logo
ADVERTISEMENT
home / அழகு
கேரட்டை பயன்படுத்தி பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!

கேரட்டை பயன்படுத்தி பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!

நமது அன்றாட வாழ்க்கையில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளவதால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. சில வகை பழங்கள் நமது சருமத்தை பொழிவாக்கவும் உதவுகிறது. நமது உடலின் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்க முதலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் உணவு உண்ட பின்னர் ஒரு கேரட்டை (carrot)சாப்பிட வேண்டும். இதனால் உடலின் செரிமான சக்தி அதிகரிப்பதோடு, உமிழ்நீர் சுரப்பும் அதிகரிப்பதால் உடலில் இருக்கும் கிருமிகள் அழித்து விடுகிறது.

தேவையான கேரட்டை எடுத்து அதனை வேகவைத்து பின்னர் மசித்து முகத்திற்கு தடவ வேண்டும். காய்ந்த பிறகு முகத்தில் இருந்து உரித்து எடுத்த பிறகு வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஒரு காட்டன் துணியில் நீரை தொட்டு சிறிது நேரம் ஒத்தடம் கொடுத்தால் முகத்தில் உள்ள தூசு மட்டும் இறந்த செல்கள் போய்விடும். வாரம் இரண்டு நாட்களுக்கு இப்படி செய்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறுவதை காணலாம்.

 

ADVERTISEMENT

gifskey, pexels, pixabay, Youtube

கோடை கால பராமரிப்பு : இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உடல் சூட்டை தணிக்கலாம்!

* கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து அரைக்க வேண்டும். நன்கு நைசாகவும், கெட்டியாகவும் அரைத்து எடுத்து கொண்டு அந்த கலவையை எடுத்து முகத்தில் மஜாஜ் செய்ய வேண்டும். முகம் மற்றும் கழுத்து பகுதியில் மஜாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சர்க்கரை சேர்ப்பதால் முகம் ஸ்கிரேப் செய்யப்படும். மேலும் கேரட்டில் உள்ள பொட்டாசியம், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி பளபளப்பான சருமமாக வைத்து கொள்ள உதவும்.

* கேரட் எண்ணெய் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதனை வாங்கி தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து முகத்தில் தேய்த்து மஜாஜ் செய்ய வேண்டும். சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி வர சருமம் பொலிவாகும்.

ADVERTISEMENT

* தினசரி கேரட் ஜூஸ் சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்படும். கோடை காலத்தில் முகத்தில் ஏற்படும் கருமை மற்றும் முக சுருக்கங்கள் ஏற்படுவதை கேரட் ஜூஸ் தடுக்கும்.

* உலர்ந்த சருமம் உடையவர்கள் கேரட்டை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் பூசி காய்ந்தபிறகு கழுவி வந்தால் சருமம் புத்துணர்ச்சியடையும்.

* கேரட்டில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் கேரட்டை முகத்தில் பூசும் போது சருமத்தின் ஆழம் வரை சென்று வறட்சியை தடுக்கிறது. பாதி கேரட்டை எடுத்து கொண்டு அதனுடன் பால் மற்றும் தேன் கலந்து  முகத்தில் தடவி, காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது முகத்திற்கு சிறந்த மாய்சுரைசராக செயல்பட்டு முகத்தை பிரகாசிக்க செய்யும்.

 

ADVERTISEMENT

 

gifskey, pexels, pixabay, Youtube

மாசு மரு அற்ற மினுமினுப்பான முகத்திற்கு மாம்பழ பேஷியல் ! Detan மேஜிக் !

ADVERTISEMENT

* சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை குறைத்து நச்சுக்களை வெளியேற்றும் சக்தி கேரட்டிற்கு உள்ளது. ஒரு கப் கேரட் சாறுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சம் தயிர் கலந்து முகத்தில் பூசி வர எண்ணெய் பசையுள்ள சருமத்தினருக்கு நல்ல தேர்வு கிடைக்கும்.

* கேரட் (carrot )முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி பளீச் சருமத்தை கொடுக்கும். கேரட் ஜூஸ், யோகர்ட், முட்டையின் வெள்ளை கரு ஆகிவற்றை சம அளவில் எடுத்து கொண்டு முகத்தில் பூசி வர வேண்டும்.

* கேரட்டில் பீட்டா கெரட்டின் மாற்று கெரோட்டினாய்டு இருப்பதால் சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய கதிர்களால் ஏற்படும் கருமை வராமல் தடுக்க கேரட் சாறு மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவில் கலந்து பயன்படுத்த வேண்டும். இந்த கலவை சருமத்தில் ஈரப்பதம் இருக்க உதவுகிறது. 

கை நெகங்களை பாதுகாப்பது எப்படி

ADVERTISEMENT

* கேரட்டில் ஆண்டிஆக்ஸிடென்ட் அதிகம் இருப்பதால் அனைத்து சரும பதிப்பிற்கும் உதவுகிறது. எனவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவதால் சருமம் பொழிவு பெறுவதை இரண்டு வாரங்களில் கண்கூட காணலாம். இந்த டிப்ஸ்களை தினமும் செய்து வந்தால் கண்டிப்பாக பளபளப்பான சருமம் கிடைக்கும்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

ADVERTISEMENT
13 Jun 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT