புதிய அவதாரம் எடுத்த நடிகை ஷாலினி தங்கை ஷாமிலி: ஓவியங்களைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்!

புதிய அவதாரம் எடுத்த நடிகை ஷாலினி தங்கை ஷாமிலி: ஓவியங்களைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியம்!

இயக்குனர் மணிரத்தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாமிலி. 90 காலகட்டங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம்  வந்தவர். அஞ்சலி, துர்கா, தைப்பூசம், தேவர் வீட்டுப்பொண்ணு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். 

அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்திருந்த ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2009ல் வெளியான ஓயே என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

twitter

தமிழில் விக்ரம்பிரபுக்கு ஜோடியாக வீரசிவாஜி படத்தில் நாயகியாக ஷாமிலி (shamili) அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் திரையுலகில் அவர் பெரிதாக நிலைக்கவில்லை. இதனை பொருட்படுத்தாத அவர் அஜித்தைப் போன்று பல துறைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

பல மொழி  படங்களில் நடித்து வரும் இவர் மாடலிங், ஓவியம் என பிஸியாக உள்ளார். அந்த வகையில் தற்போது ஓவியராக நடிகை ஷாமிலி புதிய அவதாரம் எடுத்துள்ளார். இதற்காக பிரபல ஓவியர் ஏ.வி.இளங்கோவிடம் முறையாக ஓவியம் வரைய கற்றுக்கொண்ட அவர், சமீபகாலமாக ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 

எக்ஸஸ் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஷ்ரத்தா தாஸ் : லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தல அஜித், திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பைக் மற்றும் கார் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்டவைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் கூட அஜித் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றார். மேலும் அஜித் மனைவி ஷாலினியும் ஒரு நடிகை மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை என்பது அனைவரும் அறிந்ததே.

twitter

அந்த வரிசையில் நடிகை ஷாமிலியும் ஓவியராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். புகழ்பெற்ற ஓவியர் ஏ.வி. இளங்கோவிடம்  ஓவிய பயிற்சி பெற்று வரும் ஷாமிலி தான் வரைந்த சில ஓவியங்களை பெங்களூருவில் நடைபெற்று வரும் ஓவியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார். 

அதில் ஷாமிலி வரைந்திருந்த பெண்களின் அரைநிர்வாண ஓவியங்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அரைநிர்வாணமாக இருக்கும் பெண்களின் படங்களை ஆயில் பெயிண்டிங் மூலம் தீட்டியுள்ள இவரின் திறமையைப் பாராட்டியும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். 

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுஜித் உடல் சடலாக மீட்பு : சோகத்தில் மூழ்கிய தமிழகம்!

கலை நுணுக்கத்துடன் அவர் வரைந்த ஓவியங்களை பலரும் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. நடிகை ஷாமிலி (shamili) நடிப்பை கைவிட்டு முழுமுழுக்க ஓவியத் துறையில் இறங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு கவலை அளித்துள்ளது. 

twitter

எனினும் ஓவியத் துறையில் ஷாமிலி (shamili) உச்சம் தொடுவார் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மீண்டும் சினிமாவில் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், முன்னதாக இதுகுறித்து பேசிய நடிகை ஷாமிலி, நான் சினிமாவில் நடிப்பதில் அக்காள் கணவர் அஜீத்துக்கு அவ்வாளவாக விருப்பம் இல்லை என்றாலும்,

நான் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை சொன்ன உடனே அதற்கு முழு ஆதரவு கொடுத்தார். நான் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்பியதும், அவரே என்னை போட்டோ எடுத்தார். அதை மறக்க முடியாது. அவர் மிகவும் அமைதியானவர் வீட்டையும் குடும்பத்தையும் மிகவும் விரும்புவார். 

அவருடன் இருக்கவேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவார்கள். நான் ஒரு போதும் அஜீத் ஜோடியாக நடிக்க மாட்டேன். அவருடைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது பற்றி சிந்திப்பேன். எனக்கு மார்டனாக நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால் கவர்ச்சியாக நடிக்க விருப்பம் இல்லை என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மணிரத்னம் மூலம் வெளியானது பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மிஷ்கினின் சைக்கோ பட டீஸர் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!