இன்று பெரும்பாலான, ஏன் கூறப்பூனால் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரு பெரிய வருத்தம், தங்களுக்கு அடர்ந்த மற்றும் நீளமான கூந்தல் இல்லை என்பது தான். எவ்வளது முயற்சிகள் எடுத்தாலும், தலைமுடி எதிர்பார்த்த படி வளருவதில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனினும், சரியான முறையையும், பொருட்களையும் நீங்கள் பயன்படுத்தும் போது, நிச்சயம் எதிர்பார்த்த பலன்களை பெற்று விடலாம்.
தலைமுடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர பல தையலங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இது ஒரு சிலருக்கு பயன் தருவது போல இருந்தாலும், பெருமாலானவர்கள், பணம் வீண் என்பதைத் தவிர, பலன் கிடைக்கவில்லை என்றே புலம்புவார்கள். ஆனால், இனி இந்த கவலை உங்களுக்குத் தேவை இல்லை. நீங்களே உங்கள் வீட்டில் உங்களுக்கு ஏற்ற கூந்தல் தையலத்தை (hair oil) தயார் செய்து விடலாம்.
அது எப்படி என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக இருந்தால், இந்த தொகுப்பு உங்களுக்காகத் தான்! தொடர்ந்து படியுங்கள்!
தரமான தலைமுடி தைலதிர்க்கான பண்புகள் (Qualities of good hair oil)
எண்ணில்லடங்கா தையலங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. மேலும் சிலர் வீட்டிலேயே தாங்களாகவே தயார் செய்யவும் முயற்சிகின்றனர். ஆனால், ஒரு தரமான தையலம் எப்படி இருக்க வேண்டும், அதற்குரிய பண்புகள் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்வது மிக முக்கியம். அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:
- தரமான எண்ணை நுண்குமிழில் நல்ல போஷாக்கைப் பெற உதவுகின்றது. மேலும் வேர் பகுதிக்கு சத்துக்கள் கிடைக்கப் பெற்று தலைமுடி வளர்ச்சியை தூண்டும்
- தலைமுடி உதிர்ந்தால், அந்த இடத்தில் வேகமாக புதிய முடி வளர உதவும்
- மேலும் தலையில் பல இடங்களில் புதிய முடி உருவாகவும் தரமான எண்ணை உதவும். இதனால் தலைமுடி அடர்த்தியாக வளரும்
- தரமான எண்ணை தலை முடி உதிர்வதை கட்டுப்படுத்தும்
- வேர் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை போக்கி, நல்ல ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்
- தொடர்ச்சியாக தலைமுடிக்கும் வெறுக்கும் தேவையான போஷாக்கைப் பெற உதவும்
- தலைமுடியை எப்போதும் ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்ள உதவும்
- தலைமுடி வறண்டு போகாமல், நுணியில் வெடிப்பு உண்டாகாமல், சுருள் மற்றும் சேதம் ஏற்படாமல் தடுக்கும்
- தலைமுடி மிருதுவாகவும், கனமாகவும் வளர உதவும்
தலைமுடி வளர்ச்சிக்கான சிறந்த எண்ணைகள்(Best Oils for Hair)
பல எண்ணைகள் தலைமுடி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றது. எனினும், மக்களுக்கு ஒவ்வொரு வகை எண்ணை மீது ஒவ்வொரு நம்பிக்கையும், கருத்துகளும் உள்ளன. எனினும், இவை அனைத்துமே, நல்ல பலன்களைத் தரக் கூடியதாக உள்ளது. நீங்கள் அந்த எண்ணை வகைகளை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே விளக்கத்தோடு ஒரு பட்டியால்:
1. தேங்காய் எண்ணை
Shutterstock
இந்தியாவில் அனைத்து மக்களும், இந்த என்னையையே அதிகம் தலைக்கு பயன்படுத்துகின்றனர். இதில் பெரும் அளவு கொழுப்பு அமிலம் உள்ளது. இது முடி நுண்குமிழில் நன்கு ஊடுருவி, தேவையான போஷாக்கைப் பெற உதவுகின்றது. இதனுடன் கருவேப்பிள்ளை, நெல்லிக்காய் என்று வேறு சில பொருட்களையும் சேர்த்து பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணை தலைமுடியை மிருதுவாகவும், அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதை அனைத்து வகை தலைமுடிகளுக்கும் பயன்படுத்தலாம்.
2. ஆர்கன் எண்ணை
இந்த எண்ணை ஆர்கன் மரத்தில் இருந்து கிடைக்கும் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. இதனை தலைமுடிக்கு மட்டுமல்லாது, சருமத்திற்கும் பயன்படுத்துவார்கள். இதனை தங்க திரவம் என்றும் அழைப்பார்கள். இதில் ஆக்சிஜனேற்றம், கொழுப்பு அமிலம் மற்றும் வைட்டமின் இ நிறைந்துள்ளது. இது தலைமுடி விரைவாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவும். நுணியில் ஏற்படும் வெடிப்பு, ஊதா கதிரால் ஏற்படும் சேதம் மற்றும் வெப்பத்தால் ஏற்படும் சேதம் போன்றவற்றை போக்க இது உதவும்.
3. ஜோஜோப எண்ணை
இதை ஹோஹோப எண்ணெய் என்று அழைப்பார்கள். இது தலைமுடி வேர் நல்ல போஷாக்கைப் பெற உதவியாக உள்ளது. மேலும் pH அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். புதிதாக அணுக்கள் தலைமுடியில் உற்பத்தியாக இது உதவும். பொடுகு, தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும். வேர் பகுதியில் பிரச்சனை இருப்பவர்கள் இந்த எண்ணையை பயன்படுத்தலாம். சோர்ந்த தலைமுடிக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
4. பாதாம் எண்ணை
இந்த எண்ணையை சருமம் மற்றும் தலைமுடி, ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் இ மற்றும் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. மேலும் புரதம், மக்னீசியம் மற்றும் ஆக்சிஜனேற்றம் இதில் அதிகம் உள்ளது. இது தலைமுடி சேதம் அடைவதை தடுத்து நல்ல வளர்ச்சி பெறுவதை அதிகரிக்கும். வறண்ட தலைமுடி இருப்பவர்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தலாம். உடலில் மேலும் ஒமேக 3 கொழுப்பு அமிலம் குறைவாக இருப்பவர்களும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். தலைமுடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் இந்த எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
5. ஆலிவ் எண்ணை
Shutterstock
இந்த எண்ணைக்கு பாதுகாக்கும் மற்றும் ஈரத்தன்மையை அதிகப்படுத்தும் பண்புகள் உள்ளன. இயற்கையாக தலைமுடியில் இருக்கும் கெரட்டின் அளவை பாதுகாத்து, இயற்கையாக போஷாக்குடன் இருக்க உதவும். மேலும் இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் இ மற்றும் ஒளிக் அமிலம் இருப்பதால் நல்ல போஷாக்கை முடிக்குத் தரும். குறிப்பாக வேர் பகுதி பலம் பெற்று அடர்த்தியான கூந்தலைப் பெற உதவும். பொடுகு தொல்லையை போக்கி, மிருதுவான தலைமுடியைப் பெற இது ஏற்ற எண்ணெய்.
6. திராட்சை விதை எண்ணை
இந்த எண்ணையை பற்றி பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்காது. எனினும், இது தலைமுடி பாதுகாப்பிற்கு ஏற்ற ஒரு எண்ணெய். இதில் எரிச்சல் நீக்கிகள், ஆக்சிஜனேற்றம் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளது. நல்ல ஆரோக்கியமான தலைமுடியைப் பெற இது ஏற்ற எண்ணை. தலைமுடி வளர்ச்சியை ஊக்கவித்து, நல்ல பலமான அமைப்பை முடி பெற உதவும். பலவீனமான தலைமுடிக்கு இது சிறந்த எண்ணையாகும். இழந்த தலைமுடி வேகமாகவும், பலமாகவும் வளர இது சிறந்த எண்ணை.
7. லாவெண்டர் எண்ணை
இந்த எண்ணையில் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. தலைமுடிக்கு மட்டுமல்லாத, இதன் பயன்பாடுகள் பல உண்டு. இது தலைமுடி முழுமையாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும். இது தலைமுடியில் நுண்குமிழில் அதிக எண்ணிக்கையில் உருவாக உதவும். மேலும் இதில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் குணங்களும் உள்ளது. இது தலைமுடி இழப்பை குறைத்து, இரத்த ஓட்டத்தை வேர் பகுதிகளுக்கு அதிகரிக்க உதவும். வறண்ட தலைமுடிக்கு இது ஏற்ற எண்ணை.
8. லெமன்க்ராஸ் எண்ணை
எந்த எண்ணை நல்ல மனமாக இருக்கும். இதில் பல வைட்டமின்களும், தாது பொருட்களும் நிறைந்துள்ளது. இந்த எண்ணை வலி மற்றும் அழுத்தத்தை போக்க உதவும். தலைமுடி நுண்குமிழில்களை அதிகரித்து, தலைமுடி உதிர்வை குறைக்கும். பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் இதில் அதிகம் உள்ளது. பொடுகை போக்க உதவும். தலைமுடி நல்ல பலபலப்பாக இருக்க உதவும்.
9. எள் எண்ணை
Shutterstock
இந்த எண்ணை பெரும் அளவு சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இது தலைமுடி நன்கு வளர உதவியாக இருகின்றது. இதில் நுண்ணுயிர் கொல்லி பண்புகள் நிறைந்துள்ளது. குறிப்பாக வேர் பகுதிகளில் நோய் ஏற்படாமல் பாதுகாக்க உதவும். இதில் வைட்டமின் இ சத்து நிறைந்துள்ளது. தலைமுடி மற்றும் சருமம் ஆகிய இரண்டுக்கும் ஏற்ற எண்ணை இது. பொடுகு தொல்லையை போக்கி, தலைமுடி நல்ல வளர்ச்சிப் பெற உதவும். அனைத்து வகை தலைமுடிக்கும் இது ஏற்ற எண்ணை. உதிர்ந்த தலைமுடி வேகமாக வளர உதவி செய்யும்.
10. டீ மர எண்ணை
இந்த எண்ணையை பற்றி யாருக்கும் அதிகம் தெரிந்திருக்காது. எனினும், இது தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆண்டிசெப்டிக் குணங்கள். நிறைந்துள்ளது. இது ஒரு நல்ல இயற்கை சுத்திகரிப்பான். தலைமுடி வளர்ச்சியை இது பல மடங்கு அதிகரிக்கும். மேலும் இது ஒரு நல்ல வலி நிவாரணியும் கூட. அனைத்து வகை முடிகளுக்கும் இது ஏற்ற எண்ணை.
11. ஆமணக்கு எண்ணை
இந்த எண்ணையில் பல நற்பண்புகள் நிறைந்துள்ளத். இதில் வைட்டமின் இ, புரதம் மற்றும் தாது பொருட்கள் நிறைந்துள்ளது. பொடுகு பிரச்சனையை போக்க இது பெரிதும் உதவும், மேலும் வேர் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளையும் விரைவாக போக்கி விடும். இந்த எண்ணை தலைமுடியை மிருதுவாக்கி, நல்ல போஷாக்குடன் இருக்க உதவும். வேர் பகுதிக்கு நல்ல இரத்த ஓட்டத்தை பெற உதவும். விரைவாக தலைமுடி வளர்ச்சி பெற இது உதவும்.
12. ரோஸ்மேரி எண்ணை
இந்த எண்ணை தலைமுடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எண்ணையாக இருக்கும். மேலும் முடி நரைப்பதை தாமதப்படுத்தும். இதனால் இளம் நரை போன்ற பிரச்சனைகள் நீங்கி விடும். இந்த எண்ணை, இரத்த ஓட்டத்தை வேர் பகுதிகளில் அதிகப்படுத்த உதவும். மேலும் தலைமுடியில் ஈரப் பதத்தை தக்க வைக்க உதவியாக இருக்கும். அனைத்து வகை தலைமுடிகளுக்கு இது ஏற்ற எண்ணை. தலைமுடி நல்ல நிறத்தைப் பெறவும் இது உதவும்.
13. தைம் எண்ணை
Shutterstock
இந்த எண்ணை முடி உதிர்வை குறைக்க உதவும். இது இரத்த ஓட்டத்தை வேர் பகுதியில் அதிகரித்து, தலைமுடி பலம் பெற உதவும். இதனால் முடி உதிர்வு குறையும், அடர்த்தியான முடி வளரும். சிறிதளவு இந்த எண்ணையை தினமும் பயன்படுத்தி வந்தாலே நல்ல பலனைப் பெறலாம்.
14. மிளகுக்கீரை எண்ணை / புதினா மிளகு எண்ணை
இந்த எண்ணையை சருமம் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இந்த எண்ணையை வேர் பகுதியில் நன்கு தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வு குறைந்து, நல்ல இரத்த ஓட்டம் பெற்று அடர்த்தியான கூந்தலைப் பெறலாம். இதனை தினமும் பயன்படுத்தலாம்.
எண்ணை தேய்க்கும் போது நினைவில் வைக்க வேண்டியவை(Things to keep in mind while oiling hair)
- தலையில் எண்ணை தேய்த்த உடனே தலைமுடியை சீவ வேண்டாம். குறிப்பாக சிக்குகளை எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனால் தலைமுடி சேதம் அடைய வாய்ப்பு உள்ளது
- தலையில் பல மணி நேரத்திற்கு எண்ணையை அப்படியே விட்டு விடக் கூடாது. அப்படி செய்தால், அது முடியில் அதிகம் அழுக்கு சேர வழிவகுத்து விடும்
- அளவிற்கு அதிகமான அளவு எண்ணையை முடிக்கு தேய்க்கக் கூடாது. அப்படி நீங்கள் செய்தால், அதிக அளவு ஷாம்பூவை பயன்படுத்த வேண்டிய சூழல் உண்டாகும். இதனால் முடி வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது
- தலைமுடியை இறுக்கி கட்டக் கூடாது. எண்ணை தேய்த்த பின் சற்று தளர்வாகவே முடியை விட வேண்டும்.
- விளம்பரங்களில் வரும் பல பொருட்களை எண்ணியபடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் தலைமுடிக்கு பாதுபுகள் தான் அதிகம் உண்டாகும்
வீட்டில் தலைமுடிக்கான எண்ணெய்யை எப்படி தயார் செய்வது?(How to make hair oil at home)
உங்கள் வீட்டிலேயே நீங்கள் எளிதாக தலைமுடிக்கான எண்ணையை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி உங்களுக்காக சில எளிய செய்முறை விளக்கம் இங்கே:
1. நெல்லிக்காய் எண்ணை
Shutterstock
- நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது இளம் நரையை போக்கி, ஆரோக்கியமான கூந்தலை பெற உதவும்.
- ஒரு வாணலியில் 1௦௦ கிராம் நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் பொடியை எடுத்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
- இந்த தண்ணீர் பாதி அளவு வரும் வரை கொதிக்க விட வேண்டும்
- பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
- இப்போது மற்றுமொரு வாணலியில் தேங்காய் எண்ணை சேர்த்து அதில் இந்த கொதிக்க வைத்த நெல்லிக்காய் நீரை சேர்த்து மீண்டும் கொதிக்க விட வேண்டும்
- தண்ணீர் அனைத்தும் வற்றிய பின், எண்ணை மட்டும் இருக்கும் நிலையில் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்
- ஆரிய பின் இதனை தினமும் பயன்படுத்தலாம்
2. பிரிங்க்ராஜ் எண்ணை
- இந்த எண்ணையில் பல வகை மூலிகைகள் சேர்க்கப்படும். இது மிகவும் பிரபலமாக ஒரு எண்ணை. இது வேர் பகுதிக்குள் எளிதாக ஊடுருவி விடும். பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை எளிதாக போக்கி விடும்.
- தேவையான அளவு பிரிங்க்ராஜ் இலைகள் அல்லது 3 தேக்கரண்டி பிரிங்க்ராஜ் பொடியை எடுத்து தேங்காய் எண்ணை மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தோடு சேர்த்து 5 நிமிடத்திற்கு சூடு செய்ய வேண்டும்
- இலைகளை பயன்படுத்துவதென்றால், பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
- அதன் பின் அடுப்பில் இருந்து இறக்கி, நன்கு குளிர்ந்த பின் இதனை நீங்கள் தினமும் பயன்படுத்தத் தொடங்கலாம்
3. கருவேபிள்ளை மற்றும் தேங்காய் எண்ணை
- நரை முடி உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தால், இந்த எண்ணை உங்களுக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். கருவேப்பிள்ளை மெலனின் அளவை தக்கவைக்க உதவும். இதனால் தலைமுடியின் இயற்கையான கருமை நிறம் பாதுகாக்கப்படும். கருவேப்பிள்ளையில் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.
- ஒரு வாணலியில் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை இலைகளை எடுத்துக் கொள்ளவும்
- 1௦௦ கிராம் தேங்காய் எண்ணையை இதனுடன் சேர்த்து மிதமாக சூடு செய்ய வேண்டும்
- சிறிது நேரம் மிதமாக கொதிக்கும் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்
- பின்னர் குளிர வைத்து பயன்படுத்தத் தொடங்கலாம்
- இந்த எண்ணையை வேர் பகுதிகளில் நன்கு தேய்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்
4. கடுகு எண்ணை மற்றும் ஆமணக்கு எண்ணை
Shutterstock
- ஆமணக்கு எண்ணையில் ஒமேக 6 கொழுப்பு அமிலமும், ரிசிநோளிக் அமிலமும் நிறைந்துள்ளது. இது தலைமுடி வேரில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். வேர்களை பலப்படுத்துவதால், முடி உதிர்வு குறையும். இந்த எண்ணையில் புரத சத்து நிறைந்துள்ளது. கடுகு எண்ணையில் ஜின்க், கால்சியம், இரும்பு, மக்னீசியம் மற்றும் செலெனியம் உள்ளது. இது வேருக்கு தேவையான சத்துகளை தந்து முடி நல்ல வளர்ச்சியைப் பெற உதவுகின்றது.
- ஒரு வாணலியில் இரண்டு எண்ணையையும் சமமான அளவு எடுத்துக் கொள்ளவும்
- இதனை மிதமாக சூடு செய்து, தலையில் தேய்க்கும் அளவு இருந்தால் போதும், வேர் பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின்னர் சியக்காய் பயன் படுத்தி தலைமுடியை அலசி விட வேண்டும்
- இப்படி செய்து வந்தால், நாளடைவில் தலைமுடி நல்ல வளர்ச்சியைப் பெறுவதை காணலாம்
5. கருப்பு விதை மற்றும் ஆலிவ் எண்ணை
- இந்த எண்ணை உடல் நலத்திற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது. கருப்பு விதை எண்ணை முடி உதிர்வை தடுக்க ஒரு சிறந்த தீர்வாகும். இது தலைமுடியின் வேர்களுக்கு நல்ல போஷாக்கை தந்து நல்ல அடர்த்தியான மற்றும் நீண்ட கூந்தல் வளர உதவும். மேலும் உங்கள் கூந்தல் மிருதுவாக இருக்கவும், முடி உதிர்வு நிற்கவும் இது உதவும்.
- ஆலிவ் எண்ணையில் கருப்பு விதை அல்லது கருப்பு விதை எண்ணையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- இதனை மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்
- பின்னர் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- 2 மணி நேரம் கழித்து சியக்காய் தேய்த்து தலைமுடியை அலச வேண்டும்
6. துளசி எண்ணை
- இந்த எண்ணையில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இது பாதிக்கப்பட்ட வேர் பகுதியை குணப்படுத்தி, பொடுகு தொல்லை நீங்கள் உதவுகின்றது. துளசி இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். மேலும் அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் இது போக்க உதவும்.
- தேவையான அளவு துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
- ஒரு வாணலியில் தேங்காய் எண்ணையை ஊற்றி அதனுடன் இந்த துளசி இலைகளை சேர்த்து சூடு செய்ய வேண்டும்
- தலையில் தேய்க்கும் சூட்டிற்கு எண்ணை வந்தவுடன் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து சியக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்
- இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனைப் பெறலாம்
7. வேப்ப இலை எண்ணை
Shutterstock
- இந்த எண்ணையில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை தலைமுடிக்கு மட்டுமல்லாது வேறு சில உடல் நலனுக்காகவும் பயன்படுத்தலாம். இது புண், தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.
- தேவையான அளவு வேப்ப இலைகளை எடுத்து நன்கு பசை போல அரைத்துக் கொள்ள வேண்டும்
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணையை சேர்த்து சூடு செய்ய வேண்டும்
- இதனுடன் வெந்தயம் சிறிது சேர்த்துக் கொள்ள வேண்டும்
- இதனுடன் அரைத்த வேப்ப இலையை சேர்த்து சிறிது நேரம் கிளறி விட்டு சூடு செய்ய வேண்டும்
- நன்கு சூடானதும், வடிகட்டி மிதமான சூட்டிற்கு வந்ததும் பயன்படுத்தலாம்
8. செம்பருத்தி எண்ணை
- இந்த பூக்கள் பெரும் அளவு தலைமுடி வளர்ச்சிக்காக பயன்படுத்தப் படுகின்றது. இது தலைமுடி குறித்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகின்றது. முடி உதிர்வை போக்கி, அடர்த்தியான முடி வளர உதவுகின்றது. தலைமுடியை மிருதுவாகவும், பலபலப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்ளவும்
- இந்த எண்ணையை 5 நிமிடங்கள் சூடு செய்து பின்னர் 15 செம்பருத்தி பூக்களை இதனுடன் சேர்த்து மீண்டும் சூடு செய்யவும்
- இந்த பூக்கள் நிறம் மாறி வரும் வரை நன்கு கிளறவும்
- பின்னர் எண்ணை சூடு குறைந்ததும், தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- இரவு முழுவதும் கூட தேய்த்த பின்னர் விட்டு விட்டு பின்னர் காலையில் சியக்காய் பயன்படுத்தி அலசி விடலாம். அல்லது 2 மணி நேரம் கழித்து தலைமுடியை அலசலாம்
9. வெங்காய எண்ணை
- இது பலருக்கும் புதுமையாக இருக்கும். ஆனால், வெங்காயம் தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பது உண்மை. இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி, நல்ல அடர்த்தியாக வளரவும் உதவும். வேர்களை ஆரோக்கியமாகவும், பலமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
- தேவையான அளவு தேங்காய் எண்ணையை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடு செய்ய வேண்டும்
- அது கொதிக்கும் பதத்திற்கு வரும் போது சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்
- 5 நிமிடம் சூடான பின், கருவேப்பிள்ளை இலைகளை சேர்க்கலாம்
- இந்த எண்ணை சூடு குறைந்ததும், தலையில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசி விட வேண்டும்.
மேலும் படிக்க – வெங்காயம் : சமையலுக்கு மட்டுமா? உங்கள் கூந்தலை அழகூட்டவும் தான்!
10. பூண்டு எண்ணை
Shutterstock
- பூண்டில் கால்சியம், ஜின்க், சல்பர், போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நுன்கிரிமிகளை கொன்று, தலைமுடி நன்கு வளர உதவியாக இருக்கும். அடர்ந்த மற்றும் பலமான கூந்தலைப் பெற இது உதவும். கொலஜென் அளவை அதிகமாக உற்பத்தி செய்ய உதவும். இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரோக்கியமான கூந்தலைப் பெற இது ஒரு சிறந்த எண்ணை.
- தேவையான அளவு பூண்டு எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணை சேர்த்து சூடு செய்ய வேண்டும்
- இதனுடன் அரைத்த பூண்டை சேர்த்து சிறிது நேரம் சூடு செய்ய வேண்டும்
- பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு குறையும் வரை காத்திருக்கவும்
- பின்னர் தலைமுடியின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- சிறிது நேரம் கழித்து சியக்காய் தேய்த்து முடியை அலசி விட வேண்டும்
11. ரோஸ்மேரி மற்றும் புதினா எண்ணை
- ரோஸ்மேரியில் அதிக ஆக்சிஜனேற்றம் உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் வேருக்கு மிகவும் தேவையான ஒன்று. இதில் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முடி வளர்ச்சியை அதிகப்படுத்த இந்த எண்ணை உதவியாக இருக்கும். மேலும் புதினா pH அளவை தக்க வைத்துக் கொள்ள உதவும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடி ஆரோக்கியமாக வளர உதவும்.
- ரோஸ்மேரி மற்றும் புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
- ஒரு ஜாடியில் தேங்காய் எண்ணையை எடுத்துக் கொள்ள வேண்டும்
- இதில் இப்போது ரோஸ்மேரி மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
- பின்னர் ஜாடியை மூடி வைத்து விட வேண்டும்
- இரண்டு வாரத்திற்கு அவ்வபோது எடுத்து கலக்கி விட்டு, மீண்டும் மூடி வைத்து விட வேண்டும்
- அதன் பின்னர் இந்த எண்ணையை வாடி கட்டி பயன்படுத்த தொடங்கலாம்
12. எலுமிச்சைபழ எண்ணை
- எலுமிச்சை பழத்தில் அதிக வைட்டமின் சி நிறைந்துள்ளது,. இது கொலஜென் அளவை அதிகரித்து தலைமுடி நன்கு வளர உதவியாக இருகின்றது, மேலும் தலைமுடி விரைவாக வளரவும் உதவுகின்றது. தலைமுடி உதிர்வை தடுத்து நீண்ட மற்றும் அடர்த்தியான முடியைப் பெற உதவுகின்றது.
- எலுமிச்சை பழத்தின் தோல் பகுதியை எடுத்துக் கொள்ளவும்
- இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணையில் போட்டு சிறிது நேரம் சூடு செய்யவும்
- பின்னர் இறக்கி வடிகட்டி, சூடு ஆரிய பின்னர் தினமும் பயன்படுத்தலாம்
- அல்லது, தேங்காய் எண்ணையில் எழுமிச்சைபழத்தின் தோலை சேர்த்து ஒரு ஜாடியில் போட்டு, சில நாட்கள் வெயிலில் வைத்து விட வேண்டும். அவ்வப்போது எடுத்து கலக்கி விட வேண்டும்
- அதன் பின் வாடி கட்டி பயன்படுத்தத் தொடங்கலாம்
13. கற்றாழை எண்ணை
Shutterstock
- இது கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருகின்றது. பொடுகு, முடி உதிர்வு, வேர் பகுதியில் அரிப்பு மற்றும் புண் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது, பலவீனமான தலைமுடிக்கு நல்ல போஷாக்கை கொடுக்கின்றது. மேலும் pH அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
- தேவையான அளவு கற்றாழையை எடுத்து சதை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்
- இதனை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
- இந்த சதையை தேவையான அளவு தேங்காய் எண்ணையோடு சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்
- இரண்டும் சமமான அளவு இருக்க வேண்டும்
- இந்த கலவையை 7 நிமிடங்கள் வரை சூடு செய்ய வேண்டும்
- பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, குளிர விட வேண்டும்
- பின்னர் இதனை வடி கட்டி பயன்படுத்தத் தொடங்கலாம்
எண்ணை தயாரிக்கும் போது கவனிக்க வேண்டியவை(Precautions to take while preparing hair oil at home)
- பல பொருட்களை சேர்த்து எண்ணையை சூடு செய்யும் போது அது சிதறி மேலே விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும்
- அதிக வெப்பத்தில் எந்த எண்ணையையும் சூடு செய்து விடக் கூடாது
- எண்ணை முற்றிலும் குளிர்ந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். சூடாக இருக்கும் போது பயன்படுத்தக் கூடாது
- தேங்காய் எண்ணையை அதிக நேரம் சூடு செய்யக் கூடாது
- குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் எண்ணையை வைக்க வேண்டும்
- தலைமுடிக்கு தயாரிக்கும் எண்ணையை முகத்திற்கு பயன்படுத்தக் கூடாது
- வாரம் 3 முறையாவது தலைமுடிக்கு எண்ணை தேய்க்க வேண்டும்
கேள்வி பதில்கள்(FAQ)
1. தலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணை எது?
ஆமணக்கு எண்ணை மற்றும் திராட்சை விதை எண்ணை சிறந்ததாக கருதப்படுகின்றது. இவற்றில் ஒமேக 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் இ, புரதம், உள்ளது, இவை தலைமுடி நன்கு வளர பெரிதும் உதவியாக உள்ளது. எனினும், தேங்காய் எண்ணையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை எளிமையாக பயன்படுத்தலாம்.
2. தலைமுடிக்கான எண்ணையை வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
நீங்கள் வாங்கும் எண்ணையில் ரசாயனம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவற்றில் இயற்க்கை மூளிகள் மட்டும் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் தலைமுடிக்கு ஏற்ற எண்ணை எதுவென்று பார்த்து, கவனித்து பின்னர் வாங்க வேண்டும். நீங்கள் வாங்கும் எண்ணை தரமானதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. தேவையான எண்ணைகளை பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
தேவையான எண்ணையை நேரடியாக தலைமுடியின் வேர் பகுதியில் தேய்க்க வேண்டும். இது முடி நல்ல ஆரோக்கியமாக வளர உதவும். எனினும், இவற்றில் சில எண்ணை எரிச்சலை உண்டாக்கக் கூடும். அவற்றை கண்டறிந்து தவிர்க்க வேண்டும்.
4. எந்த எண்ணை தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும்?
தேங்காய் எண்ணை, ரோஸ்மேரி எண்ணை, ஜோஜோப எண்ணை, லாவெண்டர் எண்ணை, மற்றும் தைம் எண்ணை.
5. தலைமுடி நன்கு வளரு எத்தனை முறை எண்ணை தேக்க வேண்டும்?
தலைமுடி நன்கு வளர குறைந்தது வாரம் 3 முறையாவது எண்ணை தேய்க்க வேண்டும்.
6. தேங்காய் எண்ணை தலைமுடியை அடர்தியாக்குமா?
தேங்காய் எண்ணை தலைமுடியின் வளார்ச்சியை ஊக்கவிக்கும். இதனால் நீண்ட மற்றும் அடர்ந்த தலைமுடியை நீங்கள் பெறலாம். தேங்காய் எண்ணையில் கொழுப்பு அமிலம், மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது,. இது தேவையான போஷாக்கை தலைமுடிக்குத் தரும்.
7. எந்த எண்ணை உதிர்ந்த தலைமுடி மீண்டும் விரைவாக வளர உதவும்?
ஆமணக்கு எண்ணை, ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணை, தேங்காய் எண்ணை, நெல்லிக்காய் எண்ணை, திராட்சை பழ விதை எண்ணை, ஆகிய அனைத்தையும் கலந்து தேய்த்து வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.
8. தினமும் தலைக்கு எண்ணை தேய்க்கலாமா?
தினமும் தலைக்கு எண்ணை தேய்ப்பதால், தலைமுடி மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இது மேலும் இரத்த ஓட்டத்தை வேர்களுக்கு அதிகரிக்கும்,. இதனால் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாகும்.
9. தலையில் எண்ணை தேய்த்த பின் முடியை சீவலாமா?
தலைக்கு எண்ணை தெயத்தவுடனே தலைமுடியை சீவி விட வேண்டும், இப்படி செய்தால், வேர் பகுதிகளுக்கு மசாஜ் செய்வது போல இருக்கும், என்னையும் நன்கு சாரும்.
மேலும் படிக்க – முடி கொட்டுவதால் வருத்தமா? அடர்த்தியான கூந்தலைப் பெற 10 சிறந்த ஷாம்பு வகைகள்!!
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!