பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானாம்..

பிக் பாஸில் இருந்து விலகும் கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானாம்..

இந்தியில் முதல் முதலில் ஆரம்பித்த பிக் பாஸ் (biggboss)அதன் பின்னர் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழிலும் ஆரம்பிக்கப்பட்டது. இது தவிர தென்னிந்தியா மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் என எல்லா இடங்களிலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை மூன்று சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். கமலுக்கே உரித்தான லாவகமான தமிழ் பேச்சும், ஜாடையாக சாடுதலும், நாட்டு நிலைமைகளை நடுநிலையாக சுட்டுரைத்தலும் இந்த நிகழ்வின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை பார்வையாளர் இடையே விதைத்திருந்தன.

கமல்ஹாசன் வருகின்ற சனி ஞாயிறுக்காகத்தான் போட்டியாளர்கள் காத்திருப்பார்கள். சனிக்கிழமை கமல்ஹாசன் பஞ்சாயத்து என்று ஒன்று இல்லாமல் இருந்தால் நிச்சயம் வீட்டின் நிலைமை படு மோசமாக போயிருக்கும். தவறுகளை தட்டி கேட்க யாரும் இல்லை என்கிற பட்சத்தில் வனிதாக்கள், கவின்கள் கொடி மட்டுமே அங்கே பறந்து கொண்டிருக்கும்.

லாஸ்லியாவிற்கு இதைவிட சிறந்த தண்டனை வேறு என்ன இருக்க முடியும்? 

 

twitter

போட்டியாளர்கள் மட்டும் அல்லாமல் பார்வையாளர்களும் கமல்ஹாசனின் நடுநிலை தீர்ப்புகளுக்காக காத்திருப்பார்கள். அந்த வாரம் முழுதும் நடந்த நிகழ்வுகளை எப்படி கமல்ஹாசன் கையாள்கிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் பார்வையாளர்கள் அதனை தங்கள் வாழ்க்கையிலும் பயன்படுத்த விழைகின்றனர்

ஏனெனில் இது வெறும் கேம் ஷோ அல்ல.. மனோதத்துவ சிக்கல்களை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சியாகவே பெரும்பாலோனரால் பார்க்கப்படுகிறது. இதற்கு மக்களின் பேராதரவு கிடைக்க இதுவும் ஒரு காரணம். மனிதர்களின் உளவியல்களை இந்த பிக் பாஸ் மூலம் ஒரு சாம்பிள் போல படித்துக் கொள்ள முடிகிறது.

தொடர்ந்து  மக்களின் அறிவுக்கண்களை திறந்து வைக்க கமல் தன்னால் இயன்றவரை பாடுபட்டுக் கொண்டே இருக்கிறார். தனது திரைப்படங்களிலும் தனது புத்தகங்களிலும், கவிதைகளிலும், பாடல்களிலும் தொடர்ந்து அதனை செய்து வந்த கமல்ஹாசன் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் அதனை அழுத்தமாகவே செய்கிறார். அதிக டோஸ் ஆகாமல் அளவாக தனது மருத்துவ அறுவை சிகிச்சைகளை மக்கள் மனதில் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.

விஹான் இனி தனி ஆள் இல்லை ! ஸ்னேஹாவிற்கும் ப்ரசன்னாவிற்கும் பிறக்க போகுது அடுத்த குழந்தை!

twitter

இத்தனை சுவாரஸ்யமாக பிக் பாஸ் நிகழ்வை நடத்திக் கமல்ஹாசன் அடுத்த சீசனில் தொடர்வது கேள்விக்குறிதான் என்கிறது ஒரு தகவல். இப்போது ஒளிபரப்பாகும் சீசனை முடித்துக் கொடுத்த பின்னர் திரைப்பட வேலைகளிலும் அரசியல் வேலைகளிலும் அவர் அதிக கவனம் செலுத்தப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆகவே இந்த மூன்றாவது சீசன் தான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இறுதி சீசன் என்று கூறப்படுகிறது. நான்காவது சீசனை வேறு ஒரு பிரபல நடிகர் தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. நடிகர் சிம்பு இதனை தொகுத்து வழங்குவார் என கிசுகிசுக்கப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி இப்போது சொல்ல முடியாது.

நடிகர் சிம்புவுக்கும் விஜய் டிவிக்கும் மிக நீண்ட கால பழக்கங்கள் இருக்கிறது.விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்ததும், பல நிகழ்ச்சிகளுக்கு விருந்தினராக செல்வதும் சிம்புவின் வழக்கம். ஆகவே இந்த செய்தி உண்மையாவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்பர் எதிர்பார்க்கப்படுகிறது.

 இதனால்தான் விஷால் - அனிஷா திருமணம் நிச்சயதார்த்ததுடன் முறிந்தது - வைரலாகும் செய்தி !

Twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.