நடிகர் யாஷ் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட படைப்பான பாகுபலி தமிழ் , தெலுங்கு சினிமாவுலகில் மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தது.
அதனை அடுத்து முதன் முறையாக கன்னட படமொன்று தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதென்றால் அது நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எப் திரைப்படம். கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று என்று பெருமையோடு அழைக்கப்படும் நடிகர் யாஷ், இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுலகில் பரவலான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.
அது மட்டுமின்றி இதுவரை வெளிவந்த கன்னட திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார் யாஷ்.
பயபக்தியும் அதிக அக்கறையும் உள்ளவரே என் கணவர்.. கல்யாண கனவுகளில் காஜல் அகர்வால் !
இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு ராதிகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் யாஷ்சை விட அவரது மனைவி இரண்டு வயது மூத்தவர். இவர்கள் இருவருக்கும் 2018 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அதே சமயத்தில் தான் யாஷ் நடித்த படமும் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆன நிலையில் தனது மகளின் புகைப்படத்தை வெளியிடாத யாஷ் கடந்த சில மாதங்களுக்கு முதன் முறையாக தனது மகளின் புகைப்படத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.
Introducing our lil angel.. ❤
— Yash (@TheNameIsYash) June 23, 2019
ನಮ್ಮದೇ ಉಸಿರಿನ ಮಗಳೆಂಬ ಕನಸಿಗೆ ಇಂದು ಹೆಸರಿಟ್ಟ ಸಂಭ್ರಮ❤❤❤ ಹರಸಿ ಹಾರೈಸಿ🤗🤗... pic.twitter.com/fjFxk4u8dG
மேலும் தனது மகளுக்கு ஆர்யா யாஷ் என்று பெயர் வைத்துள்ளார் யாஷ். அதனை ஒரு அழகிய வீடியோ மூலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது குறித்து பேசிய ராதிகா பண்டிட், ஐராவின் பிறப்பு யாஷை ஒரு நல்ல மனிதராக மாற்றியது.
Life is beautiful... not because of what i have in life... but because of who i have in my life... thank you, for it feels like you are born for me... Happy birthday my Love pic.twitter.com/0UzhTxLNvN
— Yash (@TheNameIsYash) March 7, 2019
அனுஷ்கா மிகவும் அழகான பெண்.. சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறேன்.. பிரபாஸ் !
குழந்தையை பார்த்த போது, அவரது கண்களில் கண்ணீர் கொட்டியதைப் பார்த்தேன். வலிமையானவராக இருந்தால் கூட அந்த தருணத்தில் அவர் உணர்ச்சி வசப்பட்டதற்கு வேறுவொரு சாட்சி இருக்கவே முடியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பத்தே மாத இடைவெளியில் மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் யாஷூக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனது மகன் பிஞ்சு கையால் தனது விரலை பிடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை யாஷ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்
யாஷ் நடித்து வரும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் கே.ஜி.எப் முதல் பாகம் போன்று கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
ஸ்ட்ரெச் மார்க்ஸை குறைக்கும் புதிய பொருட்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!