மும்பை தொழிலதிபருடன் நடிகை தமன்னாவிற்கு திருமணமா?... புதிய அறிவிப்பை வெளியிட்டார்!

மும்பை தொழிலதிபருடன் நடிகை தமன்னாவிற்கு திருமணமா?... புதிய அறிவிப்பை வெளியிட்டார்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் தமன்னாவும் ஒருவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி சோலோ ஹீரோயினாக சில படங்களிலும் நடித்து வருகிறார். தமன்னா (tamanna) கடைசியாக நடித்த தேவி 2, ஹிந்தியில் நடித்த காமாஷி போன்ற படங்கள் தோல்வி அடைந்ததால் அதிக வருத்தத்தில் இருக்கிறார். 

இதனால் அவர் அடுத்த படங்களை தேர்வு செய்வதில் கவனத்துடன் தமன்னா செயல்பட்டு வருகிறார். தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு புதிதாக நடிக்கவுள்ள படங்களுக்காகக் கதைகளைக் கேட்டு வரும் தமன்னா புதிதாக சில நிபந்தனைகளை விதித்துள்ளார். 

அதாவது கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்றால், டாப் ஹீரோ படமாக இருந்தாலும் உடனே நிராகரித்து விடுகிறாராம். கதை பிடித்தால் சம்பளத்தை குறைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என தமன்னா அதிரடியாக கூறியுள்ளார்.

twitter

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பெட்ரோமாக்ஸ்' படம் தீபாவளி வெளியீடாகவும், 'ஆக்‌ஷன்' படம் நவம்பர் வெளியீடாகவும் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பெட்ரோமாக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அக்டோபர் மாதம் 11ம் தேதி வெளியாக உள்ளது கூறப்பட்டுள்ளது. 

தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என  படக்குழு அறிவித்திருந்த நிலையில் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் முன்னர் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. தீபாவளிக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ளதால் இந்த படத்தை முக்கூட்டியே வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

இதுகுறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் போஸ்டருடன் வெளியிட்டார். இதனிடையே மும்பையை சேர்ந்த தொழிலதிபருடன் தமன்னாவுக்கு திருமணம் என தகவல் பரவியது. ஏற்கனவே தமன்னா (tamanna) மும்பையில் வீடு வாங்கிய போது திருமண செய்தி அவரை பின் தொடர்ந்தது. 

twitter

சினிமாவில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கவில்லை என கூறியிருந்தார்.இந்நிலையில் மீண்டும் அடுத்த ஆண்டு இறுதியில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை தமன்னா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமன்னா,  நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை, 

ஆனால் சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் வரவில்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். எல்லாரையும் போல நானும் லட்சியத்தோடுதான் சினிமா துறைக்கு வந்தேன். அந்த லட்சியத்தை முதல் படத்திலேயே அடைந்து விட்டேன்.

எமிக்கு குழந்தை பிறந்தாச்சு! தாய்மை தருணத்தை முதன்முதலாக குழந்தையோடு பகிர்ந்த எமி ஜாக்சன்!

13 வருடங்கள் கதாநாயகியாக எனது பயணம் நீடித்துக் கொண்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு பெயரையும் புகழையும் முன்பே எதிர்பார்க்கவில்லை, சினிமா என்றால் எனக்கு விருப்பம். அதனால்தான் நடிகையானேன்.

twitter

நடிகையாக கேமரா முன்னால் வந்ததுமே எனது லட்சியம் நிறைவேறி விட்டது. மற்றதெல்லாம் போனஸ்தான். எந்த துறையாக இருந்தாலும் செய்கிற வேலையை விருப்பத்தோடு செய்தால் எல்லாமே நம்மை தேடி வரும். அப்படி இல்லாமல் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே பெயர், புகழ், பணம் என்ற பட்டியலோடு வந்தால் நாம் செய்கிற வேலையில் சந்தோஷம் இருக்காது. 

மினுமினுக்கும் முக வசீகரம் உங்களுக்கும் வேண்டுமா ! இருக்கவே இருக்கிறது மினிமல் மேக்கப் !

இன்னும் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருப்பதாக எண்ணுவதால் இப்போது திருமணம் குறித்த எண்ணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதில் அரண்மனையில் நடனம் ஆடும் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். இதன் இந்தி பதிப்புக்கு நானே டப்பிங் பேசினேன். ஏற்கனவே பாகுபலி படம் எனக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்திலும் புகழ் கிடைக்கும் என எண்ணுகிறேன் என தமன்னா (tamanna) கூறியுள்ளார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!