logo
ADVERTISEMENT
home / அழகு
அலுவலத்திற்கு செல்லும் பெண்கள் எந்த மாதிரியான ஒப்பனைகள் செய்யலாம்? சிம்பிள்  குறிப்புகள்!

அலுவலத்திற்கு செல்லும் பெண்கள் எந்த மாதிரியான ஒப்பனைகள் செய்யலாம்? சிம்பிள் குறிப்புகள்!

அலுவலகம் செல்லும் பெண்கள் ஒப்பனை  விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் பெண்களின் உடை, நடை, பாவனைகளை வைத்தே அவர்களது குணநலன்களை பலரும் கணிக்கிறார்கள். அதனால் ஒப்பனை (makeup) அலங்காரத்தில் உஷாராக இருக்க வேண்டும். 

குறிப்பாக மழைக்காலத்தில் வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமம் ஆகியவற்றை முறையாக பராமரிப்பது முக்கியம். அலுவலகம், வேலை என்று வெளியே செல்லும் பெண்கள், அளவான ஒப்பனை போட்டுக் கொண்டால் அழகாக இருக்கும். 

pixabay

ADVERTISEMENT
  • நம்மை அழகாக வெளிப்படுத்திக்கொள்ள மேக் அப் (makeup) என்பது அவசியம்தான். எது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமோ அதை தேர்ந்தெடுங்கள். உங்கள் அணிகலன்கள் மற்றும் ஒப்பனைகள் அடுத்தவரின் கவனத்தை திருப்புமாறு அல்லாமல் அழகாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • வேலைக்கு செல்லும் பெண்கள் எளிமையான அதே நேரத்தில் கவர்ச்சியான சிறிய ஆபரணங்களை அணிந்துகொள்வது அவசியம். சில அணிகலன்கள் எல்லா பருவத்திற்கும் காலத்திற்கும் ஏற்றதாகவும், எளிமையாகவும் இருக்கும். அவற்றை அணிய வேண்டும். 

முகப்பொலிவு கிரீம்கள் பயன்படுத்துவோர் கவனத்திற்கு : கிரீம்களால் இவ்வளவு தீமைகளா

  • உடைக்கு தகுந்தாற் போல காதணிகள் மற்றும் ஜெயின் ஆகியவற்றை அணிய வேண்டும். மாடர்ன் உடைகளுக்கு சிறிய காதணிகள் அணிந்தால் அழகாக இருக்கும்.

pixabay

  • இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு கண்டிப்பாக முகத்தை கிளன்சிங் செய்தல் வேண்டும். கிளன்சிகை பஞ்சில் நனைத்து தினமும் இரவு முகத்திற்குத்  தடவவேண்டும். இதன் மூலம் முகத்தில் (makeup) உள்ள தோல் சுத்தமாகும். எனவே காலையில் அலுவலகத்திற்கு செல்லும் போது ஈஸியாக இருக்கும். 
  • நமது தோல் எண்ணெய்ப்பசையுள்ள சருமமா  அல்லது வறண்ட சருமமா என எந்த வகை சருமமாக இருந்தாலும் மேக்கப்பிற்கு முன்பாக  நல்ல மாய்ச்சரைஸராக பயன்படுத்துதல் தோலிற்கு எப்போதும் நல்லது.
  • முக அலங்காரத்திற்கு முதலில் கன்சீலரை ஒரே சீராக பூசினால் நம் முக ஒப்பனை அதிக நேரத்திற்கு அப்படியே கலையாமல் இருக்கும்.  
  • பின்னர் முகம் மற்றும் காது, கழுத்துப் பகுதியில் முக அலங்கார தூரிகையினால் பவுடரை பூசவும். அதிகம் படாமல் முகம் முழுவதும் ஒரே மாதிரியாக பூச வேண்டும்.

ADVERTISEMENT

pixabay

  • பின்பு ஐப்ரோ பென்சிலால் புருவங்களை அடர்த்தியாக வரையவும். ஐப்ரோக்களை திருத்தி வரையும்போது எடுத்த உடனே அடர்த்தியாக  வரைதல் கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக தேவைக்கேற்ப அடர்த்தியாக்க வேண்டும்.
  • அடுத்து, கண்களுக்கு மேலே புருவங்களுக்கு கீழே மூடும் பகுதியை ஐஷாடோபூசவும்.
  • இந்த ஐஷாடோவின் நிறம் நீங்கள் உடுத்தும் உடைக்கு பொருத்தமாக இருந்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் அலுவலகத்திற்கு செல்லும் போது லைட் கலரை தேர்வு  செய்வது நல்லது. 

பாத வெடிப்புகள் பாடாய்படுத்துகிறதா? குளிர்காலம் தொடங்குமுன் குணப்படுத்தி விடலாம் வாருங்கள்

  • பின்னர் கண்களுக்கு மேலே இமைகளுக்கு அருகில் ஐ லைனரால் கண் மை போல் மெல்லிய கோடு வரையவும். இதனால் கண்கள் எடுப்பாகத் தெரியும். கண் சிறிதாக இருப்பவர்கள் வில் போன்று ஐ லைர் போட்டால் அழகாக இருக்கும். 

pixabay

ADVERTISEMENT
  • இதனையடுத்து கண் இமைகளை மஸ்கரா மூலம் அழகுப்படுத்தினால் பார்ப்பதற்கு இமைகள் அடர்த்தியாகத் தெரியும். இதனால் கண்கள் பளிச்சென்று இருக்கும். வாட்டர் ப்ரூப் ஐலைனர் மற்றும் மஸ்காரா பயன்படுத்துவது நல்லது. 
  • சென்ஸிட்டிவ்வான கண்களை அதிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மேக்கப் போடும்போது கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்களைக் கசக்க கூடாது.
  • லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக லிப் லைனர் பென்சிலால் அழகிய லைன் வரைந்து கொண்டால் லிப்ஸ்டிக்கை அழகாக வரையலாம். இதனால் லிப்ஸ்டிக்வெளியே வராது.
  • லிப்  ஃபார்ம் பயன்படுத்துபவர்கள்  லிப் ஃபார்ம் போட்டதும் அதை டிஸ்யூ பேப்பரால் ஒத்தி எடுத்துவிட்டு லைனர் போட்டு பிறகு லிப்ஸ்டிக் போட  வேண்டும். இல்லை என்றால் லிப் ஸ்க்ரப் செய்துவிட்டு லிப்ஸ்டிக் போடலாம்.

pixabay

  • அலுவலகம் செல்வோர்,  லிப்ஸ்டிக் இன்றி வெளியில் போக விரும்பாதவர்கள் நியூட்ரலாக ஒரு லைட் ஷேடாகப் பயன்படுத்தலாம்.
  • கன்னங்களில் ப்ளஸரை முக அலங்கார தூரிகையினால் பூசவும். அதிகமாக அல்லாமல் லேசாக போட்டால் எடுப்பாக இருக்கும். அப்படி செய்வதால் முகத்திற்கு தகுந்தாற்போல் கன்னங்கள் எடுப்பாக இருக்கும்.

ஒப்பனைக்கு புதுசா? 8 ஒப்பனை அத்தியாவசியங்களுடன் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்தை அடையுங்கள்!

  • உடல் அசைவுகள் எளிதாக இருக்குமாறு உடுத்தவேண்டும். ஒரு புதிய உடை அலங்காரம் குறித்து உங்களுக்கு சின்ன அதிருப்தி ஏற்பட்டாலும் அதை அலுவலகத்திற்கு அணியவேண்டாம்.
  • உடைகளை அலுவலகத்திற்கு கிளம்பும் போது தேடாமல் முந்தைய நாளே எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இதனால் நேரம் மிச்சமாகும்.
  • தோலினாலான அல்லது ஏதேனும் உலோகத்தினாலான கைக்கடிகாரம் அணியலாம். இதுபோன்ற நேர்த்தியான அலங்காரத்தில்தான் பெண்கள் அதிகம் பிரகாசிப்பார்கள். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

10 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT