ஆல்யா மானஸா - சின்னத்திரையில் மக்கள் மனதை தன்னுடைய அழகாலும் நடிப்பாலும் கவர்ந்தவர். விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் இவர்தான் ராணி.
ஆங்கிலத்தில் வந்த சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை சித்தரிக்கும் வகையில் வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கும் செம்பா (ஆல்யா மானஸா) முதலாளியின் மகனை அவர் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்கிறார். இதுதான் கதையின் முடிச்சு.
என்றும் இளமையான தோற்றம் வேண்டுமா ! இந்த ஒரு மூலிகை உங்களுக்கு ஆயிரம் பலன் தரும் !
இந்த கதையில் சிண்ட்ரெல்லாவாக சாரி செம்பாவாக நடிக்கும் ஆல்யா மானஸா (alya manasa) தனது துறுதுறுப்பான நடிப்பால் பார்வையாளர் மனதில் இடம் பிடித்தவர். இப்போதெல்லாம் காலேஜ் படிக்கும் வாலிபர்களும் சீரியல்களை பார்க்கிறார்கள் என்பதை இவரது இன்ஸ்டா பாலோயர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்த சீரியலில் ராஜாவாக நடிக்கும் கார்த்திக்கை ஆல்யா மானஸா நிஜமாகவே காதலிக்க சீரியல் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விழா ஒன்றில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !
நிச்சயதார்த்த ஜோடிகள் இருவரும் சீரியலுக்காக சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர். ஆல்யா மானஸா வின் மேல் அதிக காதலில் இருக்கும் கார்த்திக் ஆல்யா மானஸாவின் பிறந்த நாளன்று சிறப்பு பரிசுகளை கொடுத்து அசத்தினார்.
இந்நிலையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஒரு அபூர்வமான புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதனை பார்க்கையில் அந்த அப்பாவி ஆல்யா மானஸாதான் இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார் என்று தோன்றுகிறது. பார்வையாளர்கள் இதனை வைரல் செய்து வருகின்றனர்.
---
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.