சீரியல் நடிகருடன் மைனா நந்தினிக்கு விரைவில் இரண்டாவது திருமணம் : நிச்சயதார்த்த புகைப்படம்

சீரியல் நடிகருடன் மைனா நந்தினிக்கு  விரைவில் இரண்டாவது திருமணம் : நிச்சயதார்த்த புகைப்படம்

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். 

இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

twitter

டிக்டாக்கில் இவரை ஒரு மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள். இவரது நகைச்சுவை பேச்சால் சமூகவலைதளங்களில் இவருக்கென தனி ஆர்மியே உள்ளது. இதற்கிடையில் ஜிம் மாஸ்டர்  கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கல்யாணம் ஆன சில மாதங்களிலே பிரிந்து இருந்தனர். இதனால் ஏற்பட்ட  மன உளைச்சலால் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டார் கார்த்திகேயன். 

புதிய அவதாரம் எடுத்த நடிகை ஷாலினி தங்கை ஷாமிலி : ஓவியங்களைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்!

குடும்பத் தகராறில் மனம் உடைந்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மைனா நந்தினியிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். நந்தினி கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

twitter

இதனை தொடர்ந்து கணவர் இறந்து சில மாதங்களுக்கு பிறகு நந்தினி மீண்டும் சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் என பிஸியானார் நந்தினி. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்போது இவர் சீரியல் நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் தகவல் பரவியது. 

இதுகுறித்து பேசிய நந்தினி, லோகேஷ் என்பவரை காதலித்து வருவது உண்மை தான் என கூறினார். எனக்கு யோகேஷை 2013ம் ஆண்டில் இருந்தே தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஆனா கடைசி 1 வருஷமா தான் ரொம்ப க்ளோஸா இருக்கோம். உனக்குன்னு ஒரு லைஃப் வேணாமா, நடந்ததெல்லாம் மறந்துட்டு கடந்து போன்னு சொன்னாங்க.

கே.ஜி.எப் பட நடிகர் யாஷ்-ராதிகா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது : கியூட் புகைப்படம் வைரல்!

 

twitter

ஆனா எப்போவும் என் கிட்ட கேரிங்கா இருப்பாங்க. அதனால் நான் ஒரு நல்ல ஃபிரெண்டா தான் நினைச்சிட்டு இருந்தேன். ஜனவரி மாசம் என்ன பாக்க வந்த அவங்க அப்பா, அம்மா என்னை பெண் பார்க்க வந்ததாக கூறினார்கள். எனக்கு பயங்கர ஷாக். ரெண்டு வீட்லயும் பேசிருக்காங்க. கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என கூறியிருந்தார். 

நடிகை ஹன்சிகாவிற்கு தீபாவளி பரிசாக கிடைத்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் : விலை இவ்வளவா!

மேலும் வாழ்க்கையில் சில சமயங்களில் அடுத்த கட்டத்தை நோக்கி சொல்லவேண்டியது அவசியம் என்கிற நோக்கத்தில் இந்த முடிவை நான் எடுத்தேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். யோகேஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
View this post on Instagram
 
 

We got engaged @yogeshwaram_official ❤️😍 my saree @swathisonline

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on

இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது என தனது காதலன் யோகேஷ் உடன் இருக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மிகவும் நெருக்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மைனா நந்தினிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!