பிக் பாஸ் வீட்டில் கொலைகாரியான வனிதா : ஆவியாக உலா வரும் சாக்ஷி, மோகன் வைத்யா!

பிக் பாஸ் வீட்டில் கொலைகாரியான வனிதா : ஆவியாக உலா வரும் சாக்ஷி, மோகன் வைத்யா!

பிக் பாஸ் (biggboss) நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 பிரபலங்களில் ஃபாத்திமா பாபு நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். எஞ்சியுள்ள 15 போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் நேற்று டாஸ்க் கொடுத்துள்ளார். அந்த டாஸ்க்கில், பிக் பாஸ் வீட்டில் இரண்டு கொலையாளிகள் நுழைந்திருப்பதாகவும் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே போட்டியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

youtube

பிக் பாஸ் (biggboss) வீட்டின் கொலையாளிகளாக வனிதா, முகென் என அறிவித்தனர். குறிப்பாக இந்த டாஸ்க் வனிதாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வனிதாவின் கூட்டாளியாக முகென் சேர்க்கப்பட்டார். டாஸ்க்கை வெற்றிகரமாக முடிக்க வனிதாவுக்கு செல்போன் ஒன்றையும் கொடுத்தார் பிக்பாஸ். டாஸ்க்கின் முதல் நாளான நேற்று சாக்ஷியின் மேக்கப்பை கலைத்தால் அவர் கொல்லப்பட்டதாக அர்த்தம் என கூறும் பிக்பாஸ், சாக்ஷியை கொலை செய்ய உத்தரவிடுகிறார். அதன்படி ஹாலோவின் மேக்கப் போடலாம் என சாக்ஷியை அவரது கையாலேயே சாமர்த்தியமாக மேக்கப்பை அழிக்க வைத்தார்  வனிதா.

மேலும் படிக்க - வெளியானது லாஸ்லியாவின் திருமண ரகசியம்.. அதிர்ந்த ரசிகர்கள்.. வைரலான புகைப்படம்!Bigg boss

இதனை தொடர்ந்து, ஹவுஸ் மேட்ஸிடம் பேசிய பிக்பாஸ், சாக்ஷி இறந்துவிட்டதாகவும் அவரை சகல மரியாதையுடன் மயானத்தில் கொண்டு வைக்குமாறும் கூறினார். எனவே பேய் டிரெஸில் சாக்ஷி மயானத்தில் கொண்டு போய் விடப்படுகிறார். அதன் பின்னர் பிக் பாஸ் அடுத்த கொலைக்கு உத்தரவிடுகிறார். இதைத்தொடர்ந்து அடுத்த கொலையாக மோகன் வைத்யாவை கொலை செய்ய வேண்டும் என  உத்தரவிடுகிறார் பிக் பாஸ். மோகன் வைத்யாவை மைக்கெல் ஜாக்சன் டான்ஸ் ஆட வைப்பதன் மூலம் அவரை கொலை செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்.

youtube

அதன்படி டான்ஸ் ஆட வைத்து மோகன் வைத்யா கொல்லப்பட்டார். இதையடுத்து மயானத்தில் சாக்ஷிக்கு கம்பெனியாக மோகன் வைத்யா உள்ளார். முதல் நாள் டாஸ்கில் பிக் பாஸ் (biggboss) வீட்டில் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில் நேற்று தற்காலிகமாக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2வது நாளான இன்று யார் கொலை செய்யப்படுவார்கள் என்பது இன்று இரவு தெரியவரும். வனிதாவை காப்பாற்ற இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்ட்டில் வனிதாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படி ஒரு டாஸ்க்கை வனிதாவுக்கு கொடுத்து, டாஸ்க்கை சரியாக செய்து முடிக்கும் நிலையில் வனிதா எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க - முதன் முதலாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஃபாத்திமா பாபு : கண்கலங்கிய தர்ஷன்!

youtube

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள ப்ரோமோவில், மீரா மிதுன் தேவையில்லாமல் பேசி சேரனிடம் திட்டு வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மீரா மிதுன் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுப்பதாக ஏற்கனவே புகார் எழுந்தது. அதற்கு அவரோ நான் வேலை செய்கிறேன் என்பதற்கு இந்த வீட்டில் உள்ள கேமராக்கள் தான் சாட்சி என்றார். இந்நிலையில் மீண்டும் வேலை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நான் வேலை செய்யாமல் எஸ்கேப் ஆகிறதையே வேலையாக வைத்துக் கொள்கிறேன் என்று ஒரு வார்த்தை விட்டீங்க என்று மீரா, சேரனிடம் கூறுகிறார்.

அதற்கு சேரன் மன்னிச்சுக்கோ மா என்றார். இதையடுத்து மீரா மறுபடியும் ஆரம்பிக்க சேரன் கோபம் அடைந்து நானா பிரச்சனையை துவங்கினேன், உன்னிடம் வந்து சொல்லிவிட்டு போனேன், பிரச்சனையை துவங்கியது யார், அடுத்தவங்களிடம் பேசுனது யார் என்று கத்தினார். இதையடுத்து மீரா அங்கிருந்து வெளியே செல்வது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. சேரன் கோபப்பட்டு திட்டியதில் தவறு இல்லை. இந்த மீரா மிதுன் வேலை செய்யாமல் இருந்து கொண்டு சும்மா சீன் கிரியேட் பண்ணுகிறார். அவருக்கு எல்லாம் இப்படித் தான் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள்!. 

     மேலும் படிக்க - உடலில் கணவர் பெயர் : முதன்முறையாக மறைத்து வைத்திருந்த டாட்டூவை வெளிகாட்டிய சமந்தா!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.