logo
ADVERTISEMENT
home / அழகு
உங்கள் கருகரு கூந்தல் பளபளப்பில் மற்றவர் முகம் பார்க்க செய்யுங்கள் !

உங்கள் கருகரு கூந்தல் பளபளப்பில் மற்றவர் முகம் பார்க்க செய்யுங்கள் !

கூந்தல் பிடிக்காத பெண்கள் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் ஆண்களுக்கு பெண்கள் கூந்தல்தான் பெரும் ஈர்ப்பு. அவர்களுக்காகவே பெண்கள் தங்களை பராமரிக்க ஆரம்பித்ததாகவே வரலாறு கூறுகிறது. ஆகவே கூந்தல் கருகருவென்றும் நீளமாகவும் வளர நீங்கள் என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பல குறிப்புகள் கொடுக்கப் போகிறோம். ஆனால் உங்கள் கூந்தலுக்கு ஏற்ற ஒரு குறிப்பை தேர்ந்தெடுத்து நீங்கள் அதனை மட்டும் ஒரு மாதம் முயன்று வாருங்கள். எல்லா குறிப்புகளையும் பின்பற்றுவதால் கூந்தல் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஷாம்பூ இல்லாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா? கண்டறியுங்கள் !                

ADVERTISEMENT

Youtube

ஒரு சிம்பிளான முதல் குறிப்பு (hair growth tips) என்ன என்றால் முட்டை. அதன் ப்ரோட்டீன் சத்துக்கள் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இரண்டு முட்டைகளை உடைத்து நன்றாக நுரை வரும் வரை கலக்கவும். அதன் பின்னர் முடி முழுதும் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரினால் அலசி லேசான ஷாம்பு போட்டு கழுவுங்கள். சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து முட்டையுடன் கலக்கி கூந்தல் முழுதும் தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

மினுமினுப்பான தேகத்திற்கு மீன் எண்ணெய் மாத்திரை! ஆரோக்கியம் ப்ளஸ் அழகு கேரண்ட்டி !

ADVERTISEMENT

Youtube

பழங்கள் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு நன்றாக உதவி செய்கிறது. ஆரஞ்சு பழம் உங்கள் கூந்தல் கொண்ட எண்ணெய் பிசுக்குகளை நீக்கி பொடுகு தொல்லைகள் வராமல் காக்கிறது. ஆரஞ்சு ஜூஸை பஞ்சில் தொட்டு மயிர்க்கால்களில் படுமாறு தேய்த்து அரை மணி கழித்து குளித்து வந்தால் கூந்தல் பளபளப்பாக மாறும். வறண்ட தலைமுடி கொண்டவர்கள் ஆரஞ்சு பழத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து தலையில் தடவி வந்தால் சீக்கிரமே பளபளக்கும் கூந்தலுக்கு சொந்தக்காரர் ஆவீர்கள்.

கரும்புள்ளிகளால் கவலையா.. பன்னீர் ரோஜா முகத்தை மேலும் பளபளப்பாக மாற்றும்..

ADVERTISEMENT

Youtube

ஆளி விதைகளில் உள்ள ஒமேகா 3 சத்து உங்கள் பலவீனமான முடியை பலமானதாக ஆக்குகிறது. மிக சன்னமான முடி கொண்டவர்கள் அடர்த்தியான முடிக்காக ஆசைப்படுவார்கள். அவர்கள் ஆளி விதையை மூன்று ஸ்பூன்கள் எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நீரில் ஊற வைக்கவும். ஐந்து நாட்கள் கழித்து இந்த நீரை பஞ்சினால் எடுத்து மயிர்க்கால்களில் தடவி வாருங்கள். 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் உங்கள் கூந்தலை அலசி விடுங்கள். விரைவில் முடி அடர்த்தியாகும்.

ஆப்பிள் சீடர் வினிகரின் சரும பாதுகாப்பு நன்மைகள் மற்றும் தயாரிக்கும் முறைகள்!

ADVERTISEMENT

Youtube

நெல்லிக்காயை ஜூஸ் எடுத்து அதனை இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் கலந்து கொள்ளுங்கள். இதனை பஞ்சு மூலம் தொட்டு மயிர்க்கால்களில் படுமாறு நன்கு தடவி இரவு முழுதும் ஊற விட்டு காலையில் தலைக்கு மிதமான ஷாம்பூ போட்டு குளிக்கவும். உங்கள் கூந்தல் பிரகாசமாகும்.                                                                                                                  

Youtube

ADVERTISEMENT

உங்கள் கூந்தல் கருகருவென என வளர்வதற்கு அவாகேடோ பழத்தையும் வாழைப்பழத்தையும் சமமாக எடுத்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இதனை எடுத்து உங்கள் மயிர்க்கால்களில் படுமாறு நன்கு மசாஜ் செய்து உலர விடுங்கள். அதன் பின் அலசுங்கள். இதனால் உங்கள் கூந்தல் கருகருவென நீண்டதாக பளபளப்பாகவும் இருக்கும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!                                                                                        

25 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT