logo
ADVERTISEMENT
home / அழகு
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க சிறந்த உணவுகள்!

தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க சிறந்த உணவுகள்!

தலைமுடி வளர்சிக்கும், தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுக்கும் தொடர்பு உள்ளதா?

நிச்சயம் உண்டு! ஒருவர் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இருக்கும் சத்துக்கள் மற்றும் அந்த உணவின் வகை பொறுத்து ஒருவரின் தலைமுடியின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கலாம். போதிய சத்துக்கள் நிறைந்த உணவும், தரமான உணவும் மட்டுமே உடல் ஆரோக்கியம், மற்றும் நல்ல தலைமுடி வளர்ச்சிக ஆகியவற்றிற்கு உதவியாக இருக்க முடியும்.

எனினும், இன்றைய விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில், உடல் நலத்திற்கு போதிய நேரத்தை ஒதுக்க முடியாததால், மக்கள் துரித உணவை அதிகம் எடுத்துக் கொள்ள தொடங்கி விட்டனர். தலைமுடி நன்றாக வளர, நீங்கள் எந்த மாதிரியான உணவுகளை (food for hair) எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இங்கே ஒரு பயனுள்ள மற்றும் சுவாரசியமான தொகுப்பு! உங்களுக்காக!

ADVERTISEMENT

தலைமுடி வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள சில விடயங்கள்(Few things to know about hair growth)

Shutterstock

தலைமுடி எத்தனை வளார்ச்சி பருவத்தை கடகின்றது, அது எப்படி போஷாக்கை பெறுகின்றது, மேலும் ஏன் உதிர்வு ஏற்படுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கே உங்களுக்காக சில தகவல்கள்;

  • ஆயிரக்கணக்கான நுண்குமிழில் வளர்ந்து வேர் பகுதிகளை உருவாக்கின்றது
  • ஒரு தனி நபருக்கு 90,000 முதல் 1,50,000 வரை தலைமுடிகள் இருக்கும்
  • ஒவ்வொரு முடியும் சராசரியாக 1௦௦௦ நாட்கள் வரை வளரும் அதன் பின் உதிர்ந்து விடும்
  • தலைமுடியின் வளார்ச்சியை மூன்று பாகங்களாக பிரித்துக் கொள்ளலாம் – வளரும் நிலை, நடு நிலை மற்றும் உதிரும் நிலை
  • சராசரியாக ஒரு நன்கு வளர்ந்த தலைமுடி 18 முதல் 3௦ இன்ச் நீளம் வரை இருக்கும்
  • எனினும், இந்த அளவை எட்டும் முன்னதாகவோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவோ முடி உதிர்ந்து விட்டால், அதற்கு உங்கள் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது

ADVERTISEMENT

தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள் என்ன?(Causes of hair fall)

தலைமுடி உத்திர பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, சரியான சிகிச்சையை செய்து கொள்ள முடியும். இங்கே, சில குறிப்பிடத்தக்க காரணங்கள்;

  • குடும்ப வரலாறு. உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக தலைமுடி அதிகம் வளராமல், உதிர்வு அதிகம் இருக்குமானால், அது உங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது
  • உடல் நல காரணங்கள். ஹோர்மோன் மாற்றங்கள், கர்ப்பகாலம், மாதவிடாய், பிரசவம் போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்
  • நீங்கள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ சிகிச்சைக்காக மருந்து எடுத்துக் கொண்டிருந்தாள், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்
  • வயதாகம் காரணமாகவும் முடி உதிர்வு ஏற்படக் கூடும்
  • தைராய்டு, நீரழிவு நோய். இருதய நோய், இரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்
  • சரியாக தலைமுடியை பராமரிக்காமல் இருந்தால் உதிர்வு ஏற்படக் கூடும்
  • அதிக ரசாயனம் கலந்த பொருட்களை அதிக அளவு பயன்படுத்தும் போது தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்

தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள்(Nutrients required for hair growth)

தலைமுடி நன்கு சீராக வளர பல சத்துக்கள் தேவைப்படுகின்றது. இவற்றின் கூட்டு செயல்பாட்டால் மட்டுமே, தலைமுடிக்கும், வேர் பகுதிக்கும் தேவையான போஷாக்கு கிடைத்து ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். அப்படி என்னென போஷாக்கு உங்களுக்கு தேவைப்படுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சில சத்துக்களை பற்றிய தகவல்கள்;

1. வைட்டமின் பி

ADVERTISEMENT

Shutterstock

இது உடலில் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவி செய்யும். இந்த சிவப்பு இரத்த அணுக்கள் பிராணவாயு மற்றும் சத்துக்களை தலைமுடி வேர் மற்றும் நுண்குமிழில் பகுதிகளுக்கு கொண்டு செல்ல உதவும்/ இதனால் இது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

2. இரும்பு

இரும்பு குறைபாடு உடலில் ஏற்பட்டால், தலைமுடி உதிர்வது நிச்சயம். நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் போதிய இரும்பு சத்து உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் இரும்பு சத்து இரத்த சோகையை போக்கவும் உதவியாக இருக்கும், துவரம் பருப்பு, கீரை, முட்டை, சிவப்பு இறைச்சி போன்றவற்றில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.  

3. நியாசின்

இது உடலில் உணவை சக்தியாக மாற்ற உதவுகின்றது. இது உடலில் இருக்கும் சத்து குறைபாடுகளை போக்கி, தலைமுடி நல்ல வளர்ச்சியைப் பெற உதவுகின்றது. மேலும் இரத்த ஓட்டத்தை வேர் பகுதிகளில் அதிகரிக்கவும் இது உதவியாக உள்ளது. சருமம் மற்றும் தலைமுடியை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்ள இது உதவும். முட்டை, கொட்டை வகைகள், காலன் மற்றும் நன்னீர் மீன்களில் இந்த சத்து உள்ளது.

ADVERTISEMENT

4. ஒமேக 3 கொழுப்பு அமிலம்

இந்த சத்து உங்கள் உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். இது வேர் பகுதிகளுக்கு போதிய போஷாக்கை தந்து, தலைமுடி பலபலப்பாகவும், போஷாக்குடனும் இருக்க உதவும். நன்னீர் மீன், ஆளி விதை, பூசணிக்காய் விதை, வாதுமை கொட்டை, போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

5. வைட்டமின் ஏ

Shutterstock

இது உடலின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒரு சத்து. இது சீபம் உற்பத்திக்கு மிகவும் உதவியாக உள்ளது. தலைமுடி பலமாகவும், ஆரோக்கியமாகவும் வளர இது உதவும். சக்கரவள்ளி கிழங்கு, கீரை, சர்க்கரை பூசணிக்காய், கேரட், பால், முட்டை, தயிர் போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

6. வைட்டமின் சி

இது அணுக்களை ப்ரீ ராடிகல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும். இதனால் தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கப்படும். வைட்டமின் சி உடலில் இரும்பு சத்து சாரவும் உதவியாக இருக்கும். ப்ரோகோலி, சர்க்கரைவள்ளி கிழங்கு, பப்பாளி, கொய்ய, கமலபழம் போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

7. வைட்டமின் டி

இது அதிக அளவு சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கும். இந்த சத்து தலைமுடியின் வேர் பகுதி பலம் பெறவும், புதிய நுண்குமிழில் உருவாகவும் உதவியாக இருக்கும். நேரடி சூரிய ஒளி கதிர்கள் அதிகம் உங்கள் உடலில் படும் போது இந்த சத்து உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

8. வைட்டமின் இ

இது தலைமுடி சீராக வளர்ச்சி பெற உதவும். பாதாம் கொட்டை, அவோகாடோ, சூரியகாந்தி விதை, ப்ரோகோலி, கோதுமை மற்றும் கீரை வகைகளில் இந்த சத்து நிறைந்துள்ளது.

9. ஜின்க்

ADVERTISEMENT

Shutterstock

இது சேதமடைந்த தலைமுடியை பாதுகாக்கவும், மீண்டும் புதிய தலைமுடிகள் வளரவும் உதவியாக உள்ளது. இது தலைமுடியை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்ள உதவியாகு உள்ளது. கீரை வகைகள், துவரம்பருப்பு, பூசணிக்காய் விதை, முட்டை மற்றும் பயிர் வகைகளில் அதிக அளவு கிடைகின்றது.

10. சல்பர்

இது தலைமுடியில் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் தலைமுடி நல்ல நிறத்தை பெற்று இளமையான தோற்றமும் கிடைகின்றது.

11. வைட்டமின் பி 6, வைட்டமின் பி 12 மற்றும் போலிக் அமிலம்

இவை மூன்றுமே ஹீமோக்ளோபின் உற்பத்திக்கு மிகவும் தேவையான ஒன்று. இது பிராணவாயுவை உடல் முழுவதும் கொண்டு செல்ல உதவும். மேலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்களை பெற உதவியாக உள்ளது. முட்டை, பச்சை காய் வகைகள், கமலாபழம், ப்ரொகொலி, அவோகாடோ, கோதுமை போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

12. புரதம்

இது உடலுக்கு மிக தேவையான ஒரு சத்து. இது தலைமுடி நன்றாக வளரவும் உதவும். மேலும் புது தலைமுடிகள் வளரவும் உதவியாக உள்ளது. இதனால் நல்ல அடர்ந்த கூந்தலைப் பெற முடியும். கோழி, பாதாம் கொட்டை, தயிர், பீன்ஸ், முட்டை போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

13. பயொடின்

Shutterstock

இது வைட்டமின் பி வகையை சேர்ந்தது. இது நுண்குமிழில் நல்ல சத்து பெற உதவியாக உள்ளது. இதனால் தலைமுடி உதிர்வை பெரும் அளவு குறைக்க முடியும். மேலும் தலைமுடிக்கு நல்ல மிருதுவான தோற்றத்தையும், பலபலப்பையும் இது தரும். முட்டை மற்றும் சோயாவில் இந்த சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

14. பிடா கேரோடீன்

இது தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கவிக்கும். மேலும் சீராக தாலிமுடி தனது வளர்ச்சியைப் பெற பெரிதும் உதவியாக உள்ளது. இது ஆக்சிஜனேற்றம் உடலுக்கு அதிகம் கிடைக்க உதவியாக உள்ளது.

15. அமினோ அமிலம்

இது உடலில் புரத சத்தை கட்டமைக்க உதவும். இது உடலின் பொதுவான வளர்ச்சிக்கும் மிகவும் தேவைப்படுகின்றது. இந்த அமிலம் தலைமுடியின் உதிர்வை தடுக்க உதவியாக இருகின்றது. முட்டை, இறைச்சி, கொட்டை வகைகள், மீன், போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது.

16. செலனியம்

இது தலைமுடி உடையாமல், பலத்தோடு நீண்டு வளர உதவியாக உள்ளது. இதனால் நல்ல அடர்த்தியான கூந்தலைப் பெறுவதோடு, முடி உதிரவும் நாளடைவில் நின்றுவிடுகின்றது.

17. போலிக் அமிலம்

ADVERTISEMENT

Shutterstock

இந்த அமிலம் தலைமுடிக்கு போதுமான ஊட்டசத்து கிடைக்க உதவியாக உள்ளது. இதனால் முடி நல்ல ஆரோக்கியம் பெற்று, சீராகவும் நல்ல வளர்ச்சியையும் பெற்று வளருகின்றது.

தலைமுடி வளர்ச்சிக்கு அல்கலின் உணவுகள்(Nutrients required for hair growth)

தலைமுடி நல்ல வளர்ச்சியைப் பெற அல்கலின் பெரிய பங்கு வகிக்கின்றது. இதனை சரியான அளவு மற்றும் சரியான முறையின் எடுத்துக் கொள்ளும் போது, எதிர்பார்த்த பலன்களை எளிதாக பெற்று விடலாம்.

ADVERTISEMENT
  • அல்கலின் pH அளவை குறிகின்றது. உடலுக்கு 7 முதல் 14 புள்ளிகள் pH தேவைப்படுகின்றது
  • pH அளவு சீராக இல்லை என்றால், உடலில் அமிலத்தன்மை அதிகரித்து விடும்  
  • அல்கலின் இந்த அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான ஒன்றாகும்  
  • பச்சை காய் வகைகள், காலிபிளவர், வெள்ளரிக்காய், கொட்டை வகைகள், ப்ரொகொலி, கீரை வகைகள் ஆகியவற்றில் அல்கலின் அளவு அதிகமாக உள்ளது
  • இந்த உணவுகளில் அதிக அளவு நார் சத்தும் இருப்பதால், இது உடலின் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகின்றது

மேலும் படிக்க – தலைமுடி நன்றாகவும், அடர்த்தியாகவும் வளர எண்ணெய்கள்!

தலைமுடி வளர்ச்சிக்கான உணவுகள்(Food required for hair growth)

தலைமுடி நன்கு சீராகவும், ஆரோக்கியமாகவும் வளர உங்கள் உணவில் சில மாற்றங்களை செய்தாலே போதும். அது நிச்சயம் நாளடைவில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். முடி உதிரவும் குறைந்து, வளர்ச்சி அதிகரிக்கும். நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய சில பொருட்கள் இங்கே;

1. பீன்ஸ்

ADVERTISEMENT

Shutterstock

இதில் தாவரம் சார்ந்த புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஜின்க் சத்து இருப்பதால், தலைமுடிக்கு நல்ல போஷாக்கு கிடைக்க உதவும். இதனால் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

2. அவோகாடோ

இதில் அதிக அளவு கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது, மேலும் இந்த பழத்தில் ஆக்சிஜனேற்றமும், வைட்டமின் இ சத்தும் அதிக அளவு உள்ளதால், தலைமுடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை இது பெற உதுவ்ம்.

3. பெர்ரி

இதில் பல வகை உள்ளன. குறிப்பாக ஸ்ட்ரவ்பெரியில் அதிக அளவு ஆக்சிஜனேற்றமும், பல வகை வைட்டமின்களும் நிறைந்துலல்தால் தலைமுடி நுண்குமிழிலை சேதப்படுத்தும் ப்ரீ ரடிகல்ஸ்கலை எதிர்த்து போராட உதவும்.

ADVERTISEMENT

4. முட்டை

ஒரு தரமான நாட்டுக்கோழி முட்டையில் அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக புரதம் மற்றும் பயொடின் ஆகிய இரண்டும் தலைமுடியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். மேலும் முட்டையில் ஜின்க் மற்றும் செலெனியம் உள்ளதால், இவையும் முடியின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது.

5. கீரை வகைகள்

Shutterstock

அனைத்து கீரை வகைகளிலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, மற்றும் இரும்பு, கால்சியம் போன்ற தாது பொருட்களும் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளர உதவுகின்றது.

ADVERTISEMENT

6. கொட்டை வகைகள்

இது பாதாம், வாதுமை, முந்திரி போன்ற கொட்டை வகைகளை குறிக்கும். இவை அனைத்திலும் ஒமேக 3 கொழுப்பு அமிலம், விடமின் ஏ, ஜின்க், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் இ சத்துகள் நிறைந்துள்ளது. இவை தலைமுடியின் வளர்ச்சியை ஊக்கவிக்கும்

7. சிப்பி

இதில் மிக அதிகமான அளவு ஜின்க் உள்ளது. இது தலைமுடியின் வேர் பகுதிக்கு போதுமான போஷாக்கை பெற உதவும்,. மேலும் இதில் இருக்கும் இரும்பு சத்தும் குறிப்பிடத்தக்கவை. இவை முடியின் வளர்ச்சியை ஊக்கவிக்கும்.

8. வளர்ப்பு பறவைகள்

இதில் கோழி, வாத்து, வான்கோழி, புறா என்று வளர்ப்பு பறவைகள் அனைத்தும் அடங்கும். இவற்றில் இரும்பு, ஜின்க், செலெனியம் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆரோக்கியம் மட்டுமின்றி தலைமுடியின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.

9. சர்க்கரைவள்ளி கிழங்கு

ADVERTISEMENT

Shutterstock

இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது, இவை இரண்டும் தலைமுடியின் வளர்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இவை ப்ரீ ரடிகல்ஸ் உண்டாக்கும் பாதிப்புகளுக்கு எதிராக செயல்பட்டு, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

10. வெப்பமண்டல பழங்கள்

இது கொய்ய, பப்பாளி, மற்றும் சிட்ரஸ் சாறு நிறைந்த பழங்களைக் குறிக்கும். இவற்றில் வைட்டமின் சி சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தால், பல நல்ல பலன்களை அடைவதோடு, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

11. தானியங்கள்

பச்சை பயிறு, கொண்டக்கடலை, தட்டைபயிறு, காராமணி போன்ற பயிர் வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவற்றில் ஜின்க், வைட்டமின் இ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்திருக்கும். குறிப்பாக முளைகட்டிய பயிர்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

ADVERTISEMENT

12. கொழுப்பு நிறைந்த மீன்

குறிப்பாக ஒமேக 3 மற்றும் ஒமேக 6 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மீன்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ சத்தும் அதிக அளவு இருக்கும். இவை தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

13. சிட்ரஸ் பழங்கள்

Shutterstock

இந்த வகை பழங்களில் விடமின் சி அதிக அளவு இருக்கும், இவை உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். குறிப்பாக எலுமிச்சை பழம், கமலா பழம், சாத்துக்குடி பழம், போன்றவற்றை தினமும், அல்லது வாரம் 3 அல்லது 4 நாட்களாவது எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தலைமுடிக்கு போஷாக்கை கொடுத்து, உதிராமல் வளர உதவும்.

ADVERTISEMENT

14. கேரட்

இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது, இது தலைமுடியின் வளர்ச்சியை விரைவாக அதிகரிக்க உதவும். மேலும் இது அணுக்கள் ஆரோக்கியமாக வளரவும் தேவையானது. இது வேர் பகுதிகளுக்கு தேவையான போஷாக்கை பெற உதவும். இதனால் நல்ல அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்.

15. மாம்பழம்

இதில் அதிக அளவு தாது பொருட்கள் நிறைந்துள்ளது. இது தலைமுடி பலம் பெற்று நீண்டு ஆரோக்கியமாக வளர உதவும். இதில் சிலிக, வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, மற்றும் வைட்டமின் சி மற்றும் போலேட் நிறைந்துள்ளது.  

16. சோய் பீன்ஸ்

இது சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை குறிக்கும். இது டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோன் சீரான அளவு உடலில் சுரக்க உதவும். இந்த ஹோர்மோன் தலைமுடி உதிர்வை தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம், இரும்பு, வைட்டமின் பி 2 மற்றும் மக்னேசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

17. அத்திபழம்

ADVERTISEMENT

Shutterstock

இதில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இந்த சத்து தலைமுடி நன்கு வளர மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னிசியம் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் இ சத்துக்கள் நிறைந்துள்ளது.  ஒரு நாளைக்கு இரண்டு பழமாவது எடுத்துக் கொண்டால், தலைமுடி வளர்ச்சிக்கு போதிய சத்துக்கள் இதில் இருந்து கிடைக்கும்.

18. ஆளிவிதை

இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது தலைமுடிக்கு தேவையான போஷாக்கை தரும். மேலும் பலவீனமான தலைமுடிக்கு பலத்தை பெற உதவும். இதில் வைட்டமின் பி 1, மக்னிசியம், செலெனியம், மற்றும் பொஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு தேக்கரண்டி இதனை உணவில் சேர்த்து எடுத்து வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.

19. பூசணிக்காய் விதை

இதில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஜின்க், செம்பு, புரதம், மங்கனீஸ், மக்னிசியம், பொஸ்பரஸ், இரும்பு மற்றும் ஜின்க் நிறைந்துள்ளது, இது தலைமுடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் ஆரோக்கியமாக வளர உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நல்ல வளர்ச்சியை பெறவும் உதவும். இந்த விதையை தினமும் ஒரு தேக்கரண்டி அளவு உணவில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

ADVERTISEMENT

20. நன்னீர் மீன்

இதில் அதிக அளவு ஒமேக 3 கொழுப்பு அமிலம் மற்றும் புரதம் நிறைந்துள்ளது, இதனால் அதிக அளவு உடல் நலமும், தலைமுடிக்கு தேவையான போஷாக்கும் கிடைக்கும். மேலும் இது தலைமுடி நன்கு வளர உதவியாக இருக்கும்.

21. வேர்கடலை மற்றும் வேர்கடலை வெண்ணை

Shutterstock

இதில் அதிக நார் சத்து, புரதம், மற்றும் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, உடல் நலத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும்,

ADVERTISEMENT

22. திராட்சை

இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட பாலிபினோலிக் கலவைகள் உள்ளன. இது அணுக்கள் சேதமடைவதை தடுக்க உதவும். தினமும் ஒரு கப் திராட்சை பழத்தை எடுத்துக் கொண்டால், அணுக்கள் நல்ல வளர்ச்சியைப் பெற்று, தலைமுடியும் ஆரோக்கியமாக வளர உதவும். குறிப்பாக வேர் பகுதிக்கு தேவையான போஷாக்கு கிடைக்கும்.

23. தக்காளி

இதில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது, இது கொலஜென் அளவை சீராக தக்கவைத்துக் கொள்ள உதவும். மேலும் புரதமும் இதில் இருப்பதால், தலைமுடி நன்கு வளர உதவியாக இருக்கும்.

24. இறைச்சி

இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது, இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளது. மேலும் இறைச்சியில் புரதம், இரும்பு, மற்றும் பிற சத்துக்கள் இருப்பதால், தலைமுடி உதிர்வை பெரும் அளவு குறைக்க உதவும்.

25. தயிர்

ADVERTISEMENT

Shutterstock

இது மற்றுமொரு முக்கியமான உணவு பொருளாகும். இதில் அதிக அளவு கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் பி 5, மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது தலைமுடி பலபலப்பாகவும், போஷாக்குடனும் வளர உதவும். தினமும் உங்கள் உணவில் தயிரை சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தால், நல்ல பலனை நீங்கள் பெறலாம்.

26. ப்ளுபெர்ரி

இதில் அதிக ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளர முக்கியமான ஒன்றாகும். மேலும் இதில் வைட்டமின் பி மற்றும் ப்ரோஅந்தோஅனிடின் இருப்பதால் தலைமுடியின் வளர்ச்சியை பலமடங்கு அதிகப்படுத்த உதவியாக உள்ளது.

27. காளான்

இதில் அதிக நார் சத்து, கெரட்டின் நார் மற்றும் செம்பு நிறைந்துள்ளது, இளம் நரையை போக்கி, மற்றும் தலைமுடியின் இயற்கையான நிறத்தை தக்கவைத்து நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெற உதவும்.

ADVERTISEMENT

28. குடைமிளகாய்

இதில் வைட்டமின் சி, அதிக அளவு உள்ளது. இது ஆக்சிஜனேற்றத்தை ஊக்கவித்து தலைமுடி நல்ல பலத்தோடும் ஆரோகியதோடும் வளர உதவும். மேலும் இதில் தலைமுடி நன்கு வளர தேவையான பிற சத்துக்கள் இருப்பதால், தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

29. கொய்யா

Shutterstock

இதில் பல வகை வைட்டமின்கள், தாது சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக பொட்டசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மற்றும் மக்னிசியம் சத்துகள் உள்ளது. இவை தலைமுடி நன்கு வளர பெரும் அளவு உதவியாக இருக்கும்.

ADVERTISEMENT

தவிர்க்க வேண்டிய உணவுகள்(Foods to avoid)

அனைத்து உணவுகளும் உடலுக்கு தேவை என்றாலும், ஒரு சில உணவுகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது. அப்படி நீங்கள் நல்ல தலைமுடி வளர்ச்சியை எதிர் பார்த்தால், அதற்கு தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றிய சில குறிப்புகள் இங்கே’

1. சர்க்கரை

நாட்டு சர்க்கரை போல இல்லாமல், வெள்ளை சர்க்கரை பல ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றது. இதனால் உடலில் புதிதாக பல நோய்கள் உண்டாகின்றது. குறிப்பாக நீரழிவு நோய், இரத்த கொதிப்பு மற்றும் இருதய நோய் அதிக அளவு ஏற்படுகின்றது. இந்த வகையில், வெள்ளை சர்க்கரை தலைமுடியின் வளர்ச்சியையும் பெரிதும் பதிகின்றது. வெள்ளை சர்க்கரை சேர்க்கப்பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

2. வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள உணவு

வைட்டமின் ஏ சத்தை அதிகம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இது தலைமுடியை பாதிக்கக் கூடும். இதனால் அதிக அளவு முடி உதிர்வு ஏற்படக் கூடும்.

ADVERTISEMENT

3. பாதரசம் இருக்கும் மீன்

பாதரசம் அதிகம் இருக்கும் மீன் வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டால் தலைமுடி உதிர்வு ஏற்படும். இது அதிக அளவு கடல் மீன்களில் இருக்கும். மேலும் பெரிய அளவிலான மீன்களிலும் பாதரசத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அவற்றை தவிர்த்து விடுவது நல்லது.

4. துரித உணவு

Shutterstock

துரித உணவுகளில் சரியான மற்றும் போதிய சத்துக்கள் இருக்காது. அவை சுவையாக இருப்பது போல இருந்தாலும், உடலுக்கு பல தீங்குகளை தரும். அதனால், முடிந்த வரை துரித உணவை தவிர்ப்பது நல்லது.

ADVERTISEMENT

5. சோடா

 இது உடலில் சத்துக்கள் சாருவதை தவிர்த்து, வேறு சில பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் இதனை முற்றிலும் தவிர்த்து விடுவது நல்லது. இதன் பயன்பாட்டை தவிர்த்தால், தலைமுடியின் வளர்ச்சியையும் அதிகரிக்க முடியும்.

6. பொறித்த உணவு

இதில் அதிக அளவு எண்ணை மற்றும் கொழுப்பு நிறைந்திருக்கும். அவை அதிக அளவு உடலில் சாரும் போது, பல எதிர்மறை பலன்களை தரக் கூடும். இதன் காரணமாகவே தலைமுடியின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். அதனால் பொறித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

7. செயற்கை உணவு சேர்க்கை

செயற்கையாக தயாரிக்கப்பட்ட சில உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. அத்தகைய பொருட்கள் உடலுக்கு அதிக தீங்கை விளைவிப்பதோடு, அணுக்களின் இயற்கையான வளர்ச்சியையும் பாதிக்கக் கூடும். மேலும் இதனால் தலைமுடியின் வளர்ச்சியும் பாதிக்கப்படக் கூடும்.

8. மது

ADVERTISEMENT

Shutterstock

அதிக அளவு அல்ககோல் இருக்கும் பானங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அவை உடலுக்கு மட்டும் தீங்கல்ல, தலைமுடியின் வளர்ச்சியையும், ஆரோகியத்தையும் பாதிக்கும்.

9. கஞ்சி நிறைந்த வெள்ளை உணவுகள்

இத்தகைய உணவுகள் உடலுக்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கக் கூடும். இவற்றை தொடர்ந்து தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நலன் பாதிப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியும் பாதிக்கக் கூடும்.

10. எளிய / சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

இந்த வகை உணவில் அதிக சர்க்கரை சேர்க்கபட்டிருக்கும். குறிப்பாக கேக், பிஸ்கட், ரொட்டி, போன்ற உணவுகளில் இதன் அளவு அதிகமாக இருக்கும். மேலும் இவை உடலில் இருக்கும் நார் சத்தை பாதிக்கும் வகையிலும் செயல்படும். இது பிற உடல் நல பிரச்சனைகளை உண்டாக்குவதோடு, தலைமுடியின் வளர்ச்சியையும் பாதிக்கும்.

ADVERTISEMENT

11. செலெனியம்

இது தலைமுடி உதிர்வை அதிகரிக்கும். இதன் அளவு சிப்பி, கோதுமை ரொட்டி, மற்றும் சில குறிப்பிட்ட மீன் வகையில் உள்ளது. இத்தகைய உணவுகளை அதிகம் தவிர்ப்பது நல்லது.

தலைமுடி நன்கு வளர மேலும் சில குறிப்புகள்(Added tips for better hair growth)

Shutterstock

ADVERTISEMENT
  • முடிந்த வரை தேவையற்ற அழகு பொருட்களை தலைமுடியின் மீது பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது
  • தினமும் தலைக்கு எண்ணை தேய்த்து ஈரபதத்தோடு வைத்துக் கொள்ளுங்கள்
  • தேங்காய் எண்ணையை பயன்படுத்துவது நல்லது
  • வேர் பகுதியில் எண்ணையை நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
  • தினமும் ஏதாவது ஒரு பழ வகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
  • பருப்பு மற்றும் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்
  • வீட்டில் தயார் செய்த பாக்கை பயன்படுத்தி தலைக்கு குளிப்பது நல்லது
  • ஷாம்பூ மற்றும் கண்டிஷினரை தவிர்த்து விட்டு, சீயக்காயை பயன்படுத்துவது நல்லது

கேள்வி பதில்கள்(FAQ)

1. தலைமுடி உதிர்வை தடுக்க / குறைக்க எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்?

திராட்சை பழம், ஓட்ஸ் / அவல் வகைகள், பச்சை பட்டாணி, வேர்கடலை, கேரட், முட்டை, நாட்டுகோழி, மீன் மற்றும் கொட்டை வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. எந்த உணவு அடர்த்தியான தலைமுடியைப் பெற உதவும்?

முட்டை, கொழுப்பு நிறைந்த மீன், சர்க்கரைவள்ளி கிழங்கு, கீரை வகைகள், பெர்ரி, மற்றும் அவோகாடோ தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர உதவும்.

3. துரித உணவு தலைமுடி உத்திரவுக்கு காரணமாக இருக்குமா?

துரித உணவில் அதிக அளவு கொழுப்பு நிறைந்திருக்கும், மேலும் இது நல்ல கொழுப்பும் இல்லை. அதனால் அவை கூந்தல் உத்திரவுக்கு முக்கிய காரணமாக இருக்கும். மேலும் அவை நல்ல சத்துக்கள் உடலில் சாருவதை தடுக்கும். இதுவும் முடி உத்திரவுக்கு முக்கிய காரணம்.

ADVERTISEMENT

4. பால் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்குமா?

பாலில் இரண்டு வகை புரதம் உள்ளது. ஒன்று வ்ஹே மற்றொன்று கசீன், இவை இரண்டும் தலைமுடிக்கு நன்மையைத் தரும். மேலும் இதில் இருக்கும் புரதம் இயற்கையாக தலைமுடி பலபலப்பை பெறவும், பொலிவை பெறவும் உதவும்.

மேலும் படிக்க – வெப்ப பாதுகாப்பு சீரம்: கூந்தலின் அழகை மேம்படுத்த தரமான சீரம் தேர்வு செய்ய சில குறிப்புகள்

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

26 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT