பிக் பாஸில் தனது முன்னாள் காதல் குறித்து உருக்கமாக பேசிய கவின் : மவுனத்தில் லாஸ்லியா!

பிக் பாஸில் தனது முன்னாள் காதல் குறித்து உருக்கமாக பேசிய கவின் : மவுனத்தில் லாஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. வெளியில் எவ்வளவு பிரச்சனைகளும் நடைபெற்றாலும் நிகழ்ச்சி தொடந்து நடைபெறுகிறது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் வெற்றி பெறப்போகும் மூன்று நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சி கட்டிக்கிடும் முன்னே பாடலுடன் தொடங்கியது. வழக்கம் போல போட்டியாளர்கள் ஆடலுடன் நாளை தொடங்கினர். 

இதனை தொடந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகள் கற்றுக்கொடுத்து அதனை போட்டியாளர்கள் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று போட்டியாளர்கள் கும்மியடித்தனர். சேரன் யானை போவதை பாருங்களேன், குதிரை போவதை பாருங்கேன் என்று பாடிக்கொண்டே கும்மியடித்தார். இவருக்கு இணையாக மற்ற போட்டியாளார்களும் பாடிக்கொண்டே நடனமாடினர். சாண்டி வழக்கம் போல அவரே பாடல் வரிகள் அமைத்து பாடினார். பின்னர் டாஸ்க் தொடங்கியது. அனைத்து போட்டியாளர்களும் பரம்பரிய உடையில், கிராம மொழிகளில் பேசி கொண்டிருந்தனர்.

மீண்டும் இரு கிராமங்களாக பிரிந்த பிக் பாஸ் வீடு : பாரம்பரிய கலைகளை கற்கும் போட்டியாளர்கள்!

twitter

இதனிடையே கடந்த வாரம் கமல், கவின் (kavin) மற்றும் லாஸ்லியாவை கண்டித்தார். எனினும் இருவரும் தொடந்து பேசி வருகின்றனர். சாக்க்ஷி இருந்த வரை கொஞ்சம் அடக்கி வாசித்து கொண்டிருந்த இவர்கள், அவர் வெளியே சென்றது முதல் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். தற்போது லாஸ்லியாவும், கவின் மீது அதிக ஈர்ப்பில் தான் இருந்து வருகிறார். கவின் (kavin) மற்றும் லாஸ்லியா இரவு நேரத்தில் தனியாக பேசுவதை சாண்டி கூட கண்டித்தார். மேலும் கடந்த வாரம் இருவரும் மைக்கை ஆஃப் செய்துவிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. 

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் வழக்கம் போல் கவின் – லாஸ்லியா உரையாடல் நடந்தது. அப்போது பேசிய கவின், கடந்த 3 வருடங்களுக்கு முன்னாடி நீயே எதிர்பார்த்திருக்கவே முடியாத ஒரு காம்ப்ளிகேடட் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் 3 வருடங்களில், கிட்டத்தட்ட 4 முதல் 5 மாதம் வரை தான் சந்தோசமாக ஒண்ணா இருந்த நேரம். இதைத் தவிர மற்ற நாட்களில் சண்டை, சச்சரவு தான். அதன் பிறகு எல்லாமே வேண்டாம் என்று அவர்கள் சென்றுவிட்டார்கள். இந்த நிகழ்ச்சி, இதற்கு முன்னாடி நடந்த எல்லாவற்றையும் வைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். நான் பிக்பாஸ் வரும் முன்பு என்னை அவர் ஒதுக்கிவிட்டார்.

twitter

பிக்பாஸ் போகிறேன் என சொன்னதற்கு அப்படியே போய்விடு, எதுவுமே இல்லை என கூறிவிட்டார். என் நம்பரையும் பிளாக்  செய்துவிட்டார். அப்படி தான் நான் உள்ளே வந்தேன். விஷயம் இதுதான், அதன் பிறகு நீயே யோசிச்சுக்கோ என்று கூறினார். இதில் அதிர்ச்சியடைந்த லாஸ்லியா பதில் எதுவும் பேசவில்லை, மவுனமாக இருந்தார். பின்னர் நீங்க ஓக்கவா இருந்தால், அதுவும் ஓகே. மீதியை வெளியில் போய் பேசிக்கலாம் என்கிறார் லாஸ்லியா. எனக்கு இனிமேல் உள்ளே, வெளியே எதுவும் இல்லை. உனக்கு புரிய வைக்க வேண்டும் என்பது தான், அதனால் தான் இதனை உன்னிடம் கூறினேன் என கவின் (kavin) கூறினார். 

ஆனால் அவர் அந்த பெண் யார் என்பதை குறிப்பிடவில்லை. பின்னர் லாஸ்லியாவை, சாண்டி கலாய்த்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட கவின் லாஸ்லியாவை கலாய்க்காதே என கூற லாஸ்லியா மகிழ்ச்சியாக இருந்தார். இதனை கேட்ட "சாண்டி  வானம் தொட்டு போன" பாடலை பாடியவாறு சென்றார். பின்னர் தெருக்கூத்து குறித்து போட்டியாளர்களுக்கு விவரிக்கப்பட்டது. உடல் மொழி வளர்வதற்கான முக்கிய கலை தெருக்கூத்து என கூறப்பட்டது. தெருக்கூத்து கலை தற்போது நலிவுற்று வருவது குறித்து விவரிக்கப்பட்டு, பின்னர் போட்டியாளர்களுக்கு கற்றுக்கொண்டுத்தனர்.

பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானாம்..

twitter

அப்போது மொழி தெரியாமல் ஷெரின் குழம்பினார். எனினும் அவர் பேசியது ரசிக்கும் படியாகவே இருந்தது. பின்னர் அதனை போட்டியாளர்கள் செய்யுமாறு கூறப்பட்டது. அதற்காக அவர்களுக்கு தெருக்கூத்து உடைகள் வழங்கப்பட்டது. சேரன், சாண்டி, முகென், தர்ஷன், ஷெரீன், லாஸ்லியா, கவின் அகிய ஒவ்வொருவருக்கும் ஒரு வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.சேரன், முகெனுக்கு கோமாளி வேடம், சாண்டி, ஷெரினுக்கு ராணி வேடம், தர்ஷனுக்கு ராஜா வேடம், கவினுக்கு மந்திரி வேடம் கொடுத்தனர். இதில் வனிதாவுக்கு எமதர்மராஜா, லாஸ்லியாவிற்கு சித்திரகுப்தன் வேடம் கொடுக்கப்பட்டது.  பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தாங்கள் செய்யவுள்ள டாஸ்கின் கரு குறித்து பேசினர். 

பிக் பாஸ் மீம்ஸ் : சண்டைகளையும் குழப்பங்களையும் வீழ்த்தி நின்ற சில நகைச்சுவையான மீம்ஸ்!

பின்னர் போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து அவரவருக்கான உடைகளை அணிந்து தெருக்கூத்து செய்தனர். வனிதா, லாஸ்லியா, முகென் மற்றும் சாண்டி ஒரு குழுவினர். சேரன், கவின், ஷெரின் மற்றும் தர்ஷன் மற்றொரு குழுவினர். சாண்டி பெண் வேடத்தில் மிகவும் காமெடியாக இருந்தார். போட்டியாளர்கள் சாலை விபத்து குறித்து தெருக்கூத்து நடத்தினர். மேலும் நீர் நிலைகளை பாதுகாக்காததால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாகும் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாரம்பரிய கலைகள் குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்படுவதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், இன்றைய கிராமத்து டாஸ்க்கில் வில்லுப்பாட்டு ஒன்றை சாண்டி பாடி கவினின் காதலை பங்கமாக கலாய்க்கின்றார். சாண்டியின் பாடலுக்கு ஆமாம், ஆமாம் என்று முகென், வனிதா, லாஸ்லியா கோரஸ் போடுகின்றனர். கவின் காதல் மன்னன் என சாண்டி தனது பாட்டில் கலாய்க்கிறார்.

இரண்டாவது புரோமோவில் அவர் கவின் பெண்களுக்காக சேப்டி பின்னை அனுப்புமாறு பிக் பாஸிடன் கேட்கிறார். அது லாஸ்லியாவிற்காக தான் என்று புரிந்து கொண்ட மற்ற போட்டியாளர்கள் அவரை கலாய்கின்றனர். பின்னர் லாஸ்லியா உள்ளே அமர்ந்திருக்க அவருக்கு கவின் காபி கொண்டு செல்கிறார்.

மூன்றாவது புரோமோவில், சாண்டி வில்லுப்பாட்டு படிக்கிறார். இந்த முறை தர்ஷன் குறித்து பாடுகிறார். தர்ஷனை ஒரு பெண் காதலிப்பதாக ஷேரினை குறிப்பிட்டு பாட, மைதா மாவு என கலைக்கிறார். இன்றைய நிகழ்ச்சி கலகலப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.