சோனா முதல் அக்ஷயா வரை! ஜோதிகாவைப் பற்றி நீங்கள் அறிந்திடாத சில சுவாரசியமான விஷயங்கள் !

சோனா முதல் அக்ஷயா வரை!  ஜோதிகாவைப் பற்றி  நீங்கள் அறிந்திடாத சில சுவாரசியமான விஷயங்கள் !

பப்ளி உடலும், ஈர்க்கும் முக பாவமும், அடர்ந்த கூந்தலும், அளவான பேச்சும் சிரிப்பும், எளிமையான மேக்கப்பும் ஜோவின் அடையாளங்கள். சோனாவாக அறிமுகமாகி இன்று தமிழகத்தின் மருமகளாகித் தமிழ்த் திரை உலகில் இரண்டாம் முறையாகக் கலக்கிக் கொண்டிருக்கும் நம் ஜோதிகாவைப் (வாழ்கை) பற்றி ஒரு அலசல்.

1. பாக்கெட் மனி(pocket money)க்காக மாடலிங் செய்த ஜோவிற்கு இயக்குனர் ப்ரியதர்ஷன், ‘டோலி சஜா கே ரக்னா’(doli saja ke rakna) என்ற ஹிந்தி திரைப்படத்தில் முதல் வாய்ப்பு கொடுத்தார்.

2. தமிழ் திரை உலகில் வளம் வந்த நக்மாவும், ரோஷினியும் இவரது  சாகோதரிகள்.

3. தெலுங்கு(தாகூர்), மலையாளம்(ராக்கிலிபாத்), கன்னடா(நகரஹாவு) போன்ற பிற மொழிகளில் நடித்தாலும், தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்து கலைமாமணி விருது, பிலிம்ப்ஃபேர் விருதுகளும் பெற்றுள்ளார்(jyothika). 

4. திரையுலக வாழ்க்கையில் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக மாறிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் ‘குஷி’; மேலும், பல வெவ்வேறு கதா பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

5. முன்னணி ஹீரோயினாக இருந்தாலும், அதிலும் பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கும் கதாபாத்திரங்களில் ஆரம்பம் முதலே அவருக்கு ஆர்வம் இருந்தது.

6. தமிழ் மொழி தெரியாததால், தன் முகபாவத்தால் ரசிகர்களை ஈர்க்கமுயற்சித்தார். ‘எக்ஸ்பிரசன் குயின்’(expression queen) என்று பெயர் பெற்றார் ஜோதிகா!

7. அவர் முகம் சுருக்கி நடித்தாலும், ரசிகர்கள் முகம் சுளிக்குமாரு இதுவரை எந்த கதாபாத்திரத்திலும் நடித்ததில்லை.

8. சென்னையில் அவர் முதன் முதலில் சந்தித்த நபர் அவருடைய கணவர் சூர்யா.

9. ‘உயிரிலே கலந்து’, ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘ஜூன் ஆர்’, ‘ஜில்லனு ஒரு காதல்’ ஆகிய திரைப்படங்களில் சூர்யாவோடு ஜோடியாக நடித்துள்ளார்.

10. சூர்யாவின் தலைமையில் எடுக்கப்பட்ட ‘ஹீரோவா? ஜீரோவா?’ என்ற குறும்படத்தில், குழந்தை கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோவும் பங்குபெற்றுள்ளார்.

11. திருமணத்திற்கு முன்பும், பின்பும் அவர் சமையல் செய்தது கிடையாதாம். இருப்பினும், தன் குழந்தைகளும், குடும்பத்தாரும் சத்தான ஆரோக்கியமான உணவு கிடைப்பதை ஒவ்வொரு வேளையும் உறுதி செய்து கொள்வாராம்.

12. 8 ஆண்டுகளுக்குபின் வீட்டிலேயே இருந்து விடாமல், குடும்பத்தார் ஒத்துழைப்பில் மீண்டும் திரை உலகிற்கு திரும்பினார். பெண்களை உத்வேகப்படுத்தும் வகைகளில் ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’, ‘செக்க சிவந்த வானம்’, ‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’ , ‘ஜாக்பாட்’ போன்ற படங்களில்(jothika) அடுத்த இன்னிங்சை துவங்கிவிட்டார்.

13. ‘மணிகண்டன்’ என்ற படம்தான் இவர் திருமணத்திற்கு முன் நடித்த கடைசி படம்.

14. ‘இதயம் நல்லெண்ணெய்’ விளம்பரத்திலும் பிரபலமான ஜோவுக்கு, பட்டர் சிக்கன், பராத்தா தான் எப்போதும் விரும்பும் உணவாம். 

15. ஸ்பைசி இந்திய உணவும், தாய் உணவுகளும் தான் இவருடை குசைன்னில்(lifestyle) இருக்குமாம்.  

16. சாக்லேட் பிரியரான ஜோ, தன் மகன் தேவுடன் சேர்ந்து நன்றாக சாக்லேட் உணவுகளை ருசிப்பாராம்.

17. அழகிய புடவைகளில் அருமையாக வலம்வந்து நம்மை ஈர்த்தாலும், ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணிவது இவருக்கு பிடிக்குமாம்.

18. மேக்கப் என்று வரும்போது, எளிமையாக இருக்கவே விரும்புகிறார். அதிக மேக்கப் இவருக்கு பிடிக்காதாம். இயற்க்கை அழகை மேன்படுத்தவே முனைவதாக கூறுகிறார்.

19. சூர்யா பற்றி கூறும் போதெல்லாம், ஜோ மீது அவர் காட்டும் அக்கறை அவரை பிரமிக்க வைப்பதாகவும், இருவருக்கும் ஷூடிங் இல்லாத நேரங்களில், குடும்பத்துடன் வீட்டில் இருப்பதை அதிகம் விரும்புவதாகவும் கூறுகிறார்.

20. தற்போது, கார்த்தியுடன் சேர்ந்து, அவருக்கு சகோதரியாக, மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்துவருகிறார் ஜோ. விரைவில் அடுத்த கோணத்தில் ஜோவை எதிர்பார்க்கலாம்.

‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் பைக் ஓட்டிக் கலக்கிய ஜோ, சமீபத்தில் புது டெல்லியில் நடந்த இந்திய கராத்தே சாம்பியன் போட்டியில் தன் மகன் தேவ் பிளாக் பெல்ட் பட்டம் வென்ற விழாவிற்கு குடும்பத்துடன் சென்று வந்திருக்கிறார். இப்படி குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, தன் கேரியரிலும் தொடர்ந்து வெற்றியை உருவாக்கி பெண்களுக்கு உத்வேகத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார் நம் ஜோ!

 

மேலும் படிக்க - தாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்

மேலும் படிக்க - மும்பை தொழிலதிபருடன் நடிகை தமன்னாவிற்கு திருமணமா?... புதிய அறிவிப்பை வெளியிட்டார்!

பட ஆதாரம்  - Instagram , Gifskey

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!