வனிதாவின் சண்டையால் கடுப்பாகி கண்கலங்கிய லாஸ்லியா : சமாதானப்படுத்திய கவின்!

வனிதாவின் சண்டையால் கடுப்பாகி கண்கலங்கிய லாஸ்லியா : சமாதானப்படுத்திய கவின்!

பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆவர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் கடந்த வாரம் பாத்திமா பாபு வெளியேறினார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் கலகலப்பூட்டும் பல்வேறு கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் டாஸ்கில் வனிதா மற்றும் முகென் ஆகியோர் கொலையாளிகளாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு கொடுத்த டாஸ்கின் படி சாக்ஷி, மோகன், ஷெரின் ஆகியோரை கொலை செய்தனர்.

youtube

தொடர்ந்து கொலைகள் நடைபெறாமல் இருக்க கவின் மற்றும் மீரா ஆகியோர் காவல்துறையினராக நியமிக்கப்பட்டனர். கொலைகளை அரங்கேற்றுபவர்களை கண்டறிவதற்காக சாண்டி பூசாரியாக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கவின் மற்றும் மீரா கொலை குறித்த விசாரணையில் ஈடுபட தொடங்கினர். யார் மீது சந்தேகம் உள்ளது என ஹவுஸ்மேட்ஸிடம் விசாரணை நடத்தினர். அதில் மதுமீதா மற்றும் லாஸ்லியா மீது என வனிதா உள்ளிட்டோர் சொல்லினர். இதனால் அவர்களிடம் இருவரும் விசாரணை நடத்தினர். 

மேலும் படிக்க - மினுமினுக்கும் முகப்பொலிவிற்கு எது அவசியம்? டோனரா சீரமா ஆம்பியூலா!அறிந்து பயன்படுத்துங்கள்

அதனை சாக்காக வைத்து கவின் ஒரு புறம் லாஸ்லியாவிடம் கடலை போட்டு கொண்டிருந்தார். பின்னர் கவினை கொலை செய்யுமாறு வனிதாவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. கவினின் துப்பாக்கியை அவர் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் மறைத்து வைத்தால் அவரை கொன்றதாக அர்த்தம் என்று கூறப்பட்டது. முகெனுடன் இணைத்து துப்பாக்கியை மறைத்து வைத்து கவினை வெற்றிக்கரமாக கொலை செய்தார் வனிதா. பின்னர் கவினை மயானத்திற்கு அனுப்பி வைக்கும் சடங்கு நடந்தது. இத்துடன் ‘கொடூரக் கொலை’ டாஸ்க் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

youtube

அனைவரையும் ஒரே இடத்தில் அமர வைத்து, கொலையாளிகள் வனிதா மற்றும் முகின் ராவ் தான் என்பதை அறிவித்தார் பிக் பாஸ் (biggboss). இதனை கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சிடைந்தனர். சிறப்பாக டாஸ்க் செய்தவர்களாக வானிதா, மோகன் வைத்யா, மற்றும் சாக்‌ஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் இவர்கள் மூவரும் அடுத்தவார தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்க்கில் கலந்துக் கொள்ளாதவர்கள் குறித்த கேள்விக்கு, சேரன் மற்றும் சரவணனின் பெயரை சொன்னார் அபிராமி. 

இதனால் டென்ஷனான சரவணன் தானும் விளையாடியதாக தெரிவித்து, சாண்டி, தர்ஷன், கவின் உள்ளிட்டவர்களிடம் தன்னை எப்படி அபிராமி அவ்வாறு சொல்லலாம் என சாடினார். சேரனும் தான் கலந்துக் கொண்டதாகக் கூறினார். இருப்பினும் வீட்டின் தலைவி சொல்லி விட்ட காரணத்தினால் கைதி உடையை அணிந்துக் கொண்டு சிறைக்கு செல்ல தயாரானார் சேரன். அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில், தன்னால் டாஸ்க்கில் சரிவர பங்கெடுக்க முடியவில்லை என லாஸ்லியா தன் தரப்பு நியாத்தை சொல்ல முற்பட, அதற்கு இடம் தராமல் வனிதா தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். 

youtube

இதனால் கோபமான லாஸ்லியா அந்த இடத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவரை கவின் சமாதானம் செய்தார். கவினிடம் இனிமேல் நீ என்னிடம் பேசாதே என்று லாஸ்லியா கூறினார். பின்னர் சேரன், சரவணன் ஈடுபட்ட அளவு கூட கவின் இந்த டாஸ்க்கில் ஈடுபடவில்லை என்ற கருத்தை முன் வைத்தார் வனிதா. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இதனை ஆமோதிக்கவும் செய்தனர். இதனால் கவினும் கைதி உடையை அணிந்துக் கொண்டு சிறைக்கு செல்ல தயாரானார். எனவே சரவணன், சேரன், கவின் ஆகிய 3 பேரில் முதலில் சிறைக்கு செல்வது யார்  என்பது இன்று தெரியும்.

மேலும் படிக்க - பிக் பாஸ் வீட்டில் கொலைகாரியான வனிதா : ஆவியாக உலா வரும் சாக்ஷி, மோகன் வைத்யா!

பிக் பாஸ் நிகழ்ச்சி (biggboss) ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. இந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள ப்ரோமோவில், நேற்று நடைபெற்ற டாஸ்க் முடிவில் சிறந்த போட்டியாளராக வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் ஹவுஸ் மேட்ஸ் அனைவராலும் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.  ஆனால் வனிதா வந்தது பிடிக்காமல் யாரோ சொல்ல அவருக்கு கோவம் வந்து சண்டை போடுவது போல் காட்டப்பட்டுள்ளது.

அப்போது அதில் நடுவில் வந்த தர்ஷன், அவுட் ஆன பிறகு கேம்மை மற்ற முடியாது என்று கூற, உடனே வனிதா இதில் நீ சம்மந்தமே இல்ல, நடுவுல வராத என்று கூறுகிறார். சும்மாவே டென்ஷன் ஆகி கத்தும் வனிதா, இதை சும்மாவா விடுவாங்களா? உடனே தனது மைக்கை கழட்டித் தூக்கி எரிந்து விட்டு, பிக் பாஸ் கூட பேசவேண்டும் என்று கூறுகிறார். மேலும் அவன் செய்தது சரியா என்று அவரே சொல்லட்டும், அல்லது இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார். இதனால் இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னவெல்லாம் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது. 

மேலும் படிக்க - விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை ! சமீரா ரெட்டியின் அப்பழுக்கற்ற அழகு ! வைரல் வீடியோ !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.