ஒவ்வொருவருக்கும் ஒரு இயற்கை மனம் உண்டு. அதுபோல ஒவ்வொருவருக்கும், தனித்துவமான மணங்களில் வாசனை திரவியம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வாசனை உங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைந்தால்? அப்படி நீங்களாகவே பல வாசனை திரவியங்களை வீட்டிலேயே சோதனை செய்து உங்களுக்கென தனித்துவமான வாசனை திரவியத்தை (prepare at home) தயாரிக்கலாமே!
வாசனை திரவியம் பற்றி ஏற்கனவே தெரிந்திருப்பவர்களுக்கு, டாப் நோட்(top note), மிடில் நோட்(middle note), பேஸ் நோட்(base note) ஆகியவை தெரிந்திருக்கும். புதியவர்களுக்காக ஒரு சின்ன விளக்கம். நீங்கள் தயாரிக்க இருக்கும் உங்கள் சிக்நேச்சர் வாசனை திரவியத்தில்(signature perfume), இந்த மூன்றிலும் ஒன்று ஒன்று இருக்க வேண்டும் என்பதும், 3:5:2 என்ற விகிதத்தில் இந்த மூன்றையும் கலந்துகொள்ள வேண்டும் என்பதும் அடிப்படை நியதி. ஆனால் எப்படி வேண்டுமானாலும் தயாரிக்கலாம். உங்களுக்கு என்ன வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்! அப்போதுதானே அது உங்கள் சிக்நேச்சர் பெர்பியூம்!
- டாப் நோட்: முதலில் வெளிப்படும் வாசனை இது. விரைவில் காற்றில் கரைந்து விடும் தன்மை கொண்டது. ஆரஞ்சு, லெமன், மாதுளை போன்ற வாசனைகள் டாப் நோட்டின் கீழ் வரும்.
- மிடில் நோட்: வாசனை திரவியத்தின் இதயமாக கருதப்படுவது. சில மணி நேரங்கள் வரை இதன் வாசனை நீடிக்கும். பட்டை, மல்லிகை போன்ற வாசனைகள் இதில் அடங்கும்.
- பேஸ் நோட்: நீண்ட நேரம் இருக்கக்கூடிய வாசனை இது. முதலில் இந்த வாசனை பிடிக்காவிட்டாலும், பின்னர் மிக நன்றாக உணர வைக்கும் தன்மை கொண்டது. வெண்ணிலா, வுட் வாசனைகள் இதன் கீழ் வரும்.
வீட்டில் தயாரிக்கப்படும் வாசனை திரவியங்கள்/பெர்பியூம் வகைகள்
1. ரோல்-ஆன் வகை வாசனை திரவியம் எப்படி செய்வது ?
Pexels
ரோல்-ஆன் வகை வாசனை திரவியம் உடலில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தேய்த்துக்கொள்ளுமாறு உள்ள பாட்டில் என்பதால், சருமத்திற்கு குறைவான பாதிப்பை ஏற்படுத்தும். குறைவான பொருட்களைக் கொண்டு, நாசூக்கான வாசனையில் நீண்ட நேரம் நறுமணத்தைத் தரக்கூடியது.
அடிப்படைத் தேவையான பொருட்கள்:
1.10 மிலி அளவு கொண்ட(உங்களுக்கு விருப்பமான அளவு உள்ள) ரோலர் பாட்டில் அல்லது ரோல்-ஆன் டுயூப்.
2. கேரியர் எண்ணெய்(carrier oil) – அத்யாவசிய எண்ணெய்யை இலகுவாக்கி, சருமத்தில் ஏற்படுத்தும் எரிச்சலை கட்டுப்படுத்தும். சில வகையான கேரியர் எண்ணெய் இதோ:ஜோஜோபா எண்ணெய், கிரேப்சீட் எண்ணெய்(grapeseed oil), பாதாம் எண்ணெய்.இதை ஒன்லைனில் எளிதில் வாங்கிக்கொள்ளலாம்.
3. அத்தியாவசிய எண்ணெய் – இயற்கையான வாசனை தரும் திரவியம். அவற்றுள் சில,வெண்ணிலா, லாவெண்டர், லைம்.
4. பிப்பெட் – எண்ணைத் துளிகளை அளவாக பாட்டில்களில் ஊற்ற உதவும். இதற்கு பதிலாக ட்ராப்பர்(dropper) பயன்படுத்தலாம்.இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்
ரோல்-ஆன் கலவை 1
வெண்ணிலா(4 சொட்டுகள்) + கிளேரி சேஜ் (clary sage)(10 சொட்டுகள்) + மல்லிகை(4 சொட்டுகள்)
- இந்தப் பொருட்களை ஒரு ரோலர் பாட்டிலில் ஒவ்வொன்றாக ஒரு பிப்பெட் அல்லது ட்ராப்பர்(dropper) கொண்டு சேர்த்துக்கொள்ளுங்கள்.
- இதோடு, மேலே சொன்ன கேரியர் எண்ணெய்யை பாட்டில் நிறையும் வரை ஊற்றிக்கொள்ளுங்கள்.
- நன்றாக கலக்கி வைக்கவும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
ரோல்-ஆன் கலவை 2
Pexels
மல்லிகை(4 சொட்டுகள்) + பெர்காமோட்(bergamot)(10 சொட்டுகள்) + ஆரஞ்சு(4 சொட்டுகள்) – பெர்காமோட் எலுமிச்சை, கிச்சிலி இன வகை ஆகும். இந்த கலவை ஒரு சிட்ரிக் சார்ந்த வாசனையைத் தரும்.
ரோல்-ஆன் கலவை 3
ஸீ வுட்(10 சொட்டுகள்) + யூக்கலிப்டஸ்(4 சொட்டுகள்) + ஆரஞ்சு(4 சொட்டுகள்) – இந்தக் கலவை ஒரு வுட் வாசனையைத் தழுவி இருக்கும்.
இந்த மூன்று இணைப்புகளும், உங்களுக்கு ஒரு அறிமுகம் தான். உங்களுக்கு பிடித்திருந்தால், பின்பற்றிப்பாருங்கள். இல்லையெனில், உங்கள் உருவாக்கும் திறனைக் காட்டி, புதிது புதிதாக முயற்சி செய்து உங்களுக்கான சிக்நேச்சர் வாசனை திரவியத்தை (பெர்பியூம் ) தயாரிக்கவும்.
ஸ்பிரே பாட்டிலில் தயாரிக்கப்படும் வாசனை திரவியத்தை எப்படி செய்வது?
Pexels
தேவையான பொருட்கள்:
வாசனை தின்னர்
அத்தியாவசிய எண்ணெய் (பிரீசியா, யுனிகார்ன், வுட் சேஜ் மற்றும் உப்பு)
கண்ணாடி பாட்டில்
செய்முறை:
- ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது ஒரு ஸ்பிரே பாட்டிலில், வாசனை தின்னரை ஊற்றுங்கள்.
- பிறகு அதில் 3 சதவிகிதம் பிரீசியா(freesia) எண்ணெய், ஒரு சதவிகிதம் யுனிகார்ன் எண்ணெய் மற்றும் ஒரு சதவிகிதம் வுட் சேஜ் எண்ணெய் மற்றும் உப்பு(sea salt) ஆகியவற்றை கவனமாக சேர்த்துக்கொண்டு, சிறிது நேரம் அப்படியே விட்டுவிடுங்கள்.
- பின்னர் பயன்படுத்திப் பாருங்கள்.
உங்கள் சிக்நேச்சர் வாசனை திரவியத்தை தயாரிக்கும்போது நினைவில் இருக்க வேண்டியவை
Pexels
1. முதலில், என்ன வகையான வாசனை திரவியத்தை தயாரிக்கப் போகிறீர்கள் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு, திரவியத்தின் இதயமான மிடில் நோட் என்னவாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
3. அந்த இதயம் எதனால் அலங்கரிக்கப் பட வேண்டும், அதாவது டாப் நோட் நறுமணம் என்னவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தீர்மானிக்கவும்.
4. இதற்கு உகந்த ஒரு பேஸ் நோட் பயன்படுத்தி அனைத்தையும் நன்றாக ப்ளெண்ட் செய்யுங்கள்.
5. போதிய நேரம் கொடுத்து, நன்றாக செட் ஆக விடவும்.
6. முகர்ந்து, சோதித்துப் பாருங்கள், நீங்கள் எதிர்பார்த்த வாசனை நீங்கள் இணைத்த திரவத்தில் இருக்கிறதா?இன்னும் அதிக வாசனை வர வேண்டுமெனில் கூடுதலாக அந்த நோட் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நிச்சயம் இந்த விளக்கங்கள் உங்களை நல்ல சிக்நேச்சர் வாசனை திரவியத்தை தயார் செய்ய உதவும். உங்களுக்கான தனித்துவமான வாசனையை தேட ஆரம்பித்துவிட்டீர்களா?
மேலும் படிக்க – நாள் முழுவதும் அற்புதமான வாசனையோடு இருக்க சிறந்த வாசனைத்திரவிய வித்தைகள்
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!