பிக் பாஸை இயக்கும் பெண் பாஸ் ! யாரும் அறிந்திராத பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறுபக்கம் !

பிக் பாஸை இயக்கும் பெண் பாஸ் ! யாரும் அறிந்திராத பிக் பாஸ் நிகழ்ச்சியின் மறுபக்கம் !

தமிழகத்தை தண்ணீர் பிரச்னைகளை தாண்டி ஆட்கொண்டிருப்பது விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் என்பதுதான்.                        

பார்வையாளர்களின் கண்களில் தென்படும் நடிகர் நடிகைகளை தாண்டி பிக் பாஸின் 60 காமெராக்களின் பின் இருக்கும் ஒரு பெண் மற்றும் அவரின் இயக்கம் பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம்.

மதுமிதா .. இவர்தான் பிக் பாஸ் (Biggboss)  நிகழ்ச்சியின் இயக்குனர். இந்த பெயரை நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பீர்கள். வல்லமை தாராயோ எனும் தமிழ்படத்தை இயக்கியவர். முதல் படத்திலேயே தமிழ்நாட்டின் மாநில விருதை தட்டி சென்றவர். 

ஆல்யா மானஸா வா இது ! அடையாளமே தெரியலை! ஆல்யாவின் அபூர்வ புகைப்படம் !

                                             

pixabay, pexels, youtube

தனியே வாழ விரும்பும் ஒரு பெண்ணின் அக உணர்வுகளை வல்லமை தாராயோ வில் அழுத்தமாக சொன்னவர். அதன் பின்னர் கொலகொலயா முந்திரிகா எனும் வேறொரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்து இயக்கினார். மூன்றாவது படமாக மூணே மூணு வார்த்தை திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநேரத்தில் இயக்கினார்.

அதனை விடவும் ஆச்சர்யமான விஷயம் இவர் சினிமாவிற்கு வந்த பின்புலக்கதை. இந்தியாவில் பிறந்த மதுமிதா இந்தோனேசியாவில் வளர்ந்தார். அதன் பின்னர் சிங்கப்பூர் சென்றவர் மாணவியாக இருக்கும்போதே பல குறும்படங்களை இயக்கினார்.

அதில் ஒரு குறும்படம் பிபிசி மூலம் தேர்வு செய்யப்பட அமெரிக்காவில் அதற்கான அங்கீகாரத்தை பெற்று கொண்டார். அது மட்டுமல்ல ..

விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !

pixabay, pexels, youtube

மொழி தெரியாதவர்களுக்கும் பிடித்த படம் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன். பிபிசி தந்த வெற்றியால் இந்த புகழ்மிக்க திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் மதுமிதா ! அதன் பின்னரே வல்லமை தாராயோவை இயக்க தமிழகம் வந்தார்.

சமீபத்தில் இவர் இயக்கிய KD என்கிற கருப்புத்துரை திரைப்படம் லண்டன் உலக விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் இவர் ஒரு ஊடகம் வழியாக தனது பிக் பாஸ் பயணத்தை பற்றி மனம் திறந்தார்.

எல்லா இயக்குனரை போலவே தமிழின் ஆளுமை நடிகர்களான ரஜினி மற்றும் கமலை வைத்து இயக்க விரும்பியது போலவே மதுமிதாவுக்கு ஆசைப்பட்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்வை தொகுத்து வழங்க இருப்பவர் கமல்ஹாசன் என்று அறிந்ததும் உடனே அதனை இயக்க யோசிக்காமல் ஒப்பு கொண்டிருக்கிறார்.

மைனா நந்தினியின் இரண்டாவது திருமணம்.. வைரல் புகைப்படம் உள்ளே!

pixabay, pexels, youtube

முதல் இரண்டு எபிசோட்கள் ஹிந்தியில் உள்ளதை போலவே செய்திருக்கிறார்கள். அது தமிழக மக்களை சரிவர சென்று சேராததால் தமிழக மக்களுக்கு பிடித்த வகையில் சில விஷயங்களை மாற்றி அமைக்க ப்ரோக்ராம் பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது.

தங்களுடைய எல்லா விஷயங்களிலும் கமல்ஹாசனின் டச் இருந்தது என்றும் சிறு சிறு விஷயங்களையும் ரசித்து செய்தார் கமல் எனவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பிக் பாஸ் மூலமாக கமல் சாரை இயக்கியது தனது வாழ்நாளின் மறக்க முடியாத தருணங்கள் என்று அந்த பேட்டியில் நெகிழ்ந்திருக்கிறார் மதுமிதா.

pixabay, pexels, youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.