சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!

சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!

குங்குமப்பூ என்பது உலகப்புகழ் பெற்ற ஒரு பொருளாகும்.  பெண்கள் கருவுற்றிருக்கும் போது குங்குமப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவிவருகிறது. 

குங்குமப்பூவோட மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். சுமார் இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும். 

இந்தியாவில் காஷ்மீரில் மட்டும்தான் குங்குமப்பூ விளைகிறது. குங்குமப்பூவில் (saffron)  இயற்கையாகவே மிக சிறந்த தூயமையாக்கும் பண்புகளும், பாக்டீரியா எதிர்ப்பு குணமும் கொண்டது. குங்குமப்பூவை கொண்டு உங்கள் சருமத்தை அழகாக்குவது குறித்து இங்கு விரிவாக காண்போம்.

pixabay

சிகப்பழகை பெற : எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. சிறிதளவு குங்குமப்பூவை 1 மேஜைக்கரண்டி பாலில் கலக்கி இந்த கலவையை வாரத்துக்கு இரண்டு முறை முகத்தில் தடவி  வந்தால் சிகப்பழகை பெறலாம். 

சரும நிறம் அதிகரிக்க : குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து சரும நிறம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம். 

உதடுகளுக்கு : மேலும்  சிலருக்கு உதடுகளின் வறட்சி அடைவதால் கருமையாக இருக்கும். இந்த கலவையை உதடுகளிலும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும்.

கருமை நீங்க : குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்து அதனுடன் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர வெயிலால் முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். 

pixabay

சரும பொலிவிற்கு : ஒரு ஸ்பூன் தேன் உடன் சில குங்குமப்பூவை (saffron) சேர்த்து நன்றாகக் கலந்து உங்கள் முகத்தில் தடவி  மசாஜ் செய்து கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர இரத்த ஓட்டம் அதிகரித்து சருமம் பொலிவாகும். 

குங்குமப் பூ இழைகளை பாலில் ஊற வைக்க வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் சந்தன தூளை  சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடுங்கள். இதனை வாரம் இரண்டு முறை செய்து வர சருமம் பிரகாசமடையும். 

சரும டோனர் : முதல் நாள் இரவு குங்குமப் பூவை பன்னீரில் கலந்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் ஒரு பருத்தி துணி அல்லது பஞ்சால் அந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து கழுவ வேண்டும். இது சருமத்திற்கு இயற்கை டோனராக செயல்படுகிறது. 

pixabay

இளமையான சருமத்திற்கு : தினமும் குளிக்கும் தண்ணீரில் குங்குமப் பூ (saffron) இழைகளை போட்டு வைத்து விட்டு சிறிது நேரத்திற்கு பின்னர் குளிக்க வேண்டும்.  இது உங்கள் சருமத்தை இளமையாக தோற்றமளிக்க செய்கிறது. 

முகப்பருக்களை நீக்க : குங்குமப் பூ மற்றும் துளசி இலைகளை சேர்த்து அரைத்து ஒரு பேஸ்ட் செய்யவும். இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சரும தொற்றை குறைக்க உதவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு பிரச்சனைகள் குணமாகும். 

வறண்ட சருமத்திற்கு : குங்குமப் பூ, பால் பவுடர், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை மற்றும் சிறிது ஆலிவ் எண்ணெய் ஆகியவ்ற்றை எல்லாம் சேர்த்து கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் சரும வரற்சி நீங்கி முகம் பட்டு போல் மிருதுவாகும். 

pixabay

குங்குமப் பூ பேஸ் பேக்

பேஸ் பேக் -1 

தேவையானவை

கடலைமாவு - 2 ஸ்பூன்,
குங்குமப் பூ - சிறிது,
பால் - 1  ஸ்பூன்   

கடலைமாவு, குங்குமப் பூவை நன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து மூன்றையும்  நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை தினமும் பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள அழுக்கு  நீங்கி சருமம் பொலிவு பெரும்.

பேஸ் பேக் -1 

தேவையானவை

குங்குமப் பூ - 1/2 கப்,
ஸ்ட்ராபெர்ரி  பழம் - 3 

ஸ்ட்ராபெர்ரி  பழங்களை மசித்து பேஸ்ட் ஆக்கி அதனுடன்  குங்குமப் பூ சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை முகம்  மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும். ஸ்ட்ராபெர்ரியில் விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் இருப்பதால் உங்கள் சருமம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்கும். குங்குமப் பூ இரத்த ஓட்டத்தை அதிகரித்து சரும நிறத்தை அதிகரிக்கிறது. 

மேலும் வாசிக்க - 

Saffron Benefits for Hair in Hindi

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!