logo
ADVERTISEMENT
home / அழகு
முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்ற சில எளிய பயனுள்ள வழிகள்  – (How To Remove Facial Hair In Tamil)

முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்ற சில எளிய பயனுள்ள வழிகள்  – (How To Remove Facial Hair In Tamil)

பெண்கள் நம் அனைவருக்கும் அழகிய அடர்த்தியான கூந்தல் என்றால் மிகவும் பிடிக்கும் . அதுவே தேவையில்லா இடங்களில் வளர்ந்தால், எரிச்சலாகத்தான் இருக்கும் ! நீங்கள் இதைபோல் முகத்தில் தேவையற்ற முடியை நீக்க போராடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இனி அந்த கவலை வேண்டாம்! இங்கு நாம் இயற்கையாக எவ்வாறு தேவையற்ற முடியை எளிதில் நீக்கலாம் என்றும் மேலும் இதற்கு தேவையான சில சிறந்த பொருட்களையும் பார்க்கலாம்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்ற 8 சிறந்த இயற்கை வழிகள்

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் சில பொருட்கள்

முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்ற மற்ற வழிகள்

ADVERTISEMENT

முகத்தில் வளரும் முடியை எளிதில் நீக்க சில குறிப்புகள்

முகத்தில் உள்ள தேவையற்ற முடியை  அகற்ற 8 சிறந்த இயற்கை வழிகள் (8 Best Home Remedies To Remove Facial Hair)

இயற்கையாக உங்கள் முகத்தில் உள்ள முடியை அகற்றுவதற்கு பல்வேறு பொருட்களை பயன்படுத்தலாம் என்றாலும் வீட்டு சமையலறையில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்துக் கொண்டே இதை எவ்வாறு அடையலாம் என்று நாம் இங்கு பார்க்கலாம்.

நீங்கள் சருமத்திற்கு எப்பொழுதும் இயற்கை வழிகளை தேடி பின்பற்றுபவர் என்றால் கீழ்குறி இருக்கும் 8 வித்தியாசமான பயனுள்ள குறிப்புகள் உபயோகமாக இருக்கும்.

1. தேன் மற்றும் சக்கரை (Honey And Sugar) 

1 how to remove facial hair in tamil

ADVERTISEMENT

பார்லரில் நீங்கள் அநேகமாக இதுபோல் ஒரு செய்முறையை பார்த்திருப்பீர்கள். இதை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். இரண்டு ஸ்பூன் சக்கரை , ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது தண்ணீரை எடுத்து, கலந்து, சக்கரை இதில் உருகும் வரை மிதமாக சூடு செய்யவும். பிறகு, இதை ஆற வைத்து, உங்கள் முகத்தில் , கை, கால் என்று தேவையான இடங்களில் தடவி ஒரு சிறிய துணியால் அழுத்தி வேகமாக, முடி வளர்ச்சியின் எதிர் திசையில் இழுக்கவும். முடி அனைத்தும் இதில் வந்துவிடும். இதில் தேவைப்பட்டால் நீங்கள் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளலாம். இதை உங்கள் சருமத்தில் தடவுவதற்கு முன்னதாக கோர்ன்ஸ்டார்ச் பவுடர் அல்லது ஏதேனும் ஒரு டால்கம் பவுடரை பூசிக் கொண்டு இதை ஸ்ட்ரிப் செய்யவும். 

இது எப்படி வேலை செய்யும்?  சர்க்கரை உங்கள் சருமத்தில் இருக்கும் டெட் செல்சை அகற்றிவிடும் மேலும் தேன் உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து மென்மையாக வைத்துக் கொள்ளும்.

இது வறண்ட சருமத்திற்கு மிகவும் பொருத்தமானது. 

Also Read : சுருள் முடியை நேராக வைத்திருப்பது எப்படி

ADVERTISEMENT

2. டீ-ட்ரீ  மற்றும் லேவண்டர் ஆயில் (Tea Tree And Lavender Oil)

ஒரு ஸ்பூன் லேவண்டர் ஆயில் 4-5 ஸ்பூன் டீ ட்ரீ எண்ணையை கலந்து உங்கள் முகத்தில் ஒரு சிறிய பஞ்சால் தடவவும். இதை மிதமாக மசாஜ் செய்து விட்டு சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இது போல நீங்கள் தினமும் செய்கையில் உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் எளிதில் நீங்கிவிடும்.

இது எப்படி வேலை செய்யும்? இவை இரண்டிலும் ஆன்ட்ரோஜெனிக் (antrogenic) அம்சங்களை எதிர்க்கும் சக்தி உள்ளதால் இது உங்கள் தேவையை பூர்த்தி செய்யும்.

எண்ணெய் மற்றும் பருக்கள் அக்னே கொண்ட முகத்திற்கு இது பொருத்தமானது.

3. சோளமாவு , முட்டை மற்றும் சர்க்கரை (Cornflour , Egg And Sugar) 

2 how to remove facial hair in tamil

ADVERTISEMENT

ஒரு ஸ்பூன் சோள மாவு மற்றும் ஒரு ஸ்பூன் சர்க்கரையை முட்டையின் வெள்ளைப் பகுதியில் கலந்து உங்கள் முகத்தில் இருக்கும் முடியின் மீது தேய்த்து விடுங்கள். சிறிது நேரம் கழித்து காய்ந்த உடன் இதை பீல் ஆப் மாஸ்க்கை போல் எடுத்து விடலாம். அல்லது முகத்தை கழுவி விடலாம்.

இது எப்படி வேலை செய்யும்? முட்டையின் பிசுபிசுப்பு தன்மை உங்கள் முடியின் மீது படுவதால் அது உங்கள் முடியை நீக்கி விடும் . சோளமாவு ஒரு நல்ல பேஸ்டாக வேலை செய்யும் மட்டும் சர்க்கரை உங்கள் முகத்தில் இருக்கும் டெட் செல்ஸை அகற்றி எக்ஸ்போலியேட் (exfoliate) செய்ய உதவுகிறது .

உணர்திறன் கொண்ட சருமத்திற்கு இது பொருத்தமற்றது ஏனெனில் இவை இன்னும் உங்கள் சருமத்தை எரிச்சலூட்டி பருக்களை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

முட்டையின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தையும் படியுங்கள்

ADVERTISEMENT

4. பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு (Lentils And Potato) 

ஒரு கப் அல்லது அரை கப் பருப்பை இரவில் ஊற வைத்து பின்பு அதை காலையில் எடுத்து ஒரு நல்ல பேஸ்டாக செய்து கொள்ளுங்கள். ஒரு உருளைக்கிழங்கை எடுத்து மசித்து அதில் வரும் சாறை எடுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இந்த சாறை அரைத்து வைத்த பருப்புடன் கலந்து அத்துடன் ஒரு சிறிய எலுமிச்சை பழத்தை பிழிந்து உங்கள் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள் .தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கலாம். 15- 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவும்.

இது எப்படி வேலை செய்யும்? உருளைக்கிழங்கில் இருக்கும் சக்தி வாய்ந்த அம்சங்கள் உங்கள் முகத்தை ப்ளீச் செய்ய உதவும். இதுவே உங்கள் முகத்தில் இருக்கும் முடியை அகற்றி மேலும் அதை புதுப்பொலிவுடன் காட்ட உதவும். பருப்பில் இருக்கும் அம்சங்கள் உங்கள் சருமத்தில்  இருக்கும் முடியை அகற்ற உதவுகிறது.

இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒன்றாகும் இருப்பினும் உங்களது உணர் திறன் கொண்ட சருமமாக இருந்தால் உருளைக்கிழங்கு உங்களுக்கு எரிச்சல் அல்லது அரிப்பை உண்டாக்கலாம். 

5. பப்பாளி மற்றும் மஞ்சள்  (Papaya And Turmeric) 

3 how to remove facial hair in tamil

ADVERTISEMENT

பச்சையாக இருக்கும் பப்பாளியை அரைத்து ஒரு பேஸ்டாக செய்து கொள்ளுங்கள் இதில் ஒரு ஸ்பூன் மஞ்சளைக் கலந்து கொண்டு உங்கள் முகத்தில் தேவைப்படும் இடத்தில் தடவிக்கொண்டு மிதமாக மசாஜ் செய்யுங்கள். இதை 15 – 20 நிமிடம் வைத்து விட்டு கழுவி விடுங்கள்.

இது எப்படி வேலை செய்யும்? பப்பாளியில் இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு ஏற்ற அதை பிரகாசிக்க வைக்கும் அம்சங்கள் இருப்பதால் இது உங்கள் சருமத்தில் இருக்கும் தேவையில்லாத டெட் செல்சை அகற் உதவுகிறது மேலும்  இதில் மஞ்சளின் கலவை உங்கள் சருமத்தில் இருக்கும் முடியை அகற்றுகிறது. இந்த கலவை உங்கள் முகத்தில் ஒரு ஜொலிக்கும் தோற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

வாரத்தில் 2 – 3 முறை இதை பின்பற்றினால் விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தை அடையலாம்.

மேலும் படிக்க – வீட்டில் இருந்தபடியே பப்பாளி ஃபேசியல் செய்வது எப்படி!

ADVERTISEMENT

6. பூண்டு  (Garlic)

பூண்டை எடுத்துக்கொண்டு அதை மசித்து அதில் வரும் சாறை ஒரு டீஸ்பூன் அளவிற்காவது எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் முகத்தில் தேவைக்கேற்ப பூசி ஒரு 30 நிமிடமாவது வைத்திருங்கள். இதற்குப் பிறகு முகத்தை கழுவி விடுங்கள். இதை தினமும் நீங்கள் தடவினால் தேவையில்லாத முடி அனைத்தும் உங்கள் முகத்தில் இருந்து நீங்கிவிடும்.இதை தொடர்ந்து , உங்கள் சருமத்தில் ஒரு மாய்ஸ்சுரைசரை பூசவும்.

இது எப்படி வேலை செய்யும் ? பூண்டில் உள்ள சக்தி வாய்ந்த அம்சங்கள் உங்கள் சருமத்தில் உள்ள தேவையற்ற முடியை எளிதில் அகற்றி விடும்.

இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது இருப்பினும் உங்களது உணர்திறன் கொண்ட சருமமாக இருந்தால் அல்லது பூண்டு உங்களுக்கு ஒத்துக்காத ஒரு பொருளாக இருந்தால் இதை நீங்கள் கவனமாக உபயோகிக்க வேண்டும்.

7. ஓட்ஸ் மற்றும் வாழைப்பழம் (Oatmeal And Banana) 

4 how to remove facial hair in tamil

ADVERTISEMENT

இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் உடன் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலந்து ஒரு பேஸ்ட் ஆக்கி கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தில் தேவைப்படும் இடத்தில் தடவி 15 – 30 நிமிடம் வரை வைத்து அதை மிதமாக முடி வளர்ச்சியின் எதிர்திசையில் மசாஜ் செய்யுங்கள். அதற்கு பிறகு முகத்தை கழுவி விடலாம்.

இது எப்படி வேலை செய்யும்? வாழைப்பழம் உங்கள் சருமத்தை மென்மையாக்க உதவுகிறது . ஓட்ஸ் உங்கள் சருமத்தில் உள்ள டெட் செல்சை அகற்ற உதவுகிறது. இதை தொடர்ந்து செய்து வருகையில் உங்கள் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீங்கள் எளிதில் அகற்றிவிடலாம். இதை தொண்டர்ந்து செய்கையில் , உங்கள் முகம் இயற்கையாகவே புதுப் பொலிவுடன் தோன்றும் ஆஹா ! இதை தானே நாம் அனைவரும் எதிர்பார்க்கிறோம்? 

மேலும் படிக்க – ஒளிரும் சருமத்தை பெற சில அழகு குறிப்புகள் (வீட்டு வைத்தியம்) !

8. மஞ்சள் (Turmeric With Water) 

இது ஒரு மிக எளிதான வழி.  கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்க அலுப்பாக இருந்தால், இதுவே ஒரு சிறந்த வழி. இரண்டு ஸ்பூன் மஞ்சளில் தண்ணீரை கலந்து அதை உங்கள் முகத்தில் தடவி 15 -20 நிமிடம் வரை அதை நன்கு காய வையுங்கள். இதற்கு இந்த முகத்தை கழுவி விடுங்கள்.

ADVERTISEMENT

இது எப்படி வேலை செய்யும்? மஞ்சளில் கிருமி நாசினிகள் மாற்றும் பாக்டீரியாவை அளிக்கும் அம்சங்கள் உள்ளதால் இது உங்கள் முகத்தில் இருக்கும் முடியை எளிதில் அகற்றும்.

முகத்தில் உள்ள முடியை நீக்க உதவும் சில பொருட்கள் (Methods Of Removing Facial Hair)

இன்றைய வாழ்க்கை முறை மாறி விட்டதால் உங்களுக்கு ஒரு வேளை மேல் கூடியிருக்கும் வீட்டு வைத்தியங்களை செய்ய நேரமில்லை என்று நினைத்தாள் நீங்கள் இதுபோல் கடைகளில் கிடைக்கும் சில தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தலாம்.

கீழ் கூறியிருக்கும் தயாரிப்பு பொருட்களை நீங்கள் பயன்படுத்துகையில் உங்கள் முடியை நீங்கள் எந்த அளவிற்கு ஆழமாக அகற்றலாம் என்று தெரிந்துகொள்ள இந்த புகைப்படத்தை பாருங்கள்.

8 how to remove facial hair in tamil

ADVERTISEMENT

1. ஷேவிங் (Shaving)

உங்கள் முகத்தில் இருக்கும் முடிகளை மட்டும் அல்லாமல் உடலில் இருக்கும் தேவையில்லாத முடிகள் அனைத்தையும் நீங்கள் எளிதில் ஷேவ் செய்யலாம் . இது உங்கள் நேரத்தை மிகவும் சேமிக்கும். இதை நீங்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதுமானது. எப்பொழுதும் ஷேவ் செய்வதற்கு முன்னதாக உங்கள் முகத்தை கழுவிய பிறகு ஆரம்பிக்கவும். இதனால் உங்கள் முகத்தில் .காயங்கள் எரிச்சல் ஏற்படாமல் நீங்கள் தவிர்க்கலாம். .இப்போதெல்லாம் பல முறை பயன்படும் பிளேடுகள் வந்துவிட்டனர். ஆகையால் உங்கள் தேவைக்கு நீங்கள் ஒரு முறை ஷேவிங் ரேசரை வாங்கினால் அதை பலமுறை உபயோகித்து பிறகு அதை அப்புறப்படுத்தலாம்.

POPxo பரிந்துரைக்கிறது – பெத்தர் பியானி பெஸ் ரேசர் சேவற்  (Rs 200) ,ஜிலேட் வீனஸ் ஹேர் ரிமூவல் போர் வுமன் (Rs 214)

2. பெஸ் ஷேவ் கிரீம் (Facial Hair Removal Cream) 

முகத்தில் நீங்கள் பூசும் மற்ற வகை கிரீம்கள் போல் முகத்தில் இருக்கும் முடியை அகற்ற ஏதேனும் ஒரு தயாரிப்பை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்கானது. மார்க்கெட்டுகளில் பல வகையான ஷேவிங் க்ரீம் கிடைக்கிறது. மிக எளிமையான முறையில் உங்கள் முகத்தில் இருக்கும் முடியை அகற்ற உதவும் இதை, நீங்கள் தேவைப்படும் இடங்களில் பூசிக் கொண்டு 10 -20 நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய பஞ்சால் அதை துடைத்து எடுத்து விடலாம். இதில் உங்கள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் அனைத்தும் வந்துவிடும்.

வாக்ஸிங் த்ரெடிங் போன்ற வழிகளை தாங்க முடியாதவர்களுக்கு இது பொருத்தமானது.

ADVERTISEMENT

POPxo பரிந்துரைக்கிறது – நாயர் ஹேர் ரிமூவர் பெஸ் கிரீம் (Rs 332) , அவான் ஸ்கின் சோ சாப்ட் ஹேர் ரிமூவர் (Rs 9110) 

3. எபிலேட்டர் (Epilator) 

இன்றைய தேதியில் மார்க்கெட்டில் பலவகையான எபிலேட்டர்கல் வந்துவிட்டது . இதை நீங்கள் மிகவும் எளிதில் உபயோகிக்கலாம். இது உங்கள் சருமத்தில் இருக்கும் முடியை ஆழமாக சென்று அதை வேருடன் நீக்கி விடும் .ஆகையால் இந்த முறையில் நீங்கள் முடியை அகற்றினால், அது பல நாட்கள் நீடிக்கும் . இது வேக்சிங் விட மிகக் குறைவாக தான் வலிக்கும். இருப்பினும் இதை பலமுறை உபயோகிக்கும்போது உங்களுக்கு பழகிவிடும். பயணங்களில் , இதை உங்கள்
டிராவல் கிட்டில் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு பொருள் ஆகும்! 

POPxo பரிந்துரைக்கிறது – பிரான் சில்க் எபிலேட்டர் (Rs 2565) , பிலிப்ஸ் அட்வான்ச்ட் எபிலேட்டர் (Rs 5995) , வீட் சென்சிடிவ் டச் எலெக்ட்ரிக் ட்ரிம்மர் (Rs 1799)

7 how to remove facial hair in tamil

ADVERTISEMENT

4. வாக்ஸிங் (Waxing)

நீங்கள் உங்கள் உடம்பில் மற்ற பாகங்களின் முடியை அகற்ற அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுவீர்கள் என்றால் வாக்ஸிங் உங்களுக்கு புதியதல்ல. சாப்ட் வாக்சில் ஒரு துணியை பயன்படுத்தி தேவையற்ற முடியை நீக்க வேண்டும். ஆனால் ஹார்ட் வாக்சில் , அதுவாகவே காய்ந்த உடன் விழுந்து விடும். மேலும், உங்கள் கன்னங்கள் , தாடை பகுதிகள், உதட்டின் மேல் மற்றும் கீழ் பகுதி , கண்களை சுற்றி என முக்கிய இடங்களில் நீங்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்றலாம். இருப்பினும், இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உணர் திறன் கொண்ட சருமம் இருந்தால் இது எரிச்சல், காயங்கள் அல்லது வீக்கத்தை உண்டாக்கலாம்.

POPxo பரிந்துரைக்கிறது – ரிக்கா பிரேசிலின் வாக்ஸ் வித் அவகேடோ பட்டர் (Rs 990) , ஸ்லீக் வாக்ஸ் பாக் (Rs 99)

5. ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் (Removal Strips) 

வாக்ஸிங் அனுபவம் உண்டு என்றால் இதுபோல் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். இதில் நீங்கள் எந்த விதமான பொருட்களையும் சூடுபடுத்தவும் அதை தயார்படுத்தவோ தேவையில்லை . இந்த வகையில், முடியை அகற்ற தேவையான பொருட்கள் இருப்பதனால், இதை நீங்கள் எளிதில் பயன்படுத்தலாம். 

POPxo பரிந்துரைக்கிறது – கமெலியோன் வாக்ஸிங் ஸ்ட்ரிப்ஸ் (Rs 195), ஹேர் ஆப் வாக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் (Rs 471) , நாட்ஸ் வாக்ஸிங் ஸ்ட்ரிப்ஸ் (Rs 2000)

ADVERTISEMENT

முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்ற மற்ற வழிகள் (Other Ways To Remove Unwanted Hair Growth On The Face)

1. லேசர் ட்ரீட்மெண்ட் ( Laser treatment )

5 how to remove facial hair in tamil

நீங்கள் நிரந்தரமாக ஒரு தீர்வை தேடிக்கொண்டிருந்தால் , லேசர் டிரீட்மென்டுக்கு செல்லலாம் . இதில் உங்கள் உடம்பில் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக எடுக்கக்கூடிய செயல்முறைகளை பின்பற்றுவார்கள். ஒளியை வேகமாக வீசி உங்கள் சருமத்தில் இருக்கும் முடியின் வேறுகளை சூடாக்கி , அதை வேரோடு நீக்குவது தான் இதன் வேலை. இது, விலையில் உயர்வானது மேலும் இதில் சிறுசிறு அளவில் உள்ள முடிகளை நீக்குவது கடினம் ஆகும். ஆனால் ஒரே சமயத்தில் ஒரு பெரிய பகுதியை கவர்ந்து அதில் இருக்கும் முடியை எளிதில் அகற்றி விடும்!

2. எலெக்ட்ரோலுசிஸ் (Electrolysis) 

லேசர் சிகிச்சை வேண்டாம் என்றால் நீங்கள் எலெக்ட்ரோலிஸிஸ் முறையை அணுகலாம். இதில் சிறிதளவில் இருக்கும் முடிகளையும் தனி தனியாக கவனித்து, அதில் சூடேற்றி அகற்றி விடும். இதுவும் லேசரை போல் , முடியை நீக்குவதில் ஒரு நிரந்தர தீர்வாகும்.

3.த்ரெடிங் (Threading) 

6

ADVERTISEMENT

இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு வழியாகும். பொதுவாக நீங்கள் உங்கள் புருவங்களை மட்டுமே சீர் செய்வது உண்டு என்றால் இதே முறையில் நீங்கள் உங்கள் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். இதுவே பார்லர்களில் மிகவும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு செயல்முறையாகும். இதில் சன்னமான நூல்களைக் கொண்டு அதை முறுக்கி உங்கள் முகத்தில் உள்ள அனைத்து தேவையற்ற முடியை வேரோடு நீக்கிவிடுவார்கள். இருப்பினும் இதில் உங்கள் சருமத்தில் இருக்கும் மூடி நிரந்தரமாக போய்விடாது. அது மீண்டும் வருகையில் நீங்கள் மீண்டும் இதை செய்யத்தான் வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் இந்த செயல்முறையில் எரிச்சலுடன் காயங்கள் மற்றும் வலியும் அதிகமாக இருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். இதை நீங்கள் சமாளிப்பீர்கள் என்றால் இந்த செயல் முறையை நீங்கள் தாராளமாக செய்து கொள்ளலாம்!

4. ட்வீஸிங் (Tweezing )

மிகப் பொதுவாக செய்யக்கூடிய ஒரு செயல்முறையாகும் இதில் நீங்கள் உடம்பில் இருக்கும் தேவையற்ற முடிகள் மற்றும் முகத்தில் இருக்கும் முடிகள் அனைத்தையும் இதன் நுனிகளில் பிடித்து இழுத்து வெளியேற்ற வேண்டும். இதை செய்வதன் மூலம் உங்கள் முடி வேரோடு வந்துவிடும். இருப்பினும் இதில் சில குறைபாடுகள் உள்ளது. நீளமாக அடர்த்தியாக இருக்கும் முடிகளை இந்த வழியில் அகற்ற முடியாது. அதற்கு நீங்கள் மேல் கூறியிருக்கும் மற்ற வழிகளை பின்பற்ற வேண்டும். மேலும் இம்முறையில் உங்கள் சருமம் சிவந்து போகலாம் அல்லது எரிச்சல் காயங்கள் போன்றவை வரவும் வாய்ப்புள்ளது

முகத்தில் வளரும் முடியை எளிதில் நீக்க சில குறிப்புகள் (Tips To Remove Face Hair )

எந்த முறையை நீங்கள் பின்பற்றினாலும் கீழ் வருவதை நினைவில் வெய்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
  • உங்கள் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவி விட்டு இதுபோன்ற செயல்முறைகளை ஆரம்பியுங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் துளைகளை திறந்து மேலும் சிறப்பாக செயல்பட இதுவே ஒரு சிறந்த வழி.
  • பொறுமையாக செயல் பட வேண்டும். சில இயற்கை முறைகளில் , உடனடியாக தீர்வை காண முடியாது ஆனால் நீண்ட நாட்கள் நீடிக்கும் தீர்வுகளை அவை வழங்கலாம்.
  • வாக்ஸிங், த்ரெடிங் , பீல் ஆப் மாஸ்க் போன்ற எந்த முறையாக இருந்தாலும், சருமம் வறண்டு போவதிலிருந்து காப்பாத்த , ஒரு மொய்ச்சுரைசரை பூசவும்.
  • மேலும் உங்கள் மன அழுத்தம் , உணவு முறை , தண்ணீர் குடித்தல் இவை அனைத்திலும் கவனம் தேவை.  

 

பட ஆதாரம்  – instagram, shutterstock,pixabay,pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

ADVERTISEMENT
08 May 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT