சமீரா ரெட்டி தான் இப்போதைய இணையத்தின் டாக் ஆப் தி டவுன் ஆக இருக்கிறார். காரணம் தனது தைரியம் என்பதுதான் அவர் வைக்கும் கருத்தாக இருக்கிறது.
சமீரா ரெட்டி (sameera reddy) தமிழில் மற்றும் தெலுங்கில் சில படங்கள் நடித்து விட்டு பாலிவுட் சென்றார். அதன் பின்னர் திருமணம் செய்து செட்டிலாகி விட்ட சமீராவிற்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் மீண்டும் கருத்தரித்திருக்கிறார்.
குடிபோதை.. அரைகுறை ஆடை..நண்பருடன் லிப் லாக்.. வைரலாகும் யாஷிகாவின் லைவ் வீடியோ
தனது முதல் கர்ப்ப கால நேரங்களால் கலங்கிய சமீரா இம்முறை இது பற்றிய விழிப்புணர்வை மற்றவருக்கு விதைக்க நினைத்தார் போலும். அவர் கர்ப்பமாக (pregnant) இருப்பது முதலே பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். எமி ஜாக்ஸனும் அவரது பங்குக்கு கர்ப்ப காலத்தை நேர்மறையாக எதிர்கொள்ளக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
ஆனாலும் சமீரா ரெட்டியின் (sameera reddy) புகைப்படங்கள் இணையத்தில் பேசப்படுகின்றன. காரணம் அவர் கர்ப்பம் காரணமாக மாறிப் போயிருக்கும் உடல் வாகு முக வடிவம் போன்ற எதையும் பற்றிக் கவலைப்படாமல் இது வாழ்வின் முக்கிய கட்டம் என்பதை பெண்களுக்குப் புரிய வைக்க முனைகிறார்.
ஒரு பிரபலமான பெண்ணாக தனக்கு ஏற்பட்ட முதல் கர்ப்ப காலத்தை மீடியாக்கள் பத்திரிகைகள் போன்றவை தனது உடல் பருமனை கிண்டல் செய்ததை மறக்காத சமீரா இரண்டாம் முறை அதனையே திரும்ப திரும்ப படம் எடுத்து வெளியிட்டு தான் இப்படித்தான் என்பதை பறைசாற்றுகிறார்.
அவர் சமீபத்தில் எடுத்த நீருக்கடியில் நீந்திய வண்ணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக நிலையில் தற்போது இன்னுமொரு விடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் கேப்ஷனாக "imperfectly perfect " என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எந்த ஒரு மேக்கப் இல்லாமல் வீங்கிய வயிறுடன் உப்பிய கன்னங்களுடன் இருந்தாலும் சமீரா பரிசுத்தமான அழகியாகவே காட்சியளிக்கிறார். அந்த பூரிப்பிற்கு காரணம் அவரது தாய்மைதான் என்கிறார். அவரின் இந்த வீடியோ பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக இருப்பதால் வைரலாகி இருக்கிறது.
உடல் வடிவம் எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதும் அதனை நேர்மறையாக்கி தன்னம்பிக்கையுடன் மிளிர்வதும் அவசியம் என்பதை பெண்களுக்கு உணர்த்தி இருக்கிறார் சமீரா. இந்த வீடியோ அவரது அப்பழுக்கற்ற உள் அழகையும் மேக்கப் இல்லாத போதும் தெரியும் குழந்தை முகத்தையும் நமக்கு ஒரு சேரக் காட்சிப்படுத்துகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.