சுருள் முடியை பராமரிக்க சில வீட்டுக் குறிப்புகள் உங்களுக்காக!

சுருள் முடியை பராமரிக்க சில வீட்டுக் குறிப்புகள் உங்களுக்காக!

ஒருவருடைய முக அழகை மேம்படுத்துவதில் தலை முடிக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஒருவரின் தலை முடி அவரது முக தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றி விட முடியும். இந்த வகையில், பெரும்பாலானோர் நேரான, நீண்ட மற்றும் அடர்த்தியான முடியையே விரும்புகின்றார்கள். எனினும், சிலருக்கு சுருள் முடி இருக்கிறது. இது அழகான தோற்றத்தை தந்தாலும், பராமரிக்கவும், சிகை அலங்காரம் செய்யவும் சிரமத்தை தருவதாக சிலர் கருதுகின்றார்கள்.


சுருள் முடியை பராமரிக்கவும், தேவைப்பட்டால் நேராக்கவும் இன்று பல புதிய வழிகள் இருக்கின்றது. எனினும், அவை சற்று விலை உயர்ந்ததாக இருக்கின்றது. அதனால் அனைவராலும் ஒரு பெரிய தொகையை செலவு செய்து சுருள் முடியை நேராக்க முடியாமல் போகலாம். மேலும் பல ரசாயனங்களை கொண்டு செய்யப்படும் அத்தகைய சிகிச்சை சில பின்னடைவுகளையும், பாதிப்புகளையும் உங்களுக்கு நாளடைவில் ஏற்படுத்தக்கூடும். இத்தகைய சிகிச்சை உங்களுக்கு தற்காலிகத் தீர்வையே தரக்கூடும். அதனால் நீங்கள் ஒரு சிறிய காலகட்ட இடைவேளையில்  ஒவ்வொரு முறையும் அதிக செலவு செய்து உங்கள் சுருள் முடியை நேராக்கி பராமரிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.


இது மட்டுமல்லாது, இந்த சிகிச்சை முறை உங்கள் தலை முடியின் இயற்கை போஷாக்கை இழக்க வைப்பதோடு, நாளடைவில் முடி உதிர்வு, நரை முடி, வறண்ட முடி, என்று பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். அதனால், நீங்கள் ஒரு நல்ல மற்றும் நிரந்தரமான தீர்வைப் பெற முயற்சிப்பதே நல்லது.


உங்கள் சுருள் முடியை பராமரிக்க இங்கே சில வீட்டு குறிப்புகள் (Natural Remedies To Maintain Curly Hair)


சுருள் முடியை எளிதாக பராமரிக்க பல இயற்க்கை மற்றும் வீட்டு குறிப்புகள் உள்ளது. இவை எளிதானதாகவும், உங்களுக்கு நீண்ட கால பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.


1. ஆப்பிள் சாறு வினிகர் (ஆப்பிள் சிடார் வினிகர்)


1.


உங்கள் சுருள் முடியை மிருதுவாக்கி, மேலும் காலப்போக்கில் நேராக்க இது ஒரு முதன்மையான தீர்வு. கடினமான சுருளையும் இதைக் கொண்டு நீங்கள் எளிதாக போக்கி விடலாம். மேலும் உங்கள் தலை முடிக்கு அழகான மற்றும் பிரகாசமானத் தோற்றம் தரும்.


எப்படி பயன் படுத்துவது: ஆப்பிள் சிடார் வினிகரை எளிதாக பயன் படுத்த, இங்கே சில குறிப்புகள்:


 • சம அளவு ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தண்ணீர் எடுத்துக் கொண்டு, இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்

 • உங்கள் தலையில் வேர் முதல் நுனி வரை நன்கு தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும்

 • பின் உங்கள் தலை முடியை ஷாம்பூ போட்டு தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரால் நன்கு அலசவும்


2. முட்டை மற்றும் ஆலிவ் எண்ணை


உங்கள் தலைமுடிக்கு நல்ல போஷாக்கு கொடுத்து, சுருள் முடியை எளிதாக பராமரிக்க, முட்டை ஒரு நல்ல தீர்வு. மேலும் சுருள் முடிக்கு இது ஒரு பிரபலமான வீட்டுத் தீர்வும் கூட. முட்டையில் அதிகம் புரத சத்து உள்ளது. இது முடி உதிர்வை குறைத்து நல்ல சத்தை கொடுக்கிறது. இதனால் உங்கள் தலை முடி பலமாகவும், அடர்த்தியாகவும் வளருகின்றது.


எப்படி பயன் படுத்துவது:  


 • ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்

 • இதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

 • இந்த கலவையை உங்கள் தலை முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தடவி 3௦ நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை விட்டு விடுங்கள்

 • பின் குளிர்ந்த நீரில் மிதமான ஷாம்பூ அல்லது சீகைக்காய் போட்டு அலசி விடவும்

 • இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வந்தால், நீங்கள் எதிர் பார்த்த பலனைப் பெறலாம்


3. அவகேடோ


2


இது ஒரு பெரிய பெர்ரி வகையைச் சேர்ந்த பழம். இது சுருள் முடியை பராமரிக்க  அதிகம் பயன் படுத்தப் படுகிறது. மேலும் உங்கள் தலை முடிக்கு ஈரப்பதத்தை கொடுத்து, எளிதாக பராமரிக்கவும் உதவுகிறது. தலை முடியில் ஏற்படும் வறட்சியை போக்க உதவுகிறது. அவகோட்டில் வைட்டமின் E சத்து நிறைந்துள்ளது. இது தலை முடியை உறுதியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


எப்படி பயன் படுத்துவது:


 • ஒரு அவகோட் பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்

 • அதனுடன் இரண்டு தேக்கரண்டி தயிர் விட்டு க்ரீம் போல கலக்கவும்

 • இந்த கலவையை உங்கள் தலை முடியில், வேர் முதல் நுனி வரை நன்கு தேய்த்து 3௦ நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை விட்டு விடவும்

 • அதன் பின் தரமான ஷாம்பூ அல்லது சீகைக்காய் பயன் படுத்தி தலை முடியை அலசி விடவும்

 • இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்


4. கற்றாளை


தலை முடி மற்றும் சருமம் ஆகிய இரண்டிற்கும் ஒரு நல்ல தீர்வு, கற்றாளை. இந்த சோற்று கற்றாளை பெரும்பாலும் அனைவருது வீடுகளிலும் எளிய முறையில் தொட்டிகளில் வளர்க்கப் படுகிறது. இதனை நீங்கள் தோட்டங்களிலும் குறைந்த விலைக்கு வாங்கலாம். கற்றாளை முடி உதிர்வு, வறட்சி, எரிச்சல் அல்லது பாதிக்கப்பட்ட வேர் பகுதி, பேன் மற்றும் பொடுகு ஆகிய பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் பயன் படுத்தப் படுகிறது. இது சுருள் முடியை மிருதுவாக்கி, நேராகவும் ஆக்க அதிக அளவு பயன் படுத்தப் படுகிறது.


எப்படி பயன் படுத்துவது:


 • கற்றாளையின் உள்ளே இருக்கும் சதைப் பகுதியை எடுத்து, நன்கு மசித்துக் கொள்ளவும்

 • இதனை உங்கள் தலை முடியின் வேர் முதல் நுனி வரை நன்கு தேய்க்கவும்

 • அப்படியே சிறிது நேரம் விட்டு விடவும்

 • சற்று மிதமான சுடுநீரில், தரமான ஷாம்பூ அல்லது சீகைக்காய் பயன் படுத்தி தேய்த்து தலை முடியை அலசி விடவும்

 • இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்


5. சூடான எண்ணை மசாஜ்


3


இந்த சூடான மசாஜ் உங்கள் தலைக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் நல்ல பலனைத் தரும். நீங்கள் இந்த சூடான மசாஜ் குளியலை எடுத்த பின் நிச்சயம் நல்ல புத்துணர்ச்சியை உணருவீர்கள். மேலும் இது உங்கள் சுருள் முடி பிரச்சனையை சரி செய்ய உதவியாக இருக்கும். இந்த மசாஜ் தலைப் பகுதிக்கு நல்ல இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். இதனால் வேர் பகுதிகள் பலமடைந்து, முடி உதிர்தல் தடுக்கப் படும். தொடர்ந்து இதை செய்து வந்தால், சுருள் முடியை எளிதாக சமாளித்து, பாதுகாக்கலாம்.


எப்படி பயன் படுத்துவது:


 • நீங்கள் தலைக்குத் தேர்ந்தெடுத்த எண்ணையை சிறிது எடுத்து மிதமாக சூடு செய்து கொள்ளவும்

 • நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை சிறந்தது

 • இந்த சூடான எண்ணையை வேரில் இருந்து நுனி வரை நன்கு தேய்த்து மசாஜ் செய்யவும்

 • ஒரு துண்டை எடுத்து அதை சுடு தண்ணீரில் முக்கி, பிழிந்து, நீர் வடிந்த வுடன், உங்கள் தலைமுடியை சேர்த்து சுற்றி விடவும்

 • இப்படியே ஒரு மணி நேரம் வரையாவது விட்டு விட வேண்டும்

 • அதன் பின் தரமான ஷாம்பூ தேய்த்து தலை முடியை அலசி விடவும்

 • இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து வந்தால் உங்கள் சுருள் முடி குறைந்து நேராகத் தொடங்கும்


6. செம்பருத்தி


செம்பருத்தி ஒரு பிரபலமான பூ. இதன் பூக்கள் மட்டுமல்லாமல் இலைகளும் மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. செம்பருத்தி பூக்கள் தலை முடி பராமரிப்பிற்காக அதிகம் பயன் படுத்தபடுகிறது. குறிப்பாக சுருள் முடியை நேராக செய்து நீங்கள் விரும்பும் பொலிவை தர இது ஒரு சிறந்த மூலிகையாகும். இந்த செடியை நீங்கள் வீட்டில் எளிதாக வளர்க்கலாம். மேலும் இதன் பூக்கள் கடைகளிலும் கிடைக்கும். எனினும், புதிதாக செடிகளில் பூத்த பூக்கள் சிறந்தது. இதில் அதிகம் சத்துக்கள் நிறைந்திருக்கும், அதனால் பலன்களும் அதிகம் கிடைக்கும்.


எப்படி பயன் படுத்துவது:


 • நான்கு அல்லது ஐந்து செம்பரத்தி பூக்களை எடுத்துக் கொள்ளுங்கள்

 • சிறிது தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள்

 • இதை தலையில் வேர் முதல் நுனி வரை நன்கு தேய்த்து 3௦ நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்

 • அதன் பின் மிதமான சூடான தண்ணீரில், தரமான ஷாம்பூ அல்லது சீகைக்காய் பயன் படுத்தி நன்கு அலசி விடவும்

 • இதனை வாரத்திற்கு இரு முறையாவது செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்

 • முடி உதிர்வு, பொடுகு, சுருள் முடி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வு


7. பால் மற்றும் தேன்


4


இதை நினைத்தாலே சுவைக்கத் தோன்றும் அல்லவா! இருந்தாலும், உங்கள் சுருள் முடி பிரச்சனைக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்!


பால் மற்றும் தேன் சுருள் முடிக்கு போஷாக்குத் தந்து நல்ல தோற்றம் பெற  பெரிதும் உதவுகின்றது. இது ஒரு நல்ல இயற்க்கை வைத்தியம் என்றும் கூறலாம். இதில் புரதம் நிறைந்துள்ளது. மேலும் உங்கள் தலை முடியை மிருதுவாக்கி, போஷக்களிக்கும்.


எப்படி பயன் படுத்துவது:


 • சிறிது பாலுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்

 • இதனை நன்கு கலந்து உங்கள் தலை முடியில் வேர் முதல் நுனி வரை நன்கு தேய்க்கவும்

 • அதன் பின் ஒரு துண்டை எடுத்து சூடான நீரில் முக்கி நன்கு பிழிந்து தலையைச் சுற்றி கட்டி விடவும்

 • மூன்று மணி நேரம் கழித்து உங்கள் தலையை தரமான ஷாம்பூ அல்லது சீகைக்காய் பயன் படுத்தி அலசி விடவும்


8. தயிர்


தயிர் தலை முடி பராமரிப்பிற்கு அதிக அளவு பயன் படுத்தப் படுகிறது. இந்த வகையில், இதனை நீங்கள் சரியான முறையில் பயன் படுத்தி வரும்போது  சுருள் முடியை குறைத்து நேரான முடி வளருவதையும், மிருதுவாகவும், பொலிவோடும் இருப்பதையும் காணலாம்.


எப்படி பயன் படுத்துவது:


 • ஒரு கிண்ணத்தில் தேவைக்கேற்ப தயிர் எடுத்துக் கொள்ளவும்

 • இதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்

 • இந்த கலவையை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்

 • அப்படியே 3௦ நிமிடங்கள் விட்டு விடவும்

 • பின் சாதாரண தண்ணீரில் சிகைக்காய் அல்லது தரமான ஷாம்பூ பயன் படுத்தி அலசி விடவும்


9. எலுமிச்சை மற்றும் தேங்காய்ப் பால்


5


இவை இரண்டும் சுருள் முடியை குறைக்க ஒரு நல்லத் தீர்வாக இருக்கும். மேலும் இது உங்கள் தலை முடிக்கு நல்ல போஷாக்கைத் தரும்.


பயன் படுத்துவது எப்படி:


 • தேவைக்கேற்ப எலுமிச்சை பழச் சாறு எடுத்துக் கொள்ளுங்கள்

 • இதனோடு தேங்காய்ப் பால் சிறிது சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளுங்கள்

 • இந்த கலவையை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற வைத்து விடுங்கள்

 • பின், குளிர்ந்த நீரில் தலையை சிகைக்காய் அல்லது தரமான ஷாம்பூ பயன் படுத்தி அலசி விடுங்கள்


சூடு இல்லாமல் தலை முடி சுருளை குறைப்பது எப்படி?


சுருள் முடியை நேராக்க அல்லது சுருளை குறைத்து கட்டுப்பாட்டிருக்குள் வைக்க  பொதுவாக சூடான கருவி பயன் படுத்தப் படுகின்றது. தற்காலிகமாக உங்கள் தலை முடிக்கு எதிர் பார்த்த பலனைத் தந்தாலும், இது ஒரு நிரந்தரத் தீர்வு இல்லை. மேலும் இது உங்கள் முடியின் இயற்கைத் தன்மையை இழக்க செய்து விடும். அதனால், நீங்கள் சூடு இல்லாமல் சுருள் முடியை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும்.உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்.


 • சுருள் முடிக்கேன்றே ஸ்ட்றைடனிங் ஷாம்பூ மற்றும் கண்டிஷனரைப் பயன் படுத்துவது நல்லது

 • உங்கள் தலை முடியை உலர்த்தும் முறையை மாற்றவும்

 • ஈரமாக இருக்கும் போது மெதுவாக தலை முடியை நேராக சீவி விடவும்

 • தலை முடியை மிருதுவாக்கும் பொருட்களை பயன் படுத்தவும்

 • மேலே குறிப்பிடப் பட்டுள்ள ஏதாவது எளிய சுருள் முடியை நேராக்கும் முறையை தொடர்ந்து செய்யவும்


விரைவாக சுருள் முடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது எப்படி?


6


 1. இதற்கு உங்களுக்கு மைக்ரோ பைபர் துண்டு தேவை

 2. தலை முடியை நன்கு அலசியதும் இந்த துண்டால் நேராக துடைக்க வேண்டும்.

 3. தலை முடியை சுருட்டி, சுருட்டி அல்லது கசக்கி துடைக்க கூடாது

 4. பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன் படுத்தி இதமாக தலை முடியை மேல் இருந்து நுனி வரை சீவ வேண்டும்

 5. உங்கள் தலை முடி காய்ந்த உடன் அது சற்று நேராக இருப்பதை நீங்கள் காணலாம்


நீண்ட நேரத்திற்கு எப்படி சுருள் முடியை நேராக வைத்து பராமரிப்பது?


 • ஈரமாக முடி இருப்பதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது

 • தலை முடியில் சிறிது அளவு எண்ணை தேய்த்து பின் நேராக வைத்து நன்கு கட்டி விடவும்

 • இதனால் மீண்டும் சுருள் விரைவாக ஏற்படுவதை தவிர்க்கலாம்

 • இதனை நீங்கள் தினமும் இருவில் செய்து விட்டு தூங்கப் போகலாம்

 • நாளடைவில் உங்கள் முடியில் இருக்கும் சுருள் குறைவதை நீங்கள் காணலாம்


நீங்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்


7


சுருள் முடியை குறைக்க நீங்கள் சில பாதுகாப்பு முயற்சிகளை செய்ய வேண்டும். இங்கே சில குறிப்புகள் உங்களுக்காக


 1. அதிகமாக இராசாயனப் பொருட்களைக் கொண்டு தலை முடி ஸ்டைலிங் செய்வதை தவிர்ப்பது நல்லது

 2. அதிகம் சூரிய ஒளி படுவதை தவிர்ப்பது நல்லது

 3. க்ளோரின் கலந்த நீரை தலை முடி அலச பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது

 4. அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்ப்பது நல்லது

 5. தரமான மற்றும் மூலிகைகள் கலந்த ஷாம்பூ அல்லது சிகைக்காய் பயன் படுத்துவது நல்லது

 6. முடிந்த வரை குளிர்ந்த நீரில் தலைக்கு குளிப்பது நல்லது

 7. முடி நுனியில் ஏற்படும் வெடிப்புகளை அவ்வப்போது வெட்டி விட வேண்டும்

 8. அதிகம் தண்ணீர் அருந்துங்கள்


இயற்கையாக சுருள் முடிக்கு நல்ல தோற்றம் பெற சில குறிப்புகள்


மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகள் மட்டுமல்லாமல், நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உங்களது தினசரி வாழ்க்கை முறை பழக்கங்களும் உங்கள் தலை முடி சீராக இருக்க பெரிய பங்கு வகிக்கிறது. இந்த வகையில், உங்கள் சுருள் முடியை நேராக்கும் முயற்சிக்கு உறுதுணையாக, மேலும் சில குறிப்புகள்


8


 • ஒமேக 3 சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதால் தலை முடி வறட்சி அடைவதை தவிர்க்கலாம்

 • வைட்டமின் A மற்றும் C மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்வதால் தலை முடி ஆரோக்கியமாகவும் பொலிவோடும் வளரும்


கேள்வி பதில்


1. சுருள் முடிக்கு நிரந்தரமானத் தீர்வு காண முடியுமா?


இது மரபு வழியில் உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் முந்தைய தலைமுறையினருக்கு இருந்தால், சற்று கடினமே.


2. எப்படி சரியான சுருள் முடிக்கான தீர்வை தேர்ந்தெடுப்பது?


ஒன்று, நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுக் குறிப்புகளில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டு முறைகளை தொடர்ந்து சில நாட்கள் முயற்சி செய்து பார்க்கலாம். அல்லது , நிபுணரை அணுகி அவரது ஆலோசனை பெற்று அதன் படி முயற்சி செய்யலாம்.


3. சுருள் முடியை பராமரிக்க அதிக நேரம் தேவையா?


இது நீங்கள் பராமரிக்கும் விதத்தை அல்லது தேர்ந்தெடுத்துள்ள வழியை பொறுத்தே கூற முடியும். எனினும், எளிய முறையிலும் உங்கள் சுருள் முடியை நீங்கள் பராமரிக்கலாம்.


4. இரசாயனங்களை முற்றிலும் தவிர்த்து விடுவதா?


பொதுவாக இராசயனங்கள் பயன் படுத்துவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. எனினும், உங்கள் பிரச்சனை அதிகமாக இருக்கும் சூழலில், நிபுணரின் ஆலோசனைப் படி தரமான, மற்றும் இராசயணம் குறைவாக இருக்கும் பொருளை பயன் படுத்துவது நல்லது.


பட ஆதாரம்  - பிக்ஸாபெ,பேக்செல்ஸ் ,இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.