் சிடர் வினிகரை (apple cider vinegar) அப்ளை செய்ய வேண்டும். பின்னர் வெந்நீரில் நனைத்த துண்டை நன்கு பிழிந்து தலையைச் சுற்றிக் கட்ட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச முடி உதிர்வது கட்டுப்பட்டு முடி அடர்தியாகும்.
pixabay
பொடுகுத் தொல்லை நீங்க : ஆப்பிள் சிடர் வினிகர், எலுமிச்சைச் சாறு, தண்ணீர் ஆகியவற்றை சம அளவு கலந்து பொடுகு இருக்கும் பகுதிகளில் தடவ வேண்டும். பத்து நிமிடங்களுக்கு பின்னர் கூந்தலை அலசலாம். வாரம் மூன்று முறை என தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இதனை செய்துவர, இதன் ஆன்டி மைக்ரோபியல் தன்மை தலையில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாவை அழித்து பொடுகுப் பிரச்னையில் இருந்து விடுபட உதவுகிறது.
மேலும் படிக்க – சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!
உலர்ந்த கூந்தலுக்கு : முதலில் உங்கள் தலையை தண்ணீர் கொண்டு நன்கு அலசி உலர விடுங்கள். அடுத்து ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து, இந்த கலவையை நேரடியாக கூந்தலின் வேர்களில் தடவி சிறிது நேரம் கழித்து மைல்டு ஷாம்பு கொண்டு நன்கு சுத்தம் செய்யுங்கள். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வந்தால் உலர்ந்த கூந்தல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
உலர்ந்த தலைமுடி உள்ளவர்கள் தலைக்கு ஷாம்பூ போட்ட குளித்தபின் இரண்டு மூடி ஆப்பிள் சீடர் வினிகரை (apple cider vinegar) ஒரு குவளை தண்ணீரில் கலந்து கடைசியாக தலையில் ஊற்றி அலசி வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.
pixabay
மிருதுவான கூந்தலை பெற : ஒரு முட்டையுடன், 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் அரை கப் தண்ணீரை கலக்கவும். இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி சாதாரண ஷாம்புவை போல் பயன்படுத்தலாம். இந்த முறையை வாரம் ஒரு முறை செய்து வர கூந்தல் மிருதுவாகும்.
அரிப்பு நீங்க : தலை அரிப்பை உண்டாக்கும் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் ஆப்பிள் சீடர் வினிகருக்கு (apple cider vinegar) உண்டு. தலை முடியை நன்றாக அலசவும். பின்னர் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம அளவு எடுத்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
இதனை உங்கள் தலை முடியில் தெளித்து சில நிமிடங்கள் ஊற விடவும். பின்பு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வந்தால் உச்சந்தலையின் pH அளவை பராமரித்து தலை முடி வறட்சி மற்றும் அரிப்பை கட்டுப்படுத்துகிறது.
மேலும் படிக்க – பார்லர் போகாமலே பளபளக்க வேண்டுமா ! மேனி அழகை மேலும் அழகாக்க இயற்கை குளியல் பொடி !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!