கோடை கால பராமரிப்பு : இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உடல் சூட்டை தணிக்கலாம்!

கோடை கால பராமரிப்பு : இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உடல் சூட்டை தணிக்கலாம்!

கோடை காலங்களில் (summer season) வியர்வை வழியாக கிருமிகள் அதிகமாக பரவுகிறது. இதனால் அதிகமான தொற்று வியாதிகள் ஏற்படுகிறது. குறிப்பாக உடல் சூட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சூடு அதிகமாகிறது. உடல் சூட்டிற்கு எவ்வித மருந்து, மாத்திரைகளும் தீர்வாகாது. இயற்கையில் கிடைக்கும் இளநீர், பாதாம் பிசின், கற்றாழை உள்ளிட்டவை உடல் சூட்டை (body heat) குறைக்கும் சக்தி வாய்ந்தவைகள்.


இளநீர் (Coconut water)
இளநீர் கோடை காலத்தில் பருகக்கூடிய முக்கிய பானமாக உள்ளது. இளநீர் அருந்துவதால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் சூடு(body heat) தணிகிறது. இளநீரில் சோடியம், கால்சியம் உள்ளிட்ட தாது பொருட்கள் அதிகமாக உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதனை சீறுநீரக பிரச்னை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது. இளநீர் குறைந்த விலையில் அனைத்து பருவ காலங்களிலும் அருந்தக்கூடியது.


1
முகத்தின் அழகை கெடுக்கும் கரும்புள்ளிகளை மறைய செய்வது எப்படி?
பாதாம் பிசின் (padam pisin)
பாதாம் பிசின் பெரும்பாலானோருக்கு தெரியாத மருத்துவ பொருளாக உள்ளது. பாதாம் மரத்தில் இருந்து எடுக்கப்படும் இந்த பிசின் உடல் குளிர்ச்சிக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.பாதாம் பிசினை இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் பயன்படுத்த வேண்டும். சிறிதளவு ஊற வைத்தாலே அதிகமாகிவிடும் என்பதால் குறைந்த அளவில் ஊற வைத்தாலே போதுமானது. ஊற வைத்த நீரை பருகிவிட்டு, அந்த பிசினை சர்பத் அல்லது ரோஸ் மில்க் ஆகியவற்றில் கலந்து அருந்தலாம்.


வெந்தயம் (Fenugreek)
அதிகாலையில் எழுதவுடன் ஒரு ஸ்பூன் வெந்தையத்தை வாயில் போட்டு தண்ணீர் அருந்த வேண்டும். இப்படி தினமும் செய்து வைத்தால் உடல் வெப்பம் குறைவதை கண்கூட காணலாம். அல்லது வெந்தயத்தை ஊற வைத்து குளிக்கும் முன்னர் தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்கலாம். உடலை குளிர்ச்சியடைய செய்வதில் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது.


கற்றாழை ஜூஸ் (Aloe vera juice)
கற்றாழை உடலை குளிர்ச்சியடைய செய்யும். காற்றாழையின் தோலை நீக்கிய பின்னர் அதன் சோற்று பகுதியை எடுத்து கழுவி விட்டு ஜூஸ் செய்து சாப்பிடலாம். கசப்பு பிடிக்காதவர்கள் அதனுடன் தேன் சேர்த்து பருகலாம். கற்றாழையை இரண்டாக வெட்டி விட்டு அதற்குள் வெந்தயத்தை வைத்து விட வேண்டும். இரண்டு நாட்களுக்கு பிறகு பார்த்தால் வெந்தயம் முளைத்து இருக்கும். அதனை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தில் (body heat) இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்
வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்வதற்கான சூப்பர் டிப்ஸ்!


பழங்கள் (fruits)
நீர் சத்து நிறைந்த பழங்கள் கோடை காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக தர்பூசணி, வெள்ளரிக்காய், கிர்ணி, திராட்சை உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவதால் உடல் சூடு கட்டுப்படுத்தப்படும். இவற்றை ஜூஸ் அல்லது சாலட் செய்து சாப்பிடலாம். எலுமிச்சை பழச்சாறை அடிக்கடி பருக வேண்டும். கடைகளில் விற்கப்படும் புட்டிகளில் அடைத்த பானங்களை (cold drinks) அருந்தாமல் வீட்டிலே பழச்சாறு செய்து அருந்துவதே ஆரோக்கியமானதாகும்.


காய்கள் (vegitables)
பரங்கிக்காய், வெள்ளரிக்காய், நெல்லிக்காய் உள்ளிட்ட காய்கள் உடல் வேப்பத்தை தணிக்க வல்லது. வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடையில் அனைத்து வயதினரும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம். பரங்கிக்காயில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து அதிகமாக இருப்பதால் உடலை குளிர்ச்சியடைய செய்வது மட்டுமின்றி சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். 


2


அழகான கால்கள் மட்டும் பாதங்களை பெற என்ன செய்ய வேண்டும்!


சந்தனம் (sandal)
சந்தனம் இயற்கையிலே குளிர்ச்சியான பொருளாகும். சந்தனத்தை எடுத்து பால் அல்லது தண்ணீரில் குழைத்து நெற்றியில் தடவி வந்தால் உடல் குளிர்ச்சியடையும். சிலருக்கு வெயிலால் முகத்தில் பருக்கள் ஏற்படும். இது உடல் சூட்டின்(body heat) அறிகுறியே என்பதால் தொடர்ந்து முகத்தில் சந்தனம் பூசி வர பருக்கள் மற்றும் வடுக்கள் மறந்து விடும்.


தண்ணீர் (water)
வெயில் காலத்தில் மற்ற நாட்களில் பருகும் நீரை விட அதிகம் பருக வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் குறிப்பாக அதிகமான நீரை அருந்த வேண்டும். மேலும் ஏசியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் உடலில் இருந்து வியர்வை வெளியேறாததால் தாகம் ஏற்படாது. எனவே குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துவதை கருத்தில் கொள்ள வேண்டும். மதிய உணவில் மோரை சேர்ந்து கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றினால் உடல் சூட்டில் (body heat) இருந்து விரைவில் நலம் பெறலாம்.


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo