தாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்

தாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்

தாய்மை.. உச்சரிக்கும்போதே உணர முடியும் அதன் மேன்மை. பெண்மையின் முழுமை இந்த தாய்மைதான் என்பது இயற்கையின் உத்தரவு. அதன்படி தங்கள் தாய்மையின் மூலம் தங்கள் பெண்மையை முழுமை செய்த சில பிரபலங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.


பெண்ணாக இருக்கும் ஒவ்வொருவரும் அவர் பிரபலமாக இருந்தாலும் ஏன் லண்டன் மாளிகை ராணியாக இருந்தாலும் தாய்மை என்பது மட்டுமே அவர்களை முழுமையாக்குகிறது. அதன் அடிப்படையில் சமீபத்தில் தாய்மை (motherhood) மூலம் பிரபலமான சில அம்மாக்களை இங்கே காணலாம்.


ஐஸ்வர்யா ராய் - ஆராத்யா


ஐஸ்வர்யா ராய் அத்தனை பேரின் உள்ளங்களை கவர்ந்த போது கூட இத்தனை சந்தோஷப்பட்டிருக்க மாட்டார் ஆராத்யாவின் அன்பை அவர் பெற்று கொண்ட போதுதான் அவர் உலகின் உண்மையான அழகி ஆனார். ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா இவருக்கு இடையிலான பந்தம் அவர்கள் எங்கு சென்றாலும் விட்டு பிரியாத விரல்களை போன்றது தான்.


ஆராத்யாவை விட்டு விடுங்கள் ஐஸ்வர்யா.. இணையத்தில் வைரலான விமர்சனம்ஷாலினி - அனோஷ்கா


ஷாலினி தாய்மை அடைந்த போது எளிமையான பெண்ணாகத்தான் அவர் எதிர்கொண்டார். அவர் அஜித்தை திருமணம் செய்து சினிமாவில் விலகியதில் இருந்து இப்போது வரைக்கும் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான மனைவியாக பாந்தமான குடும்ப பெண்ணாக ஷாலினி பெண்மைக்கான மென்மையான உதாரணம் ஆக இருக்கிறார். இவருக்கும் இவரது மகள் அனோஷ்காவிற்கும் இடையேயான ஒற்றுமை என்பது இவர்களின் அமைதியும் எளிமையும்தான்.


ஷாலினியின் முகம்.. அஜித்தின் நிறம்.. அழகாக வளர்கிறாள் அனோஷ்கா !மீனா - நைனிகா


மீனா தமிழ் சினிமாவில் திறமையாக வலம் வந்த ஒரு பரபரப்பான பெண். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தந்து குழந்தையையும் இப்போது நட்சத்திரம் ஆக்கும் அளவிற்கு அவருக்கு சினிமா மீது மோகம் இன்னமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நடிகை மீனா எப்படி எல்லோருக்கும் பிடிக்குமோ தாயாக அவரை பார்க்கும்போதும் அப்படிதான் தோன்றுகிறது.சினேகா - விஹான்


தமிழ் நெஞ்சங்களில் பாரபட்சம் பார்க்காமல் குடியேறவர் சினேகா. பாரம்பரியமான சினிமா உலகில் தனக்கென குடும்ப பாங்கான கதாபாத்திரங்களால் முத்திரை பதித்தவர். இவர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்த போது கூட இத்தனை அழகாக இல்லை என்னும் அளவிற்கு தாய்மையின் அழகில் மிளிர்கிறார். விஹான் இவர்கள் காதலின் பரிசாக அழகாக வளர்கிறான்.ரேவதி - மஹி


தனது தனித்தன்மையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை ரேவதி. சுரேஷ் மேனனை பிரிந்த பிறகு நடிகை ரேவதி நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது தனிமை வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைக்க விரும்பினார். அதற்காக அவர் கையில் எடுத்த விஷயம் அவரது நடிப்பை போலவே தனித்தன்மையான ஒன்று. யாரையும் திருமணம் செய்ய விரும்பாமல் செயற்கை முறையில் குழந்தை பெற்று கொண்டவர் ரேவதி. மிகவும் தாமதமாக 40களில் ரேவதி இந்த முடிவினை எடுத்தாலும் அதில் பக்குவமாக செயல்பட்டு மஹி எனும் அற்புத குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். ரேவதி.. எப்போதும் எதிலும் நமக்கெல்லாம் முன்னோடி.கௌதமி - சுபலக்ஷ்மி


ஆந்திரா நடிகையான கௌதமி தமிழுக்கு வந்து 20 வருடங்களுக்கும் மேலாக இங்கேயே வாழ்ந்து தமிழ் நடிகையானவர். இவருக்கும் இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட விவகாரத்தில் பிரிந்தனர். ஆனாலும் சிங்கிள் மாம் ஆக சுபலக்ஷ்மியை பிரியாமல் இருந்தார். கமல்ஹாசனோடான லிவிங் உறவிலும் சுபலக்ஷ்மி விலகாமல் இருந்தார். அம்மா -மகளாக இவர்களுக்கு இடையேயான புரிதல் மிக அற்புதமானது.ரம்பா - லான்யா, சாஷா மற்றும் ஷிவின்


திரையில் தனது அழகால் மற்றும் கொஞ்சும் குரலால் இளைஞர்கள் உள்ளத்தை அள்ளிய ரம்பா திருமணம் செய்து செட்டில் ஆனார். அதற்கு பின் அவரை மறந்து விடுவார்கள் என்கிற போது மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவாரானார். மூன்று குழந்தைக்கு தாயாகி இருக்கும் ரம்பாவுக்கு தாய்மை எவ்வளவு பிடிக்கும் என்பது அவரது குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும் பாங்கில் தெரிகிறது.சௌந்தர்யா - வேத் கிருஷ்ணா


சௌந்தர்யா ரஜினிகாந்த். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். அஷ்வினை திருமணம் செய்த போதும் விலகிய போதும் இவர் எதையும் அலட்டல் இல்லாமல் செய்பவர் என்பதையும் மிகவும் வலிமையான பெண்மணி என்பதையும் சொன்னது. அஷ்வினை பிரிந்தாலும் உச்ச நடிகரின் மகள் என்பதால் மகனை மற்றவரிடம் கொடுத்து விட்டு இன்னொரு திருமணம் செய்து கொள்ள நினைக்காமல் வேத் ஐ ஏற்று கொள்பவர் எவரோ அவரையே திருமணமும் செய்து இரண்டாம் திருமணத்தில் முன்மாதிரியாக இருப்பவர். சௌந்தர்யா மற்றும் வேத் இருவரை எங்கும் தனித்தனியாக காணவே முடியாது. அதுவே இவர்கள் ப்ரியத்தின் அடையாளம்.


சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெண்களில் அதிகம் ஆசிர்வதிக்கப்பட்டவர்புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.