அனுஷ்கா ஷெட்டியின் அழகு ரகசியங்கள்!

அனுஷ்கா ஷெட்டியின் அழகு ரகசியங்கள்!

பெண்களை மையமாக கொண்ட கதைகளில் அதிகமாக நடித்தவர் அதுவும் வரலாற்று கதைகளில் சவாலான கதாபாத்திரங்களை கையாண்டவர் என்றால் அது அனுஷ்கா ஷெட்டி தான். (Anushka sheddy)

தமிழில் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் இவரை கொண்டாடிய விதம் அனுஷ்காவிற்கு பிடித்து போக அவர் தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தினார்.


கொரிய பெண்களின் "க்ளாஸி லுக்" சருமம் உங்களுக்கும் வேண்டுமா! இந்த பத்து ரகசியங்களை மட்டும் பின்பற்றுங்கள் !


anush


தமிழ் தெலுங்கு மட்டும் அல்லாமல் எந்த மொழியாக இருந்தாலும் என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அனுஷ்கா அசால்டாக அதனை தனது தோள்களில் தாங்கி அந்த படத்தை வெற்றியை நோக்கி கொண்டு போவதில் வல்லவர். சமீபத்தில் இவர் நடித்த பாகுபலி உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது.


இது தவிர வேறொரு முக்கிய விஷயத்தில் அனுஷ்கா பற்றி பார்க்க வேண்டும் என்றால் அவரது பிட்னெஸ். பிட்னெஸ் தான் அவரது காதல் என்று அவரே கூறியிருக்கிறார். தனது உயரத்துக்கு ஏற்ற அளவான எடையை வலிமை தரும் ஆரோக்கியமான உடல்வாகை அவர் எப்படி பராமரிக்கிறார் என்பதை பார்க்கலாம்.


வரலட்சுமி உள்பட அனைவரையும் பயன்படுத்தி கொண்டு கழட்டி விடுவதில் விஷால் வல்லவர் - நடிகரின் வேதனை


யோகா


அனுஷ்கா ஒரு யோகா ஆசிரியை என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் யோகாவை மற்ற நடிகைகளுக்கும் கூட சிபாரிசு செய்வதும் கற்று கொடுப்பதும் செய்திருக்கிறார். சிறு வயதில் இருந்து யோகா பழகிய அனுஷ்காவிற்கு சினிமாவுக்கு வரும் முன்னர் யோகாதான் எல்லாம்.


"பட்டுப்போன்ற கைகள் வேண்டுமா !இதை மட்டும் தொடர்ந்து செய்து வாங்க !"கடுமையான ஒர்க் அவுட்ஸ்


சினிமா தனது ஸ்டாமினாவை அதிகம் உறிஞ்சும் இடம் என்பதை உணர்ந்திருந்த அனுஷ்கா அதற்காக தினமும் 30 நிமிடங்களில் கடுமையான ஒர்க் அவுட் பயிற்சிகளை செய்வார். இதற்காக தனது யோகா பயிற்சிகளை அதற்கு முன்னமே முடித்து விடுவார்.


"கண் கருவளையங்களால் கவலையா ! பத்தே நாட்களில்
கருவளையங்களை நீக்கும் அற்புத பேக்!"


தண்ணீர் தண்ணீர்


அழகான உடல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தண்ணீர் மிக அவசியமானது என்று அனுஷ்கா நம்புகிறார். தினமும் ஆறு லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த பாகுபலி நடிகை.


செல்லுலாயிட் பெண்களின் ஸ்லிம் ரகசியங்கள்!உணவு ஆரோக்கியம்


அவரது மினுமினுப்பான ஒளிரும் முகத்திற்கு காரணம் அதிக அளவில் அவர் தேன் சாப்பிடுவதுதான். வெறும் வயிற்றில் அல்லது காலை உணவுடன் இதனை சாப்பிடுகிறார். அவரது பொதுக் பொதுக் மிருதுவான மென்மையான தேகத்திற்கு தேன் தான் காரணம்.


மினுமினுப்பான முகம் முதல்.. தழும்புகள் அற்ற தேகம் வரை.. பயோ ஆயிலின் பலவிதமான பலன்கள்!நேர மேலாண்மை


அனுஷ்கா நேரத்தை மிக சரியாக பின்பற்றுபவர். சரியான நேரத்தில் சாப்பிடுகிறார். சரியான நேரத்திற்கு உறங்க செல்கிறார். இரவு எட்டு மணிக்கு தனது இரவு உணவை முடித்து விடுகிறார். உறங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்பு சாப்பிட்டு விடுவது ஜீரணத்தை சுலபம் ஆக்கும். பிட்னெஸ் பராமரிக்க உதவி செய்யும்.புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்                     


---                                       


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                        


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.