வீட்டிலிருந்தே இனி ஹேர் கலர் செய்துக் கொள்ளலாம்!

வீட்டிலிருந்தே இனி ஹேர் கலர் செய்துக் கொள்ளலாம்!

பெண்களே முக அழகிற்கு மட்டுமில்லாமல் ஹேர் பராமரிப்பிற்கும் சற்று நேரம் ஒதுக்குங்கள். சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டையில் (colour) அமோனியா உள்ளது. இது உங்களது முடியை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் கெடுக்கிறது. வீட்டிலேயே உங்களுக்காக சில இயற்கையான ஹேர் டைகள் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


காபி உங்களது முடியை அடந்த கருப்பு நிறமாக மாற்ற உதவுகிறது. நீங்கள் டார்க் கலர் உடைகளை (colour) அணிந்து வெளியே செல்லும் போது உங்களது முடி அடர்ந்த கருமை நிறத்தில் இருந்தால் பார்க்க நன்றாக இருக்கும். இதற்கு காபியை திக்காக காய்ச்சிக் கொள்ள வேண்டும், இது ஆறிய பின்னர் இரண்டு ஸ்பூன் காபி தூள் போட்டு தலையில் பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசிவிட வேண்டும். கண்டிஷ்ணருக்கு பதிலாக வினிகர் உபயோகித்தால் நிறம் நீண்ட நாட்கள் அப்படியே இருக்கும்.


உங்களுக்கு மிக அடர்ந்த நிறம் (colour) வேண்டாம். இயற்கையான கருமை நிறம் (colour) போதும் என்றால், நீங்கள் டீ பேக்கை டிரை செய்யலாம். இது நரை முடிகளை மறைக்க உதவுகிறது. இதற்கு 2-3 டீ பேக்குகளையோ அல்லது அதற்கு சமமான டீத் தூளையோ எடுத்து, நீரில் நன்றாக கொதிக்க விட வேண்டும். இதனை கண்டிஸ்னருடனோ அல்லது தனியாகவோ தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பிறகு கழுவினால், உங்களுக்கு தேவையான கருமை நிறம் (colour) கிடைத்துவிடும்.


homemade hair colour003


Also Read: இயற்கையான க்ளென்சர் தயாரிக்கும் முறை


நீங்கள் பல வண்ணங்களில் முடி இருக்க வேண்டும் என விரும்பினால், அதற்காக ஹேர் கலரிங்(colour) செய்து முடியின் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையாகவே நிறங்களை பெறலாம். அது எப்படி என்று காணலாம்.


நீங்கள் முடியில் சிவப்பு நிறல்(colour) நிழல் தெரிய வேண்டும் என்றால் அதற்கு சாமந்தி, ரோஜா இதள் மற்றும் செம்பருத்தி இதள்கள் பயன்படும். இவற்றை சூடான நீரில் காய்ச்சினால் அதன் நிறம் வெளிப்படும். இந்த நீரை முடிக்கு ஸ்பேரே அல்லது அப்ளை செய்து முடிந்தால் சூரிய ஒளியில் சிறிது நேரம் உலர்த்தினால், இயற்கையான நிறம் கிடைக்கும். இதனை அடிக்கடி கூட செய்யலாம், இதனால் நல்ல பலன் கிடைக்கும்.


மருதாணி காலம் காலமாக முடி, கை, கால், நகங்களுக்கு நிறமூட்டவும், குளிர்ச்சியை கொடுக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சிவப்பு - ஆரஞ்ச் நிறத்தை(colour) முடிக்கு கொடுக்கும். இரண்டு டேபிள் ஸ்பூன் மருதாணி பௌடர், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வினிகரை ஒன்றாக கலந்து தலைமுடிக்கு அப்ளை செய்து 2 முதல் 6 மணி நேரம் இருந்தால் முடிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.


ஹேர் கலரிங்(colour) பண்ணும் போது கவனமாக இருங்கள். கண்டீஷனர் பயன்படுத்த மறக்காதீர்கள் பார்லரில் சொல்லும் அனைத்து விடயங்களையும் கட்டாயம் பாலோ பண்ணுங்கள்.


homemade hair colour004
மேலும் சில குறிப்புகள்


1. தினசரி குளிக்கும் பொது நாம் எலும்பிச்சை சாரை தேய்த்து குளித்துவந்தால் வெறும் 5 நாள்களில் நமது தலைமுடியின் நிறம் மாறும். 


 2. கெமோமில் தேயிலை-யை (chamomile tea) தினசரி தலையில் குளிக்கும்போது நீங்கள் உபகோகிக்கும் ஷாம்புவுடன் தேய்த்து வந்தால் நமது தலைமுடியின் வண்ணம் மாறும். 


3. ருபார்ப் (Rhubarb) பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து தலையில் தீய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வந்தால் நமது தலைமுடியின் நிறம் மாறும்.


காதல் பிரேக்கப் ஆவதற்கு முக்கிய காரணங்கள்


பீரியட்ஸ்சின் போது உடலுறவு சரியா? பெண்கள் என்ன சொல்கிறார்கள்!


தினசரி வெந்தயம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் நன்மைகள்!


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo