பெருஞ்சீரகத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்! - (Fennel Seeds Benefits In Tamil)

பெருஞ்சீரகத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்! - (Fennel Seeds Benefits In Tamil)

அஞ்சறைப் பெட்டி! இது நாம் அனைவரும் பிரபலமாகக் கேள்விப்பட்ட ஒரு சொல். உங்கள் அனைவரின் வீட்டிலும் நிச்சயம் இந்த அஞ்சறைப் பெட்டி இருக்கின்றதோ இல்லையோ, அதில் உள்ளடங்கும் ஐந்து முக்கிய பொருட்கள் அல்லது மூலிகைகள், ஐந்து டப்பா வடிவத்திலாவது உங்கள் வீட்டில் இருக்கும். இந்த ஐந்தறை பெட்டியின் உள்ளடக்கத்தில் பெருஞ்ஜீரகமும் ஒன்று. ஐந்தறை பெட்டியில் மிளகு, கடுகு, வெந்தயம், சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் (அதாவது சோம்பு) இருக்கும். எழறைப் பேட்டி மற்றும் இன்னும் சில பாரம்பரியம் மிகுந்த வீடுகளில் இன்றும் நீங்கள் ஒன்பதறைப் பெட்டிகளையும் சமயலறையில் பார்க்கலாம். இதில் குறிப்பிட்ட அந்த ஐந்து முக்கிய போர்த்களோடு, மஞ்சள், பெருங்காயம், கருஞ்சீரகம், மற்றும் ஓமம் போன்ற பொருட்களும் இருக்கும். ஆனால் இன்றைய நவீன மயமான இந்த உலகத்தில் நாம் அனைவரும் ஆன்லைனில் ஆடர் செய்து சுலபமாக நம் வேலையை முடித்துக் கொள்கிறோம்.


நீங்கள் பெருஞ்சீரகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள இங்கே சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக!


பெருஞ்சீரகத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள்


பெருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்


பெருஞ்சீரகத்தால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?


சரும பாதுகாபிர்க்கு சில எளிய குறிப்புக்கள்


உடலுக்கு பெருஞ்சீரகத்தால் கிடைக்கும் நன்மைகள்


பெருஞ்சீரகத்தின் பயன்கள்


பெருஞ்சீரகத்தை அதிகம் பயன் படுத்துவதால் ஏற்படும் உபாதைகள்


எப்படி பெருஞ்ஜீரகத் தேநீர் செய்வது?


கேள்வி பதில்


பெருஞ்சீரகத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் (Facts You Need To Know About Fennel Seeds) 


Untitled design %281%29


பெருஞ்சீரகம் (Fennel) ஒரு நல்ல மனம் நிறைந்த மூலிகை. இதன் மலர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது ஒரு காலத்தில் மத்திய தரைக்கடல் பகுதிகளில் மட்டும் இருந்தாலும், இன்று உலகளவில் அனைத்து இடங்களிலும் காண முடிகிறது மேலும் அனைத்து மக்களாலும் பயன்படுத்தப் படுகிறது. பெரும்பாலான உணவில் இந்த பெருஞ்சீரகம்ம் சேர்க்கப்படுகிறது.  பெருஞ்சீரகத்தில் இருந்து கிடைக்கப் படும் எண்ணை மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது பெரும்பாலும் தமிழர்களால் பின்பற்றப் படும் சித்த வைத்தியத்தில் பயன்படுத்தப் படுகிறது. பெருஞ்சீரகத்தின் இலைகள், விதைகள், பூக்கள் மற்றும் தண்டுப் பகுதி மற்றும் வேர்களும் பல வகையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த செடி சுமார் 4 முதல் 5 அடி உயரம் வரை வளரும். உங்கள் அடுப்பங்கறைத் தோட்டத்தில் இதை வளர்த்தால் நல்ல அழகான சூழலும், அந்த பகுதியில் நல்ல நறுமணமும் ஏற்படும்.


Also Read About சருமத்திற்கு வேப்ப எண்ணெய்


பெருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் (Nutritional Value)


பெருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் ஏராளம்.


 • இதில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளது.

 • இதில் நார் சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், செம்பு, பாஸ்பரஸ் மற்றும் ப்போலேட் சத்துக்கள் நிறைந்துள்ளது.

 • கால்சியம், இரும்பு மற்றும் நியாசின் சத்துக்களும் இருக்கின்றது


1௦௦ கிராம் பெருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:


 • 31 கலோரிக்கள்

 • 0.2 கிராம் மொத்தக் கொழுப்பு

 • 52 மில்லிகிராம் சோடியம்

 • 414 மில்லிகிராம்  பொட்டாசியம்

 • 7 கிராம் கார்போஹைட்ரேட்

 • 1.2 கிராம் புரதம்

 • 2% வைட்டமின் A

 • 0.04 கிராம் கால்சியம்

 • 20% வைட்டமின் C

 • 3% இரும்பு


பெருஞ்சீரகத்தால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? (Beauty Benefits Of Fennel Seeds -  Sombu Benefits In Tamil)


உடலுக்கு மட்டுமல்லாது, பெருஞ்சீரகம் (fennel) சருமம் மற்றும் தலை முடி பராமரிபிற்கும் பெரிதும் உதவுகின்றது. இதில் அதிகம் ஆக்ஸிஜனேற்றம் இருப்பதால், சருமத்திற்கு தேவையான போஷாக்கை பெற உதவுகின்றது.. உங்கள் சருமத்திற்கு பெருஞ்சீரகம் எப்படி உதவுகின்றது என்பதை இங்கே பார்க்கலாம்


Also Read: Benefits Of Seasame Seeds You Must Know In Tamil


1. பருக்களை போக்கும் (Reduce Pimples)


12


Also Read: இலவங்கப்பட்டை தூள் நன்மைகள்


பெருஞ்சீரகத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அதிக அளவில் இருப்பதால் முகத்தில் ஏதாவது பக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக போக்க உதவும். மேலும் இதனால் உங்கள் சருமம் நல்ல தெளிந்த, சீரான தோற்றத்தை பெறுகின்றது.


2. செளுலைட் (Reduce Skin Problems)


டையூரிடிக் பண்புகள் பெருஞ்சீரகத்தில் இருப்பதால் இது தசைகளில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சு தன்மைகளை போக்க உதவுகின்றது. பெருஞ்சீரகத்தை பசை போல அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகள் நாளடைவில் குறைவதை காணலாம்.


3. தலை முடி பராமரிபிற்கு பெருஞ்சீரகம் (Good For Hair)


சரும பாதுகாப்பிற்கு மட்டுமல்லாது, தலை முடி நன்கு வளரவும் பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகின்றது. இது முடி உதிர்வை குறைத்து நல்ல அடர்த்தியை பெற உதவுகின்றது. இதில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் இருப்பதால், தலை முடி வேர்கள் நன்கு பற்றிக் கொள்ள உதவுகின்றது. இதனால் முடி உதிர்வு வெகுவாக குறைகின்றது.


அவகேடோவின் நன்மைகள்


13


4. சருமத்தை சுத்தப் படுத்தும் (Cleanse The Skin)


பெருஞ்சீரகம் (Fennel) ஒரு நல்ல க்லென்சராக செயல் படுகின்றது. இதில் சருமத்தில் இருக்கும் துளைகளில் இருக்கும் அழுக்கு மற்றும் அசுத்தமான தூசி போன்றவற்றை அகற்ற உதவுகின்றது. மேலும் அதிகமாக தேங்கி இருக்கும் எண்ணை பசையையும் அகற்ற உதவுகின்றது.


5. இளமையான தோற்றம் (Youthful Skin)


பிராண வாயுவை திருடும் ப்ரீ ராடிகல்ஸ்கலை பெருஞ்சீரகத்தில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றம் தடுகின்றது. இதனால், சருமத்திற்கு பிராண வாயு அதிகம் கிடைகின்றது. இது உங்கள் சருமம் நல்ல இளமையை பெற உதவுகின்றது. இதனால் வயதாவதால் ஏற்படும் சுருக்கும், மற்றும் மெல்லிய கோடுகள் முகத்தில் மருந்து விடுகின்றது.


Also Read About வெல்லம் என்றால் என்ன


சரும பாதுகாபிர்க்கு சில எளிய குறிப்புக்கள் (Tips To Use Fennel Seeds For Skin And Hair Care )


14


செளுலைடுகளை போக்க (To Get Rid Of Cellulite)


 • பெருஞ்சீரகப் பொடியில் சிறிது தண்ணீர் விட்டு பசை போல செய்து கொள்ளவும்

 • இதனை முகத்தில் பாதிக்கப் பட்ட இடங்களில் தடவி மிதமாக மசாஜ் செய்யவும்

 • காய்ந்த பின் தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்


இளமையான தோற்றம் பெற (To Look Younger)


 • சிறிது தண்ணீரில் 2 தேக்கரண்டி பெருன்ஜீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

 • பின் இந்த சாறு குளிர்ந்த பின் அதில் சிறிது தயிர் சேர்க்கவும்

 • இதனை மிக்ஸ்சியில் போட்டு நன்கு அடிக்கவும்

 • இந்த கலவையை முகத்தில் பூசி, மிதமாக மசாஜ் செய்யவும்

 • இது நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

 • உங்கள் சருமம் மிருதுவாகவும், பலபலப்பாகவும் இருப்பதை காணலாம்


Also Read About கெமோமில் பக்க விளைவுகள்


முடி வளர்ச்சிக்கு பெருஞ்சீரகத்தை எப்படி பயன் படுத்துவது? (How To Use Fennel For Hair Growth)


 • சிறிது தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு அதில் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்க்கவும்.

 • இதை நன்கு கொதிக்க விடவும்

 • அதன் பின் நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்

 • இந்த பெருஞ்சீரகம் நீர் ஆரிய பின் தலையில் தேய்த்து சிறிது நேரம் விட்டு விடவும்

 • பின் தலை முடியை தண்ணீரில் அலசி விடவும்

 • இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் விரைவாக பலன் கிடைக்கும்


வலுவான வேர்களுக்கு (For Stronger Roots)


 • சிறிதளவு பெருஞ்சீரகம் தூள் எடுத்துக் கொள்ளவும்

 • இதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும்

 • இந்த கலவையை தலையின் வேர் பகுதியில் நன்கு தேய்க்கவும்

 • சிறிது நேரம் கழித்து தண்ணீரில் அலசி விடவும்


Also Read About பெண்களின் ஆரோக்கியம்


உடலுக்கு பெருஞ்சீரகத்தால் கிடைக்கும் நன்மைகள் (Fennel Seeds (Perunjeeragam) Health Benefits In Tamil) 


பெருஞ்சீரகம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பலன் பெறுகிறார்கள். தினமும் நம் சமையலில் ஏதாவது ஒரு வகையில் இதனை சேர்த்துவிடுவதால், இயல்பாகவே நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடுகிறது.


பெருஞ்சீரகத்தின் நன்மைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இங்கே, சில தகவல்கள் 


1. பொட்டாசியம் நிறைந்துள்ளது (Rich In Potassium)


15


உடலுக்கு பொட்டாசியம் மிக முக்கியமாகத் தேவைப்படும் பொருளாக உள்ளது. இது உடலில் உள்ள நீர் மற்றும் அமிலத்தின் அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இரத்த குழாய்களில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இதனால் இரத்த அழுத்தத்தின் அளவு உடலில் சீராக இருக்கிறது. அதிக இரத்த அழுத்தம் உடல் நலத்திற்கு ஆபத்தை உண்டாக்கக் கூடும். இதனால் மார்படைப்பு மற்றும் பக்குவாதம் ஏறப்டலாம். மேலும் பொட்டாசியம் உங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது. அதனால் நீங்கள் பெருஞ்சீரகத்தை அதிகம் பயன் படுத்துவதால் உங்கள் மன செயல்பாடு மற்றும் அறிவாற்றல் திறன்கள் அதிகரிக்கிறது.


 2. இரத்த சோகையை குணப்படுத்தும் (Cure Flaws In Blood)


பெருஞ்சீரகத்தில் இரும்பு மற்றும் ஹிஸ்டிடெயின் என்று அழைக்கப்படும் அமினோ அமிலம் இருக்கின்றது. இது ஹீமோகுளோபின் (செந்நிற இரத்த அணுக்கள்) உற்பத்தியாக உதவுகிறது.  ஹீமோகுளோபினுக்குத் தேவையான முக்கியப் பொருள் இரும்பு. இதனால் உடலில் உங்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டிருந்தால், அதனை எளிதில் குணப்படுத்த பெருஞ்சீரகம் உதவும்.


3. ஜீரணத்தை சீர்படுத்தும் (Improves Digestion)


குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏதாவது அஜீரண பிரச்சனை ஏற்பட்டிருந்தால் இந்த பெருஞ்சீரகம் அதனை குணப்படுத்தும். இதில் உங்கள் உடலுக்குத் தேவையான எண்ணை சத்து இருப்பதால் செரிமான சாறுகள் மற்றும் நொதிகள் வயிற்றில் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் உங்கள் வயிற்றில் ஏதாவது புண், அல்லது அஜீரண பிரச்சனை இருந்தால் அதனை எளிதாக குணப்படுத்திவிடும்.


4. மாதவிடாயை சீர்படுத்தும் (Maintain Menstral Cycle)


7


இன்று பெரும்பாலான பெண்கள் பல காரணங்களால் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதற்கு சரியான தூக்கமின்மை, விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், மன அழுத்தம் மற்றும் உடலில் ஏற்படும் சீரற்ற மாற்றங்களே காரணம். எனினும், பெருஞ்சீரகம் உங்கள் மாதவிடாய் பிரச்சனைகளை சீர்படுத்தி சரியான இடைவேளையில் ஏற்பட உதவுகிறது. 


மேலும் படிக்க - டம்பொன்ஸ் , மென்ஸ்ட்ருல் கப் (menstrual cup) அல்லது நாப்கின்களா ? வசதியும் விவரமும் !


5. மலமிளக்கியாக செயல்படும் (Act As Laxative)


பெருஞ்சீரகம் ஒரு நல்ல மலமிளக்கியாக செயல் படுகிறது. அது, மல சிக்கல், வயிற்று வலி, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி என்று மேலும் மற்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இந்த தன்மைகளோடு உங்களுக்கு மல சிக்கல் இருந்தால், அல்லது இறுகிய மலம் ஏற்படும் பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய இது உதவுகிறது. பித்த மற்றும் இரைப்பை சாறுகளை சுரக்க வைத்து மலசிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.


6. உடலில் உள்ள கொழுப்பு சத்தை கட்டுப்படுத்தும் (Control Body Fat)


கருஞ்சீரகத்தில் அதிகம் நார் சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு சத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்து, அதிகம் உள்ள கொழுப்பை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது. உடலில் அதிக அளவு கொழுப்பு இருந்தால் அது பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இருதய நோய், மார்படைப்பு,  பக்கவாதம் மற்றும் ஆர்த்ஸ்க்ரோக்ரோஸிஸ் போன்ற நோய்களை வரவிடாமல் காக்கிறது. உடம்பில் கொழுப்புத் தேவையான அளவு மட்டுமே இருக்க இந்த பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது.


7. நல்ல தூக்கம் (Good For Sound Sleep)


8


பெருஞ்சீரகம் தூக்கமின்மை பிரச்சனைகளை சரி செய்து நல்ல தூக்கம் வர உதவுகிறது. இதனால் மனமும் உடலும் புத்துணர்வு பெறுகிறது. இதனை நீங்கள் தேநீர் போல தினமும் அருந்தி வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.
கருஞ்சீரகம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளையும் குறைக்கிறது. ஆயுர்வேதம் மற்றும் சித்த வைத்தியத்தில் பெருஞ்ஜீரகத்திற்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது. ஏறலத்தால அனைத்து மருந்துகளிலும் இது சேர்க்கப்படுகிறது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப்படுத்த உதவுகிறது.


8. பெருங்குடலில் இருக்கும் காற்றை நீக்கும் (Remove Air From Colon)


பெருஞ்சீரகத்தில் அஸ்பார்டிக் அமிலம் இருப்பதால் இது ஒரு நல்ல காற்று நீக்கியாக செயல்படுகிறது. உங்கள் வயிற்றில் இயல்பான அளவிற்கு அதிகமாக காற்று நிறைந்திருந்தால் வலி ஏற்படக்கூடும். இந்த சமயத்தில் நீங்கள் பெருஞ்சீரகத்தை தண்ணீரில் சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அதன் சாரை அருந்தினால், வயிற்றில் இருக்கும் தேவையற்ற அல்லது அளவிற்கு அதிகமான வாயு வெளியேறும். இதை அனைத்து வயதினரும் முயற்சிக்கலாம்.


9. தாய்பால் அதிகம் சுரக்க உதவும் (Help In Secretion Of Breast Milk)


தாய்பால் கொடுக்கும் பெண்கள் பெருஞ்சீரகத்தை உணவில் சேர்த்து பயன்படுத்தி வந்தால், சீராக தாய்பால் சுரக்கும். இதனால் குழந்தைக்கும் தேவையானத் தாய்பால் கிடைக்கும். பெருஞ்சீரகம் தாய்பால் அதிக அளவில் சுரக்க உதவுகிறது. இது தாய் மற்றும் சேய், இருவருக்கும் நல்ல ஆரோக்கியத்தைப் பெற உதவுகிறது. .


10. கண் பார்வையை மேம்படுத்தும் (Improves Eye Sight)


9


பெருஞ்சீரகத்தில் அதிக அளவு வைட்டமின் A சத்து நிறைந்துள்ளதால் உங்கள் கண்களுக்குத் தேவையான சத்துக்களை தருகிறது. இதனால் கண்களில் பசும்படலம் (க்ளுக்கோமா) ஏற்படாமல் தடுக்கவோ அல்லது ஏற்பட்டிருந்தால் அதன் தாக்கத்தை குறைக்கவோ, குணப்படுத்தவோ உதவுகிறது.


11. அமிலநீக்கியாக செயல் படும் (Act As A Acidifier)


வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை மாற்றங்களை சீர்படுத்த இந்த பெருஞ்சீரகம் உதவும். இதனால் உங்கள் உணவு பழக்கம் சீற்படுத்தப்படுவதோடு, உடல் எடையும் சீரான அளவிற்கு வர உதவும். இந்த பண்புகளால், பெருஞ்சீரகம் ஒரு அமில நீக்கியாக மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  


மேலும் படிக்க - பிஸியான பெண்மணியா?! போதுமான ஊட்டச்சத்தை பெற, உங்களுக்கான சிறந்த ப்ரோடீன் ஷேக்ஸ்


பெருஞ்சீரகத்தின் பயன்கள் (Uses Of Fennel Seeds)


10


 • பெருஞ்சீரகம் ஒரு மூலிகைப் பொருள். இது குறிப்பாக குழந்தைகளுக்கு, அதிலும் கைகுழந்தைகளுக்கு ஏதாவது உடலில் உபாதைகள் ஏற்பட்டால் சிகிச்சைத் தர பயன்படுத்தப் படுகிறது.

 • மேலும் பெரியவர்களும் இதனை பல மருத்துவ தேவைகளுக்காக பயன் படுத்தி வருகிறார்கள்.

 • சுவாச பிரச்சனை மற்றும் சுவாசக் குழாயில் ஏற்படும் தொற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்த இது பயன் படுத்தப்படுகிறது

 • இருமல் மற்றும் தொண்டையில் வலி மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தால் அதை குணப்படுத்த இது பயன் படுத்தப்படுகிறது

 • குழந்தை பெற்ற தாய்மார்கள், குழந்தைக்கு நல்ல தாய்பால் சுரந்து பால் கொடுக்க இந்த பெருஞ்சீரகம் பயன் படுத்தப்படுகிறது

 • கருவுற்றிருக்கும் தாய்க்கு குழந்தை எளிதாக பிரசவிக்க இந்த பெருஞ்சீரகம் லேகியமாக வேறு பொருட்களோடுகலந்து தரப்படுகிறது. மேலும் இது சாராகவும் தரப் படுகிறது

 • ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படாமல் இருக்கவும் மற்றும் அது குறித்த பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது

 • ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் நிறைந்துள்ளது

 • பெருஞ்சீரகம் ஒரு நல்ல வலி நிவாரணியாக பயன் படுத்தப்படுகிறது

 • உடலில் ஒவ்வாமை ஏதாவது ஏற்படிருந்தால் அதனை குணப்படுத்த இது பயன் படுத்தப்படுகிறது

 • சூரியக் கதிர்களால் ஏற்பட்டும்சரும பர்ச்சனைகளை சரி செய்ய இது உதவுகிறது

 • பெருஞ்சீரகம் ஒரு நல்ல மனமூட்டியாகவும் பயன் படுத்தப்படுகிறது


பெருஞ்சீரகத்தை அதிகம் பயன் படுத்துவதால் ஏற்படும் உபாதைகள் (Side Effects Of Fennel Seeds)


 • பெருஞ்சீரகம் பெரிதாக எந்த உபாதைகளையும் ஏற்படுத்துவதில்லை. எனினும் காரட், செலெரி மற்றும் மக்வோர்ட் போன்ற காய் வகைகள் உங்களுக்கு உபாதையை ஏற்படுத்தும் என்றால், இந்த பெருஞ்ஜீரகமும் உங்களுக்கு உபாதையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

 • பெருஞ்சீரகத்தை அதிக அளவு உட்கொள்ளும்போது உங்கள் சருமத்தில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.இந்த உபாதைகள் பெரும்பாலான மக்களுக்கு ஏற்பட்டதாக எந்த சான்றுகளும் இல்லை. அதனால் பெருஞ்சீரகத்தால் அதிக நன்மைகளே உள்ளன. இதனை நீங்கள் உங்கள் உணவில் தினமும் சிறிதளவு சேர்த்து பயன் படுத்தி வந்தால் நல்ல ஆரோக்கியத்தையும், பலன்களையும்ப் பெறலாம்.


எப்படி பெருஞ்ஜீரகத் தேநீர் செய்வது? (How To Make Fennel Tea)


11


இந்தத் தேநீரை நீங்கள் தினமும் காலையில், அல்லது மாலையில், அருந்தலாம். இது குறிப்பாக கர்பிணிப் பெண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பெருஞ்ஜீரக தேநீர் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்:


 • தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்

 • இதனுடன் ஒரு தேக்கரண்டி அல்லது தேவைக்கேற்ப பெருஞ்சீரகத்தை எடுத்துக் கொண்டு இடித்து பொடி செய்துக் கொள்ளவும்

 • இந்த பொடியை தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் சேர்த்து மேலும் நன்கு கொதிக்க விடவும்.

 • பின் அதனை இரக்கி அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தலாம்


கேள்வி பதில் (FAQ's)


1. பெருஞ்சீரகம் உடல் எடையை குறைக்க உதவுமா?


இது உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுவதால் நிச்சயம் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.


2. பெருஞ்சீரகத்தை நீங்கள் பயன் படுத்தலாமா?


இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன் படுத்தலாம். இதற்கு, வயது, சூழல், உடல் நிலை என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. இது உங்கள் உடலுக்கு அதிக நன்மைகளை மட்டுமேத் தரும்.
 


3.பெருஞ்ஜீரகத் தேநீரை தினமும் அருந்தலாமா?


அது போன்று எந்த கட்டுப்பாடும் கிடையாது. நீங்கள் இதனை தினமும் அருந்தி வர உங்களுக்கு மேலும் பல நன்மைகளே கிடைக்கும். மேலும் உங்கள் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் சில நாட்களிலேயே உணருவீர்கள்.


மேலும் படிக்க - வால்நட் (அக்ரூட்) – நற்பலன்கள் மற்றும் அதிகம் உண்பதால் ஏற்படும் உபாதைகள்


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.