பெண்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் குறிப்புகள்!

பெண்களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் மற்றும் குறிப்புகள்!

பெண்களின் உடல் நலத்தின்(health) மீது சற்று அதிகமாகவே கவனம் தேவைப் படுகின்றது. ஒரு குடும்பத்தில், முக்கிய பொறுப்பில் இருக்கும் அம்மாவோ அல்லது மனைவியோ ஒரு நாள் உடல் நலம் இன்றி குன்றி விட்டாலே, அந்த வீடே செயல் இழந்து நின்று விடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவளை சார்ந்தே இருகின்றனர். அதிலும், குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், இன்னும் அதிகமாகவே பொறுப்புகளை சுமக்கின்றனர். இந்த வகையில், பெண்களின் உடல் நலத்தை பற்றி அந்த பெண்ணோ, அல்லது அவரை சார்ந்தவர்களோ எவ்வளவு அக்கறை செலுத்துகின்றனர் என்பதை பொறுத்தே அவள் ஆரோக்யமாகவும், சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றாள்.

Table of Contents

  பெண்களின் உடல் நல பிரச்சனைகளுக்கு காரணம்(Causes Of Women Health Issues)

  வீட்டில் பல பொறுப்புகளுடன் இருக்கும் குடும்ப தலைவிகளோ, அல்லது அலுவலகம் செல்லும் பெண்களோ, ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு உடல் நல பிரச்சனைகள் வருகின்றது. இன்றைய மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை மேலும் அவர்களுக்கு பல புது நோய்களை அறிமுகப்படுத்திக் கொண்டும் இருகின்றது. மேலும் சத்தற்ற, மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களும் பெண்களின் உடலை பெரிதும் பாதிக்கின்றது. என்னதான் இன்று பெண்கள் தங்களது உடல் நலத்தின் மீது விழிப்புணர்வு கொண்டிருந்தாலும், ஏதாவது ஒரு வகையில் அவர்கள் பாதிப்பு அடைகின்றனர். இதில் குறிப்பாக எலும்பு சம்பதப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் குறித்த பிரச்சனைகள் பெரும் அளவு அவர்களை பாதிகின்றது.  பல பிரச்சனைகள் பெண்களை மரபு ரீதியாகவும் பாதிகின்றது. இன்றைய நவீன காலத்து பெண்கள் புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் என்ற தீய பழக்கங்களுக்கும் அடிமையாகி, மேலும் பல பிரச்சனைகளை விலைக்கு வாங்குகின்றனர்.

  பெண்களின் உடல் நல பிரச்சனைகளுக்கு, மேலும் சில காரணங்கள் இங்கே:
  ·         அதிகரித்துக் கொண்டு போகும் வயது

  ·         குடும்ப மருத்துவ வரலாறு

  ·         ஹோர்மோன்கள் குறைபாடு

  ·         மார்பக புற்றுநோய் அறிகுறி

  ·         வாழ்க்கை முறை பழக்கங்கள்

  ·         அதிக உடல் எடை

  ·         குறைந்த உடல் உழைப்பு

  ·         குடி பழக்கம் / புகை பிடிக்கும் பழக்கம்

  ·         வேலை சுமை மற்றும் மன அழுத்தம்

  ·         இதனால் ஏற்படும் தூக்கமின்மை

  ·         நாள் முழுவதும் ஓய்வற்ற தொடர்ச்சியான உழைப்பு

  பெண்களின் உடல் நலத்தின் முக்கியத்துவம்(Importance Of Women Health)

  ஒரு மருத்துவ ஆய்வின் படி, இரண்டில் ஒரு பெண்ணுக்கு ஏதாவது ஒரு உடல் நல பிரச்சனைகள் இருகின்றது. இது அவள் சார்ந்த குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்தின் எதிர்காலத்திற்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். பெண்கள் தங்களது உடல் நலத்தின்(health) மீது கவனம் செலுத்தாமல் போவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக கருதப் படுகின்றது.

  • நேரமின்மை
  • உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது
  • பெரும்பாலான பெண்கள் தங்களது உடல் நலத்தின் மீது பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. அதற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதும் இல்லை. மேலும் சிலர் நேரமின்மை காரணமாக போதிய கவனிப்பு தருவதில்லை. இதனாலும் பெரும் அளவு பெண்கள் உடல் நல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
  • அனைத்து பெண்களும் தங்களது உடல் நலத்தின் மீது முதல் கவனமும், முக்கியத்துவமும் கொடுத்தால் மட்டுமே, அவர்களால் தொடர்ந்து தங்களது குடும்பத்தையும், அலுவலக பணிகளையும் சிறப்பாக செய்ய முடியும். மேலும் இதனால் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடும், சுறுசுறுப்பாகவும், நல்ல சிந்தனைகளோடும் செயல் பட்டு வெற்றி பெற முடியும். அதனால், நேரமின்மை போன்ற காரணங்களை ஒதுக்கி விட்டு, பெண்கள் தங்களது உடல் நலம், தன் குடும்பத்தின் நலம் என்பதை கருத்தில் கொண்டு உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
  Shutterstock

  பெண்கள் உதாசினப்படுத்தும் பிரச்சனைகள்(Most Neglected Women Health Issues)

  பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அந்த பிரச்சனைகள் காலப்போக்கில் அதிகமாகி பல வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. அப்படி பெண்கள் கவனிக்கத் தவறிய மற்றும் முக்கியத்துவம் கொடுக்க மறுத்த சில பிரச்சனைகள் இங்கே:

  1. இருதய நோய்:

  மருத்தவ ஆய்வின் படி நான்கில் ஒரு பெண் இருதய நோயால் மரணிகின்றால். இருதய நோய் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பொதுவான ஒன்றாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் பொதுவானதாக இருந்தாலும். 54% பெண்கள் மட்டுமே தங்களுக்கு ஏற்படும் இருதய நோய்க்கு கவனம் செலுத்துகின்றனர். ஏறத்தாள 50% பெண்கள் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு சத்து அல்லது புகை பிடித்தல் காரணமாக இருதய நோய்க்கு ஆளாகின்றனர்.

  2. மார்பக புற்றுநோய்:

  மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இன்று அதிக பெண்களிடைய ஏற்படுகின்றது. எனினும், இதை பற்றி ஆரம்ப காலத்திலேயே தெரிந்து கொள்வதில்லை. இந்த புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கும் போதே, கவனிகின்றனர். மார்பக புற்றுநோயை கவனிக்காமல் விட்டு விட்டால் அது பிற உடலில் இருக்கும் உள்ளுருபுகளையும் காலபோக்கில் பாதிக்கத் தொடங்குகின்றது. இதனால் உயிர் இழப்பு ஏற்படும் சூழலும் ஏற்படுகின்றது. இதனை தடுக்க குறிப்பாக 3௦ வயதிற்கு மேலாகும் பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

  3. கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்:

  இது அனேக பெண்களுக்கு ஏற்படும் மற்றுமொரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்த புற்றுநோய் வலி, மற்றும் சில திரவ வெளியேற்றங்களை ஏற்படுத்தும். கருப்பை புற்றுநோய் பல அறிகுறிகளை அந்த பெண்ணுக்கு வெளிபடுத்தும். அதனை கவனிக்காமல் விட்டுவிட்டால், அவள் உயிருக்கே அது ஆபத்தாகிவிடலாம். அதனால் அவ்வப்போது பரிசோதனை செய்து, ஆரோக்கியமாக உள்ளதை பெண்கள் உறுதி செய்து கொள்வது நல்லது.

  4. பெண்ணோயியல் ஆரோக்கியம்:

  இரத்த போக்கு மற்றும் வெளியேற்றம் மாதவிடாய் காலத்தில் இயல்பான ஒன்று. எனினும், இதனோடு பிற அறிகுறிகள் உங்களது மாதவிடாய் காலத்தில் ஏற்பட்டால், குறிப்பாக, உடல் நலம் குன்றுவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக இரத்த போக்கு, போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிகுறிகளை கவனிக்காமல், உடனடி மருத்துவ உதவி பெறாமல் விட்டுவிட்டால், அதிக பிரச்சனைகளை உண்டாக்கி விடும். குறிப்பாக இரண்டு மாதவிடாய் காலத்திற்கு நடுவில் உங்களுக்கு இரத்த போக்கு ஏற்பட்டால் உடனடியாக கவனிக்க வேண்டும்.

  5. கற்பகால / கர்ப்பம் அடைவதில் பிரச்சனைகள்:

  கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பம் அடைவதற்கு முன்பே உடலில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் பாதிக்கப்படலாம். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பிரச்சனைகள் இருப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டால், ஆஸ்த்மா, நீரழிவு நோய், மன அழுத்தம் போன்ற பிரச்சணைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குழந்தையையும் பாதிக்கும். எனினும், இதனை சரியான நேரத்தில் கவனித்து விட்டால், பெரிய பாதிப்புகள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

  6. தன்னுடல் தாங்குதிறன் நோய் (Autoimmune Disease):

  இந்த நோய் அறிகுறி குறிப்பாக வைரஸ்கள் ஆரோக்கியமாக இருக்கும் அணுக்களை தாக்கும் போது ஏற்படுகின்றது. இது குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றது. இந்த நோயின் அறிகுறி, அதிக சோர்வு, சுரம், வலி, சருமத்தில் எரிச்சல், வெர்டிகோ போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். பெரும்பாலான இத்தகைய நோயின் தாக்கம் வயிற்று பகுதியில் அதிகம் இருக்கும். இதனை இயற்கையாகவே நீங்கள் வீட்டில் இருந்தபடி குணப்படுத்தலாம். அதற்கு முதலில் சர்க்கரை, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் மன அழுத்தத்தை குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். ரசாயனை உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும். எனினும், இத்தகைய நோய் அறிகுறியை தொடக்க காலத்திலேயே கண்டு பிடித்து தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

  7. எலும்புபுரை:

  இந்த பிரச்சனை பெண்களுக்கு அதிகம் ஏற்படுகின்றது,. இதனால் எலும்புகள் பலவீனம் ஆகின்றது. மேலும் காலப்போக்கில் எளிதாக உடைந்தும் விடுகின்றது. இப்படி எலும்புகள் பலவீனமாக பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில, அதிகரிக்கும் வயது, மது அருந்துதல், அதிகம் மருந்துகள் எடுத்துக் கொள்வது, மரபு பிரச்சனை, குறைவான உடற்பயிற்சி, புகை பிடித்தல், ஸ்டீரைடு பயன் படுத்துவது மற்றும் அதிக உடல் எடை. தக்க சமயத்தில் உடல் நல பிரச்சனைகளை கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இதனை தவிர்த்து விடலாம்.

  8. மன சோர்வு மற்றும் கவலை:

  உடலில் ஏற்படும் ஹோர்மோன் குறைபாடுகளால் இத்தகைய மன சோர்வு மற்றும் கவலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குறிப்பாக மாதவிடாய் காலத்தில் அதிகமாக பெண்களுக்கு இருக்கும். மேலும் குழந்தை பிறந்ததும் அல்லது கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு அதிகம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனை சரியான நேரத்தில் கண்டரித்து, தக்க சிகிச்சை அளிக்கவில்லை என்றால், பெண்கள் பலமிழந்து, அதிக சோர்வுடன், உடல் நலம் குன்றி காணப்படுவார்கள்.

  9. தலை முடி உதிர்வு:

  இன்று பெரும்பாலான பெண்கள் இந்த தலைமுடி உதிர்வு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு அவர்களது உணவு பழக்கங்கள், சரியான பராமரிப்பு இல்லாதது மற்றும் அதிக மருந்துகள் எடுத்துக் கொள்வது என்று பல காரணங்கள் உள்ளது. மேலும் இன்று பெரும்பாலான பெண்கள் அலுவலகம் செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் வேலை சுமை, மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற காரணங்கள் பெண்களுக்கு தலை முடி உதிர்வை அதிகப் படுத்துகின்றது.

  உடல் நலத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பம்(Health Technology For Women)

  இன்றைய அறிவியல் உலகம் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டு இருகின்றது. இந்த வகையில்,. மருத்துவத் துறையில் புதிய தொழில்நுட்பத்தின் உதவியால் பல கருவிகள், எளிதாக தனிநபர் தானாகவே பயன் படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டிருகின்றது. இந்த வகையில், பெண்களின் உடல் நலத்தை தொடர்ந்து கவனிக்கவும், அது குறித்த குறிப்புகளை எடுத்து தங்களது உடல் நலம்(health) தற்போது எப்படி முன்னேறியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும், இந்த தொழில்நுட்பம் உதவுகின்றது.

  அப்படி வடிவமைக்கப்பட்ட மருத்துவ கருவிகளில் சில:

  • மார்பக புற்றுநோயை எளிதில் கண்டறியும் கருவி. இது கார்பன் டையாக்சைடு பயன் படுத்தி புற்றுநோய் இருக்கும் அறிகுறியை கண்டறிய உதவுகின்றது.
  • இந்த கருவி கருப்பை வாய் மற்றும் குழாயில் ஏதாவது நோய் அறிகுறிகள் இருகின்றதா என்பதை ஊசி மற்றும் இரத்த பரிசோதனைகள் இல்லாமல் கண்டறிய உதவுகின்றது
  • பாப் ஸமீயர் என்கின்ற கருவி வீட்டில் இருந்தபடியே உமிழ்நீரைக் கொண்டு ஒரு பெண் கர்ப்பம் அடைந்திருகின்றாலா என்பதை கண்டறிய உதவுகின்றது. இதனை வீட்டில் இருந்து எளிதாக பயன்படுத்த முடியும்  

  மருத்துவத் துறையில் இது போன்ற இன்னும் பல கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தபட்டுக் கொண்டே இருகின்றது

  பெண்களின் உடல் நலத்தை மேம்படுத்த(Ways To Improve Woman Health)

  போதிய வசதி இல்லாதது, நேரம் இல்லாதது, கவனிக்க அல்லது அக்கறை செலுத்த ஆள் இல்லை என்பது என்று பல காரணங்களால் பெண்கள் தங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவதில்லை. இன்று பெண்களின் உடல் நலத்தை அதிகப்படுத்தும் வகையில் பல மருத்துவ வசதிகள், சலுகைகள் மற்றும் அரசு உதவிகளும் கிடைகின்றது. அவற்றை பற்றின விழிப்புணர்வு மட்டுமே ஒரு பெண்ணுக்கு எளிதாக தன்னுடைய உடல் நலத்தை அதிகப்படுத்திக் கொள்ள உதவும். அப்படி நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது அக்கறை உள்ளவர் என்றால், அதற்கான சரியான வழியை தேடிக் கொண்டிருகின்றீர்கள் என்றால், உங்களுக்காக சில எளிய குறிப்புக்கள் பின்வருமாறு:

  1. மருத்துவ விரிவாக்கம்:

  இது அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும், பெண்களின் உடல் நலத்தை(health) அதிகப்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமாகும். இதனால் குறிப்பாக வருமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் பெரும் அளவு பயன் பெறுகின்றனர். இதனால் உங்களது மருத்துவ செலவுகளும் குறைகின்றது. மேலும் அவ்வபோது இலவசமாக மருத்துவ பரிசோதனைகளையும் செய்துக் கொண்டு உங்கள் உடல் நலத்தின் தற்போதைய நிலையையும் தெரிந்து கொள்ளலாம்.

  2. மருத்துவ காப்பீடு:

  பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக பல காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ காப்பீடுகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். மேலும் அரசும், இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தால் பல பெண்களுக்கு உதவும் வகையில் சலுகைகள் கொடுக்கின்றது. இதனை நீங்கள் பயன் படுத்தி, உங்களுக்கு இருக்கும் மருத்துவ பிரச்சனைகள் மற்றும் அறுவைசிகிச்சை போன்றவற்றை செய்து கொள்ளலாம்.

  3. தனியார் மருத்துவ காப்பீடு:

  பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் மருத்துவ காப்பீடுகளை பல சலுகைகளுடன் பெண்களுக்கு தருகின்றது. அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை நீங்கள் தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய காப்பீடுகள் உங்களுக்கு ஏதாவது உடல் நல பிரச்சனைகள் வந்தால் அறுவைசிகிச்சை அல்லது தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள உதவியாக இருப்பதோடு, நீங்கள் அவ்வப்போது இரத்த பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகளை செய்வதற்கும் உதவியாக இருகின்றது.

  4. உடல் நலம் காக்கும் இயக்கங்கள்:

  இவை இணையதளத்திலும், தொலைபேசி வாயிலாகவும் இயங்குகின்றது. இதன் உதவியால் நீங்கள் உடனடி ஆலோசனைகள் பெற்று சரியான மருத்துவத்தை சரியான மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் அவர்கள் உங்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பெற்றுக் கொள்ளவும் ஆலோசனைகளை வழங்குகின்றனர். இந்த சேவையை அனைத்து பெண்களும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பெற்றுக் கொள்ளலாம்.

  5. மதிப்பு மிகுந்த இன்சூரன்ஸ் காப்பீடுகள்:

  இத்தகைய காப்பீடுகள் நீங்கள் எந்த செலவும் செய்யாமல் அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும். இதனால் நீங்கள் அதிக செலவுகள் செய்ய வேண்டிய சூழல் வரும் என்று ஐயம் கொள்ளத் தேவை இல்லை. இதனால் உங்களுக்கு சேமிப்பும் அதிகமாகும். மேலும் எந்த விதமாக பெண்களுக்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகளுக்கும் நீங்கள் இதன் மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

  6. வீட்டில் இருந்து மருத்துவ உதவி பெறுவது:

  இத்தகைய சேவைகளை பெரும்பாலான மருத்துவமனைகள் தற்போது செய்து கொண்டு இருகின்றது. இதனால் வயதான பெண்கள் மற்றும் நேரம் இல்லாத பெண்கள் தங்கள் வீட்டில் இருந்த படியே குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிற்கு மருத்துவ உதவிகளை வரவழைத்து சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம். இதனால் நீங்கள் உங்களது மருத்துவ சிகிச்சையை சிறு காரணங்களுக்காக தள்ளிபோடாமல், தக்க சமயத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம்.

  Shutterstock

  பெண்கள் உடல் நலத்தை அதிகரிக்க குறிப்புகள்(Tips To Improve Woman’s Health)

  அலுவலகம் செல்லும் பெண்களோ அல்லது வீட்டின் தலைவியோ, உங்கள் உடல் நலத்தின் மீது நீங்கள் சிறு கவனம் எடுத்துக் கொண்டாலே நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழலாம். நீங்கள் எப்படி உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் இருந்தால், உங்களுக்காக இங்கே சில எளிய குறிப்புகள் பின்வருமாறு;

  1. சரியான உணவு பழக்கங்கள்:

  பெண்கள் எப்போதும் தங்களது உணவின் மீது போதிய கவனம் செலுத்துவதில்லை. இதனாலேயே அதிக உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால் நீங்கள் சரியான உணவு பழக்கத்தை பின் பற்ற வேண்டும். உங்கள் உணவில் போதிய வைட்டமின், புரதம், மற்றும் தாது சத்துக்கள் இருகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  2. உடற் பயிற்சி:

  நீங்கள் அலுவலகம் செல்லும் பெண்ணோ வீட்டீன் தலைவியோ, தினமும் உங்களுக்கென்று சிறிது நேரத்தை ஓதிக்கிக் கொண்டு உடற் பயிற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தால், உங்கள் உடல் நலம் அதிகரிக்கும். நீங்கள் ஆரோக்கியமாக வாழலாம். மேலும் பல நோய் ஏற்படாமலும் தடுக்கலாம்.

  3. த்யானம்:

  இன்று பெண்களுக்கு பல பொறுப்புகள் இருப்பதால், எப்போதும் ஒரு பதற்றத்தோடு இருகின்றார்கள். இதனால் அவர்கள் எப்போதும் படபடப்போடும், சரியாக சிந்திக்க முடியாமலும் இருகின்றார்கள். இதனால் வாழ்க்கையிலும், உடல் நலத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க நீங்கள் தினமும் த்யானம் செய்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தோடு வாழலாம்.

  4. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்:

  இது சற்று கடினமான ஒரு விடயமாக இருந்தாலும், நீங்கள் நிச்சயம் முயற்சி செய்தே ஆக வேண்டும். இதற்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை கேட்பது, பிடித்த ஏதாவது ஒரு கைவினை பொருட்கள் செய்வது அல்லது புத்தகம் படிப்பது என்று செய்யலாம். இப்படி நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்தால், உங்கள் மனம் சற்று அமைதியாவதை நீங்கள் உணரலாம்.

  5. சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்:

  ஏதோ கிடைத்த உணவை சாப்பிட்டு விட்டு உங்கள் வேலையை தொடரக் கூடாது. உங்கள் உணவில் போதிய சத்துக்கள் உள்ளதா என்பதை கவனியும். குறிப்பாக கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் பெண்கள் ஆரோக்கியமாக வாழ உதவும். இதனால் மாதவிடாய், இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

  6. அதிக பலன்களை சாப்பிடுங்கள்:

  குழந்தைகளுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் கொடுத்து விட்டு பெரும்பாலான பெண்கள் பழங்களை சாப்பிட தவறுகின்றனர். உங்கள் குடும்பத்தினர்களுக்கு மட்டும் அல்லாது உங்கள் உடல் நலத்தின் மீதும் நீங்கள் சற்று கவனம் செலுத்த வேண்டும். அதனால் தினமும் ஏதாவது ஒரு பழத்தை நீங்கள் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். இது நீங்கள் ஆரோக்கியமாக வாழ உதவும்.

  7. எப்போதும் புன்னகையோடு இருங்கள்:

  உங்கள் புன்னகை உங்களையும், உங்கள் வீட்டாரையும் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள உதவும். மேலும் நீங்கள் புன்னகையோடு இருக்கும் போது உங்கள் மனமும், உடலும் உற்சாகம் பெறுகின்றது. இதனால் பதற்றமும் குறைகின்றது. மேலும் உங்களது சிந்திக்கும் திறமும் மனம் அமைதி பெரும் போது அதிகரிகின்றது.

  8. தொடர் மருத்துவ பரிசோதனை:

  நீங்கள் அவ்வப்போது, போதிய கால இடைவேளையில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி செய்தால், உங்கள் உடல் நல்ல சீரான நிலையில் இருகின்றது என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். அல்லது ஏதாவது உடல் நல பிரச்சனையின் அறிகுறி தெரிந்தால், அது பெரிதாவதற்குள் நீங்கள் மருத்துவ உதவியை பெறலாம்.

  9. போதுமான தூக்கம்:

  பெண்கள் அதிகம் மற்றவர்களை கவனிப்பதிலேயே தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு சரியாக தூங்க முடியாமல் போகின்றது. சரியான தூக்கம் இல்லை என்றால் பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கி விடுகின்றது. அதனால், நீங்கள் ஒரு நாளைக்கு போதுமான அளவு தூங்கி விட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  10. சரியான நேரத்தில் உணவு உண்ண வேண்டும்:

  பெரும்பாலான பெண்கள் சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்வதில்லை. பலர் ஏதாவது ஒரு வேலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இதற்கு அவர்கள் பெரும்பாலும் நேரமின்மையை காரணமாக கூறுகின்றனர். ஆனால் அப்படி செய்யாமல் சரியான நேரத்தில் உங்களது உணவை எடுத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் நிச்சயம் ஆரோக்கியமாக வாழலாம்.

  11. நடை பயணம் செய்யுங்கள்:

  பெரும்பாலான பெண்கள் நடை பயணம் செய்ய அல்லது மிதி வண்டி ஒட்டி உடற் பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாமல் இருகின்றனர். நீங்கள் குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது நடை பயணம் அல்லது மிதி வண்டி பயணம் செய்வது உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவும். மேலும் இது உங்கள் மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

  12. எண்ணைப் பலகாரங்களை தவிர்க்கவும்:

  இன்று துரித உணவுகள் மற்றும் பல வகை நொறுக்குத் தீனிகள் எளிதாக கிடைகின்றது. ஆனால் அவற்றில் அதிகம் எண்ணை சேர்க்கப் பட்டிருக்கும். மேலும் இதில் அதிக கொழுப்பு சத்தும் இருக்கும். அதனால் உங்கள் உடல் எடை அதிகரிப்பது மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முடிந்த வரை எண்ணைப் பலகாரங்களை தவிர்ப்பது நல்லது.

  13. தினசரி வேலைகளில் இருந்து சிறு விடுப்பு கொடுங்கள்:

  தொடர்ந்து தினமும் உங்களது தினசரி வேலைகளை மட்டும் செய்து கொண்டு இருக்காமல், அவ்வப்போது சிறிது விடுப்பு கொடுங்கள். இதனால் உங்களுக்கு சற்று ஓய்வு கிடைப்பதோடு, உங்கள் மனதிற்கும் சற்று ஓய்வு கிடைக்கும். இதனால் நீங்கள் அமைதியாகவும், புத்துணர்ச்சியோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்கலாம்.

  14. இரசாயனம் கலந்த குளிர் பானங்களை தவிருங்கள்:

  கடைகளில் எளிதாக கிடைக்கும் இராசயணம் கலந்த குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. இவற்றில் அதிகம் சர்க்கரை மற்றும் இராசயனங்கள் கலந்து இருப்பதால், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

  15. புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை தவிர்க்கவும்:

  பெண்கள் முற்றிலுமாக புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கங்களை விட்டு விடுவது நல்லது. இதனால் உங்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனை, இருதய நோய் போன்றவை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

  16. தினசரி வேலைகளை திட்டமிட்டு செய்யுங்கள்:

  பெண்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கும். ஆனால், நீங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் இழுத்து போட்டு செய்து கொண்டிருக்காமல், திட்டமிட்டு செய்தால், மன அமைதியோடு, சீராகவும் அந்த வேலைகளை செய்து விடலாம். இதனால் நீங்கள் எளிமையாகவும் சவால் மிகுந்த வேலைகளையும் செய்து விடலாம்.

  17. இயல்பாக விடயங்களை கையாளுங்கள்:

  எந்த சூழலிலும் விடயங்களை பதற்றத்தோடு கையாளாமல், இயல்பாகவும், நிதானமாகவும் கையாள கற்றுகொள்வது நல்லது. இப்படி செய்வதால் நீங்கள் நன்கு சிந்தித்தும் செயல் படலாம். இதனால் உங்கள் பதற்றமும் குறையும். மேலும் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்கலாம்.

  18. யோகாசனம்:

  பெண்கள் கட்டாயம் யோகாசனம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் மூச்சு பயிற்சியும் சேர்ந்து செய்யவீர்கள். இதனால் உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மா அமைதியாகவும், ஆரோக்கியத்தோடும் இருக்கும்.

  Shutterstock

  19. குடும்பத்தினர்களுடன் தரமான நேரம் செலவிடுங்கள்:

  இது மிகவும் முக்கியமான ஒரு விடயம். உங்கள் குழந்தை, கணவர் மற்றும் பெற்றோர்களுடன் நீங்கள் போதிய நேரம் செலவிடுவதால், அவர்களுடன் மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியான சூழல் குடும்பத்தில் நிலவுவதோடு, அனைவரும் ஒரு நல்ல ஆரோக்கியமான குடும்ப சூழலில் வாழவும் வாய்ப்பு கிடைக்கும்.

  20. மின்கருவிகளை தள்ளி வையுங்கள்:

  இன்றைய தொழில்நுட்பம் தாக்கிய உலகத்தில் அனைவரும் ஏதாவது ஒரு மின் கருவியை கையில் வைத்துக் கொண்டே சுற்றிகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட் போன்கள். இதனால் பல குடும்பங்களில் விவாகரத்து ஆகும் வரை பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதனால், ஸ்மார்ட் போன்களுக்கு அடிமை ஆகாமல், கிடைக்கும் நேரத்தை உங்கள் குடும்பத்தினர்களுடனும், நண்பர்களுடனும் மேலும் பயனுள்ள மற்றும் உங்களுக்கு பிடித்த சில வேலைகளை செய்தும் மகிழ்ச்சியோடு இருக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் நலமும் அதிகரிக்கும்.

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. பெண்களின் உடல் நலத்தை அதிகப்படுத்த எந்த வகை உணவுகள் சிறந்தது?

  பெண்களின் உடல் நலத்தை அதிகப்படுத்த நிச்சயம் பாரம்பரிய உணவு பழக்கங்களே சிறந்தது. குறிப்பாக சாமை, குதிரைவாலி, வரகு, திணை, போன்ற அரிசி வகைகள் பெண்களின் உடல் நலத்தை அதிகப்படுத்த உதவும்.

  2. கடுமையான வேலை சூழலில் எப்படி உங்களை நீங்களே அமைதியாக வைத்துக் கொள்வது?

  சிறிது நேரம் கிடைத்தாலும் உங்களுக்கு பிடித்த இசையை கேளுங்கள். அல்லது எந்த வேலையும் செய்யாமல், எதை பற்றியும் சிந்திக்காமல் அப்படியே சிறிது நேரம் அமர்ந்து விடுங்கள். அல்லது சிறிது நடை பயணம் சென்று வரலாம். இவை சிறு கால இடைவெளியில் உங்களை நீங்கள் அமைதி படுத்திக் கொள்ள உதவும்.

  3. உங்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டிருகின்றது என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

  நீங்கள் ஏதாவது ஒரு புதிய மாற்றத்தை உங்கள் உடலில் உணர்ந்தால் அல்லது ஏதாவது அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

  4. எவ்வளவு கால இடைவேளைக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?

  குறைந்தது 6 மாத காலத்திற்கு ஒரு முறையாவது நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எனினும் இது உங்களது வயதை பொருத்தும் மாறுபடலாம். நீங்கள் 50 அல்லது 60 வயதை கடந்தவர் என்றால், 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்து உங்கள் உடல் சீராக இருப்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.